(Reading time: 18 - 36 minutes)

 "லோ  அம்மா.........  அம்மா......  ஓ என்னோட லக்ஷ்மி குட்டிக்கு கோவமா சாரிடி தங்கம் நீ நேத்து கால் பண்ணப்போ நான் தூங்கிட்டண்டா அது தான் இப்ப  எடுத்திட்டன் இல்ல.  இன்னும் கோவம் போகலையோ?  உம்மா.... உம்மா.... உம்மா.... என்னம்மா என்மேல கோபம் போயிடிச்சா? பேசுங்கம்மா  உங்க பொண்ணு பாவம் இல்ல எவ்வளவு நேரம் கெஞ்சி கொஞ்சி கேக்கிறது.  ம்...."

"சாரிங்க நான் உங்க அம்மா இல்ல அவங்க போனை கல்பனா குட்டி வச்சிருந்தா போன் வந்ததும் என்கிட்ட தந்திட்டு ஓடிட்டா இப்ப அவங்க கிட்ட கொடுத்திடுறன்."

நீ....  நீங்க யாரு எதுக்குங்க நீங்க  ஆண் பண்ணிணீங்க  நான்  அம்மான்னு நினைச்சு"

மறு முனையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டது 

ஏற்கனவே எவனோ ஒருவனுக்கு அம்மா என்று நினைத்து உத்தம் கொடுத்து விட்டதை எண்ணி வெட்கி நின்றவளுக்கு அவனது சிரிப்பு எரிச்சல் மூட்டியது.

"ஹலோ சார் எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க அடுத்தவங்க போனை தேவையில்லாம ஆண் பண்ணி கதைக்கிறதே பெரிய தப்பு அதுக்குள்ள நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கன் நீங்க யாரென்றே சொல்லாமல் எல்லாத்தையும் சே  என்ன ஆள் நீங்கள்? " என பொரிந்து  தள்ளினாள்.

"ஹலோ மேடம் போனை எடுத்த நீங்கள் காப் விட்டல் தானே நான் யாரென்று சொல்வதற்கு அப்புறம் உங்க அம்மா கூட எப்பிடி உங்கள் கேள்விக்கு பதிலளித்திருக்க முடியும்.  ஒரு வேளை.....   இரவு நீங்கள் உங்க அம்மாவோடு பேசாததற்குத்  தான் இடைவெளி விடாது இப்பிடி முத்...."

"அது எங்களோட பிரச்சனை நீங்க முதலில போனை எனோட அம்மாட்ட அல்லது மது அண்ணாட்ட கொடுங்க " என்று கடுகடுத்தால்.

"ஸ்....  ஒகே ஒகே குடுத்திடுறன்.   கொடைக்கானல் குளிருக்கு உங்க சூடான வார்த்தையில் சுவட்டரே போடத்தேவையில்லை அப்புறம் நீங்க கொடுத்த அந்த....  ஓகேங்க நான் எதுவும் சொல்லல நீங்க முறைக்கிறது  எனக்கு தெரியுது. ஆனாலும் நான் ரொம்ப லக்கி புவிக்கா"   என்று  புவிக்காவில் ஒரு அழுத்தம்  கொடுத்து  சொல்லி விட்டு அவள் ஏதோ பேச முனைகையில் அஸ்வின்  போனை மதனிடம் கொடுத்தான் ஒரு மந்தகாசப் புன்னகையுடன். 

து அஸ்வின் சற்றும் எதிர் பாராமல் நிகழ்ந்த ஒரு இன்ப அதிர்ச்சி .  அவன் ஆபீஸ் விசயமாக யாருடனோ போனில்  பேசிக் கொண்டிருந்த போது தான்.  யாழினியின் மகள் கல்ப்பனா ரூமில் இருந்து போன் அடிக்கும் சத்தம் கேட்க அதனை எடுத்துக் கொண்டு திரையில் விழுந்த  புவியின் படத்தை பார்த்து சித்தா  சித்தா என ஓடி வந்து அஸ்வின் கையில் கொடுத்து விட்டு ஓடிச்சென்று விட்டாள்.  அவன் புவியின் படத்தை சரியாக கவனிக்காது சிட்டாய் பறந்த குழந்தையிடம் கவனமாக  பார்த்தும்மா என்று சொல்லியபடி ஆண் செய்தவன் புவியின் குரலை கேட்ட பின் தான் போன் திரையில் விழுந்த  படத்தை பார்த்தான் அதற்குள் அவள்  சத்தமாக முத்தத்தையும்  கொடுத்து விட்டாள்.

