(Reading time: 11 - 21 minutes)

09. என்னுயிரே உனக்காக - சகி

'செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ! அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ!'-இவ்வரிகளை இரசித்துக் கொண்டிருந்தாள் மதுபாலா.வீட்டில் ஒருவரும் இல்லை.எல்லாரும் ராஜசிம்மபுரம் சென்றுவிட்டனர்.சரியாக திருவிழா சமயத்தில் தான் ஆதித்யா அனைவரையும் அனுப்பி இருந்தான்.பின்,இவள் ஏன் செல்லவில்லை?மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கண்களை மூடி ஏதோ யோசனையில் மூழ்கிப் போனாள்.

திடீரென்று ஏதோ அரவம் கேட்க கண் திறந்தாள்.யாரும் இல்லை.கடிகாரத்தில்,மணி இரவு 10 என்று காண்பித்தது.நித்திரா தேவியின் அழைப்பை ஏற்று...உறங்க சென்றாள்.சிறிது நேரம் சென்றிருக்கும் மீண்டும் ஏதோ அரவம்.கண் விழித்தாள்.சப்தம் வந்த பால்கனியை நோக்கிச் சென்றாள்.அவள் சற்றும் எதிர் பாராத விதமாக ஆதித்யா பிரவேசித்தான்.வழக்கமாக எல்லா பெண்களும் செய்வதை போலவே கத்த வாயெடுத்தவளின் வாயைப் பொத்தினான் சரண்.

Ennuyire unakkaga

"கத்தாதடி நான் தான்."

"இங்கே என்ன பண்ற?"

"அதுவா..நீ தனியா இருக்கியா...அதான் துணைக்கு..."-மதுபாலா,ஆதித்யாவை முறைத்தாள்.

"இல்லை...கொஞ்ச நேரம் தான்!"

"ஒண்ணும் வேணாம் கிளம்பு!"

"நான் சொல்றதைக் கேளு...தனியா இருக்க...எந்த ரூம்ல எந்த பேய் இருக்கும்னு தெரியாது.நீ வேற தேவதை மாதிரி இருக்கியா...எந்த ராட்சஷனாவது உன்னை தூக்கிட்டுப் போயிட்டா...?என் நிலைமை என்ன ஆகுறது?"

"பேயா?"

"ஆமாம்...."

"பரவாயில்லை...நீ கிளம்பு! தனியா இருக்கிற பொண்ணு ரூம்ல இப்படி வருகிறது தப்பு!"

"என்ன தப்பு?நான் என்ன யாரோ ரூம்முக்கா வரேன்?என் மனைவி ரூம்க்கு வரேன்!"

"அதுக்கு நான் உன் மனைவியா அதிகாரப்பூர்வமா மாறி இருக்கணும்!"

"அப்படியா?சரி...ஏன் நீ ஊருக்குப் போகலை?"

"போகலை."

"ஏன்?"

"உன்னைவிட்டுட்டு நான் மட்டும் சந்தோஷமா அங்கே இருந்திருவேனா?அதான்..."

"இங்கே நிறைய கஷ்டம் வரும் அம்மூ...என் கூட இருக்கிறது பாதுகாப்பு இல்லை."-அவள் ஒரு சிரிப்பை விடுத்து,

"ஸ்ரீராமர் வனவாசத்துக்குப் போகும் போது,சீதா தேவிக்கும் தான் அது பாதுகாப்பு இல்லை.ஆனா,அவருக்காக அவங்க 14 வருஷம் காட்டுல வாழலை?எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிக்கலை?அப்படி தான் இதுவும்..."-அதைக் கேட்டவனுக்கு ஒரு வார்த்தைக் கூட பதிலாய் வரவில்லை.

"இத்தனை நாளா?உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன்ல அம்மூ?"

"இல்லையே! ஏன்?என்னாச்சு?"

"பாசம்,காதல்,அன்பு எல்லாம் பொய்ன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்.ஆனா,எல்லாத்தையும் மறந்து எனக்காக இங்கே நீ துடிக்கிற..."

"நீ எந்த தப்புமே பண்ணலையே! அதுவுமில்லாம,உனக்காக நான் துடிக்காம வேற யார் துடிப்பா?சரி...நீ கிளம்பு!"

"மாட்டேன்....பார் மழை வரா மாதிரி இருக்கு.மழை வந்தா நான் நனைஞ்சிடுவேன்.அப்பறம் எனக்கு குளிரடிக்கும்.உடம்பு சரியில்லாம போகும்...அப்பறம்...."

"அய்யோ...!மழை இன்னும் வரலை! கிளம்பு!"

"ஆமா...எப்போ பார்த்தாலும்,இப்படியே ஆசைக் காட்டி மோசம் பண்றதே இந்தப் பொண்ணுங்களுக்கு வேலையா போயிடுச்சு!குறிப்பா இவ!"-என்று முணுமுணுத்தான்.

"என்ன அங்கே புலம்பல்?"

