(Reading time: 6 - 11 minutes)

03. என் இதய கீதம் - Parimala Kathir

க்மோரில் உள்ள நஷினல் காலேஜ் ஒவ் டெக்கரேஷன் என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள நுழை வாயிலின் அருகில் கம்பீரமாக ஓங்கி வளர்ந்து நின்ற கொன்றை மரத்தின் கீழே நண்பர் குழாத்தினரோடு சுதன் என்கிற சுதர்சன் அழகிய தன் காதல் ராணிக்கு தன் காதலை சொல்லிவிட வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.

En ithaya geethamஅவனது காதல் ராணியும் வந்தாள். அழகிய நீல வண்ண சுடிதாரும் அதே வண்ணத்தில் பெரிய காதணியும் அணிந்து கண்ணாடி வளவிகளோடு தன் தோழிகளோடு வளவளத்தபடி அந்த அழகு பொற்சிலை தனக்காக ஒருவன் காத்துக்கிடப்பது கூட தெரியாமல் அவனை கடந்து சென்றாள். கடந்து செல்லும் போது தன் முகத்தை வருடிச் சென்ற அவள் துப்பட்டவை கண்களை மூடி ரசித்தான். ஏதோ தயகம் ஒரு வித பயம் அன்று தன் காதலை அவளிடம் சொல்லாமல் தவிர்த்தான். ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன இன்னுமே அவன் தன் காதலை புவிக்காவிடம் சொல்லவில்லை. "சுதன்.... மச்சி..... ஏய்... மச்சி." "........" அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே அவனை உழுக்கி சுய உணர்வுக்கு கொண்டு வந்தான். "என்னடா கனவா? கண்ணை துறந்து வச்சுக்கிட்டே கனவு காணுறாய்." என்ற தன் நண்பன் வசுவின் கேலியில் சற்றே கூச்சமடைந்தாலும் சிரித்தே சமாளித்தான். "நீயும் ஒன்றரை வருடமாய் இந்த மர நிழலிலேயே இளவு காத்த கிளி போல காத்திருக்கிறாய். வேறு ஒருவன் அவளை கொத்திக்கொண்டு போக முன்பு இன்றாவது உன் காதலை அவளிடம் சொல்லிவிடு." அபியும் காவியாவும் காலேஜ் காண்டின் பெஞ்ஜில் தங்களது தோழியான புவிகாவுக்காக காத்திருந்தனர். அப்போது அபியின் கைபேசியில் இனிய குழல் ஒசை காற்றில் தவழ்ந்து அவள் காதுகளில் சரண் புகுந்தது. 

"ஹலோ ....'  என்றவள் தொடர்பில் அஸ்வினின் குரலை கேட்டதும்  100 W பல்ப்  போட்டது போல அபியின் முகம் பிரகாசித்தது.   

"ஹேய்...  எப்படி இருக்காய் ..."

"ம.... நான்  நல்லா  தான்  இருக்கன்.  ஏண்டா வேலை என்றால்  நீ உன் தங்கச்சியையே மறந்திடுவியா?"

"  பிச் இல்லடா .... ஓகே...... என்னை மன்னிச்சிடு. ,  ஆமா  நான் போன வேலை என்னாச்சு என்று கேட்கமாட்டியா?"

"ஒ.. சோரி்டா....  ஆமா சக்சஸ் தானே..?"

" சக்சஸ்ஸாவா ...  ஏய் உன் அண்ணா இப்போ  Sony Computer Entertainment America LLC  நிறுவனத்தின்  வொர்கிங் பாட்னர்."

" ஹே.....நியமாவா  ஐ ஆம் சோ ஹப்பி   ஹங்கிறாற்ஸ்டா" ஆமா அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டியா?"

"தாங்யூ,, இல்லடி அவங்க வீட்டில இல்ல அதுக்கப்புறம் தான் உன்னை கூப்பிட்டன்  ஆமா எங்க அவங்க?"

"அது தானே அல்லது நீ ஏன் எனக்கு போன்  செய்ய போறாய்?"

