(Reading time: 18 - 36 minutes)

 "நீ உதய் வாங்க போற அப்புறம் பர்ஸ்ட் நைட்டுக்கு  நொண்டிக் கொண்டு தான் போவ மகனே.. அவங்களே எங்க விஷயம் தெரியாமல் காலியான பேச்சு எடுத்திருக்காங்க நீ அதில மண்ணை அள்ளிப் போட்டிருவ போல பாவி நீ எல்லாம் நண்பனாட துரோகி"

"ஹி...ஹி... சும்மா உன்னோட ரியாக்ஷனை பாக்கத் தான்  ஆனாலும் என் தங்கைச்சியை நீ ரொம்ப லவ் பண்றே இல்ல  கலியாணத்துக்கு  அப்புறம் அவளை சந்தோசமா பாத்துக்கடா?" 

"சரிடா அப்ப நான் கிளம்புறன். அபீசில நிறைய வர்க் இருக்குடா! அப்புறம் அப்புறம் என் தேவதையை பாக்காமல் இருக்க முடியலடா!"

"அப்பிடி சொல்லு...  சரி நீ கிளம்பு " என்று தோழனின் தோளை தட்டக் கொடுத்தான்.

தனின் அறையில் இருந்து  தன்  தோள் பையுடன்  சிரித்துக் கொண்டே வெளியே  வந்த அஸ்வின் கண்ணீரோடு அறை வாசலில் நின்ற யதுவைப் பார்த்ததும் அவன் உதட்டில் இழையோடிய  புன்னகை காணாமல்  போனது. 

"யது....  நீ..  "

"ஆல் த பெஸ்ட்  அஸ்வின். ...." என்று  கண்களில் கசிந்த  கண்ணீரோடு கூறி அவனிடம் தன் கைகளை நீட்டினாள்.  

'யது அது வந்து நான் "

"இல்ல அஸ்வின் நீங்க எதுவும்  சொல்ல வேணாம் நான் எல்லாத்தயும்  கேட்டிட்டன்.  புவி ரொம்ப கொடுத்து வச்சவ உங்களை காணவனாய் அடையிறதுக்கு.. ம்ஹீம்.. எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது." என்று சொல்லி கண்களில் வழிந்த கண்ணீரை    சுண்டி விட்டு விட்டு அங்கிருந்து ஓடியவள் யார் மீதோ மோதியதை  உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.  

"அ...ண்..... ணா.....  அ... து..."

"அழாதடா எல்லாம் எனக்கு தெரியும். "

அவள்  தமையனின் தோழ்களில் தஞ்சம் புகுந்தாள். அவளது முதுகை மெதுவாக தடவி அவளை சமாதானப் படுத்தினான். 

"யதும்மா நீ இப்பிடி  நல்ல நாளில் கண்கலங்கினால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள் அது உனக்கோ அஸ்வினுக்கோ புவிக்கும் கூட நல்லதல்ல அதனால்....."

"இல்லண்ணா  அவர்களுக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது ஆனால் நான் கொஞ்சம் தனிமையில் இருக்க விரும்புகிறேன் ப்ளீஸ் அண்ணா" என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.

"சரி நீ ரெஸ்ட் எடு நான் உனக்கு தலை வலி என்று யாராவது கேட்டாள் சொல்லிக் கொள்கறேன்."  என்று சொல்லி அங்கிருந்து நகரமுயறவன் ஏதோ நினைவு வந்து "ஆனால் யது நீ தப்பான....."

"ஹிம்...  நான் ஒன்றும் அவளவு கோழை இல்லை அண்ணா! கண்டிப்பாக நான் தப்பான முடிவை எப்போதும் எடுக்கவே மாட்டேன் அண்ணா! எனக்கு தேவை சற்று நேர அமைதி  அவ்வளவே! நீங்கள் கவலையின்றி போய் வாருங்கள்." என்று கூறி அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள்.

