(Reading time: 12 - 23 minutes)

08. என் இதய கீதம் - Parimala Kathir

புவிகா வீட்டில் 

" ன்னடா காலேஜில இருந்து வந்து இவளவு நேரம் ஆகுது  நானும் வந்ததில இருந்து கேட்டிட்டு இருக்கன் என்னதான்டி சொன்னாரு உங்க ப்ரின்சிபல்? லீவ் தந்திட்டாரா? அப்போ நான்  உன்னோட உடுப்பும் எடுத்து வைக்கவா?"

En ithaya geetham"சும்மா...  நீங்க வேற ஏனம்மா  என்னை எரிச்சல்  படுத்திறீங்க?"

"ஏன் என்னாச்சு?"

"அ.....  அந்த பென்சில்  மீசை பெர்மிசன் தரமாட்டன் என்று சொல்லிட்டார். எனக்கு எவளவு அவமானமாப் போச்சு தெரியுமா? " அவளை  அறியாமலே  அவள் சிந்தை அந்த ஆறடி உயர கட்டளகனை நினைத்தது.

"இதில என்னடி அவமானம்?"

"என்னம்மா சொல்றீங்க நீங்க அந்தாள் என்ன பேச்சு பேசிச்சு தெரியுமா?  நான் தான் சொன்னான் இல்லையா அந்த பென்சில் மீசை சும்மாவே வீவ் தராது அதுவும் இப்ப எக்ஸாம் டைம் வேற சுத்தமா தராதென்று நீங்க தான் சும்மா..."

" அதென்னடி பழக்கம் பெரியவங்களை இப்பிடி மரியாதை இல்லாமல் அந்தாள் இந்தாள் என்று பட்டப் பெயர் எல்லாம்  வச்சு கூப்பிட்டு கொண்டு" என்று மகளை அதட்டினார்.

"அஹ.... பிறகென்னம்மா அவருக்கு ஏதோ முறுக்கு மீசை மாதிரி எப்ப பார்த்தாலும் மீசையை தடவிக் கொண்டுதான் திரிவார்.  ஹ... ஆனால் அவருக்கு  மீசையே இல்லம்மா பென்சிலால தான் வரைஞ்சு வச்சிருக்கார்.  அது தான் அவரை அப்பிடி கூப்பிடுகிறோம்" என்று சொல்லி சிரித்தாள்.

"அது என்னமோ இருந்திட்டு போகட்டும் நீ இனிமேல் இப்படி பெரியவங்களை கேலி பேசக் கூடாது.  சரி அத விடு நீ வரல என்றால் நான் அப்பாவ மட்டும் அனுப்பி வக்கிறன். உன்னை தனியா இங்க விட்டுட்டு நாங்க இரண்டு பேரும் அங்க போக முடியாது."

"என்னம்மா நீங்க  எனக்கு தனியா இருக்க பயம் எல்லாம் இல்ல நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா போங்கம்மா."

"நீ இருப்பாய் ஆனால் நாடு கிடக்கிற கேவலத்தில முழுசா இரண்டு நாள் என்னால முடியாதம்மா.  நான் அப்பாவ மட்டும் அனுப்பி வைக்கிறன்."

என்னம்மா இது இந்தகாலத்தில போய் பயந்துகிட்டு வெளிநாட்டுக்கே பெண்கள் தனியா போறாங்க நான் இதே ஊரில இரண்டு நாள் இருக்க பயப்பிடுறீங்க சரியான ஆழும்மா நீங்க. சரி முறைக்காதேங்க நான் கனகாக்காவை கூட வச்சுக்கிறன் வாட்ச்மேன் வேற இருக்கார். போதாதென்று டிரைவர் அண்ணா இருக்கார் அப்புறம் என்னமா?"

"எல்லாம் சரி தான் ஆனால் எனக்கென்னமோ மனசு கேக்கலடி. உன்னை தனியா விட்டிட்டு...."

"புவி செல்லத்தை தனியா விட்டிட்டு நீ எங்க போகபோறாய் லக்ஷ்மி." என்று தனது கையில் உள்ள  ப்ரிவ் கேசை சோவாவில் வைத்து கொண்டே கேட்டார் அப்பா.

"வந்திட்டீங்களா? நம்ம மாதவனோட கலியாணத்துக்கு தாங்க, புவியாள வர முடியாதாம் அவளுக்கு காலேஜில லீவு கிடைக்கல அது தான் "

"ஒ.... அப்பிடியா சரி நான் அண்ணாக்கு போண் பண்ணிகலியாணத்துக்கு வரமுடியாது  புவிக்கு எக்ஸாம் முடிஞ்சா போல வந்து பாக்கிறம் என்று சொல்லிடுறன்."

