(Reading time: 11 - 21 minutes)

 

"னாலும் நிஜமாவே நீங்க சாரில சூப்பரா இருக்கீங்க புவி நான் இப்பிடி கூப்பிடலாமில்ல"

"அதுக்கு தானே பெயர் வச்சிருக்கு " என்று துடுக்காக சொன்னவள் அப்போது தான் அவன் தனது பெயர்ச சுருக்கத்துக்கு அனுமதி கேட்டான் என்பது தெரிந்தது.   மறுக்க நினைத்தவள் பேசாமல் விட்டு விட்டாள்.  அவ வாயால் தனது  பெயரை கேட்கும் பொது அவளது காதுகளில் தேன் வந்து பாய்வது போல் இருந்தது.

அவளது  கைபேசி மீண்டும் அழைக்கவும்  

"ஹேய் நீ ரெடியா?"

".........."

"ஓகே நான் ஒரு டென் மினிட்ல வந்திடுறன்."

"........."

"இல்லடி ககிப்ட் வாங்க வந்தனான். நீ ரெடியாகிறதுக்குள்ள   நான் வந்திடுவன் சரியா பை"

போன் அழைப்பை துண்டித்தாள்  சரிங்க அப்போ நான் கிளம்புறன் பிரண்டோட பிர்த்டய்க்கு கிப்ட் வாங்க வந்தனான்  லேட் ஆகுது."

"ஓ......  அது தான் சாரில வந்திருக்கீங்களா நான்  நீங்க டெய்லி சாரில தான் இருப்பீங்களோ என்று நினைச்சிட்டன். சாரி"

அவன் தன்னை பட்டிக்காடு என்று சொல்லாமல் சொல்வது போல் அவள் எண்ணமிட்டு அவனை திட்ட வாய் திரைக்கும் முன்பே அவன் சாரியும் சொலி விட தன்னை   கடிந்து கொண்டாள்.   ஒரு புன்சிரிப்போடு பரவாயில்லங்க என்று சொல்லி அங்கிருந்து நகர முயன்றவளை அவனது அழைப்பு  தடுத்து நிறுத்தியது.

"சாரிங்க நீங்க அவசரமாய் கிளப்பணும் என்று சொன்னீங்க பட் எனக்கு இப்ப உங்களை விட்டாள் யாரும் கெல்ப் பண்ண முடியாது  சோ ப்ளீஸ்....."

"ம்......  சரி சொல்லுக என்னால முடிஞ்சதை செய்கிறேன்"

"தாங்க்ஸ் புவி எனக்கு ஒரு கிப்ட் செலக்ட் பண்ணி தருவீங்களா? என்னோட பிரென்டுக்கு  வெட்டிங் கிப்ட் பண்ண. நார்மலி என்னோட சிஸ்டர் தான் எனக்கு கெல்ப் பண்ணுவா அவ இன்னிக்கு   கொஞ்சம் பிசி அது தான் நான் தனியா வந்திட்டன் ஆனா இங்க வந்து முளின்சு கொண்டிருக்கன்." என்று தனது காதை சொரிந்தான்.

புவிகாவிற்கு  இதற்கு முன் இருந்த  மன பாரம்  நெருப்பிலிட்ட கற்பூரம் போல கரைந்து காணாமல் போனது.

னது  சந்தோசத்தை வெளிக்காட்டாமல்  இன்முகத்துடனே அவனுக்கு உதவ முன் வந்தாள். 

புவியின் கண்கள்  நகைகளை மேய்ந்து கொண்டிருக்க   அஸ்வினின் கண்கள் புவியை மேய்ந்து கொண்டிருந்தது. 

"என் இதயத்தில் வாசம்  செய்பவளே  என் இதயம் நொடிக்கொரு தடவை உன் பேரைத்தான் இசைக்கின்றது. அது உனக்கு தெரிய வில்லையா புவி!  என்னுடைய பிரதிபலிப்பை நான் எப்போது உன்னுள் காண்பேன் என் இதய கீதமே"

"சார் சா.....ர் "அவனை யாரோ பல முறை அழைப்பதை உணர்ந்து  தனது மாயையிலிருந்து  வெளிவந்தான். 

"என்னச்சு உடம்பு ஏதாவது சரியில்லையா?  ஏதோ ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று புவி கேள்விகளை அடுக்கினாள்.

"அடிப் பாவி உன் எண்ணத்தில் சிறையிருந்தேன் அதற்கா எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறாய். ஒரு விதத்தில் நீ சொல்வது உண்மை தான் உன்னை கன்னட நாள் முதல் நான் உன் மேல் பைத்தியமாகிப் போனேன் அன்பே!!!  அதை நீ உணர்கின்ற பொழுது என் பத்தியம் இன்னும் அதிகரிக்கும்,   நீ என் காதலி என்ற பெயரில்,,  பின்பு எனக்கே முழுமையானவள் என்ற மனைவி ஸ்தானத்தில் வரும் போது   உன் மேல் கொண்ட பைத்தியம்   நீங்கி உன்காலடியில்  காதல் பித்தானக  இருப்பேன் என் அன்பே..."அவனது என்ன ஓட்டம் தங்கு தடை இன்றி  பாய்ந்து  சென்றது. அதற்கு புவிக்கா கடிவாளம் இட்டாள்.

"என்ன சார் மறுபடியும் ....."

