(Reading time: 7 - 13 minutes)

08. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

விதா காலை பரபரப்பில் இருந்தாள். இன்று முதல் வேலைக்கு செல்ல போகிறோம் என்று சந்தோஷம். ஆகாஷ் அர்ஜுனுடன் கிளம்பிவிட்டாள். ஆகாஷ் தீவிரமாக கோப்புகளை பார்த்துக்கொண்டிருக்க, அர்ஜுன் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான். இருவருமே பலத்த யோசனையில் இருக்க கவிதா அமைதி காத்தாள்.

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

அந்த பிரமாண்டமான ஜவுளி ஏற்றுமதி செய்யும் கம்பனியின் முன் வண்டி நிற்க ஆகாஷும் கவிதாவும் இறங்கிக்கொள்ள, அர்ஜுன் கிளம்பிவிட்டான். கவிதா ஆகாஷை பார்க்க 

நாகரீகம் வளர்ச்சி என்பதில் உடை முக்கியமான பங்குடையது. நாகரீகத்தை பேஷன் ஷோ என்ற பெயரில் அதன் வளர்ச்சியை அளவிடுவர். அர்ஜுன் அத்தகைய வளர்ச்சி தான் வகையில் பங்களித்து கொண்டிருக்கிறான் இரண்டு வெவேறு துறையில் கால்பதித்து.

அவன்,"அண்ணா காலை நேரத்தில் அட்வெர்டைசிங் கம்பெனியில் இருப்பாரு"

கவிதா "நீங்க மட்டுமா இந்த கார்மென்ட்ஸ் பாக்ட்ரியை கவனிக்கறீங்க??"

ஆகாஷ்," அண்ணனும் தான்" என்றான்.

அர்ஜுன் அவன் பாட்டியின் எதிர்ப்பையும் மீறி தனியாக அவன் நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியது அந்த நிறுவனம், தொழில் நன்றாக பயின்றவர்கள் என்பதால் சீக்கிரமே வளர அர்ஜுன் காலை நேரம் விளம்பர தொழில் கவனிக்க என்று ஒதுக்கினான். 

ஆகாஷ் பல கோப்புகளை கொடுத்து,

"இது இந்த ஆண்டு இலாபம் பற்றியது, பாருங்க" என்று கொடுத்துவிட்டு  அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

டந்த ஒரு வருடாமாக தான் ஆகாஷின் துணையுடன் கம்பனி இயங்கி வருகிறது. அதற்க்கு முன்பு அர்ஜுனின் உழைப்பு தான்.

விவரங்கள் அறிய அறிய கவிதாவினுள் அர்ஜுன் பற்றிய பிரமிப்பு அதிகமானது. இறுக்கமாக, அமைதியுடன் இருக்கும் அர்ஜுன் தொழில் முன்னேற்றம் அவன் கர்வமுடன் இருப்பது தவறல்லவோ என தோன்றியது.

வேணிம்மா அவர்களின் பல தொழில்களை விற்றாலும்  ஜவுளி வியாபாரத்தை மட்டும் விற்காமல் பேரன்கள் இருவரும் வளரும் வரை நடத்தி கொண்டு வந்தாராம் என்று வாழ்கை கதைகளை ஆகாஷ் கவிதாவிடம் பகிர்ந்துக்கொள்ள பிரமிப்பு அதிகமானது.

தோழமையுடன் பேச்சு வளர்ந்தது. அர்ஜுன் அவன் வேலைகளை முடித்துக்கொண்டு அங்கே வந்தவன் இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து "ஆகாஷ் " என்று சீறினான்.

அர்ஜுன், "ஆகாஷ்,  ஏற்றுமதி சரி பார்த்து டெஸ்பாட்ச்சிர்க்கு அனுப்பியாச்சா ??" என்று மீண்டும் சீர ஆகாஷ் மறந்துப்போன வேலையே தொடர  ஓடினான்.

கவிதாவிடம்," உன்னை இங்க வேலை செய்ய தான் கூட்டிக்கொண்டு வந்தது கெடுக்க இல்லை "

"சார், பணம் சம்பாதிப்பது பெருசல்ல, அதை பண்மடங்காய் பெருக்குவது பெரிய விஷயம் சார் அது உங்க தம்பிக்கு நல்லா தெரிஞ்சிருக்கு"

அவள் பேசுவது புரியாமல் பார்க்க அவன் கவிதா தொடர்ந்தாள்," அதை பற்றி மட்டும் தான் உங்க தம்பி கிட்ட பேசிட்டு இருந்தேன் " என்றாள் கிண்டலாக.

