(Reading time: 18 - 36 minutes)

14. என் இதய கீதம் - Parimala Kathir

ஸ்வினுக்கு புவியின் பெ ற்றோருடனான கார் பயணம் சந்தோஷமாகவே அமைந்தது. அந்த தம்பதியினரின் ஆழமான குடும்ப பற்று, உறவுகள் மேல் அவர்களுக்கு இருக்கும் மரியாதை என எல்லமே தனது வருங்கால மாமனார் மாமியாரிடத்தில் அவனுக்கு ஒரு ல எத்தனை பொண்ணுங்க ஸ்கூலில சுத்தினாலுக அப்புறம் காலேஜில எதுக்கும் மசியாதவன் அப்படி யாரிட்டடா உன் இதயத்தை தொலைச்சிட்ட?"

En ithaya geetham

"ஏன் இவளவும் சொன்னவன் அந்த பொண்ணோட பெயரையும் சொல்லியிருப்பானே? இவன் இருக்கானே அதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லிட்டானா? நான் அவன்கூடவே தானே இருந்தனான்."

"ம்ம்ம்..... அவன் உன்னோட பர்சில ஒரு பொண்ணோட ஓவியம் ஐ லவ் யூ தேவதை என்ற உன்னோட கையெழுத்தோட இருக்க கண்டவன் என்று தான் சொன்னான். அப்புறம் நீயே ஒரு பொண்ணை லவ் பண்றதாய் சொன்னியாம் அந்த பொண்ணு எனக்கும் தெருயும் எண்டான் அனால் உன்கிட்ட கேக்க சொன்னான். சொல்லுடா யார் அந்த பொண்ணு."

"அது வா...... உன்னோட ..... உன்னோட... "

"என்னடா சொல்லு "

"ஹிம் உன் சின்ன நாத்தனார்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து யாழினியின் அருகில் சென்று அமர்ந்தான்.

"என்...னோ..ட... சின்ன... நாத்தனார்... ம்...... யாரு அது சின்ன நாத்தனார்.......(பலமாக யோசித்தாள் அஸ்வின் கடைக்கண்ணால் அவளைப் பார்த்து வாயுக்குள் சிரித்துக் கொண்டான். அவள் முகத்தில் திடீரென பதில் கிடைத்ததற்கான பிரகாசம்.) புவி..... அட நம்ம புவியையா விரும்புறான். இரண்டு பேரும் நல்ல ஜோடி " என நினைத்துக் கொண்டாள் அவள் அஸ்வினை பார்த்தாள் அவன் ரூபாவைப் பார்த்து சிரித்தான்.

"சரி நேரமாகிறது அப்போ நாங்க கிளம்புறம் சம்மந்தி. ரூபா இங்க வாம்மா! இந்தா இந்த பூவை தலைக்கு வச்சுக்கோ ! ம்... இது உன்னோட சின்ன நாத்தனார் உனக்காக ஸ்பெஷலா செய்ததாம் இத தான் நீ இணைக் கூறையாக கட்டவேண்டும் என்று அன்புக் கட்டளையாம். " சின்ன நாத்தனார் என்ற சொல்லில் அஸ்வினும் ரூபாவும் பார்த்து ரகசியமாக சிரித்து கொண்டனர்.  

பெட்டியை திறந்து புடவையை பார்த்தவர்கள் அதிசயித்துப் போயினர். அவளவு அழகாக இருந்தது அவள் பிரத்தியேகமாக தனது அண்ணிக்காக தானே வடிவமைத்த புடவை. அரக்கு சிவப்பு நிறத்தில் அகல கரை வைத்து அதில் சிறிய பாசி மணிகளால் அழகிய கிருஷ்ண ராதா திருமணத்தை பிரதிபதித்திருந்தாள். அதன் உடல் பளீர் வெண்ணிறத்தில் தங்க சரிகையாலும் முத்துக்களாலும் அழகிய கோவில் மண்டபத்தில் மதன் ரூபாவுக்கு மாலை அணிவிப்பது போன்று வடிவமைத்திருந்தாள். ரூபாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. ரூபா தனது நன்றியை புவியிடம் தெரிவிக்க சொல்லி சொன்னாள்.

அஸ்வினை கேட்கவே வேண்டாம் அவன் அந்த புடவையை பார்த்ததிலிருந்து வேறு லோகத்தில் இருந்தான். "என் கண்மணிக்குள் இத்தனை திறமையா என எண்ணிக் கொண்டான்."

