(Reading time: 8 - 15 minutes)

08. என்னுயிரே உனக்காக - சகி

ண்கள் மூடி அமர்ந்திருந்தான் ஆதித்யா சரண்.ஆழ்மனதின் ரேகைகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கு வழி வகுத்தது.

நிதம் பகல் நீண்ட இந்த கனவினில்,மனித மனதின் வேதனைகள் தாம் எத்தனை! எத்தனை! அதிசயத்து தான் பார்க்க வேண்டியுள்ளது...!நேற்று வரை எவர் பிடியிலும்,சிக்காமல் சிங்கமென உலவி வந்த மனம்...இன்று எதனிடமோ தலை வணங்கி உள்ளது....கடந்தக் கால வாழ்வில் இருந்தது அதிகமா?இழந்தது அதிகமா?மனம் விசித்ரமாக வாள்தான்.அறிவினை தன் கூறிய சலனம் என்னும் வாளினால்...அறுத்து எரிகிறதே! இவ்வாறு பல கோணங்களில் யோசித்திருந்த மனம்...தன் அருகினில் அழகாய் உறங்கிக் கொண்டிருந்த ராகுலை கண்டு ஆறுதல் அடைந்தது.

Ennuyire unakkaga

"ஆதி..."-ரகு.

"உஷ்... அவன் தூங்குறான்!"

"சரி..."

"அப்படி வா!! பேசலாம்..."-என்று தனியே அழைத்து சென்றான் சரண்.

"என்னடா?"

"உன்கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசணும் ரகு!"

"என்ன?"

"நீ இன்னும் எத்தனை நாள் தான் இப்படி இருக்க போற?"

"எனக்கென்ன?"

"நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோயேன் ரகு!"-ஆதித்யாவின் வார்த்தைகளில் அதிர்ந்தே விட்டான் ரகு.

"இன்னொரு கல்யாணமா?"

"ஆமா..."

"கீதா இருந்த இடத்தில இன்னொரு பொண்ணை வைக்க சொல்றீயா?"-நக்கலான சிரிப்போடு கேட்டான் ரகு.

"இல்லடா...நான் உன்னைப் பற்றி சொல்ல வரலை...ராகுலுக்கு தாய்பாசம் கிடைக்கணும்...அவன் அதை அனுபவிக்காம வளரக்கூடாது!"

"ராகுலுக்கு அப்பா பாசம் மட்டுமே போதும்!"

"ஏன்டா....இப்படி சொல்ற?"

"ஏன்னா...நான் கீதாவை லவ் பண்றேன்.அவளை வைத்த இடத்தில யாரையும் வைக்க முடியாது."

"ஆனா....அவ உயிரோட இல்லை."

"என் உணர்வோட இருக்கா!என்னால கீதா இருந்த இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது! இதைப் பற்றி பேச வேணாம்...."

"இது நியாயம் இல்லை...நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுனால....கீதாவை மறந்துட்டன்னு சொல்ல முடியாது."

"மற்றவங்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை...."-ரகு அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை சென்றுவிட்டான்.ஆதித்யாவிற்கு அப்போது தான் காதலின் இலக்கணம் புரிந்தது.அவன் மெல்ல சென்று மெத்தையில் ராகுலில் அருகே அமர்ந்தான்.அவன் கைகள் ராகுலின் தலையை கோதிவிட்டன.உறக்கத்தில்...உண்மை மனம் மாறாத அந்த சிசு,'அம்மா...!"என்று உரைத்தது.அதைக் கேட்ட ஆதித்யாவின் இரும்பு மனமே இளகிவிட்டது.கதி கலங்கிப் போனான் அவன்.

"உன் அப்பா! இப்படி உறுதியா இருப்பான்னு நானே எதிர்ப்பார்க்கலைடா!"

"சூல்..."

"வந்துட்டியா?உனக்காக தான் ஹெட் உள்ளே காத்துக்கிட்டு இருக்காரு!"

"தெரியும்...கதவைத் திற!"-ரசூல் என்று அழைக்கப்பட்டவன் கதவைத் திறந்தான்.நல்ல ஆஜானுபாகுவான அந்த ஆறடி உருவம் உள்ளே சென்றது.

"வா..ரவி வா!"-என்று அழைத்தான் உள்ளே அமர்ந்திருந்த ஒருவன்.

"அவன் சென்னையில தான் இருக்கான்..."

"யாரு?"

