(Reading time: 8 - 15 minutes)

 

ன்னல் அருகே சிந்திய மழைச்சாரலில் கவனம் வைத்திருந்தாள் மதுபாலா.மனமெல்லாம் இதமான மயிலிறகினில் வருடி விடுவதைப் போல இருந்தது.இன்னும் ஆதித்யா அவளுக்காக பேசிய வார்த்தைகளில் மனம் லயித்திருந்தது.இவ்வளவு காதல் அவன் தன்னிடத்தில் கொண்டிருந்தான் என்பது எதிர்ப்பாராத அவள் ஒன்று.

"மது...!"

"ஆ...சொல்லு ஸ்ரேயா."

"மேடம்...என்ன ரொம்ப தீவிர யோசனையில இருக்கீங்களோ?"

"அதெல்லாம்...இல்லையே!"

"அப்படியா?இதுக்குதான்ப்பா!  லவ் பண்றவங்களை ஃப்ரண்ட்டா வச்சிக்கக் கூடாதுன்னு சொல்வாங்க."

"ம்...எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ பேசிக்கிறேன்."

"அதெல்லாம்..வராது மது!"

"வரும்."

"வராது மது..."

"ஏன்?"

"உனக்கு தெரியாதா??"

"இன்னுமா பழைசை நீ மறக்கலை?"

“.........."

"இது நியாயம் இல்லை ஸ்ரேயா...உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு!"

"இருந்தது...இப்போ இல்லை.வேற எதையாவது பேசலாம்!"

"முடியாது...அப்படி எல்லாத்தையும் மறக்க முடியாது.எனக்கு நான் பண்றது தப்புன்னு தெரியுது...இருந்தாலும் மறக்க முடியலை."

"ஒரு வேளை நீ எதிர்ப்பார்த்த வாழ்க்கையே உனக்கு கிடைச்சா?"

"நடக்கிற காரியத்தைப் பாரு! எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு நான் கிளம்புறேன்!"

"சரி."-ஆஹா இங்கே ஒரு பழங்கதை உருவாகிவிட்டது.வாழ்க்கை என்பது ஒருவரை மட்டும் சார்ந்ததாக அமையவில்லை பார்த்தீர்களா?எத்தனை பந்தங்களை நம்மோடு பிணைக்கிறது அந்ங நான்கெழுத்து சொல்!!!!!அதிசயம் தான்!!!

ழமான ஊடுருவும் பார்வையோடு தனது மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.அவனை அறியாமல் அவன் இதழ்களில் சிறு புன்னகை மலர்ந்தது.அதற்கான காரணம்??????

"மச்சான்."

"என்னடா?"

"ஏன்டா தனியா சிரிக்கிற?"

"ஒண்ணுமில்லை."

"சொல்லுடா..."

"அப்துல்லா...இன்னும் 2 வாரத்துல அவன் வேலையை ஆரம்பிக்க போறான்!"

"என்ன?"

"ஆமா...அவனுக்கு உதவியா இருக்கறது யாரு தெரியுமா?"

"யாரு?"

"ஒரு சி.பி.ஐ."

"எந்த துரோகிடா அவன்?"

"ரவி."

"மச்சான்...!"

"இன்னும் கொஞ்ச நாள்ல அவனும் நம்ம கூட வந்து சேர்வான் பார்....!"

"டேய்...!"

"பாரேன்....நீ என்ன பண்ற நேரா பக்கத்து வீட்டுக்குப் போற!"

"போயி..."

"பவித்ராக் கூட டூயட் பாடுற!"

"சரி....எது?"

"சரியா??அப்போ அந்த ஐடியாவுல தான் இருக்கியா?"

"இல்லடா..."

"என்ன இல்லடா?"

"ஒண்ணுமில்லை."

"சரி...உங்க தனிப்பட்ட விஷயத்துல நான் வரலை.பவிக்கிட்ட போய்...ராஜசிம்மபுரத்துக்கு கிளம்பி போக சொல்லு!"

"அவளை மட்டுமா?"