வீட்டிற்கு வந்த புவியின் பெற்றோர் அஸ்வின் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மதனிடம் அஸ்வின் பற்றி மெதுவாக விசாரித்தனர். அஸ்வின் பற்றி தமக்கு திருப்தி ஏற்பட்ட பின் புவிக்கு அஸ்வினை பேசலாம் என்று தாங்கள் நினைத்திருப்பதை தெரிவித்தவர்கள் இப்போதைக்கு யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அவனும் ஆனந்தத்துடன் சரி என்று உரைத்து விட்டு நண்பனிடம் இதனை கூறி அவனை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு சென்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக புவிவிடம் தான் நெருங்குவதை உணர்ந்தான் அஸ்வின். அவளின் பெற்றோரே தன்னை மாப்பிள்ளையாக்க விரும்புகினர். அவளும் தன்னை காதலிக்கின்றாள். அப்புறம் தனது வீட்டிலும் எதிர்ப்பு இருக்காது என்று எண்ணத்துடனே அவளது ஓவியத்தில் தன் இதழ் பதித்தபடியே உறங்கிப் போனான்.

புவிகா வீட்டில்

தான் நினைத்துச் சென்றதற்கும் மேலாக விடயம் வெற்றியை ஈட்டித் தந்த மன நிறைவுடன் அஸ்வின் பற்றிய நினைவையும் மறந்து உறங்கிப் போனாள். புவிகா.

மதன் ரூபா திருமணம் மிக விமர்சையாக தொடங்கியது. புவி கொடுத்த புடவையில் தேவதை போல் திகழ்ந்த தன மனைவியை இமைக்க மறந்து பார்த்திருந்தான். சுப முகூர்த்தத்தில் ரூபா கழுத்தில் மங்கள நான் மதனது கையால் ஏற்றப்பட்டது. அப்பப்போ யதுவினது காதல்  பார்வை அஸ்வினிடம் சென்று மீண்டது. ஏதோ சொல்வதற்காக அவள் அவனருகில் வரும் போதெல்லாம் அவன் விலகிச் சென்ற வண்ணமிருந்தான்.

சென்னையில் 

காயா  பிரமிலனின் திருமணம்  கோவிலில் சிம்பிளாக நடந்தேறியது.  புதுமணத் தம்பதிகள் மட்டுமன்றி  காயாவின்  பெற்றோர் கூட மன நிறைவுடன் புவிக்கு நன்றி தெரிவித்தனர்.

"நீ இல்லன்னா எங்க பொண்ணோட வாழ்க்கையை நாங்களே குழி தோண்டி புதைத்திருப்போம் நல்ல நேரத்தில எங்களுக்கு எல்லா உண்மைகளையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிட்டாயம்மா உன்னை போல ஒரு நல்ல பொன்னை பெத்ததுக்கு உங்க அம்மா அப்பா  போன பிறவில ஏதோ புண்ணியம் செய்திருகாங்கம்மா!" என்று அவள் முகம் வழித்து நெட்டி முறித்தனர்.

 காயா மெதுவாக புவி அருகில் வந்து எப்படி எங்க அம்மா அப்பாவை மாத்தினாய்?  என்னால நம்பவே முடியல இதெல்லாம் கனவு போல இருக்கடி. நேத்து ராத்திரி திடீரென்று அம்மா வந்து "எங்களை மன்னிச்சிடும்மா நாங்க உனக்கு தப்பான ஒருத்தனை கட்டி வைக்க இருந்தோமேம்மா! நீ விரும்பியவனையே  உனக்கு கட்டி வைக்கிறோம்." என்று வந்து அழுது கொண்டு மன்னிப்பு கேட்டார்கலடி  அது மட்டும் இல்ல நாளைக்கே எனக்கும் பிரமிலனுக்கும் கோவில்ல கலியாணம் என்று இன்ப அதிர்ச்சி வேறு .  இப்ப கூட இதெல்லாம் நம்ப முடியல சொல்லுடி என்ன தான் நடந்தது.

