(Reading time: 14 - 28 minutes)

 

வளது மன நிலை கண்ட சர்ஜி  புவியை கேலி செய்யாது.  அபியிடம்  தனது மாமனான அஸ்வினைப் பற்றி விசாரித்தாள். 

"அபி எங்கடி மாமா கிளம்பிட்டார சத்தத்தையே காணம்."  என்று உரிமையோடு விசாரித்தாள்.

இல்ல சர்ஜி அவன் குளிச்சிட்டிருக்கான் இப்ப கிளம்பிடுவான். நீ சாப்பிட்டிட்டு போ நாங்க போய்ட்டு வாரம் என்று சொல்லி கிளம்பினாள். 

புவிக்காவும்  சர்ஜியிடம் பை சொல்லி விட்டு அபியுடன் மாடிப் படிகளில் இருந்து இறங்கினாள்.

ப்போது தான் குளியல் அறையில் இருந்து  வந்த அஸ்வின் தங்கையின் புவி என்ற அழைப்பும் அதனைத் தொடர்ந்து  தனது தேவதையின் குரலையும்  கேட்டு அவசரமாக கதவைத் திறந்து கொண்டு வெளி வந்தான். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் கீழே இறங்கி சென்று விட்டிருந்தனர்.

"சரிம்மா பை " என்று  எதோ வேலையாக இருந்த தாயிடம் சொல்லி விட்டு கிளம்பினர்.

அஸ்வின் அவசரமாக  ஓடி வந்ததை  பார்த்த சர்ஜி "என்ன மாமா அவளவு அவசரம்  கட்டி இருக்கிற துண்டோட வந்து நிக்கிறீங்க?" என்று கேலியாக கேட்டாள்.

அப்போது தான் அதை உணர்ந்தவன்." இல்ல அபிகிட்ட முக்கியமா ஒன்று சொல்லணும் அது தான் அவ போக முதல் ஓடி வந்தன் அதுக்குள்ளே போய்ட்டா என்றான் வருத்தத்துடன்.

"அதுக்கா இவளவு கவலை இருங்க நான் போய் கூட்டிட்டு வாறன்.  அவ இன்னும்  வீட்டு வாசலைக் கூட தாண்டி இருக்க மாட்டா." என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்க போன சர்ஜியை தடுத்து நிறுத்தினான் அஸ்வின்.

"இல்ல வேணாம்.  பரவாயில்ல நான் அவ கூட போனில பிசிக்கிறன்." என்று சொல்லி விட்டு  தனது அறைக்குள் நுழைந்ததான்.  உள்ளே சென்றவன் இரண்டே நிமிடத்தில் டெனிம் பாண்ட்சும் செக் சேட்டுமாக  வெளியே வந்தான். வந்தவன் நேரே பால்கனிக்கு அவசரமாக சென்றான்.  அங்கிருந்து பார்த்தால் அவர்களின் வெளி கேற் நன்றாகவே தெரியும்.  

அவனுக்குள் பல மின்னல்கள் வந்து தாக்கியது போல் உணர்ந்தான்.  ஏனெனில் அவன் அபியுடன் அங்கு கண்டது அவனது உயிரை ஆமாம் புவியை தான் அபியுடன் கண்டான். 

அந்த  நேரம்   அவனுக்குள் ஆனந்தப் பூ பூத்தது.   அவன் புவியையே   மெய்  மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். கேற்றை நோக்கி சென்று கொண்டிருந்த புவிக்கா முதுகில் ஏதோ உறுத்துவது போல்  உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.  பார்த்தவள்  அதிர்ந்து போனாள். அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை. காரணம் அஸ்வின்!!!!. அஸ்வின் மட்டுமல்ல அவன் தோளை  உரிமையாக கட்டிக் கொண்டு நின்ற சர்ஜிகா!!!!

"இவன்.....  இவன் எங்கே இங்கே " என்று அவள் மனதில் சிந்தனை ஓடியது.  அப்போது தான் அவளுக்கு எல்லாம் விளங்கிற்று அபியின் அண்ணனது பெயரும் அஸ்வின்!!!  தனக்கு அறிமுகமானவனது பெயரும் அஸ்வின். இதை ஏன் அவள் கண்டு கொள்ளவே இல்லை. புவி பிரமை பிடித்தது போல் அஸ்வினையே  பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.  அவனும்  அவளைக் கட்டி இழுக்கம்  புன்னகையோடு  அவளையே  இமை தட்டாது நோக்கிய வண்ணம் நின்றிருந்தான்.

புவியின் பேச்சு திடீரென நின்றதால் திரும்பிப் பார்த்த அபி அவர்களின் பார்வை நாடகத்தை கண்டு கொண்டாள்.  இவர்களின் பார்வை பரிமாற்றத்தை இன்னும் ஒரு சோடி கண்களும்  கேள்விகளோடு  அவதானித்தது.  (நீங்க நினைப்பது சரி  அது  அஸ்வினை  உரிமையோடு  தோள்அனைத்து   நின்ற  சர்ஜ்கா தான் ) .

"ஹேய் நீ என் அண்ணாவை பார்த்தது இல்லையே இவன் தான் அஸ்வின். என்று புவிக்கு அறிமுகப் படுத்தி விட்டு தமையனிடம் ஹப்பி யேனி  என்று கத்தி விட்டு  அருகில் நின்ற  சர்ஜிகாவுக்கும் பை சொல்லி விட்டு  புவியுடன் அங்கிருந்து நகர்ந்தாள். 