"ஆசை தான்...உன் லைப்பை காப்பாத்திடலாம்.என் லைப் என்ன ஆகுறது?மதுவையும் கூட்டிட்டு கிளம்ப சொல்லு.இன்னும் 2 நாள்ல அம்மாவும்,ராகுலும்,மனோ,குரு,அபி எல்லாரும் வந்திடுவாங்க!"

"சரிடா...."

"போயிட்டு சீக்கிரம் வா! புரியுதா?"-என்று கண்ணடித்தான் ஆதித்யா.

"லோ....வீட்டுல யாராவது இருக்கீங்களா?"-நிரஞ்சன்.

"................."

"ஹலோ....!"-ஆள் அரவமே இல்லை.வீட்டிற்குள் சென்றான்.

"மது....கண்ணம்மா....."-யாரும் இல்லை.மாடிக்கு சென்றான்.அங்கேயும் ஒருவருமில்லை.வந்த வழியை நோக்கி திரும்பியவனின் கால்கள் தவறி அருகிலிருந்த ஏணியில் பட,அது இடறி சாய,அதன் கீழிலிருந்த நிரஞ்சன் மேல் பூ மாலையாய் விழுந்தாள் பவித்ரா.ஒரு நொடி அதிர்ச்சி அடைந்தவன்.தன்னிடம் வந்து சிக்கிய அழகு பதுமையை இமை மூடாமல் பார்த்தான்.பின்,இருவரும் கண் திறந்து விலகிவிட,அங்கே நடந்த காதல் நாடகம் முடிவடைந்து மௌனம் குடிக் கொண்டது.

"ம...மன்னிச்சிடுங்க...கால் தவறி...உங்க மேல..."-தலைக் குனிந்தவாறு அழகாய் பேசினாள் பவித்ரா.அழகிய நீல நிற புடவையில் மயிலாகவே அவன் கண்களுக்கு தெரிந்தாள் அவள்.காதோடு ஒட்டிய ஜிமிக்கியும் காற்றில் அசைந்து கவிப்பாட,அதனோடு கை வளையல்கள் சுதி சேர்க்க அந்த இன்ப இசையில் மூழ்கிப் போனான் நிரஞ்சன்.

"இல்லை..நான்தான்...தெரியாம....உனக்கு...அதாவது.உங்களுக்கு எதுவும் ஆகலைல்ல?"

"இல்லைங்க..."

"அது...வந்து..."

"மதுவைப் பார்க்க வந்தீங்களா?"

"இல்லை...உங்களைத் தான் பார்க்க வந்தேன்."-அவன் கூறிய பதிலில் சட்டென நிமிர்ந்தவளின் கண்களை நேராக சந்தித்தான் நிரஞ்சன்.கண்கள் சந்திக்க காதல் மலர்வது தானே இயற்கையின் நியதி! மொட்டவிழ்ந்த மலர் அங்கே தன் பரிவாரங்களோடு திக் விஜயம் செய்தது.

"என்னை...ஏன்?"

"அது...."-என்று ஆரம்பித்து ஆதித்யா கூறிய அனைத்தையும் கூறி முடித்தான்.

"சரிங்க...மது வந்தவுடனே! பேசிட்டு சொல்றேன்ங்க.!"

"நான் கிளம்புறேன்."

"டீ குடிச்சிட்டு போங்க!"

"இல்லை...நேரம் வரும்போது வந்து குடிக்கிறேன்."-அவன் கூறியது பவித்ராவிற்கு விளங்கவில்லை என்றாலும் தலையசைத்தாள்.நிரஞ்சன் கிளம்பும் முன்,

"நீ...இந்த புடவையில அழகா இருக்கிற பவி...!"-என்றான் உரிமையோடு.அதை கேட்டு அதிர்ந்தப் போதிலும்,உள்ளுர ரசித்தாள் பவித்ரா.அங்கே இரு நெஞ்சங்களும் என்னுயிரே உனக்காக என இடம் மாறிக் கொண்டன.அடுத்த காதல் பயணம் தொடங்கிவிட்டது.

தொடரும்...

Go to EUU # 07

Go to EUU # 09

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.