"பிச்.. அபிம்மா....."

"ம்க் உன் அப்பாவும் அம்மாவும் சர்ஜிகாவோட (அஸ்வின் அபியின் மாமன் மகள்)  சித்தி மகளின் திருமணத்திற்கு போயிருக்காங்க." என்று சற்று கோபம் போல் சொன்னாள். 

" ஓ......  அப்போ நான் பிறகு அவங்களோட பேசறேன்.  அப்புறம் நான் வர ஒன் வீக் ஆகும்மா அம்மாகிட்ட சொல்லிடு ஓகேடி நான் வச்சிடவா?"

" ஓகே.... ஓகே... அம்மா அப்பாகிட்ட மட்டும் சொன்னாள் போதுமா அல்லது சர்ஜிகாகிட்டயும் சொல்லனுமா?" என குறும்பாக கேட்டாள்.

"ஏய்...... உன்னை....... வந்து  பாத்துக்கிறன். பாய்."  என்று தொடர்பை துண்டித்தவன் தன் கையில் உள்ள அழகு தேவதையின் ஓவியத்தில் தன் இதழ் பதித்தான்.  அவளது  படத்தை இறுக கட்டி ஆணைத்தபடியே துயின்று போனான்.

"ன்ராஜ் அண்ணா புது பாட்டு ஏதவது பிளே பண்ணுங்க "

`புது பாட்டு சீடி எல்லாம் இல்லம்மா.  பழைய பாட்டு சீடிக்கள்தான் இருக்கு"  என்று வருத்தப்பட்டார்."

"அப்பா உங்களிடம் புது சீடி எதுவுமே இல்லயா?  என்னப்பா .... நீங்க" 

"பாட்டெல்லாம்  கேக்கலாம்  உன்னோட படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு அதுக்கப்புறம் என்ன செய்ய போறாய்?"

"பபடிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல கம்பனில வேலைக்கு சேரணும் .  கொஞ்ச நாளில நானே சுயமா சின்னதா ஒரு கம்பனி தொடங்கி படிச்ச ஏழை மாணவர்கலுக்கு வேலை கொடுக்கணும்பா இது தான் அன்னொட கனவு லட்சியம் எல்லாமே."  என்று தன் கனவு பற்றி தந்தையிடம் ஒப்பித்தாள்.

நாராயணன்  மகளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தார்.  பின் ஒரு புன்முறுவலுடன் உன் கனவு நிச்சயம் பலிக்கும் பாப்பா.  "நீ தொடங்க போற கம்பனிக்கு நான் தான் முதல் கரமர்.  எங்க கம்பனிக்கு நீ தான் இன்ரீறியர் டெக்கரேசன் செய்யணும் ஒகேவா?  "

"ம்....... ம்......... டன் ப்பா ‎"

கார் புவியின்  கல்லூரியை நோக்கி விரைந்து சென்றது.

"டேய் மச்சி அங்க பாரு உன்  ஆளு வர்ரா.."

புவிகா தந்தையிடம்  பாய் சொல்லிவிட்டு திரும்பும் போது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த சுதர்சனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அபியையும்  காவியாவையும் தேடிச் சென்றாள்.

சுதன் இமைக்க மறந்து அவள் சென்ற திசை நோக்கினான்.

"போடா அவ போறாடா உன் காதலை இன்னிக்காவது  சொல்லிடு இந்த செமஸ்டர் எக்சாமுக்கு பிறகு உன்னோட படிப்பு முடிஞ்சிட்டால் அப்புறம் அவகிட்ட உன்னால சொல்ல முடியாமலே போயிடும்.  போய் சொல்லு ம்..

" ம்ம் .....போரண்டா."  சுதன் புவியை பின் தொடர்ந்தான்.

கான்டீனில் இருந்த அபி " ஏய் இங்க பாருடி..... இங்க காண்டீனில..... ம... வா"  என்று புவியை அழைத்தாள்.

"குட் மோனிங்யா."