"சாரி புவி ஆபீஸ டென்சனில இருந்திட்டன் ஆமா நீங்க என்ன சொன்னீங்க"

"இந்த டிசைன்  உங்களுக்கு  பிடிச்சிருக்கா சார்...." என்று ஒரு அழகிய பிரீசிலேட்டை காண்பித்தாள்.  அது தங்கமும் பிலாட்டமும் சேர்ந்து  முறுக்கப் பட்டது .  அதன் நடுவிலே இதயம் போன்று அமைப்பு கொண்டு அதனுள்  பெயரின் எழுத்துக்கள்  வைரத் துகள்களால்  பொறிக்கப் பட்டிருந்தது. 

அதன் அழகு அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.  அதைத் தானே அவனும்  செலக்ட் பண்ணி வைத்தான் பில் போட சொல்லாம் என்று  அதை பனிப் பெண்ணிடம் கொடுக்க நினைத்த பொது தான் புவியின் வரவு அவனுக்கு இன்பமாக அமைந்தது. தினமும் எட்டியே நின்று தரிசிப்பவன் இன்று அருகில் நின்று   ஆராதிக்க இச்சை கொண்டான் அதை நிறை வெற்றியும் விட்டான். 

"இட்ஸ்  சோ  பியுட்டி புள் புவி தாங்க்யு"  அவனுக்கு  தான் ஆசைப்பட்டதையே அவளும் செலக்ட் பண்ணி விட்டாளென்று சதோஷம்.  இருவரது ரசனையும் ஒத்தப் போவது கண்டு ஆனந்தம் கொண்டான்.

அவள்  தனது மாதுளை இதழ் பிரித்து   தனது அரிசிப் பல் தெரிய அழகாக சிரித்து  அவனை கிறங்கடித்தாள். சும்மாவே  பித்தானாகி இருப்பவன் அவளின் இந்த சிரிப்பில் முழுவதுமாய்  தன வசம் இழந்தான்.

அவள் அவனுக்கு  விடை கொடுக்க எண்ணி "அப்போ நான்......."

"ஓ ....  சாரிங்க நீங்களும் கிப்ட் பாக்கணும் இல்ல மறந்தே போய்ட்டான்.  நீங்களும் வாங்குங்க சேர்த்தே பில் போடலாம்."

"இல்லங்க  நான் பாத்துக்கிறான் நீங்க கிளம்புங்க என்றாள். சற்றே கோபத்துடன்.  இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து போயிற்று. புவிக்காவுக்கு

அசஸ்வினுக்கோ   இப்போ எதற்கு இந்த கோவம் என்று தெரியவில்லை.  தான் ஏதாவது தப்பாய் சொல்லி விட்டோமோ என்று எண்ணியவன்  அப்போது தான் கண்ட்கொண்டான் அவளின் கொபத்துக்கான காரணத்தை.

"சாரி  புவி  நீங்க என்னை தப்பா நினைச்சிடீங்க என்று நினைக்கிறேன்.   உங்க கிட்ட பணம் இல்லை என்றோ அல்லது நான் பணக்காரன் என்ற திமிரிலையோ என்றெல்லாம்  இல்ல  நீங்களும் செலக்ட் பண்ணிட்டாள் சேர்ந்தே போய் பில் பேய் பண்ணலாம் என்று தான் சொன்னனான்.  "

"இப்போது புவிக்கா   சாரி சொன்னாள்.   "சாரி சார்....  நான் தப்பாய் ....." அவள் தனது உதடுகளை பற்களால் அழுத்தியபடி  நின்றாள்.  அவளது வேதனையை தாங்க மாட்டதவனாய்  கைகள் முஷ்டி இறுகின. 

அவளை சமாதானப்  படுத்த எண்ணினான்.  

"அதை விடுங்க என்ன நீங்க என்னைப் போய் சார் என்று  கூப்பிட்டிருக்கீங்க?  அழகாய் அஸ்வின் என்று கூப்பிடுங்க அல்லது நீங்க ஏதாவது செல்லமாய் பேர் வைத்து கூப்பிட்டாலும் எனக்கு ஹாப்பி."

அவள் முறைத்துக் கொண்டே சிரித்தாள்.

"அது இப்பிடியே சிரிச்சிட்டிருங்க அப்போ தான் அழகாய் இருப்பீங்க  அது தான் நக்கும் பிடிச்சிருக்கு."

அதற்குள் அவனது கைபேசி அலறியது எடுத்து காதில் ஒற்றியவன்   "ஓ லேற்  ஆகுதா இல்லம்மா நான் டைம் பாக்கல இன்னும் ஐந்து நிமிடத்தில வீட்டில இருப்பன் பாய் "

"சோரி  புவி நான் கிளம்பனும் flightக்கு லேற்  ஆகுது  என்று சொல்லிக் கொண்டே பில் போடா சென்றான் 

"பரவாயில்லை  நீங்க கிளம்புங்க சா.. அஸ்வின்  எனக்கும் டைம் ஆகுது  என்று சொல்லிக் கொண்டே அஸ்வின் எழுத்தது போலவ ஒன்றை தானும் எடுத்துக் கொண்டு மோதிரப் பகுதிக்கு சென்றாள்.  அவனது  கேள்வில்லா  பார்வைக்கு அண்ணாக்கு என்று பதில் சொன்னாள். 

அவன் சிரித்துக் கொண்டே விடை  பெற்று சென்றான்.  புவியும் தனது தோழிக்கும் ஒரு முத்து பதித்த மோதிரத்தை  வாங்கி கொண்டு அபியின் வீடு நோக்கி பயணித்தாள். 

தொடரும்!

Go to episode # 09

Go to episode # 11


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.