"ஏம்பா நீங்களுமா இப்ப தான் அம்மாவை கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணினான் இப்ப நீங்க திரும்ப ஆரம்பிக்கிறீங்க போங்கப்பா நான் ரயட் ஆகிட்டன். ஐ ஆம் ஓகேப்பா நீங்க ஹப்பியா போங்க." 

அவளது இந்த வார்த்தையே வினையாக முடியப் போகிறது என்று பாவம் அவளுக்கு அப்போது தெரியாது. 

சற்று நேரம் யோசித்து விட்டு தாயும் தந்தையும் அவளை தனியே விட்டு விட்டு கொடைக்கானல் போக சம்மதித்தனர்.

"ம்... வெரி குட் சரி இன்னிக்கு நாம வெளியில போய் டின்னர் சாப்பிடலாம் என்னப்பா சொல்றீங்க?"

"அதெல்லாம் வேணாம் நான் ஏற்கனவே சமைச்சாச்சு நாளைக்கு வேணும் என்றால் போகலாம்."

"ப்ச்.... அவ தான் ஆசைப் பட்டு கேக்கிறாள் எல்லா சமைச்சா பராவாயில்ல அத கனகாகிட்ட குடுத்திடு. புவிக்குட்டி நீயும் அம்மாவும் போய் ரெடி ஆகுங்க நான் போய் பிரெஷ் அப் பண்ணிட்டு வாறன்."

"தாங்க்யூ டாடி உம்மா " என தந்தைக்கு அன்பு முத்தம் ஒன்று கொடுத்து விட்டு தனது அறையை நாடி சென்றாள்.

அஸ்வின் கோவிலில்

"ன்னம்மா இப்ப சந்தோஷமா நீங்க ஆசைப்பட்ட படி கோவிலுக்கு வந்தாச்சு இறங்குங்க."

அனைவரும் இறங்கி அம்மனை தரிசிக்க கேணியில் கைகால் அலம்பி விட்டு கோவிலினுள் நுழைந்தனர். 

ஆளுக்கு ஒரு வேண்டுதலுடன் அம்மனை கை கூப்பி தொழுதனர். அஸ்வினும் பய பக்தியுடன் அம்மனை தரிசித்தான். மேகலைக்கு மிகவும் சந்தோசமாய் போய் விட்டது . அவர்களும் ஒவ்வொரு காலியாண நாளைக்கும் பிள்ளைகளோடு கோவிலுக்கு செல்வார்கள். அப்போது அஸ்வின் கோவில் சிற்பங்களை ரசிப்பானே தவிர அம்மனை தரிசிக்க மாட்டான். கடந்த மூன்று ஆண்டுகளாக அவனுள் ஏதோ மாற்றத்தை பெற்ற தாயாக அவர் உணர்ந்தார். அது நல்லதாக இருந்தால் சந்தோசம் என மனதார வேண்டிக் கொண்டார்.

புவிக்காவும் பெற்றோரும் SAVOURY SEA SELL இனுள் நுழைந்தார்கள்.  பின்னணியில் மெலிதாக சினிமா பாடல் மனதை நிரப்பிக் கொண்டிருந்தது. 

புவி தனக்கு பிடித்த SEA FOOD வகை உணவுகளை  ஆடர் செய்து சாப்பிட்டாள்.

" கோவில் தரிசனம் முடிந்து விட்டது பசி வயித்த கிள்ளுது RESTAURANT போலாமா?" என்றாள் அபி

"சரி எங்க போகலாம் " என அனைவரிடமும் அவர்களது அபிப்பிராயத்தை கேட்டான் அஸ்வின்.

"தெரியலன்னா பசி மயக்கத்தில ஒரு பெயர் கூட நினைவில வருகுதில்ல நீயே ஒரு நல்ல RESTAURANT ஆ பார்த்து வண்டிய விடு சீக்கிரம் அண்ணா"

"சரி கத்தாத பக்கத்தில தான் SAVOURY SEA SELL இருக்கு ஒரு TEN MINUTE ல போயிடலாம் என்ன ஓகேவா?"

"ஓகேன்னா போ"

"என்ன புவிம்மா திருப்தியா சாப்பிட்டியா? பில் கொண்டு வர சொல்லவா?"

"யெஸ் டாடி நான் சாப்பிட்டாச்சு நித்திர வருது சீக்கிரமா கிளம்பலாம்."