பூட்டிய அறையை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

கீழே சென்ற அஸ்வின் அனைவரிடமும்  விடைபெற்று  அங்கிருந்து சென்னையை நோக்கி சென்றான்.

அவன் சென்னை வந்ததிலிருந்து அவன் முகத்தில் புதிதாக தெரிந்த பொலிவும் பிரகாசமும் வீட்டில் அனைவர் கண்ணிலிருந்தும் தப்பவில்லை.

"என்னண்ணா  கொடைக்கானலில இருந்து வந்ததில இருந்து நீ ஆளே மாறிட்ட நடையில ஒரு துள்ளல் புதுசா விசில் எல்லாம்  கூட அடிக்கிறாய்.  என்ன யாரையாவது லவ் பண்றியா அண்ணா?"

"அவள்  கேட்டதும் வியந்து போனான் அஸ்வின் "எல்லோருக்கும் தெரியும் படியா என் சந்தோஷத்தை  காதலை தெரியப் படுத்தி உள்ளேன்.  அதுவும் இவளது கழுகுப் பார்வைக்குள் அகப் பட்டு விட்டேனே."  என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

"நான் எப்பவும் போல தானே இருக்கேன் உனக்கு கண் தெரியலையா என்ன?  போ போய் எக்ஸாமுக்கு படி "என் அபியை முதல் முதலாக அதட்டினான்.

"சரி தான் நான் நினைத்தது சரி போல இருக்கே"  என நினைத்துக் கொண்டாள்.  அதை அத்தோடு விட்டிருந்தாள் நன்றாக இருந்திருக்கும்  அவள் அங்கிருந்து நேரே சென்று நின்றது தன் தாயிடம்.

"ஹிம் அம்மா நீ ஆசைப்பட்டது சீக்கிரம் நடந்திடும்  போலவே! "  என்றாள்  தாயுடன் சேர்ந்து துவைத்த புடைவையை மடித்தபடி.

"என்னடி சொல்றே எனக்கு ஒன்னும் புரியலடி"

"ஐயோ அம்மா நீங்க செரியான மக்கும்மா ...  ஆ.... குட்டாதீங்க நான் சும்மா சொன்னனான்.   அம்மா! நீங்க ஆசைப்பட்டது போல உங்க மகன் கூடிய சீக்கிரமே  உங்க மருமகளை  இந்த வீட்டுக்கு கூட்டி வந்திடுவான்.  அவனோட மனசிலயும் காதல் புகுந்திடிச்சம்மா."  என்று  சொல்லி சிரித்தாள்.

மேகலையின் கண்ணே கலங்கி விட்டது சந்தோசத்தில்  "கடவுளே நான் உனக்கு தினமும் பூப்போட்டது வீணாகல அப்பனே.  என் மருமகள் என் ஆசைப் படி என் வீட்டுக்கே வந்திடுவாளா?  நே சொல்றது நிஜமாடி ?  அவன் உன்கிட்ட சொன்னானாடி?"

"இல்லம்மா அவன் நேர சொல்லல ஆனால் இப் வான் முகத்தில ஒரு பிரகாசம்  நடையில ஒரு துள்ளல் என ஆளே மாறிப் போய்ட்டான். இங்க வாங்க "

"இருடி வாறன். "

"அங்க பாருங்க உங்க மகனோட  முகத்தில  தேங்கி இருக்கிற  சந்தோஷமும் விசில் சத்தம் கூட புதுசா இல்ல. "

"ஆமாடி நீ சொல்றது சரி தான் கொடைக்கானலில இருந்து வந்ததில இருந்து ஆளே மாறித்தான் போய்ட்டாண்டி   ம்.... அவனுக்கு ஒரு நல்லது நடந்தா சரி தான்" என முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டாள்.  மகனிடம் கேட்கலாம்  என்று  நைத்தவர் அது முறையில்லை அவனே சொல்லட்டும் என்று நினைத்து அந்த நினைப்பை கைவிட்டாள் அவன் அன்னை.