அஸ்வினுக்கு  தங்கள் இருவருக்கும் உண்மை தெரிந்து விட்ட சந்தோஷம் ஒரு புறம்,   மற்றும் அவனது தங்கைக்கும் தாயுக்கும் பிடித்தமானவள் என்பதால் எதிர் காலத்தில் எந்த பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை கலந்த சந்தோஷம் மறு புறமுமாக  தனது  நண்பனின் திருமணத்திற்காக கொடைக்கானல் புறப்பட்டு சென்றான்.

அஸ்வின் எதிர்பாராததும்  ஒன்று உண்டு அது தாயின் சம்மதம்.  இவர்களின் பிரிவுக்கு காரணமாய் இருக்கப் போவதே அவனது தாய் என்று தெரியாமலே சென்றுவிட்டான் பாவம்.

னால் புவிக்கா இனிமேல் அவனை  முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற  முடிவுடன் தான் அஸ்வின் வீட்டில் இருந்து புறப்பட்டாள். காரணம் சர்ஜிகா!  அவள்  அவனை உரிமையோடு கட்டிக் கொண்டு நின்று கதை பேசுகிறாள்,  இவனும் சிரித்துக் கொண்டே  பதில் சொல்கிறான்.  அது மட்டும் இல்லாது அபி அன்று ஒரு நாள் காயாவிடம்  "நீ  அவனுக்கு ரை பன்னாதம்மா  அஸ்வினுக்கு  ஏற்கனவே வீட்டில  ஆள் இருக்கு" என்று  சொன்னது வேறு நியாபகத்தில் வந்து தொலைத்தது.  

தனது தோழியின் பிறந்த நாளுக்காக வீட்டில் இருந்து சந்தோஷமாக புறப்பட்ட புவிக்காவால் காயாவுடன் அவளது பிறந்த நாளை மன நிறைவுடன் கொண்டாட முடியவில்லை.  அவள் மனது பூராகவும்  அஸ்வினதும் சர்ஜிகாவினதும்  எண்ணங்களே  ஊற்றெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.  அவளும் நல்ல பெண் தான்.  இவன் தான்  இருவரிடமும் காதல் விளையாட்டு விளையாடுகிறான்." என்று அஸ்வின் மேல் ஆத்திரம் கொண்டாள். 

அப்போது அவளின் மனசாட்சி அவள் முன் நின்று கேள்வி கேட்ட்டது.

"அவன் எப்போதாவது உன்னை விரும்புவதாக சொல்லி இருக்கானா? அல்லது உன்னிடம் ஏதாவது தப்பாக நடந்து கொண்டிருக்கானா?"

"இல்லை" 

"ம்   அப்போ எதை வச்சு அவன் உன்னை ஏமாத்திட்டான் என்று சொல்றே?"

"ஆ... அத ...அது  " என்று பதில் சொல்ல தெரியாது தடுமாறினாள்

"ஹி.... பார்த்தாயா உனக்கே பதில் தெரியவில்லை. ஏன்? ஏனெனின் நீ தான் அவனை நினைத்து உருகுகிறாய்  அதனால் தான் அவன் உன்னுடன் சாதரணமாய்   பேசுவதை கூட ஆசை கொண்ட உன் மனம் அவனும் உன் மேல் காதல் கொண்டுள்ளான் என நினைத்துவிட்டது."

இதுவும் சரியோ என்று யோசித்தாள்.  தறி கெட்ட தனது மனதுக்கு இந்த கோவிலிலே கடிவாளம் இட்டு விட்டு பழைய புவியாக வீடு செல்ல எண்ணி  வினைகளை   வேரறுக்கும் விநாயகப் பெருமாளிடம் இனி தான் எப்போதும் அஸ்வினை சந்திக்க கூடாது அதுக்கு நீ  தான் அருள் புரிய வேண்டும் என்று மனதில்  இரத்தம் கசிய வேண்டினாள்.  எங்கே அவனை மீண்டும்  பார்த்தால் தனது மனது அவனிடம் அடிமைப் பட்டுவிடுமோ  என அஞ்சியது  அந்த   பெண் உள்ளம்.  இறைவன் போட்ட கணக்கை யாரால் அறிய முடியும்.  பாவம் அந்த பேதை தனது  வாழ்வாதாரத்திற்காக அவனிடமே கை ஏந்தி  நிற்கப் போவது தெரியாமல் போய் விட்டது.

மனது சற்று லேசாகிவிட சிறிது நேரம் தோழிகளுடன் கலகலத்துவிட்டு  நேரமாகிறது என்று கூறி அவர்களிடம் விடை பெற்று சென்றாள்.  அவளை ஆண்டுக் கணக்கில் தனக்கும் தெரியாமல் யார் காதலித்தான் என்று வரும் வழியில் அபியிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தவள், இடையில் இந்த அஸ்வினின் சந்திப்பால் அது பற்றி மறந்தே போனாள்.

புவியின் எண்ணம் அஸ்வினின் நினைப்பை அடியோடு தன் மனதிலிருந்து நீக்குவது பற்றி முடிவெடுத்திருக்கையில்,, அஸ்வினின் நினைப்போ கொடைக்கானலில் இருந்து திரும்பி வந்தவுடன்  தனது  காதலைப் பற்றி தாயிடமும் புவியிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் இருந்தது.  இந்த இருவரது எண்ண ஓட்டங்களில் யாருடையது  எதிர் காலத்தில் நிறைவேறும் என்பது  அவர்களின் மனதை காதல் கணை கொண்டு தாக்கிய மன்மதனுக்கே வெளிச்சம். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.