(Reading time: 11 - 21 minutes)

10. என் இதய கீதம் - Parimala Kathir

காலை சூரியன்  மெல்ல தனது கதிர்களை பரப்பி இருண்டு கிடந்த இப் பூலோகத்திற்கு தனது ஒளிக்கீற்று மூலம் வெளிச்சத்தை மெல்ல வழங்கினான்.   அந்த சூரிய வெப்பத்திலும் புவிக்கா புரண்டு புரண்டு படுத்தாள். 

En ithaya geetham

"இப்ப தான் எழும்ப சொல்லி கழுதையாய்  கத்திட்டு வந்தனான்.  திரும்பவும் இப்பிடி புரழுறியே?  எழும்படி!!!  புவி! புவி....  நீ எழும்ப மாட்டாய்?"

"அம்மா இன்னிக்கு சண்டேம்மா...  என் செல்லம் இல்ல ஒன்லி வை மினிற் அம்மா ப்ளீஸ்.... முறைக்காதீங்க நீங்க எனக்கு  காப்பீ  போட முதல் நான் எழுந்திடுவன்."

"இதத்தான் அரை மணி நேரத்துக்கு முன்பு சொன்னாய்...  இன்னிக்கு   சாயந்திரம் அப்பாவும் நானும்  கொடைக்கானல் போறம் நினைவிருக்கா? நீ கூட இன்றைக்கு காயா வீட்டுக்கு போகணும் என்று சொல்லிட்டிருந்தாய் .  என்னோட சார்பாய்இந்த  பரிசை அவகிட்ட கொடுத்திடு  சீக்கிரம்  வந்திடு. இப்ப எழும்பு  ம்.... " என்று சொல்லி ஒரு அழகான பட்டுப் புடவையை காயாவின் பிறந்த நாள் பரிசாக  கொடுகக சொல்லி புவிக்காவின் கட்டில் மேல் வைத்தார்

"மறந்திட்டன் அம்மா நீங்க போங்க நானும் அண்ணிக்கு ஸ்பெஷல் கிபிட் ஒன்னு ரெடி பண்ணிட்டு இருக்கன்  காயா  வீட்ட போய்ட்டு வந்து பினிஷ் பண்ணி தாரன்." என்று  தாயிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குள் சென்றாள். 

ந்து நிமிடத்தில் தலைக்கு குளித்து   மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் தங்க நிற அகல போடருடன் அந்த போடரின் இரு பக்கத்திலும் கருப்பு நிறத்தில் சிறிய இன்னுமொரு போடறும் அமையப் பெற்ற   சிப்போன்  சாரியை  மிக நேர்த்தியாக அணிந்திருந்தாள். இந்த சாரி அவள் எலுமிச்சை நிற உடலுக்கு இன்னும் கூடுதல் அழகு சேர்த்தது என்றால் அது மிகை ஆகாது. அதற்கு தகுந்த அணிகலனும் மெலிதாக முக ஒப்பனையுமாக கையில் தாயின் கிப்ற்ரோடு மாடி படி இறங்கி வந்து கொண்டிருந்தாள்.  தாயின் கண்களுக்கு மகள் தேவலோக ரம்பையாகவே தெரிந்தாள்.

"என்னம்மா அப்படி பாக்கிறீங்க?  உங்க கண் கழண்டு விழப்போகிறது. " என்று தாயை கேலி செய்து சிரித்தாள்  தன் மகளின் அழகில் மெய்மறந்து அவளை ரசித்தவர் அவள் கேலிப் பேச்சையும் ரசித்தவளாக தானும் கூட சேர்ந்து சிரத்தார்.

"நீ எவ்வளவு அழ்காயிருக்காய் என் கண்ணே பட்டிடும் போல இருக்கு  ஒரு நிமிடம் இரு போயிடாத இப்ப வந்திடுறன்." என்று சொல்லி சமையலறையிலிருந்து  கொஞ்சம் உப்பு, செத்தல் மிளகாய்  சகிதம் வெளியில் வந்தார்.  மகளை கை கட்டாமல் நிற்க சொல்லி விட்டு  திருஷ்டி சுற்றி விட்டு மகளையும் அதில் மூன்று முறை துப்ப சொல்லி விட்டு  அதனை கொண்டு போய் கிணத்துக் கட்டின் மேல் வைத்து விட்டு விட்டு அதன் மேல் ஒரு கல்லையும் தூக்கி வைத்து விட்டு உள்ளே வந்தார்.

"அம்மா இப்பவாவது நான் போகலாமா? அபி எனக்காக வெயிட் பண்ண போறா நான் தான் அவளையும் பிக் பண்ணனும்."

"சரி பாத்து பத்திரமா வண்டி ஓட்டு சாரி வண்டீல சிக்கு படாம ஓட்டு!!!!  "

"அம்மா நீங்க கவலைப் படாதீங்க நான் கார்ல தான் போறான் அப்பா கார் அனுப்புவார்.  சரியா?"

தாயின் முகத்தில் கவலை குறைந்து பிரகாசமானது. அதற்குள்  வாசலில் கார் வந்து நின்றது .

"சரிம்மா நான் கிளம்புறன். "

"ஹலோ அபி நான் கிளம்பிட்டன் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன் நீ ரெடி தானே? "

" ஆ.... ஆமா .... நான் ரெடி தான். நீ வர முதல் நான் ரெடி ஆகிடுவன்."

"சரி  நீ வெளிக்கிடு பை..."