"ஆதித்யா சரண்...உன்னை பிடிக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிற ஆன்ட்டி டெரரிஸ்ட் யூனிட் ச்சீப்."

"பிரமாதம்..."-அப்துல்லா பலமாக சிரித்தான்.

"மாஷா அல்லா....இந்தியன் டிப்பன்ஸ் இப்போலாம் ரொம்ப புத்திசாலித்தனமா செயல்படுதா?என்னைப் பிடிக்க ஒருத்தனை அனுப்பி இருக்காங்க.."

"அவனை சாதாரணமா நினைக்காதே! அவன் எடுத்த கேஸ் எதையும் முடிக்காம திரும்புனதில்லை...அவன் நிறையப் பேருக்கு எமனாக இருந்திருக்கிறான்..."

"அவன் உயிரை எடுக்கிற எமனா இருந்தா! நான் உயிரை அழிக்கிற சிவன்டா...அவனால,ஒண்ணும் பண்ண முடியாது...அந்த ஆதித்யா சரணை நான் கொல்லாம விடமாட்டேன்."

"அதையே தான் நானும் சொல்றேன்! அவனை விடாதே! சி.பி.ஐ.ல எனக்கு இருந்த மரியாதையைக் கெடுத்து...என் இடத்திற்கு வந்தவன் அவன்...அவனை கொன்னுடு! நான் உனக்கு உதவி பண்றேன்."

"கவலைப்படாதே! அந்த ஆதித்யா சரணுக்கு என் கையில தான் சாவு!"

"ம்...."

"சென்னையில முக்கியமான ஐந்து இடத்தில கூடிய சீக்கீரமே குண்டு வெடிக்கப் போகுது! ஆம்பளையா இருந்தா...அவன் அந்த மக்களை காப்பாத்தட்டும்....அவன் இ-மெயில் ஐ.டி.யை தந்துட்டுப் போ! அவனோட அழிவு இந்த நிமிஷத்தில இருந்து ஆரம்பம்..."

"சரி...."-ஆப்ரிக்கும் ஆரவாரத்தோடு சிரித்தனர் இருவரும்.இனி...நடக்கப் போகும் நிகழ்வு தான் என்ன?ஆதித்யா சரணின் கழுத்திற்கு மேல் புதிய கத்தி உருவாகிவிட்டதே!கத்தி அவன் கழுத்தில் இறங்குமா?அல்லது...அவன் கைகளில் வந்து காவலாக நிற்குமா?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்......

தோட்டத்தில் அமர்ந்துக் கொண்டு அமைதியாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித்யா.....இனிமையான அந்த மாலைப் பொழுதினில் இதமான ஆதித்யனின் அந்த அழகிய அஸ்தமனமானது...குறும்போடு தன் மனைவி வெண்ணிலவின் தீண்டலுக்காக...ஆதித்யன் அழைத்த அழைப்பாக இருந்தது.

"கண்ணா...!"-காதிலிருந்து,'ஹெட் செட்டை'கழற்றினான்.

"கண்ணா......உன்கிட்ட ஒண்ணுக் கேட்கணும்."

"................."

"அருணாச்சலம் அண்ணன் ராகுலைப் பார்க்கணும்-னு ஊருக்கு வர சொல்லிருக்காரு...!"

".................."

"அதான்...ரகுகிட்ட பேசி....?"

"ராகுல்....."-அவன் ராகுலை அழைத்ததற்கு காரணம் புரியாமல் குழப்பமாய் பார்த்தார் ராஜேஸ்வரி...

"என்ன ஆதி...?"

"தாத்தா உன்னை ஊருக்கு கூப்பிட்டு இருக்காராம்...நீ,மனோ,பாட்டி மூணு பேரும் கிளம்புங்க..."-இது வரையில் யாரிடமும் தன்னைக் குறித்து நேரடியாக பேசாதவன் அப்படி உரிமைப் பெயரோடு பேசியதைக் கேட்டு அந்த தாய் உள்ளம் குளிர்ந்தது.

"நீ?"

"நீ முதல்ல போ செல்லம்...நான் உன் அப்பாவை கூட்டிட்டு வரேன்!"

"அப்பாவும் வருவாரா?

"ஆமா...செல்லம்!"

"அய்யா...ஜாலி!"

"எப்போ போகப் போறீங்க?"-ராகுலிடம் கேட்பதுப் போல ராஜேஸ்வரியிடம் கேட்டான் ஆதித்யா.

"இன்னும் 2 நாள்ல கண்ணா!"-அவன் பதிலேதும் கூறவில்லை.அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.