(Reading time: 33 - 65 minutes)

 

வள் ஒன்றும் விளங்காது அவனை அண்ணார்ந்து பார்த்தாள். அப்போது தான் அவன் அணிந்துள்ள பட்டு வேஷ்டி சட்டை கண்ணில் பட்டது. 

"என்னம்மா இப்ப கூட பூவாஸ்  உன் பக்கத்தில தான் இருக்கு எடுத்து என்மேல வீசிடு நீ தான் நான் பார்த்த இந்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டமாட்டியே? ம்.... சீக்கிரம்." என்று சங்கர் தோள் மேல் கை போட்ட வண்ணம் சொன்னாள். 

அபி ஓடிச் சென்று தனது அண்ணனை அணைத்துக் கொண்டாள்.

"தாங்க்ஸ் அண்ணா நீ எனக்கு மாப்பிளை யாரென்று சொல்லாமலே ஏமாத்திட்ட இல்ல." என்று செல்லக் கோபம் கொண்டாள்.

"உங்க அண்ணா உன்னை மட்டும் இல்லம்மா என்னையும் சேர்த்தே ஏமாத்திட்டார். என்ன அப்பிடி பாக்கிறாய். நான் ஒன்னும் வேலை விஷயமா வெளியூர் போகலை! அஸ்வின் தான் என்னை மீற் பண்ண வர சொல்லிட்டு ஆளை வச்சு கடத்திட்டாரு. கடத்திட்டு போய் சுமார் மூணு வாரம் ஒரு ரூமில போட்டு உன்னை நான் மறந்திடணும் என்று சொன்னார். அப்பிடி மறக்காட்டி   என்னை டாச்சர் பண்ண போறதா அக்ட் எல்லாம் கொடுத்தாங்க. அங்க என்ன முறைப்பு அவருக்கு நான் உன்னை உனக்காகவே விரும்புறனா அல்லது உன்னோட பணத்துக்காகவா  என்று தெளிவா தெரிஞ்சுக்கணும் அதுக்குதான் என் ஆபீஸ் பிரண்டையும் யூஸ் பண்ணி கிட்டாரு. இவர் தான் அப்பிடின்னா நவீனன் ரொம்ப டூ மச் தெரியுமா  அபி! ம்.....  உன்னை நான் விரும்பல என்று  உன்கிட்ட சொன்னாளாம் எனக்கு யூ எஸ் இல  சொந்தமா பிளாட் கார் நல்ல சம்பளத்தோட வேலை எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து தருவாராம்."

"அவன் அப்பிடியா சொன்னான்? நான் அவன் கிட்ட மதனோட வெட்டிங் முடிஞ்சு கொடைக்கானல்ல இருந்து வரும் வரை   நம்ம வீட்டு மாப்பிளையை பத்திரமா பாத்துக்கோ! அவ எக்ஸாம் முடிஞ்சதும் இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கன். ஒரு சப்ரைசா இருக்கட்டும் என்று சொல்லிட்டு போனா!!! வரட்டும் அவன் என்னோட மாப்பிள்ளையை ஒரு தரம் போட்டுப் பாத்திருக்கான். ஹிம்.... "

"ஆமா நீ மாறி அவன் மாறி இவரை பந்தாடி இருக்கீங்க இருக்கட்டும் உங்க இரண்டு போரையும் பாத்துக்கிறன். எனக்கும் ஒரு நாள் வரும்டா உங்க காலை வாருறத்துக்கு" என்று சொல்லி குறிப்பாக புவியை பார்த்தாள். ஆனால் அவளோ இவர்களின் பாசப் பிணைப்பில் உருகிப் போனாள். 

"என்னடி பகல் கனவா? யாரை நினச்சு?"

அவளையும் அறியாமல் அவள் கண்கள் தன்னவனிடம் சென்றது. அவனும் அவளையே தான் பார்த்திருந்தான் அவனது மையல் பார்வையில் தன் கண் மடலை தாழ்த்திக் கொண்டாள்.  அபி சர்ஜி அஸ்வின் சங்கர் அனைவரும் ஓசையின்றி சிரித்தனர்.

அபியின் ஆசைப்படி அவன் விரும்பிய சங்கருடன் அன்று நிச்சயதார்த்தம் மிக சிறப்பாக பெரியோர் முன்னிலையில் நடந்தேறியது. அபியின் நிச்சயத்தின் பின் புவி வீட்டில் அவளின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக குறையத்  தொடங்கியது. காயாவும் அவள் வருகையை குறைத்துக் கொண்டாள்.

