(Reading time: 11 - 21 minutes)

13. என் இதய கீதம் - Parimala Kathir

தனும்  அஸ்வினும்  காரில் ஏறி தாம்பூலப்  பை  வாங்குவதற்கு புறப்பட்டுச் சென்றனர். 

"ஏன்டா  அந்த பொண்ணோட பெயர் என்னன்னு  சொன்னாய்?" என்று ஒன்றும் தெரியாதவன் போல் அப்பாவியாய் கேட்டான்.   

En ithaya geetham

"புவிக்கா....  ரொம்ப அழகான பெயர் இல்ல?".

"ம்ம்ம்...  நல்ல பெயர்" ( என் தங்கையின் பெயரை பற்றி என்கிட்டயே  கேக்கிறியே மச்சான். உன்னை விட அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை  கிடைக்கவே மாட்டான்.  இரண்டு பெரும் நல்ல பொருத்தமான ஜோடி தான்.) என தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். நல்ல வேளை  அஸ்வின் புவியின் நினைவில் இருந்ததினால் மதனின் எண்ண ஓட்டம் தெரிய வாய்ப்பில்லாது போனது.

தாம்பூலபையை  வாங்கிவிட்டு இருவரும் வந்து கொண்டிருக்கையில் மதனுக்கு திவா கால் செய்தார்.

"ஹலோ....சொல்லுங்க  அத்தான்" 

".................."

"ஆங்.....  பை வாங்கியாச்சு வீட்டுக்கு தான் வந்திட்டிருக்கோம். எதுக்கு கேக்கிறீங்கள். வேற ஏதாவதும் வாங்க வேணுமா?"

"சரி பயப்படாதீங்க உங்க யானியோட கண்ணில படாமல் இன்னும் ஒரு  ஐந்து நிமிடம் ஒழிஞ்சு கோங்க  நாங்க வந்துடுறம் . பை" என சிரித்துக் கொண்டே போனை கட் செய்தார்.

மதன் போனை கட் செய்யும் வரை காத்திருந்த அஸ்வின் 

"நான் வீட்டிலேயே கேட்டேன்,  அது என்ன யானி எதுக்கு மாமா அப்பிடி கோவப் பட்டார். அவருக்கு பிடிக்காவிட்டால் பிறகு ஏன்  அந்த பெயரை சொல்லி கூப்பிடனும்."

அட என் மச்சானே அது உன்னோட புவி சின்ன வயசில யாழினி அக்காவை யானி என்று தான் கூப்பிடுவா அவ சென்னைக்கு போனப்புறம் அக்கா அவளோட அந்த மழலை பெயரின் அழைப்புக்காக ஏங்குவா   என்னை யானி என்று கூப்பிடச் சொல்லுவா நான் ஆம்பிளைப் பிள்ளைகளின் பெயர் மாதிரி இருக்கும் என கூப்பிட மறுத்து விட்டேன் அவ திருமணமானதும் அத்தானை பிடித்துக் கொண்டாள் . அவரும் மறுத்துப் பார்த்தார் அக்கா விட்ட பாடில்லை போனால் போகிறது என்று மனமில்லாது யானி  என்று கூப்பிடுகிறார்.

"என்னடா?  நான் பாட்டுக்கு கே ட்டிட்டிருக்கேன்  நீ என்ன அப்பப்போ ஏதோ சிந்தனையில் இருக்காய்? என்ன திருமண கனவா?" என்று நண்பனை கலாய்த்தான் அஸ்வின்.

பாவம் மதன் தனது திருமணம் பற்றி கனவு காணாது தனது தங்கை மற்றும் அஸ்வின் பற்றியல்லவா கனவு கண்டுகொண்டிருக்கிறான்.  தனது தங்கை தான் அஸ்வினின்  புவி என சொல்லி விடலாம் என்று எத்தனையோ தடவை எண்ணிப் பார்த்தான் ஆனால் இறுதில் அவளை நேரே  பார்க்கும் பார்க்கும் போது  அவர்களிருவரின் முகத்தில் காணபோகும்  திகைப்பு கலந்த ஆனநதத்தை காண்பதற்காகவே அந்த எண்ணத்தை கைவிட்டான்.

"ம்ம்ம்....  ஒண்ணுமில்லை அது என்று அந்த யானியின் வரலாற்றை கூறினான் மதன். ஆனால் கவனமாக புவி என்ற பெயரை தவிர்த்து என் வாலுத் தங்கை  எனக் குறிப்பிட்டான்.

