(Reading time: 33 - 65 minutes)

15. என் இதய கீதம் - Parimala Kathir

"புவி இறங்கு! நீ உள்ள போ " என்றான் அஸ்வின்.

எதுவோ சரியில்லை என்று மட்டும் அவளுக்கு தெரிந்தது ஆனால் அது என்னவென்று தான் அவளது அறிவுக்கு புலப்படவில்லை. அஸ்வினை ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள் அவனோ கல்லுளி மங்கண் போல் அமைதியாகவே இருந்தான். ஆனால் அவன் கண்களில் சோகம் இழையோடி இருப்பதை அவள் அறியவில்லை. சரி இன்னும் இரண்டு எட்டில் வீடு வந்து விடப் போகிறது உள்ளே போனால் விஷயம் தெரிந்து விடப் போகிறது என்று எண்ணி காரிலிருந்து இறங்கினாள். அவள் பின்னோடு இறங்கப் போன அபியை கண்பார்வையால் தடுத்து நிறுத்தினான். 

புவி இறங்கி உள்ளே செல்ல திரும்புகையில் என்ன என்று கையாடையால் கேட்டாள் அபி. அஸ்வின் சொன்ன செய்தியில் ஆடிப் போனாள் அபி. விரைவாக இறங்க போனவளை,

En ithaya geetham

"அபி! அவ உண்மை தெரிஞ்சால் தாங்க மாட்டா நீ அவளை கொஞ்சம் பாத்துக்கோ நான் புவியோட பெரியப்பா பாமிலியை ஏற்போட்டில இருந்து கூட்டிட்டு வாறன்." என்று சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு விரைவாக சென்று விட்டான்.

"அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. புவியை உரிமையாக அவள் வீட்டுக்கே அழைத்து வருகின்றான், அவளது பெரியப்பாகுடும்பத்தை அழைத்து வருகிறேன் என்கிறான். அதுவும் இல்லாது இந்த செய்தி புவிக்கு தெரியும்  முன் எப்பிடி அண்ணனுக்கு" என குழம்பியவள். புவியின் கோபமான கதறல் சத்தத்தில் தனது ஆராட்சியை பின்னே தள்ளி வைத்து விட்டு புவியை தேடி விரைந்தாள்.

வீட்டினுள் நுழைந்த புவிக்கா அங்கே உள்ள தனது தந்தையின் தோழர்கள் மற்றும் அயலவர்களை கண்டு இங்கே இவர்கள் என்ன செய்கின்றனர். என்று எண்ணினாள்.

"வாம்மா தங்கம் உன்னை..... உன்னை..... தனியே....." வாக்கியத்தை முடிக்க முடியாது தந்தையின் ஆருயிர் தோழன்  கணேசன் வாயைப் பொத்திக் கொண்டு அழத்  தொடக்கி விட்டார்.

"எ... என்... என்னாச்சங்கிள்?  நீங்க எல்லாம்.... இங்க என்ன.... " என்றவள் அப்போது தான் அவர் மறைத்து நின்ற தந்தை தாயின் புகைப் படத்துக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி கொழுத்தி விழக்கு ஏற்றப் பட்டிருந்ததை பார்த்தாள்.

"அம்மா..... அப்...அப்பா... யாரிது? யாரிது?  அவங்களுக்கு இப்பிடி விளக்கு, மாலை, உதுபத்தி எல்லாம். கனகாக்கா  கன.. என்ன இது என்ன செய்து வச்சிருக்கீங்க  முதல்ல இதை எல்லாம் தூக்கி  எறியுங்க!" என்று ஆவேசமாக கத்தினாள். "

புவி அழைத்ததும் சமையல் கட்டிலிருந்து சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுத்த வண்ணம் புவியின் முன்னாள் வந்து நின்றவளுக்கு  புவியின் இந்த கோபமான கதறல் அதன் பின்னான அவளின் இந்த நடவடிக்கை இதனை எல்லாம் பார்த்து இன்னும் அவளின் அழுகை அதிகரித்தது.

