(Reading time: 12 - 23 minutes)

வர்களின் மௌன போராட்டம் இறுதியில் உடைபட்டது. அவளின் மனதில்  ஒரு மயிலிறகின் வருடல் அவனை மீண்டும் பார்த்த நொடியில். அது ஏன் என்று அவளுக்கு புரியவே இல்லை. 

அவன் தான் முதலில் பேசத் தொடங்கினான். 

"ஹலோ மேடம் என்ன இந்த பக்கம்" என்று வேண்டுமென்றே கேட்டான்.

"அது வந்து என்னோட போனை இங்க மிஸ் பண்ணிட்டன் அதை வாங்கிட்டு போகத்தான் வந்தனான்."

"ஓ... அது உங்க போன் தானா நான் தான் உங்க கூட பேசினது மிஸ் புவிக்கா." என்று பவ்யமாக மொழிந்தான்.

"தாங்க்யூ சார் அப்போ என்னோட போனை தந்தீங்க என்றால் நான் கிளம்பிடுவன். அப்பா அம்மா பாக்கிங்கில வெயிட் பண்றாங்க ப்ளீஸ்." என்று போனுக்காக தனது கையை அவன் முன் நீட்டினாள்.

அவன் சற்று ஏமாந்து போனான். அவனோடு ஒன்றிரண்டு வார்த்தை பேசுவாள் என்று எதிர் பார்த்தான் போலும். அவளது போனை அவளிடம் நீட்டினான். அவள் நன்றி கூறி விடை பெற்று சென்றாள்.

அவள் செல்லும் திசை நோக்கி பார்த்துக் கொண்டே இருந்தான் அவள் அவனை மறந்தும் திரும்பி பார்க்க வில்லை. 

அவன் உள்ளே போக ஏமாற்றத் தோடு திரும்பியதும் புவி அஸ்வினை திரும்பி பார்த்தாள். அவன் தன்னை பார்க்க வில்லை என்ற ஏமாற்றத்தோடு திரும்பும் போது அஸ்வின் சட்டென அவளை பார்த்தான். அவள் இதயம் ஆனந்த வேட்கை கொண்டது. அஸ்வினது இதயமும் உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டது. 

அபி தமையனை காணாது போன் போட்டு அவனை உள்ளே வரச்சொன்னாள். அவனும் வருவதாக  கூறி போனை கட் செய்து விட்டு புவியை கண்களால் தேடினான் அவள் அதற்குள் காரை நோக்கி சென்று விட்டிருந்தாள்.

வீட்டுக்கு வந்து தந்தை தாயிடம் குட நைட் சொல்லி விட்டு படுக்க சென்ற புவியால் நித்திரை கொள்ள முடிய வில்லை .

"யாரென்றே தெரியாத ஒருவனை எப்படி இமை கூட மூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேனே. அவன் என்ன நினைத்திருப்பான் ச்சா....  காலேஜில் மட்டும் இல்லாமல் போன் வாங்க சென்ற போதும், கடவுளே அனால் அவனும் தானே அப்பிடி பார்த்தான். ஆண்பிள்ளைகள் எப்போதுமே பெண்களை ஈ என்று தானே பார்ப்பார்கள் இவன் மட்டும் விதி விளக்கா என்ன?. இல்லலே இவன் பார்வையில் வேறு ஏதோ ஒன்று இருந்தது. அது,, அது தான் என்னையும் அவன் பால் ஈர்த்தது. இது என்ன மாதிரியான உணர்வு, கண்களை மூடினாலே அவனது திண்புயத் தோள்களும், வழிய கரங்களும், அவனது காந்தப் பார்வை வரிசைப் பல் என ஒவ்வொன்றாக தூங்க விடாது இப்பிடி இம்சிக்கின்றதே. என்ன தான் ஆகி விட்டது என்னக்கு?" என்று தனை தானே கேள்வி கேட்டபடி அவனது நினைவாலேயே உறங்கிப் போனாள்.

அதே சமயம் அச்வினாலும் உறங்க முடிய வில்லை. புவிக்கவையே நினைத்தபடி இருந்தான். அபியின் விஷயம் ஒரு முடிவுக்கு வந்தவுடன் புவியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்த வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவனாய் தன கையேடு எடுத்து வந்த சில பைல்களில் கையொப்பமிட்டு விட்டு படுக்க சென்று விட்டான் மறக்காது தனது பர்சில் உள்ள புவியின் ஓவியத்துக்கு முத்தமிட்டு கொட நைட் சொல்லி விட்டு.

று நாள் காலேஜில் காயா சோகமாக காணப்பட்டாள். 

"ஏய் காயும்மா என்னாச்சு ஏன் இப்பிடி சோக கிதம் வாசிக்கிறாய். என்னடி ஆச்சு உனக்கு." என்று அபி வினவினாள்.

"அது...... வந்து....... ஒன்னுமில்ல ஆமா உன்னோட லவ் மேட்டர் என்னாச்சு சக்சஸ்போல இவளவு ஹாப்பியா இருக்கே." என்று தன சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு அபியின் எதிர்கால சந்தோஷம் பற்றி வினவினாள். அவளது எதிர் காலம் அஸ்வின் கையில் சிக்குண்டு கிடப்பது யாருக்கும் தெரிய வில்லையே.