"ம்ம் உன் தங்கை மேல் அக்காவுக்கு அவ்வளவு பாசமா?  மாமாவை அப்பிடி அழைக்க  சொல்லி இருக்கிறார் என்றால் எத்தனை அன்பு  அவளிடத்தில்." 

"இல்லை...  அவ  மேல அக்காவுக்கு மட்டுமில்லை எனக்கு அப்பாக்கு அம்மாக்கு எல்லோருக்குமே அளவு கடந்த அன்பு. அவ இந்த வீட்டு இளவரசிடா அவளுக்கு ஒன்ரெண்டால் எங்க யாராலும் தங்க முடியாது." என்று தனது தங்கையின் பாசத்தில் கொஞ்சம் எமொஷனாளாகி பேசினான் மதன். அதன் பின்   சூழ்நிலை உணர்ந்து 

"உனக்கொன்று தெரியுமா? இப்பவும் பு... அவ அக்காவை யானி என்று தான் கூப்பிடுவா.  ஆனால் அவ கூப்பிடும் போது இன்னும் அழகாய் இருக்கும். அவளைப் போலவே. நீ கூட அவளைப் பார்த்ததில்லை அல்லவா என்னோட திருமணத்திற்கு அவளும் வருவாள். அவ வந்தா இந்த வீடே  அமர்க்களப் பட்டு விடும். " என மதன் புவியைப் பற்றி அஸ்வினிடம்  வரும் வழி எங்கிலும் கூறிக் கொண்டே வந்தான்.  சின்ன வயதில் அவள் செய்த சேட்டைகள், அது இது என ஒரே தங்கை புராணம் தான்.  அஸ்வினும்  புவி செய்த குறும்புகளை கேட்டபடியே வீடுவந்து சேர்ந்தனர். 

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் தென்பட்டது யதுக்ஷிகா தான். அனால் அவள் முகம் கவலையும் கோவமும் கலந்து காணப் பட்டது. இதனை கண்ட மதனும் அஸ்வினும் கண்டு கொள்ளாதது போல் நழுவ முயன்றனர். அனால் அதற்குள் அவர்களை கண்டு கொண்டவள். அவர்களை நோக்கி வந்தாள்.  

புவிக்கா வீட்டில்

ன்ன தான் அஸ்வினது  எண்ணம் தன் நினைவில் வரவிடக் கூடாது என்று புவி தனது மனதுக்கு தடை உத்தரவு போட்டாலும் காதல் கொண்ட மனது அதனை தகர்த்தெறிந்து விடாதா?  ஆமாம் அவள்  மனம்  அவள் கட்டுக்குள் இல்லை அது அஸ்வின் வசம் சென்று நாட்களாகி விட்டன. அவனை பார்த்த முதல் தருணம்.  புவி மனதில் மீண்டும் மீண்டும் வந்து சென்று கொண்டே இருந்தது.  அதுவே அவளது வேதனைக்கு தீனி போட்டது.  இதிலிருந்து  தாம் தப்பிக்கவே மாட்டோமா என்றிருந்த போது  அவளின் கைபேசி அலறியது எடுத்துப் பேசியவள்.  முகம் சூடேறியது. 

"ஹலோ....  சொல்லு  காயா என்ன போன் எல்லாம் பண்ணி இருக்கே என தனது  வேதனைய மறைத்து  அவளிடம் கேலி பேசுவது போல் நடிக்க முயன்றாள் அது வெற்றியும் பெற்றது.

காயாவிடம் இருந்து திட்டு தான் பதிலாக கிடைக்கும் என காத்திருந்தவளுக்கு அவளின் விசும்பலே பதிலாக கிடைத்து.

"ஏய் ஏண்டி அழுகிறாய்? என்ன ஆச்சு?" என தனது சோகத்தை பின் தள்ளி விட்டு  தோழியிடம் விசாரித்தாள்.

