(Reading time: 14 - 28 minutes)

11. என் இதய கீதம் - Parimala Kathir

ம்மா என்னோட திங்ஸ் பாக் பண்ணிட்டீங்களா?" என்று தாயிடம் கேட்ட படி வந்து சோவாவில் அமர்ந்தான்.

"ஆங்......   எல்லாம் எடுத்து வைச்சிட்டண்டா எதுக்கும் நீ  ஒரு வாட்டி பாத்திடு நான் உன்னோட பாக்கில அடுக்கிடுறன்.  இப்ப வா சாப்பிடலாம்.  உனக்கும் லேற் ஆகுதில்ல."

En ithaya geetham

"ப்ச்.. இருங்கம்மா நான் இப்ப தான் நவீனோட  சாப்பிட்டனான்.  நீங்க சாப்பிட்டீங்களா?  நான் குளிச்சிட்டு ரெடி ஆகிறன்."

"நான் சாப்பிட்டுக்கிறன்....  நீ இவளவு நேரம் நவீனோடவா இருந்தாய்? நான் கால் பண்றப்போ நகைக் கடையில இருக்கிறதா சொன்னாய்?"

"இல்லம்மா அவன் ஆபீசுக்கு வந்தவன் அவனோட கொஞ்சம் பேசவேண்டி இருந்தது . அது தான் அப்பிடியே ரெஸ்டாரன் போய் சாப்பிட்டுக் கொண்டே  கதைச்சிட்டு  மதுவுக்கும் ஒரு பிறேசிலேட் வாங்கிட்டு வந்தனான் இது தான் எப்பிடி இருக்கம்மா?"

"எங்க காட்டு...  ம்.... ஸ்டைல்  டிவ்வரன்ரா  ரொம்ப அழகா இருக்கடா. சரி சரி நேரமாகிறது நீ போய் குளி"

"ம்... சரிம்மா. ஆமா அபி எங்கயோ வெளியில போகணும் என்று சொன்னாள்  போய்ட்டாளா? " என்று மாடிப் படி ஏறிக் கொண்டே கேட்டான்.

தாய் பதில் சொல்லும் முன்பே தனது அறையிலிருந்து சாறியை அள்ளி சுருட்டிக் கொண்டு வந்தாள். "அம்மா என்னம்மா இது கட்டக் கட்ட கழண்டு கொண்டே இருக்கு என்னால முடியல... கொஞ்சம் கெல்ப் பண்ணுங்களன். அவ வந்திட்டே இருக்கா நான் இன்னும்  ரெடி ஆகல என்று தெரிந்தால் என்னைக் கொன்னே போட்டிடுவா. இதில நான் வேற ரெடி ஆகிட்டன் என்று சொல்லிட்டன். அம்மா......!!!!" என்று தாயை கோவமாக அழைத்தாள்.

"ஏண்டி கத்திறாய் அவ நல்ல பொண்ணு வந்தாலும் கொஞ்ச  நேரம் வெயிட் பண்ணுவா நீ முதலில சாறிய கீழ விடு." என்று மகளை அதட்டிக் கொண்டே மாடிப் படி ஏறினாள் தாய்.

"அட அபி என்ன அதிசயம் கோவிலுக்கு கூட சல்வார் தான் போடுவாய் அம்மா தாவணி பாவாடை கட்ட சொன்னா கூட கட்ட மாட்டாய் இப்ப சாறியோட நிக்கிறாய். "

"ஸ்... நீ வேற அது என்னோட பிரன்ட் காயாக்கு இன்னிக்கு பத்டே   அவ தான் கோவிலுக்கு போகணும் என்று சாறி தான் கட்டாயமாய் உடுத்து வரணும் என்று  சொல்லிட்டா. பத்டே  பேபியின் வேண்டுகோள் தட்ட முடியுமா?  அது தான்.  ஏ  நீ கிப்ட் வாங்கிட்டியா? காட்டு பாப்பம்.?