வளுக்கு தானே தெரியும் இவர்கள் எவ்வளவு பாசமான குடும்பம் என்று. இவர்களின் இந்த சின்ன குருவிக் கூட்டில் யாராவது ஒருவர் வருந்தினால் கூட அது மற்ற இருவருக்கும் தாங்காது.  அவர்களை சமாதானப் படுத்தி சிரிக்க வைத்த பின் தான் அவர்கள் உறங்கவே செல்வார்கள். அப்பிடி இருக்க இன்று இந்த சின்ன பெண்ணை தவிக்க விட்டு விட்டு தாயும் தந்தையும் காலனின் ரூபத்திலே வந்த இன்னுமொரு விமானம் பாதை மாறியதால் லக்ஷ்மியும்  நாராயணனும் வந்த விமானத்தில் மோதி அந்த இரு விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் கூட மிஞ்சாது அந்தரத்திலே விமானம் வெடித்து சிதறியது.  அதில் பயணித்த அனைவரும் தங்களின் கனவுகளை  சுமந்த படியே  வானில் உடலற்ற ஆண்மாவாகா பவனி வருகின்றனர்.  

"என்ன யோசித்துக் கொண்டிருக்கீங்க நான் சொல்லிட்டே இருக்கன் சரி விடுங்க நானே எல்லாத்தையும் "என்றவள் தனது பெற்றோரின் படத்தில் மேல் உள்ள மாலையில் கை வைக்க போன போது 

சுற்றி இருந்தவர்கள் "இந்த பொண்ணு என்ன செய்யுது? இவளுக்கு இன்னும் தன்னுடைய அப்பா அம்மாவின் இழப்பை ஏற்றுக் கொள்ள முட்டிய வில்லை போல யாராவது என்ன நடந்ததென்று நேரடியா அவகிட்ட போய் சொல்லுங்கப்பா அவளது தவிப்பை பார்க்க முடியலை" என்று கூறினர். அதற்குள் அங்கு வந்த அபி அவளின் செய்கையை பார்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். பின் அவளின் அருகே வந்து 

"புவி என்ன பண்ணப் போறாய்" என்றாள் பரிதாபமாக கண்ணில் கண்ணீருடன்.

"ஏய் அபி பாத்தியா இவங்க பண்ணி வச்சிருக்கிற காரியத்தை இங்க..... இங்க.... பாரு அபி! அப்பா அம்மா உயிரோடு இருக்கும் போதே இவங்க.... " என்று மீண்டும் கைகளை உயர்த்தினாள் பெற்றோரின் படத்தை நோக்கி.

"புவிக்கா உனக்கு தான் இன்னும் புரியலம்மா அவ....அவங்க இப்... இப்போ உன் கூட இல்ல.... " என்றாள் கண்ணீருடன் தனது தோழியை அணைத்த படி.

"எ...என்ன சொல்றே அபி.... அப்பிடின்னா என்னோட ...அப் என்னோட அப்பா அம்மா எங்க?எங்க சொல்லு அபி அவங்க எங்க போய்ட்டாங்க என்னை விட்டிட்டு எங்க போய்ட்டாங்க" என்று அவளை உழுகினாள் புவி 

"அவ... அவங்க பிளைட் அக்..அக்சிடன்ட்டில இறந்திட்டாங்க புவி! நீ இதை ஏத்துக்கணும்."

அபி இந்த வார்த்தையயை சொன்னதும் தனது வாழ்க்கையின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்து விட்டது போன்ற அதிர்ச்சியில் அவள் மூர்ச்சையானாள். அவள் வீட்டினுள் வரும் போதே ஏதோ அசம்பாவிதம்  நிகழ்ந்துள்ளது என அவள் மூளை அவளுக்கு எடுத்துரைத்தது. பின்னர் தாய் தந்தையின் படத்துக்கு மாலை போடப்பட்டு விளக்கு ஏற்றி இருப்பதை பார்த்ததும் அவளது மூளை அந்த அசம்பாவிதம் என்ன என்று முடிவெடுத்து விட்டது ஆனால் மனம் தான் அதனை ஏற்க மறுத்தது. இப்போது இல்லை உன் மூளை சொன்னது சரி தான் உன் பெற்றோர் இறந்து விட்டனர் என தோழி சொன்னதும் அதன் தார்ப்பரியம் தாழாமல் மயங்கி விட்டாள்.

அவள் கண்களை திறந்து பார்க்கும் பொழுது யாழினியின் மடியில் கிடந்தாள். யானிகா அம்மா அப்... அப்.. என்றவள் மீண்டும் தனது நினைவை மறந்தாள்.  