அபியின் போனிற்கு புது நம்பரில் இருந்து நான்கைந்து தடவை போன் வந்திருந்தது. 

"அட யாரிது புது நம்பரா இருக்கே ம்.....  ஒரு வேளை  சங்கரா இருக்குமோ? " என்று நினைத்தவள் அந்த நம்பருக்கு  திரும்ப  போன் செய்தான் ஆனால் போனை எடுத்தது நவீனன்.

"ஹலோ....  எனக்கு இந்த நம்பரில் இருந்து  கொஞ்ச நேரத்துக்கு முதல் போன் வந்திருந்தது. அது வந்து சங்கரா நீங்கள்? "

"இல்ல நான்  நவீன் பேசுறன்."

"ஓ என்ன நவீன் அண்ணா ? எனக்கு கால் பண்ணி இருக்கீங்க  அண்ணனோட போன் வேலை செய்யலையா? நான் வேணும் என்றால் கொடுக்கவா? "

"இ.... இல்ல அபி நான்.... அது அந்து நான் அவனோட பிர்கோதைக்கிரன் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கன்  பை."

"ம்.... பை "

புவிக்காவிற்கும் காலேஜில் பரீட்சை தொடங்கி விட்டிருந்தது. 

புவியின் தாய் இரவு போன் பண்ணி நாளை  மதியம் வந்து விடுவதாக கூறி அவளை கவனமாக இருக்கும் படி கூறி விட்டு போனை வைத்து விட்டாள்.

கல்லூரியில் பரீட்சை  எழுதி  முடித்து விட்டு  பாக்கிங்கில்  நின்று  அன்றைய பரீட்சை  பற்றி  பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது  அவர்கள்  அருகில் அஸ்வினின் கார்  வந்து  நின்றது.  

அதிலிருந்து இறங்கிய அஸ்வின்  கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டான்.  அஸ்வினை  அங்கே  கண்டதும் அடங்கியிருந்த  புவியின் இதயம்  வேகமாக துடித்தது.  அபியோ  அவனை  ஆச்சரியமாக பார்த்தாள்.

"அண்ணா இப்ப எதுக்கு  காலேஜுக்கு   வந்திருக்கான். "

அதற்குள் அவர்களிடம் வந்து சேர்ந்த அஸ்வின் "புவி  வந்து  காரிலே  உட்காரு அபி நீயும் ஏறு"

அபியும் புவியும் தமது காதுகளை நம்பாது ஒரே நேரத்தில் தேய்த்து விட்டுக் கொண்டனர்.  காரில் ஏறப் போன அஸ்வின்  அவர்கள் இன்னும் காரில்  ஏறாததைக் கண்டு   சீக்கிரம் ஏறுங்க  போற வழியில விஷயத்தைச்  சொல்றேன்."  என்று  கூறி  காரில் ஏறி  அமர்ந்தான்.

புவி  மறுப்பு தெரிவிக்க அபி அவளை கூட்டிக் கொண்டு  காரில்  ஏறினாள்.  அபியின்  மனதுக்குள் புவியின் மனதுக்குள்ளும்  குழப்பம் குடி கொண்டிருந்தது. அஸ்வின் எப்படி  புவியிடம்  விஷயத்தை சொல்வது என்று தெரியது  அமைதியாக காரை ஓட்டினான்.

அமைதியாக  இருந்த  புவி  கார்  தனது வீட்டை நோக்கி செல்லவும் "எதுக்கு இப்ப என்னை  கூட்டி வந்திருக்கீங்க காரில ஏறினதும் சொல்றன் என்று சொன்னீங்க பேசாமலே வர்றீங்க" என்றாள்.  அதற்குள் அவள் வீட்டுக்கு முன் கார் வந்து நின்றது. அங்கே அவளுக்காக  காத்திருந்தது  பேரதிர்ச்சி.

அடுத்த அத்தியாயத்துடன்  நிறைவு பெறும்

Go to episode # 13

Go to episode # 15


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.