"இந்தா"  

"வாவ் ரொம்ம அழகா இருக்கடா. புது டிசைனா?  சூப்பர்.  இப்பிடி லேடிசுக்கும் இருந்தால் எனக்கும் ஒன்று வாங்கி இருக்கலாமே?" என்று அதன் அழகில் மயாங்கி அங்கலாய்த்தாள்.

"சாரிடா நான் லேட் ஆனதால அதைப் பத்த யோசிக்கல இதுவே லாஸ்ட் மினிட்ல தான் செலக்ட் பண்ணினனான்."என்று அங்கு நடந்தவற்றை கூறினான்.  சேல்ஸ் கேர்ள் அவனிடம் பட்ட பாட்டை மட்டும் தான் கூறினான். புவிக்கா பற்றிய நிகழ்வை கவனமாக தவிர்த்தான்.  

அதற்குள் வேலைக்கார கண்ணாயிரம் வந்து அபியின் தோழி வந்து  வாசலில் நிற்பதாக கூறினான்.  மேகலா தான் வருவதாக கூறி கன்னாயிரத்தை அனுப்பி வைத்தாள்.

"பாத்தீங்களா அவ வந்திட்டா இன்னிக்கு நான் அவளவு தான்  அவ சீக்கிரமாய் வீட்டுக்கு போகணும் என்று சொல்லிட்டிருந்தா ஏற்கனவே நான் லேட் இப்ப வந்து பாத்தாளோ  அவளவு தான். அவளை எப்பிடி சமாதான படுத்தபோரனோ?"  என்று  அபி தவித்தாள்.  அவளின் தவிப்பு  அஸ்வினுக்கு புது விதமாக இருந்தது.

"ஏன் உன்னோட ஆருயிர் தோழி உள்ள வர மாட்டாளா? அவளவு பெரிய மகராணியா அவங்க?  ஆமா நீ ஏன் அவளுக்கு இவளவு  பயப்படுறாய்?"

"அது இல்லண்ணா அவ பேரன்ட்ஸ் கொஞ்சம் கண்டிப்பானவங்க   எவ்வளவு குளோஸ் பிரன்ட்  எண்டாலும் காலேஜோட சரி வீட்டுக்கெல்லாம் போக மாட்டா    அது அவங்க அம்மாக்கு பிடிக்காது.   அதனால தான் அம்மாக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். " என்று  தனது தோழிக்காக பரிந்துரைத்தாள்.

"சரி சரி உன்னோட தோழி புராணம் பாடியது  போதும் எனக்கு லேற் ஆகுது  நான் குளிசிட்டு வெளிக்கிடனும் பாய்"  என்று கூறி விட்டு தனது அறை நோக்கி நகர்ந்தான்.

ஸ்வின் தனது அறைக்குள் நுழையவும் புவிக்கா ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தோழியின் நிலையைக் கண்டதும் தனது கோபத்தைக் கைவிட்டு சிரிக்க தொடங்கி விட்டாள்.  அபிக்கு இப்போது தான் மூச்சே வந்தது. புவிக்கா தனது தோழியை செல்லமாக கடிந்து கொண்டே அவளது புடவையை ஒழுங்காக உடுத்தி விட்டாள்.  அந்த நேரம் பார்த்து  அத்தை என்று அழைத்துக் கொண்டு சர்ஜிகா  உள்ளே நுழைந்தாள்.  

"ஹேய்  அபி  என்னடி சாறி எல்லாம் கட்டிட்டிருக்காய்  சாறில நீ அழகாய் இருக்கே. ஆமா யாரிது நான் இவங்களை பார்த்ததில்லையே" என புவியை மேலும் கீழும் தனது பார்வையால் அளவெடுத்துக் கொண்டே கேட்டாள்.

"தாங்ஸ்  சர்ஜி  என் பிரண்டோட பர்த்டே அது தான் சாறி அப்புறம் இது என் க்ளோஸ் பிரன்ட் புவிகா.  புவி இது என்னோட மாமா பொண்ணு சர்ஜிகா." என பரஸ்பரம் இருவருக்கும்  அறிமுகம் செய்து வைத்தாள்.