கன்னத்தை தடவியவரே சென்ற அஸ்வினை பார்த்தபடி "ஹலோ" என்றான்  மதன்.

"ஹ.... மது அண்ணாவா?"

"ஏண்டி  என்னோட குரலே மறந்திடிச்சா" என்று அஸ்வினை பார்த்தபடி கேட்டான் மதன் குறும்புச் சிரிப்புடன்.   

"மறக்லண்ணா!  ஆனால்,  அது சரி இப்ப என் கூட போனில ஒருத்தன் கதைச்சானே யாரவன் சுத்த நான்சன்." என்றாள் வார்த்தைகளில் கோவம் தெறிக்க.

"ஏன் என்னோட பிரண்ட் என்னாச்சு? என்றான் குழப்பமாக அவ சொன்னதைக் கேட்டு வெளியே சத்தம் வராது  ரூபாவிடம் செய்கையால்  காட்ட  இருவரும் அஸ்வினை பார்த்து சிரிக்க அவனும் ஒரு வெட்க சிரிப்பு சிரித்தான்.  பின்பு  எல்லோரிடமும் கதைத்து   விட்டு  யாழினியினதும் கல்பனாக் குட்டியினதும் வேண்டு கோழுக் கிணங்க இன்னும் இரண்டு மூன்று நாள் தாய் தந்தையை இருக்க சொல்லி விட்டு  போனை வத்தவளிடம் சிறு குழப்பம் குடி கொன்டது 

ன்னோடு பேசியது அஸ்வினோ என்று ஏனெனில் அவன் குரல் போல் தான் இருந்தது. ஆனாலும் அவன் எப்படி அண்ணனின் வீட்டில் என்று எண்ணி அந்த நினைப்பை கை விட்டு காலேஜிற்கு புறப்பட்டாள்.   

"என்னம்மா அதிரடியா காயாவோட கலியாணத்தை நடத்தி வைச்சிருக்கே   எங்களுக்கு எல்லாம் இன்விடேசன் கொடுக்கவே இல்ல! அ..." என்றாள் அபி

"என்னடி நக்கலா உனக்கு போன் போட்டா உன்னோட போன் டெத் வீட்டுக்கு அடித்தால் யாரும் எடுக்கல அப்புறம் உங்க வேலைகாரன்னா தான் நீங்க வெளிய போயிருக்கிறதா சொன்னார். உனக்கு எல்லாம் தெரிஞ்சு தானே இருக்கு வர வேண்டியது தானே?"

"சாரிடி இப்ப தான் காயா எல்லாம் சொன்னாள். நாங்க நேத்து அப்பாவோட தூரத்து சொந்த காரன் யாரோ புட்டுக்கிட்டார் என்று அதுக்கு போயிட்டு இப்ப தான் வீட்டுக்கு வந்தனாங்க சும்மா உன்னை வேறுபேத்த தான் அப்பிடி சொன்னேன்டி அவ லைப் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்."  என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் அபி.

"ம்..... சரிடி!  அபி உனக்கு  வேற சப்ஜெக்ட் இருக்கா எனக்கு முடிஞ்சுது?"

"ஆங்.....   இரண்டு சப்ஜெக்ட் இருக்கு நீ வேணா கிளம்பு  புவி "

"சரி பை....."

"பை.."

"சாக்.... கடவுளே இந்த ஸ்கூட்டிக்கு என்னாச்சு " என ஸ்கூட்டியை பல முறை உதைந்தும் அது நடு ரோட்டில் வேலை நிறுத்தம் செய்ய  வேறு வழி இல்லது அதை தள்ளிய படி சிக்கனல்  மாறுவதற்காக காத்திருந்தாள்  வீதியை கடப்பதற்காக.  சிக்கனல் மாறவும் அவள் வீதியை கந்து கொண்டிருக்கும் போது  எங்கிருந்தோ ஓடி வந்த சுதன் அவளை ரோட்டிலிருந்து வேகமாக தள்ளி விட்டு தானும் விலக  முயன்ற போது  காலம் கடந்து விட்டது.  