"ஒண்ணுமில்லை..."-அப்போது பயங்கரமாக இடி இடிக்க..அதைக் கேட்ட மதுபாலா பயத்தில் ஆதித்யாவை இறுக அணைத்துக் கொண்டாள்.எதிர்ப்பார்க்காமல் கிடைத்த தன்னவளின் நெருக்கமானது,அவனுக்கு சில்லென்ற பனிச்சாரலில் நனைவதுப் போல இருந்தது.

"அம்மூ...!"

"ம்..!"

"பயந்துட்டியா?"

"ஆமா..."

"ஏன்?நான் தான் இருக்கேன்ல?என்னை மீறி எதாவது ஒரு விஷயம் உன்னை நெருங்க விட்டுவிடுவேனா?ஏன் பயப்படுற?"-மதுபாலா நிமிர்ந்து பார்த்தாள்.ஏதோ ஒரு அதிரடி மாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது.அவனிடமிருந்து மெதுவாக விலகினாள்.தலை குனிந்து நின்றிருந்தவளின் முகமானது,அவனது கரங்களால் ஏந்தப்பட்டது.ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் என்பார்கள்.ஆனால்,காதலின் வரம்பு?யாராவது கூற முடியுமா???கூற முடியும் என்றால் கூறலாம்...சரியான விடையாக இருந்தால்...நிச்சயம் முடியாது.காதல் எவ்வளவு தூரத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும்.இறுதி வரை பார்க்க முடியாத நிலையில் தவித்தாலும் தவிக்கட்டும்.ஆனால்,அதற்கு வரம்பு என்றும் கிடையாது.ஏந்தப்பட்ட மதுவின் கண்களிலோ கண்ணீர்த்துளி தானாய் திரண்டிருந்தது.ஆதித்யாவின் ஊடுருவும் பார்வை அவளை நிலை தடுமாற வைத்தது.

"என்னோட இந்த வாழ்க்கையில,என் பயணத்துல,நீ என் கையைப் பிடிச்சிக்கிட்டே துணையா வருவியா?அம்மூ?வில்...யூ பீ மை பெட்டர் ஆஃப்?"-அவன் கேட்ட அந்த உருக்கமான கேள்வி,யாராய் இருந்தாலும் கலங்கடித்து இருக்கும்.அவளைக் குறித்து கேட்கவா வேண்டும்?????

"ஐ ஆம் யூவர்ஸ்..."-இதற்கு மேல் என்ன கூறுவது....?அவளது அந்த மூன்று வார்த்தைகளை சர்வத்தையும் ஒடுக்கிவிட்டதே!அசைந்தாடும் ஆழியானது,நதிக்காக காத்திருக்கவில்லை என்று யார் கூறியது???பல நதிகள் அதனோடு இணையலாம்.ஆனால்,நீண்ட நாட்களாய் தேடும் தேடல் நிறைவுப் பெற குறித்த ஒரு நதி மேல் நிச்சயம் கடலுக்கும் காதல் இருக்கும்.இதோ கடலில் பார்வைகளுக்கு அந்நதி புலப்பட்டுவிட்டது.நீண்ட நாட்களாய் காத்திருந்த காதலுக்கு ஆறுதல் கூற!ஆதித்யா சரண் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.அவ்வளவு நேரம் அவனிடத்தில் ஒரு இடைவேளை விட்டிருந்த அவள் மனம்,அதை ஒதுக்கியது.காரணம்,அவனுக்கு தேவைப்படும் ஆறுதல்.அடுத்த இடி சப்தம் கேட்டது இருவரும் இவ்வுலகத்திற்கு வந்தனர்.

"ஸாரி....அம்மூ...!"

".............."-அவள் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

"இல்லை....உன் அனுமதி இல்லாம..!"

"உனக்கு சொந்தமானவக்கிட்ட நீ அனுமதி கேட்க அவசியமில்லை ...."-என்றாள் தலைக் குனிந்தவாறு!

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அம்மூ...!நான் எதுக்கு முக்கியமா இங்கே வந்தேனா?இதுக்கு தான்...."-என்று ஒரு ஜோடி வளையல்களைக் காட்டினான்.ஆம்...! அது அவன் அன்னை சாரதாவின் வளையல்களே!

"இது...என் அம்மாவோடது! அதாவது...அவங்க செல்ல மருமகளுக்காக அவங்க வாங்கினது,இனி...இது உன்கிட்ட தான் இருக்கணும்..."-அவள் அதை வாங்கவில்லை.

"என் அத்தை...எனக்காக வாங்கினதுன்னு சொல்ற...அப்போ! இப்படி யாருமே இல்லாதப் போது,தனிமையாகவா தருவாங்க?அவங்க மனசு கஷ்டப்படாதா???உறவறிய,ஊரறிய நீயே இதைப் போட்டு விடு! அதுவரைக்கும் காத்திட்டு இருக்கேன்."

"சரி..."

"கிளம்புறீயா?"

"ஏன்?"

"என்ன ஏன்?இது மாதிரி ராத்திரி நேரத்துல,இப்படி வருகிறது தப்புன்னு சொன்னேன்ல!"

"அநியாயம்....அடிப்பாவி..போடி!"

"கிளம்பு!"

"இரு...கிளம்புறேன்."-என்று அவளிடமிருந்து முடியாமல் விடைப் பெற்றான் ஆதித்யா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.