" அது சரி நீ இந்த டைமுக்கு எல்லாம் படுக்க மாட்டியே? "

"உண்ட மயக்கம் அம்மா, ஜஸ்ட் ஜோக் காலமை எர்லியா எழும்பினது ரயர்டா இருக்கம்மா வேற ஒண்ணுமில்ல." 

புவிக்கா குடும்பம் கிளம்பி ஒரு ஐந்து நிமிஷம் இருக்காது அஸ்வின் குடும்பம் அங்கே நுழைத்து. அது மட்டும் இல்லாமல் புவி இருந்த அதே டேபிள். அவளது வாசனை அவனுள் பரவுவது போன்று உணர்ந்தான் அஸ்வின்.

அவர்கள் ஆடர் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது அவனது தொலைபேசி அலறியது. அதே சமயம் அவன் முன் இருந்த இன்னும் ஒரு தொலைபேசியும் பாடியது. அந்த பாடலின் ஓசை கேட்டு அபி சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். 

"இது புவியோட ரிங் ரான் மாதிரி  இருக்கே என தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதற்குள் அஸ்வின் அந்த போனை எடுத்து ஆன் செய்து ஹலோ என்றான்.

சிறிது நேரம் எதிர் முனையிலிருந்து சத்தம் வரவில்லை அவன் மீண்டும் ஹலோ என்றான். தன்னை சீர்படுத்திக் கொண்ட புவி அவனுக்கு ஹலோ என்றாள். இப்போது மௌனம் காப்பது அவன் முறை ஆனது. அவன் உடல் ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது.

லைன்ல இருக்கீங்களா சார்.

"அ... லைன்ல தான் இருக்கன் நீங்க யாரு பேசுறது. " அவளது குரலிலேயே அது புவி தான் என கண்டு பிடித்தவன் வேண்டும் என்றே கேட்டான். 

திஸ் இஸ் புவிக்கா அது என்னோட போன் வந்து நான் சாப்பிட வந்த இடத்தில மிஸ் ஆகிடிச்சு. இப்போ நீங்க எங்க இருக்கீங்க என்று சொன்னால் நான் வந்து வான்கிக்குவன் சார் என்றாள்.

அவன் தான் எங்கு இருக்கிறான் என்ற விபரம் சொல்லி வெளியே வந்து வெயிட் செய்வதாக சொன்னான்.

அவள் நன்றி கூறி போனை ஆவ் செய்து விட்டு தந்தையை ரெஸ்டாரண்ட் க்கே போக சொன்னாள்.

தந்தை தான் போய் வாங்கி வருவதாக சொன்ன போது அதை மறுத்து தானே சென்றாள்.

அஸ்வினது  போன் மீண்டும் அலறியது எடுத்து நம்பரை பார்த்தவன் ஒரு முறை தங்கையை பார்த்து விட்டு போனை எடுத்துக் கொண்டு வெளியேறினான். மறவாது புவியின் போனையும் கையேடு கொண்டு சென்றான். 

"லோ... சொலுங்க சகாதேவன் என்னாச்சு என்ன சொல்றான் சங்கர்."

"சார்  அவன் தன்னை யார் கடத்தி வந்து வச்சிருக்கீங்க என்று ஒரே சத்தம் சார்."

"கொஞ்ச நாள் கத்துவான் அப்புறம் அடங்கிருவான். அவன் எப்ப என்னோட தங்கச்சிய வேணாம் என்று சொல்றானோ அப்ப அவனை விட்டுடலாம். அது வரை அவனை இருட்டறையிலேயே வச்சிருங்க. நான் நாளைக்கு வந்து பார்க்கிறான் இப்ப வர முடியாது."

'சரி சார் அப்போ நான் வச்சிடவா?"

"ஆ.... மறந்திட்டன் அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தீங்களா?"

"கொடுத்தோம் சார் ஆனால் அவன் வேணாம் என்று சொல்லிட்டான். காலையில இருந்து  கொல பட்டினி கிடக்கிறான் சார்."

"சரி விடுங்க பசிச்சா தன் பாட்டுக்கு சாப்பிடப் போறான். சரி நான் வச்சிடுரன்."

கதைத்துக் கொண்டே எதிரில் வருபவர் மேல் தெரியாமல் இடித்துக் கொண்டான்.

"ஐ ஆம் சாரி நான் சரியா..... " அவன் பேச்சு தடைப் பட்டது ஏனென்றால் அவன் இடித்து கொண்டது தனது  ஆசை காதலியின் மேல் பிறகு அங்கே வார்த்தைக்கு எது மதிப்பு மௌனமே வார்த்தை ஆகியது அவர்களிருவருக்கும் இடையே.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.