ங்கிருந்தோ எமனாக வந்த தண்ணி லாரி சுதனை அடித்து தூக்கி போட்டது.  புவிக்கு நடந்தது நினைவில் படவே சிறுது நேரம் எடுத்தது எல்லாம் கண்மூடி திறக்கும் முன் முடிந்தே விட்டது சுதனின் உயிரும் அந்த  இடத்திலேயே  தனது உண்மையான உயிக் காதலிக்காக  சமர்ப்பணமாகியது. 

அவன் இறந்த பின்பு கூட  தன்னை இந்த ஜீவன் நேசித்திருக்கின்றது என்ற விபரமே அவளுக்கு  தெரியாது போய்விட்டது.

ஏனெனில் அவன் இன்று தான் தனது நண்பர்களை சந்தித்தான். அவர்கள் வற்புறுத்தி கேட்டதனால் அன்று நடந்ததை சொன்னவன் இனிமேல் எப்போதும் தான் அவளை விரும்பினேன் என்ற விஷயம் அவளுக்கு உங்கள்  மூலமாக கூட தெரியக் கூடாது. என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். 

 ஏனென்றால் இனி இது பற்றி அவளுக்கு எப்போதாவது தெரிய வந்தால் அவள் எதிர்கால வாழ்க்கைக்கு அது நல்லதல்ல முடிந்த என் காதல்கதை முடிந்ததாகவே  இருக்கட்டும் என்று  தன் சோகத்தை மறைத்து மென்மையாக சிரித்தான்.  

புவியால்  சுதனின் மரணத்தை ஜீரணிக்க முடிய வில்லை. தன்னை காப்பாற்ற வந்து அவன் உயிர் பிரிந்ததை எண்ணி அபியிடம் சொல்லி சொல்லி மருகினாள்.  தாய் தந்தை சென்னை வந்ததும் அவனது குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று  சொன்னாள்.  பாவம் அவளுக்கே உதவி செய்ய யாரவது வரவேண்டும் என்ற நிலை ஏற்படும் என்று அவள் என்னினால்லிலை.  

அபியின் மனதில் சுதன் வானளவில் உயர்ந்து நின்றான். அவன் தனது தோழர்களுடன் உரையாடிய அனைத்தையும் கேட்டு விட்டிருந்தாள்.  அவன் நினைத்தது சரியே என நினைத்ததால் அவளும் சுதனது காதலை புவியிடம் இருந்து மறைத்தாள். அவள் மறைத்ததற்கு இன்னுமொரு  காரணமும் இருந்தது அது அஸ்வின் புவியின் அன்றைய பார்வைப் பரிமாற்றம்.  

அது சாதாரணமாக ஒரு அறிமுகப் பார்வை கிடையாது விழுங்கும் பார்வை ஆச்சரியம்,பரிதவிப்பு என எல்லாமே கலந்திருந்தது.  அவள் மனதில் சிறு கோடு போட்டு விட்டனர் புவியும் அவளது தமையனும். என்னதான் மாமன் மகள் அது உன்னோட ஆள் என்று கேலி பேசினாலும் அஸ்வின் மனதில் அது போல் எண்ணம் கிடையாது என்று அபிக்கு தெரியும். சும்மா அஸ்வினை வெறுப்பேத்த அப்படி சொல்லுவாள். அவளுக்கும் தனது தோழியும் அண்ணனும் மணந்து கொண்டாள் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

"மாலை மயங்கிக் கொண்டிருந்தது  திருமண வீடு கலகலப்பாக இருந்தது. அனைவரும் மதனையும் ரூபாவையும் கிண்டல் செய்தவண்ணம் இருந்தனர்.  அஸ்வின் மதனை அழைத்து தான் கிளம்புவதாக சொன்னான். 

"என்னடா? ஓ..... சாரி நீங்க இப்ப எங்க வீட்டு மாப்பிளை இல்ல.....  என்ன மாப்பிளை சார் இன்னும் இரண்டு நாள் இருந்திட்டு போறது தானே அப்பிடியே உங்க  மாமனார் மாமியார் கிட்ட மெதுவா உங்க  லவ்வ பத்தி சொல்லிட வேண்டியது தானே!" என்றான் பவ்யமாக 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.