ரௌதிரமாக அர்ஜுன் அவள் கையை பிடித்து இழுத்து திருகி "என் தம்பியை சீண்டினாய் என்றால் நடப்பதே வேறு " என்றான் 

கவிதா பயப்படவில்லை பதறவும் இல்லை பொறுமையாக கையை விடிவித்துக்கொண்டு " உங்க பாசம் எனக்கு புரிகிறது அர்ஜுன் சார் முடிஞ்சா உங்க தம்பிக்கு அட்வைஸ் பண்ணுங்க " என்றாள் அவன் கண்ணை பார்த்து.

அவளே தொடர்ந்து," என் படிப்பிற்கு ஏற்ற மாதிரி வேலை எனக்கு தருவதாக ஆகாஷ் சொன்னார் நான் போகிறேன் " என்று அறை விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவன் உலகம் அவனை விட்டு தனியே சுழல்கிறதோ. இந்த பெண் அவன் பாட்டி, அவன் தம்பி, அவன் அக்கா என்று எல்லாரையுமே அவள் பக்கம் ஈர்கிறாள் ஏன் அவனுமே அவள் பக்கம் ஈர்க்கப்படுகிறானோ என்று சந்தேகம் தோன்றியது.

ந்தேங்கங்களுடனே நாட்களும் தொடர்ந்தது. அர்ஜுனின் வழக்கங்கள் கவிதாவிற்கு அத்துப்படி ஆயிற்று அவன் அறிவிப்பில்லாமல் காட்டும் மூர்க்க தனம் தவிர. அது பழகினாலும் சில சமயம் கண்களில் கண்ணீரை நிறுத்த முடிவதில்லை. அவன் ஊசி முனை வார்த்தைகள் கீரி  கிழிப்பதை  நிறுத்தவில்லை.

சௌமியா கணேஷுடன் அந்த நகரத்தின் மைய பகுதியில் இருக்கும் அவன் லீகல் கன்ஸல்டேஷன் நிறுவனத்தில் அமர்ந்திருந்தாள். அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தது கணேஷின் நண்பர்கள், அவர்களின் தினசரி வேலைகள் என்று தெரிந்துகொண்டாள்.

கணேஷ்  பன்னாட்டு சட்டம் படித்து பல நிறுவனங்களுக்கு சட்டரீதியாக ஆலோசனைகள், வெவேறு நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய ஆராய்வுகள் என்று தனியாக நண்பர்களுடன் நிறுவி நடத்தி வருகிறான்.

சௌமி," நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் கணேஷ்??" என்று கேட்க 

கணேஷ்," சௌமிம்மா... நீ என்னோடு அங்கே வந்து சிரித்தப்படியே அமர்ந்துக்கொண்டு  இருந்தால் போதும்.."என்றான் 

அவனிற்கு திருமணம் ஆன பின்பும் தெரிந்தும் அவனை காதலிக்கும் காவியாவிற்கு அங்கு அவனுடன் சௌமியா  இருப்பது வேலியாக அமையும். 

சௌமியாவிற்கு கணேஷின் அக்கறை அவன் அன்பு புரிவதாய்!!

வாழ்கை பாதை சீராக நேர்க்கோட்டில் அமைந்துவிட்டால் மகிழ்ச்சி இருக்காது. அருமை புரியாமல் போய்விடுமே!! அதனால் தானோ இன்பங்கள் தனியே வருவதில்லை போலும்!!

விதாவின் வேலை தீர்மானம் ஆனது. அவள் அந்த கம்பனியின் நிதி மற்றும் ஏற்றுமதி விவகாரங்கள் பார்த்துக்கொள்ள பொறுப்பை  ஏற்றாள். ஆகாஷ் உதவி செய்வதாக சொல்ல அன்றே வேலையே தொடங்கினாள்.

ஆகாஷ் தாமதமாக வருவதாக சொல்ல கவிதாவும் அர்ஜுன் கிளம்பியாகிவிட்டது. பாம்பு விஷம் போல் அமிலமாக வார்தைகள் கேட்க  வேண்டியது வருமே என்ற எண்ணங்களுடன் அவனுடன் சென்றாள்.

பேசாமல் அமர்ந்துக்கொண்டிருந்தவளை சீண்டினான் அர்ஜுன். ஏட்டிக்கு  போட்டியாக கவிதாவும் பேச அதன் விளைவு வழியிலே இறக்கி விட்டு பறந்துவிட்டான்.