" அண்ணா அவ ரெடியாக லேட் ஆகும் போல நீங்க ரஞ்சனா ஜிவலரிக்கு   வண்டிய விடுங்க நான் கிப்ட் வாங்கணும்."

"சரி பாப்பா"

டை  வாசலில் அவளை இறக்கி விட்டு வண்டியை பாக்கிங் லாட்டில் பார்க் செய்தான். புவிக்கா தனது தோழிக்கும்  தமையனுக்கும்  ஒரு அழகான பரிசை வாங்குவதற்கு  அந்த நகைக் கடையில்  நுழைந்தாள். 

அங்கே  ஒரு  ஆடவன் எல்லா  நகைகளையும்  கடை பரப்பி வைத்துக் கொண்டு இன்னும் சில நகைகளையும்  எடுத்து வைக்க  சொன்னான். அந்த விற்பனை பெண்ணோ படு எரிச்சலாக காணப்பட்டாள்.

"சார்  இதுக்கு  மேல நீங்க எதிர் பாக்கிற மாதிரி  டிசைன் கிடையாது.  இங்க இருக்கிற எல்லா  புது டிசைனையும் காட்டியாச்சு சார்."  என்று கெஞ்சும்  குரலில் சொன்னாள்.

அதற்குள் அபி அந்த இடத்தை நெருங்கி விட புற முதுகு காட்டிக் கொண்டு நின்றவனது  குரலில் அடையாளம் கண்டு கொண்டாள் புவிக்கா.   

"இ.... இது அந்த அவனோட குரல் இல்ல யாருக்கு நகை தேடிட்டிருக்கான்.  இப்பிடி  அலசி ஆராயுறதைப்  பார்த்தால் அவரோட  மனைவி அல்லது  காதலிக்காய் இருக்குமோ?  அவனுக்கு திருமணமாகி விட்டதா?" அவன் திருமணம் ஆணவன்  என்று நினைக்கும் போதே அவள் மனம் வலித்தது.  

"ச்சா.... என்ன இது மடத்தனமான யோசனை அவனுக்கு காதலி இருந்தால் எனக்கென்ன  அல்லது மனைவி இருந்தாள் தான் எனக்கென்ன வந்தது.. 'என்று தலையை சிலிப்பிக் கொண்டு மேலே நடந்தவள்.

"ம்....  அவனிடம்  போய் ஹலோ சொல்ல வேண்டுமோ?  ப்ச்.....  வேணாம் அப்புறம் வழியிறம்  என்று நினைச்சிட்டால்.   வம்பே வேண்டாம் நாம  பாட்டுக்கு நம்ம கிப்டை செலக்ட் பண்ணுவோம்." என்று  தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு  மலே நடக்க  தொடங்கினாள்.   அதற்குள் அவளது போன் இன்னிசையாக ஒலி  எழுப்பியது.

அந்த  கைபேசியின் கீதம் அஸ்வின் காதுகளிலும் எட்டியது.  அவன் யார் என்று திரும்பிப் பாராமலே அவன் வாய் புவிக்கா என சந்தோஷத்தில் கூவியது.  அவனின் கூவல் அவள் செவிகளிலும் விழுந்தது.  புவி ஆச்சரியத்துடன் அஸ்வினை  எதிர்கொண்டாள்.  அவன் சந்தோஷமும் ஆச்சரியாமுமாக  அவளை திரும்பிப் பார்த்தவன்  சிறிது நேரம் சிலையென மாறிப் போனன்.   அவனது  மையல் பார்வை புவிக்காவையும் தாக்கத்துக் குள்ளாக்கியது..  அவளது சுவாசம் சீரற்று போனது.   அவனது பார்வை வீச்சை எதிர் நோக்கும் சக்தி அற்று தலையை தாழ்த்திக் கொண்டாள்.

"எதற்காக இவன் இப்படி பார்த்துத் தொலைக்கிறான்.   நீ  இப்பிடி  மந்தகாச புன்னகையோடு  பார்க்கும்  போது  என் நெஞ்சம் உன்னுள் குட சாய்கின்றதே." என்று புவிக்கா  தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதற்குள் அவனது பார்வையும் தார்ந்து  விட  அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

"நீங்க  சாரில ரொம்ப அழகாய் இருக்கீங்க!!!  உங்க கிட்ட இருந்து கண்ணை எடுக்கவே முடியலே !!"

"அவனது நேரடியான வர்ணனையில் அவள் முகத்தில் வெக்க ரேகைகள் ஓடியது.  தான் கண்டது பொய்யோ என அஸ்வின் என்னும் படி முக்ஹ்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவனை முறத்தாள்.

"அய்யய்யோ  நான் சொல்லலிங்க எதுக்கு என்னை பார்த்து முறக்கிறீங்க,அங்க பாருங்க அந்த  மோதிர செக்சனில இரண்டு பேர் நின்னு உங்களையே பாக்கிறாங்க அவங்க இப்பிடி நினைச்சு பாத்திட்டு இருக்காங்க போல என்று சொல்ல வந்தன் அதுக்குள்ளே முறைக்கிறீங்களே?"

அவன் சொன்ன திசையில் பார்த்தவள் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற  அவளது காலேஜ்  நண்பர்களை பார்த்து கையசைத்து விட்டு அஸ்வினிடன் திரும்பி

"அங்க என்கூட படிக்கிறவங்க என்று சொல்லும் போதே அவன் தன்னை பாராட்ட வில்லை என்பது வருத்தமாகவும் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.