அவளின் கால்மாட்டில் தான் அஸ்வின் அமர்ந்திருந்தான் அவளால் அதனை உணர்வே முடிய வில்லை.

மீண்டும்  கண்திறந்தவள்  யாழினியை கட்டிப் பிடித்து கதறத் துடங்கினாள். "அக்கா காலையில தானக்கா என்னோட சந்தோஷமா போன்  கதைத்து  விட்டு வைத்தார்களே அக்கா இப்போ இப்போ.... அந்த பேச்சு மட்டும் தானேக்கா எனக்கு மிச்சமாய் இருக்கு அவங்க உடலைக் கூட கடைசியாக பார்க்க எனக்கு குடுத்து வைக்கலயேக்கா? "

இனிமேல் நான் யாரிடம் செல்லம் கொஞ்சுவேன்! யாரை லக்ஷ் என்று கூப்பிட்டு செல்லமாக திட்டு வாங்குவேன்!  ஐயோ !!! என்னால முடியலையே யானிக்கா! இப்பிடி அவங்க பொண்ணை தனியா விட்டிட்டு போய்ட்டாங்களே என்னையும் கூப்பிட்டிட்டு போயிருக்கலாமேக்கா! அநாதையாய் என்னை தவிக்க விட்டிட்டு அவங்க போய் சேந்திட்டாங்களே!

சிறிது நேரம் புலம்பி அழுதவள் தனது தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் புலம்பத் தொடங்கினாள்.  "இல்ல இல்ல அவங்களா சாகல நான் தான் இந்த பாவி தான் அவங்களை கொன்னுட்டன். நான் தான் அபி அவங்க இரண்டு போரையும் கொன்னுட்டன். திரும்ப திரும்ப சொன்னாங்காடி உன்னை விட்டிட்டு நாங்க போகல உன்னோட எக்ஸாம் முடிஞ்சதும் எல்லோரும் சேர்ந்து போய்ட்டு வந்திடலாம் என்று நான் தான் அவங்களை கம்பல் பண்ணி அனுப்பி வச்சன் நான் நான் தான் கொன்னுட்டான்.  அம்மா இல்...இல்லம்மா நான் தனிய இருக்க மாட்டன்மா நீங்க கவலைப் படாதீங்க இதோ இதோ நானும் உங்க கூட வந்திடுறன்மா." என்று ஆவேசமாக எழுந்து சென்று அவளது படிக்கும் மேசை மீதிருந்த கத்திரிக்கோலை எடுத்து மணிக்கட்டு நரம்பை நோக்கி கொண்டு வந்த பொழுது அஸ்வின் வேகமாக அவளது செய்கையை தடுத்தான். அவளை இறுக அணைத்து கொண்டான்.

"போதும் புவி நீ அழுததெல்லாம் போதும் நீ இப்பிடி வருந்தினால் உன்னோட அம்மா அப்பாக்கு எவ்வளவு வருத்தமாய் இருக்கும் சொல்லு அழாதடா!"என்று அவளை சமாதானப் படுத்தினான்.

"அவனது அணைப்பில் இருந்து கொண்டே புலம்பினாள் இல்ல அஸ்வின் இரண்டு நாள் என்னை தனியா விட்டிட்டு போகவே தயங்கியவர்கள் இப்போ இப்போ என்னை ஒரேயடியாய் தனிமைப் படுத்தி விட்டு போய்ட்டாங்களே இனி மேல் எனக்குன்னு யார் இருக்காங்க நான் அனாதையாயிட்டனே"

"இல்லடா நீ அநாதை இல்ல உனக்காக நான் இருக்கே உன் ஆயுள் முழுதும் நான் இருப்பேன் என்னோட குடும்பம் இருக்கு அழாதே என்னோட தங்கம் இல்ல அழாதம்மா? வா கொஞ்ச நேரம் படுத்து தூங்கு எல்லாம் சரியாகிடும்." அவனது சொல்லுக்கிணங்கி மறு பேச்சின்றி அவனது கைகளை பற்றியவாறே படுத்து துயின்று போனாள்.  அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் கண்களில் கண்ணீர் கசிந்தது. எத்தனை குழந்தை தனமான பெண் இன்று இப்பிடி தவிக்கிறாளே என எண்ணிக் கொண்டான். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.