 காவியாவும் அபியும் கோரசாக" மோனிங் "  என்றார்கள்.

 " ஆமா நம்ம அபி  என்ன இவ்ளோ ஹப்பியா இருக்கா? ஒரு வேளை சங்கர் பற்றி வீட்டில சொல்லிட்டிளா? " என்று அபி கான்டீனில் வாங்கி வைத்த சமோசாவை ருசி பார்த்த படி காயாவிடம் (காவியாவின் சுருக்கம்) கேட்டாள்.

"ம்க்...  எங்கடி சொல்றது அதுக்கென்று ஒரு ஆள் இருக்குது....... அந்தாள் நெக்ஸ்ற் வீக் தான் இந்தியா வரும். " என்று  அபி கூறினள்.

"அது யாருடி? .... உன் லவ் மேட்டர் பற்றி உங்க வீட்டில தைரியமா சொல்ற  ஆள்."

"வேற யாரு எல்லாம் அஸ்வின் தான். அவன் எது சொன்னாலும் அம்மாவும் அப்பாவும் கேட்டுப்பாங்க அது தான் அவன் வந்ததும் சங்கர் பற்றி எல்லாத்தையும் சொல்லி  வீட்டில கதைக்க சொல்லாம் என்று இருக்கன். பை த வே நான் சந்தோசமா இருக்கிறதுக்கு   காரணம் இல்லடி " என்று தனது ஆனந்தத்திற்கான காரணத்தை தெரிவித்தாள்.

புவிக்காவும்   தனது வாழ்த்தை அபியிடம் பகிர்ந்து கொண்டாள்.

" பரவாயில்லடி  உன்னோட அண்ணாவே உனக்கு  சப்போட் பண்றாரு லக்கிடி நீ,  அதவிட உன் அண்ணா லக்கி  தான், தையமா யாரையும் லவ் பண்ணலாம் போல  "

"வட்ட ஹான்சம்......  இவ அண்ணன நீ பார்த்ததில்லயே  யாருக்கு குடுத்து  வச்சிருக்கோ...".  என்று காயா தந்து பொருமலை புவியிடம் கூறினாள்.

" ஹேய் அவனுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு அம்மாவோட அண்ணா பொண்ணு."

"அத விடுடி இங்க ஒரூ தனி ரூட்டு போய்ட்டிருக்கு  போல"  என்று அபி புவியை பார்த்து குறும்பாக கேட்டாள்

"நீ யாரை சொல்றாய்"

" உன்னைத்தான் வேற யாரை தினமும் உன் வரவுக்காக  அவர் காத்திருக்கிறதென்ன  நீ பாத்து சிரிக்கிறதென்ன  ம்ம்ம் ம்ம்ம்ம் நடத்து நடத்து ஆல் தி பெஸ்ற்" என்று காயா கை குலுக்கினாள்.

"ஏனடி லூசுமாதிரி  கதைக்கிறீங்க?." என்று கோபமாக கேட்டாள்.

" எக்ஸ்கியூஸ் மீ...  ஸாரி ப்ரண்ட்ஸ்  புவிக்கா இவ் யு டோன்ட் மைன்ட் நான் உங்க கூடகொஞ்சம் பேசணும்"

உடனே அபி "என்ன சீனியர் நீங்க!! பெர்மிஷன் எல்லாம் கேட்டுக் கொண்டு...." என்று போலி அடக்கத்துடன் கேட்டாள்.  

அப்பொழுது  கல்லூரியின் முதல் மணி நேரம் எட்டு ஐம்பத்துஐந்து ஆகிவிட்டதை மாணவர்களுக்கு உணர்த்தியது .

"புவி நீ பேசிட்டு சீக்கிரம் வந்திடு நாங்க கிளாசுக்கு  கிளம்புறம்."

"பாய் சீனியர் " என்று அபியும் காயாவும் ஒருங்கே கூ றி விடை பெற்றனர். 

தொடரும்!

Go to episode # 02

Go to episode # 04


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.