(Reading time: 12 - 24 minutes)

06. என்னுயிரே உனக்காக - சகி

"ராகுல்...ராகுல்...எங்கேடா இருக்க?"-என்று வீடு முழுக்க தேடினார் சுந்தரேசன்.வீடு முழுதும் தேடியும் அவனை காணவில்லை.அவருக்கு பதற்றம் அதிகமானது.என்ன செய்வதென்றே புரியவில்லை அவருக்கு.ரகுவிற்கு அழைப்பு விடுத்தார்.

Ennuyire unakkaga

ரகு இங்கே சரணோடு அமர்ந்திருந்தான்.அழைப்பை பார்த்து அவனுக்கும் ஏதோ சரியாய் படவில்லை.

"ஹலோ!"

"தம்பி...நான் தான்ப்பா."

"சொல்லுங்கண்ண!என்னாச்சு?பதற்றமாக பேசுறீங்க?"

"தம்பி....ராகுலை காணும்ப்பா!"

"என்னண்ண சொல்றீங்க?நல்ல தேடுனீங்களா?"

"பார்த்தேன்ப்பா!இல்லை..."-ரகுவிற்கு சிறிது நேரம் ஒன்றும் விளங்கவில்லை.சிறிது மௌனம் காத்தான்.பின்,

"அண்ணா ராகுல் எங்கேயும் போயிருக்க மாட்டான்.எங்க பழைய ரூம்ல பாருங்க,இருப்பான்."

"என்னப்பா சொல்ற?"

"பாருங்கண்ண."

"சரிப்பா!"அவன் கூறியவாறே அவர் அங்கே போய் பார்த்தார்,அவருக்கு அப்போது தான் மூச்சே வந்தது.ராகுல் அங்கே தான் இருந்தான்.அவன் கையில் அவன் அன்னை கீதாவின் புகைப்படம் இருந்தது.

"தம்பி...இங்கே தான்ப்பா இருக்கான்."

"அவன்கிட்ட போனை கொடுங்களேன்."

"சரிப்பா!"-"ராகுல் கண்ணா அப்பா பேசுறார் பாரு!"-என்று அவனிடம் தந்தார்.

"அப்பா!"-இனிமையாக ஒலித்தது ராகுலின் குரல்.

"அம்மா போட்டோவை முதல்ல கீழே வை செல்லம்."-அவனும் வைத்தான்.

"நான் அம்மா போட்டோவை வச்சிருந்தேன்னு உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன்னா,நான் உன் பெஸ்ட் ஃப்ரண்ட்ல்ல,அதான்...!"

"சரிப்பா."

"என்னடா?ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"தனியா இருக்க..ஒரு மாதிரி இருக்குப்பா!"-ரகுவிற்கு என்ன பதில் கூறுவதென்றே புரியவில்லை.அவனது முகம் மாறிய அறிகுறியை ஆதித்யா சரண் கண்டான்.அவனுக்கு ஏதோ எட்டியது.உடனே ரகுவிடம் இருந்து கைப்பேசியை பிடுங்கினான்.

"செல்லக்குட்டி எப்படி இருக்க?"

"ஆதி...!"

"பரவாயில்ல கண்டுப்பிடிச்சிட்டியே!"

"தேங்க்யூ!"-ராகுலின் குரலில் உடனடி மாற்றம் தெரிந்தது.

"என்ன ச்சீப்...பண்ணுறீங்க?"

"ஒண்ணுமில்லை."

"அய்யயோ!அப்படி எல்லாம் இருக்கக் கூடாது.என்ன பண்ணலாம்?"

"என்ன பண்ணலாம்?"

"ம்....நீ என்ன பண்ற நேரா சுந்தரேசன் தாத்தாவை கூட்டிட்டு உன் ரூம்க்கு போற,ஒரு டிராவல் பேக்ல உன் டிரஸ் எல்லாம் போட்டுட்டு ரெடியாகிடுற,எண்ணி ஒரு மணி நேரத்துல,உன்னை சென்னைக்கு கூட்டிட்டு வர ஆள் வருவாங்க,அவங்க கூட கிளம்பி வந்துடுற.ஓ.கே.வா?"

"நிஜமாகவா?ஆனா...அப்பா?"