"சொல்லுறேன் கேளு!  நேத்து நீ  விஜயனை பத்தியும் உன்னோட முடிவை பத்தியும் சொல்லிட்டு போனை வச்சிட்டாய்.  எனக்கு என்ன செய்றதென்றே தெரியல.  உன்னோட பேரன்ஸ்  கிட்ட ஒருதடவை பேசிப் பாக்கலாம் என்று தான் வீட்டை விட்டு டிரைவர் அண்ணாவையும் கூட்டிட்டு  உங்கப்பா வேலை செய்ற இடத்துக்கு அவரை பாக்க போனோம். போற வழியில விஜயனோட கெட்ட நேரமோ அல்லது உன்னோட நல்ல நேரமோ  பஸ்டாபில ஒரு பொன்னுகிட்ட  காசை நீட்டி எதோ வம்பு பண்ணிட்டிருந்தான் செம டைட்டு  வேற அந்த பொண்ணு போட்ட கூச்சலில கூட்டம் கூடி அவனை மொத்தி எடுத்துட்டு போலிசில பிடிச்சு கொடுத்திட்டாங்க.  அந்த நேரம் பாத்து உங்க அப்பாவும் அந்த இடத்துக்கு  வேலை முடிஞ்சு வந்திருக்கார் போல அவனை போலிஸ் பிடிச்சுக் கொண்டு போறதை பாத்திட்டார்.  அவர்கிட்ட போய் நடந்தது எல்லாத்தையும் சொன்னேன். எதுக்கும் ஓர் ஆதாமாய் இருக்கடும் என்று என் செல் போனில ரெக்கோட் பண்யிருந்ததை  போட்டு காட்டினேன்.  பாவம் மனுஷன்  எப்பிடி கலங்கி போனார் தெரியுமா?  அவர் உன் காதலுக்கு எதிரி இல்ல காயா.  நீயே இதப் பத்தி அவங்க கிட்ட  முதலிலேயே பொறுமையா  எடுத்துச் சொல்லியிருந்தால்  அவங்க புரின்சிருபாங்க  நீ  தான்.......   சரி அதை விடு பிறகு அவர் என்னையும் கூட்டிக் கொண்டு நேரே  பிரமிலன் வீட்டுக்கே போனோம் அவரோட சித்தப்பா சித்திகிட்ட நடந்ததை எடுத்துச்  சொன்னோம் விஜயன் வெளியில வாரத்துக்கு முதல் இந்த கலியாணம் நடந்தால்  நல்லது என்று உங்க அப்பாவும் நினைத்தார்.  அவன் வந்தால்  இந்த கலியாணத்தை நடக்க விடுவானோ என்று நினைத்தோம்.  அந்த இரவே எல்லா ஏற்பாடும்  செய்து விட்டு தான் அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம் அதுக்கு பிறகு நடந்தது தான் உனக்கு தெரியுமே காயா?"  என்று சொல்லி முடித்தாள்.

காயா கண்களில் கண்ணீருடன் அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.  உன்னால் தான் புவி என் திருமணம் எங்கள் பெற்றோர் ஆசிர் வாதத்தோடு  நடந்திருக்கிறது என்று சொல்லி  புவியை இறுக்க அனைத்து கொண்டாள்.  

"சரிடி விடு என்னோட எலும்பே முறிந்தும் போல இருக்கு பாவம் பிரமிலன் கொஞ்சம்  பாத்து மெதுவா அனைத்துக் கொள்" என்று   நிலைமை மாற்ற முயன்றாள். 

"ஏய் நீ ... போடி "என்று வெட்கத்தில் முகத்தை மூடிக்  கொண்டாள் காயா. 

"அது இப்பிடி வெட்கப்படு சிரிப்பதை  விட்டுட்டு சும்மா அழுதிட்டு......  அப்புறம், உனக்கு இன்னிக்கு ஒரு நாள் தான் காலேஜ் லீவு நாளைக்கு நல்ல பொண்ணாய் எக்ஸாம் ஹாலுக்கு வாராய் ஓகே பை டி டைம் ஆகிடிச்சு நான் இன்னும் மதன் அண்ணாக்கு விஸ் பண்ணவே இல்ல திட்ட போறன் " என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள். அனைவரிடமும் பை சொல்லி விட்டு.  இவற்றை  எல்லாம் கொள்ளிக் கட்டை கண்ணுடன் ஒருவன் பார்த்து நின்றது யாருக்கும் தெரியாது.  அது விஜயனின் தோழன் சகா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.