எதிர்ப்பாராமல்  அவன் செயல் பலமாக அவளை தாக்க நடந்தே வீடு சென்று அடைந்தால். வாசலிலே காத்திருந்தவன் வழி மறித்து "என்னையா போட்டுகொடுகிறாய் ? இந்த தண்டனை போதும் என்று நினைக்கிறேன்..." என்று சிகரெட் விஷயத்தை ஞாபகப்படுத்தி கிளம்பிவிட்டான்.

கவிதா அயர்ந்துவிட்டாள் அவன் குணம் தெரிந்தும். பிறரை வருத்தி மகிழ்வது யார்?? அப்படி பார்த்தாள் யார் சாடிஸ்ட்?? அவளா இல்லை அவனா..? பழிக்கு பழி என்றால் வீட்டை விட்டு துரத்துவது தானே!! அப்படி அவளை வதைப்பதில் அவனிற்கு என்ன தான் மகிழ்ச்சி. ஒருநாள் அவன் துன்பத்தை அவள் பார்த்து சிரித்ததற்கா இந்த வதைப்பு. 

ஒருபக்கம் உண்மை தெரிந்தும் அடைக்கலம் கொடுத்திருக்கிறான். நல்லவனாக தெரிய இன்னொருப்பக்கம் அவளை அவன் நடத்தும் விதம் முற்றிலும்  மாறுபட்டதாக இருக்கிறதே!!

அர்ஜுனிற்கே  அவன் செயல்கள்  ஆச்சர்யமாகவும் வித்தியாசமாகவும்  தோன்ற கவிதாவிற்கு மட்டும்  என்ன புரிந்துவிடும்.?? பிறர் மனம் வாட கூடாது என்பதில் செயலிலும் பேச்சிலும்  கவனமாக  இருப்பவன்  கவிதாவிடம் மட்டும் சுதந்திரமாக அவனை வெளிபடுத்துவதில்  தயங்குவதே  இல்லை.

பாட்டியால்   ஏமாற்றதை  தங்க முடியாது, தேவையற்ற  பூசல்களை தடுக்க என்று அவளை தங்க வைத்திருப்பதாகவே அவனே  நம்பினாலும் அது  மட்டுமா உண்மை. அவள் வரவின் பின் தான் வீட்டில் வெளிச்சம் பரவயிருப்பதுப்போல் தோன்றுவது ஏனோ?

காதல் இடி மின்னல் போலே விழும் வரை எங்கே விழும் என்று தெரியாது!! அப்படியொன்று அவன் மேல் விழுந்திட்டதோ??

கவிதாவால் அர்ஜுனை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவன் தம்பி ஆகாஷை புரிந்து வைத்திருந்தாள். அவளிடம் இருந்து நிஷாவை பற்றி அவனிற்கு விவரங்கள் வேண்டும். அதனால் தன அவன் அவளை நெருங்குவதே. அப்படி அவன் பேச்சு கொடுத்து அவளை பற்றிய விவரம் அறிய முனையும் பொழுதெல்லாம் விதியின்  சதி போல அர்ஜுன் வருவதும் ஆகாஷை நெருங்காதே அவனிடம் பேசாதே என்றெல்லாம் மிரட்டுவதும் முடிந்தால் அவளை புண்படுத்துவதும் தொடர்கதையாகி போனது.

ஆகாஷ் கேட்க வருவது புரிந்தாலும் அவளே போய் விவரம் எப்படி சொல்ல முடியும். இது தான் என்பது அவள் ஊகம் தானே. அப்படி இல்லாமல் அவள் உளறி வைத்தால் அர்ஜுன் போல அவன் மென்மையாக கையாளாமல் கவியை வெளியே தள்ளி விட்டால் என் செய்வது.

கவிதா முடிவு செய்தாள் வெளிபடையாக இருவரில் ஒருவரிடம் அவர்களின் மனநிலையை பற்றி பேச.

அதிர்ச்சி, ஆச்சர்யம், அயர்வு, துன்பம், சந்தோசம், வருத்தம் என்றெல்லாம் வாழ்கை பதை திசை மாறிக்கொண்டே போனாலும் தன்னம்பிக்கையும் எதிர்க்கொள்ளும் துணிச்சலும் அவளை நிற்க வைத்துக்கொண்டே இருந்தது. துணையாகவும் இனியும் இருக்கும். 

தொடரும்!

Go to episode # 07

Go to episode # 09


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.