(Reading time: 5 - 10 minutes)

03. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

கூடத்தில் நின்றவள் எப்படி அவன் முன் நின்றாளோ அவளே அறியாள். 

அவளை கண்டவன் முறைத்துக்கொண்டே "வேணிம்மா..,போக சொல்லுங்க" என்றான்.

சின்ன பிள்ளை போல் அர்ஜுனின் நடவடிக்கை எல்லோருக்குமே சிரிப்பையும் ஆச்சரியத்தையும் கிளப்பியது. அவன் கோபத்தின் விளைவு அறிந்தவர் வேணி அதனால் சங்கடமாய் பார்த்தார் கவிதாவை.

அவர் பேச தொடங்குகையில் கவிதா பேசினாள். "அம்மா நான் பேச வேண்டியதை பேசிட்டு போயிடறேன்" என்றாள் அமைதியுடன்.

"சார்...." என்று தொடாங்கியதும் சிரிப்பும்  தொண்டையில் சூழ்கொண்டது.

"நான் பிஸ்நெஸ் கற்றுக்கொள்ளவே வந்திருக்கேன், யாரையும் பார்த்து கேலி பண்ண அல்ல என்றாள்."

அவன் பார்வை வீரியம் அதிகமானது. அவளை நேராக பார்த்து கையை கட்டிக்கொண்டு நின்றான். கவியின் மனம் ஒரு நிமிடம் தடுமாறியது.

நேர் பார்வையுடன் கம்பீரமாக நின்றவனை பார்க்கையில் அவளை விட்டு உலகம் சுற்றுவதுப்போல் ஆனது. மூச்சு முட்ட சூழ்நிலை பேச தூண்ட தட்டு தடுமாறி பேசினாள்.

"நான் சிரிச்சது தப்பு தான் இனி இது நடக்காது.அதற்காக இப்படி முடிவெடுப்பது நல்லதல்ல " என்றாள். 

அர்ஜுனை ஏதோ நெருடியது முடிக்கும் போது அந்த கர்வத்தையும் மீறி வந்த நடுக்கம் ஏனோ?? அவள் தந்தை ஏதேனும் மயக்கி அது இது என்றெல்லாம் சொல்லிவிட்டிருப்பாரோ என்ற எண்ணம் தோன்ற மேலும் அவள் பேச்சை கேட்க செவி சாய்த்தான்.

பெரிதாய் எதாவது கிளப்பிவிடுவளோ என்று நினைத்தவள் இப்படி பேசவும் வேணிம்மா இது போதும் என்பதுப்போல்,"என்ன நிஷா குட்டி?? அர்ஜுன் பெரிய பிஸ்நெஸ் மேன், இதெல்லாம் போய் பெருசா எடுப்பானா என்ன?? "என்றபடியே பேரனை பார்த்து  கண்களில் கோபத்தை காட்டிவிட்டு அவளிற்கு என்று ஒதுக்கபட்ட அறைக்கு கூட்டி சென்று விட்டார்.

கவிக்குள் தப்பித்தோம் என்று இருந்தது கூடவே ஆகாஷும் ஆசுவாசப்படுத்திகொண்டான்.  

விமான நிலையத்தில் பார்த்ததும் கண்களில் காதலும் கண்ணீரும் ததும்ப கட்டியணைக்கும் நிஷாவை அல்லாவோ அவன் எதிர்பார்த்தது. வந்தவள் கையை நடுங்கி கொண்டே கொடுத்தாளே!! அன்ற அடுத்தடுத்து நடந்தவை அன்றே வந்திருக்கிறவள் அவன் நிஷா அல்ல என்று தெளிவாக காட்டியது.

அர்ஜுன் மனம் கடுத்தது "சட்டவிரோதமாக தொழிலை செய்துக்கொண்டு இருக்கும் இவள் அப்பா ஒரு தொல்லை என்றாள் இவள் ஒரு இம்சை " என்று நினைத்துக்கொண்டான். 

ஆனால் அவள் பேச்சும் குரலும் மட்டும் செவியில் கேட்டுக்கொண்டே இருந்தது. திடமான அவன் மனம் குழம்பியது.

கண்களில் அலைபுருதளுடன், கைகளை பிசைந்துக்கொண்டு சற்றே தளர்வான  ஷர்ட், ஜீன் அணிந்துகொண்டு தொய்ந்து விழுந்திடுபவள் போல் அவள் நின்ற காட்சி கண்களில் நின்றது.

கண்களின் அலைபுருதல் தந்தையை போல என்று எண்ணினாலும் கைகளை தப்பு செய்து மாட்டிக்கொள்ளும் குழைந்தை போல என்று எண்ணினாலும் அவளிடம் முரண் பட்டது மனம். குழப்பங்களுடனே பணிக்கு கிளம்பிவிட்டான் அர்ஜுன்.

