(Reading time: 14 - 28 minutes)

 

வீட்டிற்கு வந்த புவிக்கா  நேரே தனது அறைக்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு குளிர் நீரை முகத்தில் அடித்து கழுவிக் கொண்டு தன் தாயின் அறைக்கு சென்றாள்.

"என்னம்மா ரெடி ஆகிட்டிருக்கீங்களா? "

"ஆமாடா...  ஆமா நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே அம்மா வேணும் என்றால் உன்னோடவே நிக்கவாம்மா அப்பாவை மட்டும் அனுப்பி வைக்கலாம்.  அப்பா போனால் அவசரப் படாமல் இன்னும் இரண்டு மூன்று நாள் நின்னிட்டு வருவார். ஆ... அப்பிடி செய்வோமாம்மா?"

"அம்மா நீங்க இருக்கீங்களே சரியான இதும்மா.  அண்ணாட  வெட்டிங் நீங்க கண்டிப்பா போயாகனும் நான் என்ன சின்ன பாப்பாவா?  வெய்யில் கொஞ்சம் கூடவா இருக்கிறதால  ரயேடா இருக்கு அவளவு தான் நீங்க இத சாக்கா வச்சு அவனோட கலியாணத்துக்கு போகாம இருக்க றை பண்ணாதீங்க புரிஞ்சிதா?" என செல்லமாக தாயை மிரட்டி விட்டு தனது பரிசுகளையும் சேர்த்து பாக்கில் எடுத்து வைத்தாள்.

ஆபீசில் இருந்து வந்த தந்தையும் மகளை தனியே விட்டு செல்ல மனமின்றி  கிளம்பினார். அப்போது கூட காரில் ஏறும் முன்பு  வேலைக்கார கனகாவை அழைத்து நூறாவது தடவையாக "கனகா!  பாப்பாவை நீ தான் பத்திரமா பாத்துக் காணும் சரியா? இரவில இங்கே தங்கிடு அப்புறம்... ஆறு ஆறரைக்கே வெளிகேட்டும் சாத்தி வீட்டு கதவையும்  சாத்திடுங்க .  நான் நைட்டுக்கு இரண்டு கூர்க்கா ஏற்பாடு செய்திருக்கன். அம்மாடி கவனமா இருந்துக்கோ காலேஜ் முடிஞ்சதும்  வீட்டுக்கு வந்திடனும் வேற எங்கயும் போக கூடாது.  தினமும் அப்பாவும் அம்மாவும் போன் பண்ணுவம் சரியாடாம்மா.  புவிம்மா எதுக்கும்....  " என்று இழுத்த தந்தையை 

"அம்மா.... அப்பா .... நான் இன்னும் குழந்தை இல்ல என்னோட லைவ தனியா  சமாளிக்க என்னால முடியும்  நீங்க கவலைப்படாம சந்தோஷமா போங்க. ஆ சொல்ல மறந்திட்டன்  என்னையே நினைச்சுக்கிட்டு  இருக்காதீங்க  நான் பத்திரமா இருந்துக்குவன் நீங்க  ஹப்பியா  கலியாணத்தை  எஞ்சாய்  பண்ணுங்க ஒகே?  நான் அங்க ஒரு ஸ்பை வச்சிருக்கன்  அந்த ஆளிட்ட டெய்லி போன் பண்ணி உங்களை பத்தி  கேப்பன் நினைவிருக்கட்டும்." என்று தாய் தந்தையை  செல்லமாக மிரட்டி அவர்களை சிரிக்க வைத்து சிரித்த முகமாகவே வழி அனுப்பி வைத்தாள்.

"யாரு உன்னோட அண்ணன் தானே அந்த ஸ்பை ?  அவன் கலியாணம் ஆகும் மட்டும் தான்  நீ ஆட்டி வைக்கிறததுக்கு எல்லாம்  ஆடுவான். அதுக்கு பிறகு பொண்டாட்டி  சொல்றபடி தான் ஆடுவான்."  என்று தந்தையும் பதிலுக்கு கேலி பேசி அவளிடம் அன்பாக ஒரு திட்டையும் வாங்கிக் கொண்டு  தாயும் தந்தையும் கொடைக்கானல் நோக்கி பிளைட்டில் புறப்பட்டனர். 

என்ன தான் தாயையும் தந்தையையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தாலும் அவளுக்குள்ளும் சிறு கவலை இழையோடி இருந்தது என்னமோ உண்மைதான்.  இத்தனை காலமாக அவர்களை ஒரு நொடி கூட பிரிந்திராதவள் முழுதாக மூன்று நாட்கள் எப்பிடி தனியாக இருக்க போறாளோ தெரியவில்லை. 

இதே எண்ணம் தான் தாய் தந்தை மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

பெற்றோரை வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்த புவியை சாப்பிட வருமாறு அழைத்த கனகாவிடம்  தனக்கு பசி இல்லை என்று இரவு உணவை மறுத்து விட்டு தனது அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.  பெற்றோரின் பிரிவுத் துயர் ஒரு புறம், தனது நேசத்துக் குரிய தமையனின் திமணத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் மறு புறம் மூன்று தடவை  மட்டுமே  பார்த்து பேசிய ஒருவனிடம் காதல் வயப் பட்டு  அந்த காதல்!!!!!  இன்றோடு மரணித்தும் விட்டது. அவனோடான  இன்றைய சந்திப்பில் எத்தகைய ஆனந்தத்தை அனுபவித்தவள். அதன் ஆயுள் இன்றுடன் முடிந்து விட்டது என்பதே பெரும் துயராக அவளை ஆட்டிப் படைத்தது. ஆனால் அவளது இந்த தவிப்பும் கண்ணீரும் அர்த்தமற்றது என்று அவளுக்கு தெரியாததுவே  கொடுமை. ஏனென்றால் இவளை விட பல கோடி லட்சம் மடங்கு அஸ்வின் அவளை உயிராக நேசிக்கின்றான். இது இந்த மடந்தைக்கு தெரியாதே அதனால் தான் இன்றைய இரவை கண்ணீரிலே கரைக்கிறாள். 

தொடரும்!

Go to episode # 10

Go to episode # 12


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.