"டேய்...!நான் மும்பை வரைக்கும் போகப் போறேன்.வர 2 வாரம் ஆகும்."-ரகு
"என்ன திடீரென்று மும்பைக்கு விஜயம்?"
"கேஸ் விஷயமா தான்.சரியா....கிளம்புறேன்."
"இரு....நிரஞ்சனையும் கூட்டிட்டுப் போ!"
"ஏன்?"
"போ...நீ 2 வாரத்துல வரணும்ல,நீ போனா சில காரணத்துக்காவே வரமாட்ட அதான்!"
"நிரஞ்சனுக்கு ஃப்லைட் டிக்கெட் போடலை."
"ட்ரெயின்ல போங்க!"
"கேட்கவாப் போற?நீ ஏன் நிரஞ்சனை அனுப்புறன்னு தெரியும்டா...அது தெரிஞ்சிக்காத அளவிற்கு நான் முட்டாள் இல்லை."
"சந்தோஷம்...கிளம்புங்க!"-ஆதித்யா எந்தக் காரணத்திற்காக ரகுவுடன் நிரஞ்சனை அனுப்பினான்.ஒரே காரணம் அவன் பாதுகாப்பு அவனுக்கு முக்கியம்...அப்படியென்றால்ஆதித்யாவே உடன் சென்றிருக்கலாமே??அதற்கும் பதில் உண்டு,காரணம் இனி தெரியும்.
அன்றிரவு....
உறக்கம் வரவில்லை என்று தோட்டத்தில் உலவ,அறையைவிட்டு வெளியே வந்தான் ஆதித்யா.சில்லென்று குளிர்காற்று மனதை மயிலிறகுக் கொண்டு வருடியது.
"கண்ணா..."-திரும்பினான்.
"தூங்கலையாப்பா??"
"................."
"ரொம்ப நேரம் முழிச்சிருக்காத கண்ணா!"
".................."-அவர் சென்றுவிட்டார்.
"ஆதி..."-குரலைக் கேட்டவுடன் அவன் முகம் இறுகியது.
"இந்த நேரத்துல தூங்காம என்ன பண்ற?"
"................"
"ஏன் ராத்திரி இப்போலாம் ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்க??"-அவன் சற்றே ஆவேசத்தோடு திரும்பினான்.
"நான் ராத்திரில முழிச்சிட்டு இருந்தா உனக்கு ஏன் வலிக்குது!உன் வேலையைப் பாரு...!"
"ஏன் இப்படி பேசுற?"
"நான் அன்னிக்கே என் கண்ணுல பட்டுவிடாதேன்னு சொன்னேன்.அதையும் மீறி நீ என்கிட்ட வந்து பேசுறன்னா...உனக்கு திமிர் அதிகம்...அன்னிக்காவது ராகுல் இருந்தான்னு கோபத்தைக் கட்டுப்படுத்தினேன்.அவனும் ஊர்ல இல்லை.உன் திமிரை என்கிட்ட காட்டாதே அடக்கிடுவேன்."
"தாராளமா...அதுக்காக தானே காத்துக் கிடக்கிறேன்."
"ச்சீ...அசிங்கமாயில்லை...மரியாதையா மும்பைக்கே போயிடு!"
"என் மேல அவ்வளவு அக்கறையா?"
"என்ன நினைச்சிட்டு இருக்க நீ?நானும் பொண்ணாச்சேன்னு பொறுமையா போனா??போ..."
"எனக்கும் காலம் வரும்.அப்போ கவனிச்சிக்கிறேன்."-என்று அவள் சென்றுவிட்டாள்.
அவனுக்கு இன்னும் கோபம் தணியவில்லை.கோபத்தில் தரையை காலால் உதைத்தான்.நடந்தவற்றை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ராஜேஸ்வரி.அவனிடம் சென்று பேச வேண்டும் என்று தாய் மனம் ஏங்கியது.ஆனால்,தயக்கம் தடுத்தது.அங்கேயே ஏதோ யோசித்தப்படி நின்றிருந்தார்.பின்,ஏதோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனருகே சென்றார்.
"கண்ணா...!"
".............."-திரும்பினான்.
"மன்னிச்சிடுப்பா...நான் ரம்யாவை கூட்டிட்டு வந்தது தப்பு தான்!"
"..............."-அவன் மனம் இளகியது.எதிர்பாராமல் பார்த்தவனின் கண்களில் ஒருவன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர்களை குறி வைப்பது தெரிந்தது.அதைக் கண்டு அதிர்ந்தவன்,தன்னை அறியாமல்,
"அம்மா...!"-என்று அவரை நகர்த்தினான்.துப்பாக்கியில் பாய்ந்து வந்த தோட்டாவனது,இருவரையும் தாண்டி தூரத்தில் இருந்த பூந்தொட்டியை சுக்கு நூறாய் உடைத்தது.
ஆஹா இந்த வார்த்தையை கேட்க தானே அந்தத் தாய் மனம் தவம் கிடந்தது.கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே!அது இதானா??
"வாங்கம்மா...!"-என்று அவரை விரைவாக தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ஆதித்யா.
"நான் வருகிற வரைக்கும் இங்கேயே இருங்கம்மா...!"-என்று கூறி மேசை மீது இருந்த தன் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றான்.
வெளியே ஒருவனையும் காணவில்லை...தேடினான்.யாரும் தென்படும் வழியாய் தெரியவில்லை.கோபத்தில் மண்ணை உதைத்தவன்,அங்கே ஒரு கைப்பேசி இருப்பதைக் கண்டறிந்தான்.அது வந்தவனதாய் இருக்கலாம்...அதை கையில் எடுத்தான் ஆதித்யா.ஏதோ யோசித்தவனாய் தன் அறைக்கே சென்றான்.அங்கே அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி.ஆதித்யா அவர் சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.
"உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேம்மா?"-அவனது அந்த ஒரு கேள்வி போதுமே!!!மகனிடம் முக்தி வேண்டி நின்ற தாய்க்கு இறையருளே கிடைத்ததுப் போல் இருந்ததே!!!!
"கண்ணா...!"
"மன்னிடுங்கம்மா....நிறைய தப்பு பண்ணியிருக்கேன்.அதுல,ரொம்ப பெரிய தப்பு உங்களை கஷ்டப்படுத்தினது..
"என்னப்பா??நீ?"
"இல்லம்மா...நிறைய நாள் உங்களை அழ வைத்து வேடிக்கைப் பார்த்திருக்கிறேனே??"
"என்ன கண்ணா நீ?ஒரு தாய் வயிற்றுக்குள்ளே இருக்கிற குழந்தை உதைக்கிறது...அந்த அம்மாவுக்கு வலிக்குமா??என்ன?உனக்கு எதுவும் அடி படலையே??"
"அம்மா...!"-அங்கே தாய்,மகன் பாசம் எழுதியது,ஒரு புது கதையை! இல்லை...கவிதையை!இல்லை...காவியத்தை!எதை உவமையாய் கூறினாலும் ஈடாகவில்லையே! என்ன விந்தையடா?