விறுவிறுவென கிளம்பியவன் கூடத்தை கடந்து செல்கையில்  ஒரு பக்க அறையிலுருந்து  "நீங்க ஏன் பாட்டி கவலை படறீங்க நான் பார்த்துக்கிறேன் விடுங்க" என்று அவள் கொஞ்சம் அதட்டலாக சொல்வது காதில் விழுந்தது.

இவள் என்ன மாய மோகினியா இந்த அர்ஜுனை மயக்க, நான் பல நாடு சுற்றி திரிந்வன் பலரை பார்த்தவனும் கூட என்று தோள் தட்டிக்கொண்டான் அர்ஜுன்.

ளர்ந்த நிஷா எப்படி பொறுப்புள்ளவளாய் மாறி விட்டாள் என்று அதிசயத்துகொண்டார்  வேணிம்மா அவளுக்கு அறையை அடுக்க உதவ வந்தவரை தடுத்தவளை பார்த்து.

அவள் பயணம் பற்றியும் படிப்பை பற்றியும் கேட்டுக்கொண்டே அவள் அடுக்கி முடித்ததும் ஓய்வு எடு என்று சொல்லி விட்டு சென்றார்.

திக்கி திணறி பதில்களை சொல்லி வேணிம்மா வெளியே சென்றதும் அன்றைய நாள் போதும் போல் உறங்கி போனாள் கவிதா. களைப்பு, பாதுகாப்பு கிடைத்த நிம்மதி, மேலும் கொஞ்ச நாட்களாய் மூட்டை கட்டி வைத்திருந்த தூக்கம் வந்து தழுவ தூங்கினாள். 

வெற்றி பாதைகள் என்றுமே மெல்லியதாக இருந்தவை அல்ல. நிஷாவின் தேடல் தொடங்கியது மனதில் திடமுடனும் கைகளில் அந்த விலை உயர்ந்த கேமராவுடனும். 

சஞ்சலங்கள் நிறைந்தாலும் வெற்றியின் தேடல் அவளை வழி நடத்தி இந்தியாவின் ஏன் உலகத்தின் உயர்ந்த சிகரம் என்னும் இமய மலை தொடர் பக்கம் அழைத்து சென்றது.

இயற்கையின் அழகை தான் படம் பிடித்து காட்ட வேண்டுமாம் அவள். அழகை தேடி பயணம் தொடங்கியது நிஷாவிற்கு. அது வாழ்கையையும் சொல்லி தர தயாரானது.

"போனவ போயாச்சு!!! இப்படியே எவ்வளவு நாள் இருக்க போறீங்க, இன்னொருத்தி இருக்கா அவளையாவது உருப்படியா கரை சேர்த்தனும், எந்திரிச்சி சாப்பிடுங்க" என்று அதட்டல் நிறைந்த குரலில் சொல்லி சென்றால் வள்ளி.

அந்த பேச்சு முள்ளாய் நெஞ்சில் குத்தி சிதைத்து ஆனாலும் அவருக்கு அந்த உடம்பிற்கு உயிர் முக்கியம் படுக்கையில் இருந்து எழுந்து சாப்பிட தொடங்கினார் வேல்  முருகன்.

சமையல் அறையில் வள்ளியின் உரத்த புலம்பல் காதில் விழுந்தது. மனம் தானாக "கவிம்மா எங்கிருந்தாலும்! நல்லாயிரும்மா" என்று ஆசிர்வதித்து.

"எம்,பி.ஏ படிக்க வெட்சோமே! கொஞ்சமாவது நன்றி இருக்கா அவளுக்கு"  அன்றைய பொலம்பலை ஆரம்பித்தாள் வள்ளி.

வேலு கோபமாக சீறினார்." அது அவ ஷ்காலர் ஷிப்ல படித்து"  என்றார்.

" இருக்கட்டுமே ஏன் நான் சாப்பாடு செய்து தரலையா, தங்க இடம் தரலையா, இல்ல ஆதிரவு கொடுக்கலையா"  என்று கேட்டுக்கொண்டு சண்டைக்கு தயாரானாள் வள்ளி.

ஏன் தான் குரல் உயர்த்தி பேசினோம் என்று நொந்துகொண்டார் வேலு. சொந்த அக்காவின் பெண்னுக்கு செய்ததை கணக்கு பார்க்கிறாளே இவள் என்று வருத்தம் எழுந்தது அவருக்குள் அதை வார்த்தையாக வெளியே சொன்னால் மூன்றாம் உலக போர் மதுரையில் தொடங்கி விடும் அதனால் அமைதி காத்தார்.

உறவுகள் புதிதாக வளருவது இயற்கையின் நியதி என்றால் அதை தக்க வைப்பது மனிதனின் ஊழ். கால மாற்றம் நியதிகளை உணர்த்தும், உணரும் தருணம் அனைத்தும் கடந்து முடிந்த தருணமாக தான் இருக்கும். உண்மையான நேசம் காலத்தை வெல்லும். நேசிக்கும் நெஞ்சம் அளவுகளை கடந்தது.

தொடரும்!

Go to episode # 02

Go to episode # 04


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.