புவிக்கா ஹலோ என்று ஒரு மென்னகையை சர்ஜிகாவை பார்த்து சிந்தினாள்.   பதிலுக்கு சர்ஜியும் புவிக்காவைப் பார்த்து புன்னகை புரிந்ததோடு  புவியின்  அழகையும் தவறாது விமர்சித்தாள்

"புவிக்கா நீங்க சிரிக்கும் போது உங்க உதட்டோரம்  விழும் சின்ன குழி உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு.  உங்க சிரிப்பைப் பார்த்தால் எந்த ஆம்பிளையும்  கண்டிப்பா விழுந்திடுவான் என்று வெள்ளந்தியாக கூறிச்  சிரித்தாள்.  அது அவளது மாமா என்று தெரிந்தால் இந்த சிரிப்பு அவளது முகத்தில் குடி கொள்ளுமா என்று தெரியாது.

புவிக்காவின் முகம்  வெட்கத்தால் சிவந்தது.  ஏனோ அந்த நேரம் அஸ்வினின் மையல் பார்வை அவளை தாக்கியது போல் உணர்ந்தாள். இருந்திருக்கும் ஏனெனில் அதே நேரம் (அஸ்வின் மனதிலும்  இன்று நகை கடையில் நடந்த புவியுடனான சம்பாஷனை தான் ஓடிக் கொண்டிருந்தது) புவி மறக்காது  சர்ஜிகாவுக்கு நன்றி தெரிவித்தாள்.

அபியும் சர்ஜியும் புவியின் முகச்சிவப்பை கண்டு  ஆர்ப்பரித்தனர்.  "என்ன புவிக்கா நிஜமாவே உங்க உதட்டு குழியில் யாரவது விழுந்திட்டாங்களா என்ன? என்று கேட்டாள் சர்ஜி 

புவியின் மனதில் அஸ்வின் ஒரு நாளும் தனது புன்னகை அழகென்று சொன்னதில்லையே என்று மருவிக் கொண்டாள். ஆனால் உடனேயே தனது தலையில் தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டாள். ஏதோ பல வருடப் பழக்கம் போல் அல்லவா என் நினைப்பு செல்கின்றது. மூன்றே தடவை தான் அவரை சந்தித்திருக்கிறோம் அதற்குள் இப்படியா மனம் அவன் காலடியில் மண்டியிட்டுக் கொள்ள வேண்டும்.  என்று அவள் மனம் பூராகவும் அஸ்வினின் நினைவில் உழன்று கொண்டிருந்தது. 

சர்ஜிகா அவளது பதிலுக்காக காத்திருப்பது  உணர்ந்து தன் நிலை மீள்கையில்  அதற்கான பதிலை அபி சொல்ல முற்பட்டாள்.

"எங்க சர்ஜி  இந்த முட்டாள் பெண் பின்னால் ஒருவன் ஆண்டுக் கணக்கில் சுத்திக் கொண்டிருக்கிறான்.  அது இந்த மூடப்  பெண்ணுக்கு தெரியாதே தெரிந்தால் தானே அவள் உனக்கு பதில் சொல்ல. ஆனால் அவன் இவள் உதட்டுக் குழியில் விழுந்ததால் தான் காதலிக்கிறானா என்று எனக்கு சத்தியமாய் தெரியாது.  ஆனால் இவளை ஒருவன் காதலிப்பது மட்டும் உண்மை என்று புவிக்காவே அறிந்திராத ஒரு விஷயத்தை சர்வ சாதாரணமாக  அபி இன்று போட்டு உடைத்தாள். 

அபி சொன்ன விஷயத்தால் ஆடிப் போனாள் புவிக்கா. முதலில் தனது தோழி தன்னை கேலி பேசுகிறாள் என்று நினைத்து அவளை கேள்வியோடு  பார்த்தாள். ஆனால் அவள் முகமோ இது கேலி அல்ல நிச்சயமான உண்மை என்று சொல்லிற்று. இப்போது புவியின் மனதில் ஆயிரம் விடை தெரியாக் கேள்விகள் எழுந்தன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.