"எனக்குலாம் ஃப்ரண்டா இருந்துட்டு! அப்பா,அம்மான்னு சொல்ற?நீ வா! நான் இருக்கேன்."

"ஓ.கே."-இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"டேய்! என்னடா நீ?அவனை...."

"இதுப்பாரு..நீ பொறுப்பான சி.பி.ஐ.தான்,அதே மாதிரி பொறுப்பான அப்பாவா இருக்கப்பாரு! அப்பா பாசம் கிடைக்காத வலி அதை அனுபவிச்சவங்களால மட்டும் தான் உணர முடியும் அதை ராகுலை உணர வைக்காதே!நீயும்,கீதாவும் லவ் மேரேஜ் அதை அருணாச்சலம் அங்கிள்,உன் அப்பா எதிர்த்தாரு...அதனால,ராகுலை நீ ஊருக்கு அனுப்புறதே இல்லை...பாவம்டா!அவன் தனிமையை உணர வைக்காதே! உன் தத்துவம்லாம் அவன் வளர்ந்த பிறகு,சொல்லிக்குடு!இப்போ அவனை அவன் போக்கில விடு!"

"சரிடா....அவன் வரட்டும்."

"இது நல்ல புள்ள ..இப்போ யாரை வச்சி அவனைக் கூட்டிட்டு வர சொல்லலாம்?ஆ....ஒருத்தன் இருக்கான்.இரு..."-என்று ஒருத்தருக்கு தொடர்ப்புக் கொண்டான்.

"ஹலோ!"

"யாருங்க?"

"ஏன்டா...நம்பரை தான் மறந்துட்ட,குரலை கூடவா மறந்துட்ட?சரண் பேசுறேன்டா."

"ச்சீப்...சொ...சொல்லுங்க ச்சீப்..."

"என் பேர் சரண்ணு சொன்னேன் ச்சீப் இல்லை."

"ஆனா!நான் அப்படி தானே 12 வருஷமா உங்களை கூப்பிடுறேன்."

"இனி கூப்பிட்ட,தலைக் கீழே கட்டி வச்சி எலும்பை எண்ணிடுவேன்."

"அப்போ எப்படி கூப்பிட?"

"இதுக்கு முன்னாடி எப்படி கூப்பிட்ட?"

"ச்சீப்ன்னு."

"அதுக்கு முன்னாடி?"

"அ...அண்ணான்னு."

"ஆ...டாட்...அப்படியே கூப்பிடு."

"நான் முழிச்சிட்டு தானே இருக்கேன் தூங்கலையே!"

"அது எப்படிடா?எனக்கு தெரியும்?மனோ....எனக்கு ஒரு உதவி பண்ணுறீயா?"

"உதவியா?சொல்லுங்க ப்ரோ(bro)."

"உடனே! ராகுலை கூட்டிட்டு சென்னைக்கு வா!ஃப்லைட் டிக்கெட்டை என் ஆபிஸ்ல வாங்கிக்க நான் சொல்லிடுறேன்."

"அண்ணா! வீட்டில அம்மா மட்டும் தனியா இருப்பாங்க."-சரண் சிறிது மௌனம் காத்தான்.பிறகு,

"அவங்களையும் கூட்டிட்டு வா!ஆனா,என் வீட்ல தான் தங்கணும்.வேற எங்கேயும் தங்க கூடாது."

"அண்ணா?"

"என்னடா?"

"ஒண்ணுமில்லை."

"சீக்கிரம் கிளம்பு...ராகுல் காத்துட்டு இருப்பான்."

"சரின்னா...."-இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஸ்ரேயா உள்ளே நுழைந்தாள்.

"என்னங்க சார்?இப்போ...எப்படி இருக்கு."

"பரவாயில்லை மேம்.ஆமாம்...உங்க டீன் எங்கே?"

"ஏன்?"

"இல்லை...காலையில இருந்து பார்க்கலையேன்னு கேட்டேன்."

"அப்படிங்களா?டீன்...இன்னும் ஹாஸ்பிட்டல் வரலை."

"ஏன்?"

"இன்னிக்கு வெள்ளிக்கிழமைல அதான் கோவிலுக்கு போயிட்டு வருவாங்க."

"அய்யோ! தாங்க முடியலை."

"நீங்க நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம் மிஸ்டர்.சரண்."

"ஓ.கே.டன்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.