"எனக்கு வாழவே பிடிக்கல எங்க வீட்டில என்னை 

என்னட அத்தை பையன் விஜயனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்ச்சிக்கிறாங்க. இன்னும் இரண்டு நாளில திருமணம். என்னால பிரமிலன் இல்லாமல் வாழ முடியாது. நீ  தான் எங்க ரெண்டு பேரையும் எப்பிடியாவது சேர்த்து வக்கணும் புவி ப்ளீஸ் புவி இல்லன்னா நான் நிச்சயமா செத்திடுவன் புவி." என திரும்ப திரும்ப சாவைப் பற்றியே பேசினாள்.  புவிக்காவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"காயா முதல்ல அழுகிறதை நிப்பாட்டு. தயவு செய்து இனி மேல் சாவதைப் பற்றி பேசாதடி. அதற்குள் என்னவாயிற்று. ஏன் திடீரென்று இப்பிடி கலியாணத்தைப் பற்றி பேசுறாங்க. சரி எதுவானாலும் இன்னும் கொஞ்ச நாளில எக்ஸாம் முடிஞ்சிடும் அதுக்கப்புறமா அப்பா அம்மாகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணலாமே? எதுக்கு இந்த அவசரம் காயா?"

"இல்லடி நீ நினைக்கிற மாதிரி இல்லடி.  அந்த விஜயனுக்கு என் மேல காதல் என்று நினைக்கிறான். அதனால தான் அன்று எங்களை பார்த்ததைக் கூட வீட்டில மாட்டி வச்சிருக்கான்.  இன்னிக்கு நாங்க டெலிபோனில  கதைக்கிறத ஒட்டுக் கேட்டிட்டு திரும்பவும் அம்மாகிட்ட போட்டு குடுத்திட்டான். இப்ப நான் வீட்டில சிறை வாசம். அவன் கொஞ்சம் கொஞ்சமா அவங்களை தன்னோட வஞ்சக பேச்சால நல்லா மாத்திட்டான். அவனை கலியாணம் பண்ண சொல்லி கம்பால் பராங்க என்றால் பாத்துக் கோயேன் என்னால முடியலடி நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருக்கு." என மறுபடியும் தேம்பினாள்.

புவிக்காவிற்கு எப்படி   தனது தோழியை தேற்றுவது என்றே  தெரியவில்லை.  திடீரென நினைவு வந்தவளாக 

"காயா நீ பிரமிலனோட  கதைக்கும் போது  போட்டுக் கொடுத்த விஜயன் இப்ப நாம கதைக்கும் போது  போட்டுக் கொடுத்தால் என்னடி செய்றது. எதையும் யோசிசிக்க மாட்டியா?"

"இல்லடி அவன் வீட்டில இல்ல. இன்னும் இரண்டு நாளில திருமணம் என்றதும் அது இப்ப தன்னோட கூட்டத்தோட எங்க கஞ்சா  அடிச்சிட்டு எந்த பொம்பிளை வீட்டில இருக்குதோ யாருக்கு தெரியும்." என்றாள். விட்டேந்தியாக.

அவள் சொன்னதில் அதிர்ந்த புவி "என்னடி சொல்றே அவனுக்கு இதனை கெட்டபழக்கம் இருக்கா? இது தெரிந்துமா உன்னை அவனுக்கு கட்டிவைக்க நினைக்கிறாக?"

"இல்லடி எங்க வீட்டில யாருக்கும் அவனை பத்தி சரியா தெரியாது. ஏன் அவனோட பீரன்சுக்கு கூட தெரியாது. அவளவு உத்தம புத்திரன் சீன் போடுவான் ராஸ்கல். அத நம்பித்தாண்டி இந்த பையன் எல்லாம் தெரிந்தும் உன்னை கட்டிக்க நினைக்கிறான் சொந்தம் கூட உன்னை நல்லாப் பாத்துக்குவான் என்று நான் சொல்றதை காத்து கொடுத்தே கேத்கமாட்டேன்றாங்க  நான் என்ன தாண்டி செய்ய. காலையில எவ்வளவு சந்தோஷமா இருந்தான் இப்ப பாரு என் வாழ்க்கையே எனக்கு வெருத்திடுச்சு. ஆனா ஒன்னு என் பிரமிலன் இல்லன்னா அடுத்த நிமிடம் என் பிணத்துக்கு தான் அவன் தாலி கட்டுவான்" என்று  சொல்லி விட்டு யாரோ வர்றாங்க நான் போனை வைக்கிறான் நீ தன என்னை காப்பத்தனும் என்று சொல்லி போனை வைத்தாள்.

சிறுது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தனது டிரைவர் அண்ணனுடன் வெளியில் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.