அபி நடந்தது அனைத்தையும் கூறினாள். அவளது நட்பு வட்டமும் சற்றே நம்மதி அடைந்தது.

"சரி இப்ப சொல்லு... உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இவளவு சோகம்." என  புவிக்கா காயவை வினவினாள்.

"அது.... நேத்து பிரமிலன் எனக்கு போன் பண்ணி இருந்தான் அவசரமாய் மீற் பண்ணனும் ரெகுலரா சந்திக்கிற ரெஸ்டாரன்ற்க்கு  வா என்று சரி என்று நானும் போனன்.  அவன் காம்பஸ் இன்றர்வியூவில செலக்ட் ஆனதாய் சொல்லி சந்தோசப்பட்டான்."

"சரி அது நல்ல விஷயம் தானே அதுக்கு எதுக்கு நீ சோகமாய் இருக்கே"- புவி 

"விஷயம் அது இல்லடி நாங்க சந்திச்சு பேசினதை என் அத்தை பையன் விஜயன் பாத்திட்டான், நாங்க பேசினத... மட்டும்.... பாக்கல..."

"வேற  என்னத்தை பார்த்தான்.... டென்ஷன் ஆக்காமல் சொல்லு."- அபி

"அது அவன் செலக்ட் ஆகிட்டான் என்ற சந்தோசத்தில அவனுக்கு கிஸ் பண்ணிட்டன் அதை தான் விஜயன் பாத்திட்டான். பாத்திட்டு எங்க அப்பா கிட்ட போட்டுக் கொடுத்திட்டான். நான் வீட்டுக்கு போன என்னை  ஒரு  வழி பண்ணிட்டாங்க."

"இன்னும் படிப்பே முடியல அதுக்குள்ள காதல் கேக்குதாடி உனக்கு அந்த கண்ராவிய எத்தனை பேர் பார்த்தாங்களோ தெரியல நீ எல்லாம் எதுக்கடி எங்களுக்கு மகளாய் பிறந்தாய்." என்று கண்டபடி காயாவின் பெற்றோர் திட்டி தீர்த்து விட்டனர்.

"இனிமேல் என்னை காலேஜிக்கு போக வேண்டாம் என்று சொல்லிட்டாங்க.இந்த விஜயன் தான் அப்பாகிட்ட பேசி என்னை காலேஜ் போக பெர்மிசன் வாங்கி கொடுத்தான். அதுவும் இவனோட பாது காப்பில. அங்க பாரு காலேஜ் வாசலில ஒரு கட்டை தடியன் நிக்கிறான் அவன் தான்.இப்ப எனக்கு பாடிக்காட் மாதிரி வந்து தொலையிறான். "

இரு தோழிகளும். அவள் சொன்ன திசையை மெதுவாக திரும்பிப் பார்த்தனர். காய சொன்னது போலவே ஒருவன் இவர்களை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தான்.

"இஸ்.... அழக்கூடாது காயு சொல்றன் இல்ல சரி நீ செய்ததும் தப்பு தானே பொது இடத்தில வச்சு..." தோழியின் விசும்பல் அதிகமாகவே தந்து அட்வைசை நிறுத்திவிட்டு ஆதரவாக அவள் தோள்  அணைத்தாள்   புவிக்கா.

"சரி கவலைப்படாதே இன்னும் எவ்வளவு காலம் அது தான் பிரமிலனுக்கும் வேலை கிடைச்சாச்சு உனக்கும் படிப்பு முடிஞ்சிரும் அதுக்கப்புறமாய் நீயே அவங்க கிட்ட  கொஞ்சம் தன்மையா உன்னோட காதலை எடுத்து சொல்லு." 

"இல்ல அபி அவங்க இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க"

"அப்போ என்ன செய்ய போராய். அவங்களுக்கு தெரியாமல் கலியாணம் பண்ணிக்க போறியா?" என்று கோவமாக கேட்டாள் புவிக்கா.

காயாவிடம் இருந்து பதில் வராமல் போகவே "இதோ பாரு காயா அவங்க உன்னை பெத்தவங்க தன்னோட பிள்ளைய பத்தி இன்னுமொருவர் வந்து குறையாக பேசும் பொது அவங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும் அத முத்தில நீ புரிந்து கொள்ளனும். எல்லா மாற்றங்களுக்கும் ஒரு கால அவகாசம் தேவை அதை நீ உன் படிப்பு முடியும் மட்டும் அவங்களுக்கு கொடு. தேவை இல்லாமல் பிரமிலனை வெளியே மீற பண்றதை குறைத்துக் கொள். என்ன கேக்குதா?"

"ம்.. சரி நீ சொல்ற மாதிரியே நடந்துக்குவன்"

"குட் வா கிளாசுக்கு போகலாம் கொஞ்சம் சிரிடி நீ சிரித்தா தான் அழகு இல்லாட்டி குரங்கு மாதிரி இருப்பாய்."

"உன்னை..." 

"பரவாயில்ல புவி அழுதிட்டிருந்தவளை சிரிக்க வைத்து விட்டே குட் குட். "என்று கிளி பேசிய படியே வகுப்பறை நோக்கி சென்றனர். மூன்று தோழிகளும். 

தொடரும்!

Go to episode # 07

Go to episode # 09


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.