ரு நாள் மேகலா தனது  மகனிடம் வந்தாள். 

"என்னம்மா.... என்ன விஷயம் எதோ கேக்க வந்திட்டு தயங்கி நிக்கிறீங்க சொல்லுங்க என்ன கேட்கணும் என்கிட்ட உங்களுக்கு."

"இல்லடா அபிக்கும் நிச்சயம் முடிஞ்சு போச்சு அடுத்து உன்னோட கலியாணம் பத்தி பேசணும் இல்ல நீயும் பிடி கொடுக்காமல் இருக்கே. அன்னிக்கு அபி வந்து நீ நான் ஆசப் பட்ட மாதிரியே என்னோட மருமகளை கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு நிரந்தரமாய் கூட்டி வந்திடுவாய் என்று சொன்னா! அது .... வந்து.... அது நிஜமாடா?"

தாயின் நேரடி கேள்வியில் சற்று திணறினான் மகன். எப்படி இருந்தாலும் இனிமேல் புவி பற்றி தான் தான் சொல்லியாகனும் என்று நினைத்து விட்டு.

"ஆமாம்மா அவ சொன்னது உண்மை தான் நம்ம குடும்பத்துக்கும் அவ குடும்பத்துக்கும் இந்த திருமணத்தில் சந்தோசம் தான் ஆனா.... ஆனா அவளோட சம்மதத்தை நான் நேராக் கேட்டு தெரிஞ்சுக்கணும் அதுவரைக்கும கொஞ்சம் காத்திருங்கம்மா?"

"போ.... போதும்பா கண்ணா போதும் இது போதும் எனக்கு இனி நீயாச்சு அவளாச்சு அவளுக்கும் உன்மேல ஆசை தாண்டா எனக்கு தெரியும். சரி நீ விரும்புற மாதிரி  நீயே அவ கிட்ட பேசிட்டு எனக்கொரு முடிவை சீக்கிரமா சொல்லிடுங்கடா" என்று ஆனந்த கண்ணீர் வடிய மகனிடம் பேசி விட்டு இறைவனை நாடி அவன் வாசம் செய்யும்  பூஜை அறைக்கு சென்றார்.

சற்று நேரத்தில்  அஸ்வின் கிளம்பிச் சென்று விட புவி அபியை தேடி அவள் வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவளோ சங்கருடன் வெளியே சென்றிருந்தாள். புவி மேகலையிடம் சற்று பேசி விட்டு  கிளம்ப தயாரான போது சர்ஜி அங்கு வந்து சேர்ந்தாள்.

"ஹேய் புவி நீ எப்ப வந்தாய் ஆமா அத்தை எங்க.?"

நான் இப்ப தான் வந்தன் அபி இல்லையாம் அது தான் கிளம்புறன். உங்க அத்தை உன் முன்னாடி தானே இருக்காங்க அப்புறம் அத்தை எங்கை என்று என்கிட்ட கேட்கிறீங்க?"

"அவளுக்கு இப்பவே என்னை தெரியல என்று சொல்லுறாள் இன்னும் கொஞ்ச நாளில நீ கோயில் குளம் என்று எங்காவது போ கிழவி என்பாள்."என்றார் சோகமாக.

"என்ன அத்தை நீங்க நான் உங்களை அப்பிடி சொல்லுவனா இல்ல அதுக்கு உங்க பொண்ணும் பையனும் தான் விட்டுடுவாங்களா என்னை கொன்னுட மாட்டாங்க? ஆமா எதுக்கு என்ன சீக்கிரம் வரச் சொன்னீங்க எதோ ஹப்பி நியூஸ் என்று பில்டப் எல்லாம். சொல்லுங்க என்ன விஷயம்."

"ம்..... இப்பவே உன் காலடியில விழுந்து கிடக்கிறவன் கலியாணம் முடிஞ்சால் நீ  சொல்லி முடிக்க முதல் அவன் அதை நிறைவேற்றி முடிச்சிடுவான்." என்றார் குறும்பாக. அதுவரை இருவரின் செல்ல சண்டையை பார்த்து ரசித்த புவி மேகலையின் இறுதி வாக்கியத்தில் அவள் மூச்சே சற்று நேரம் நின்று விட்டது போல் உணர்ந்தாள்.  இந்த விஷயம் அவளுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் அதனை அஸ்வினோ சர்ஜியோ ஏன் அபி கூட அஸ்வினுக்கு வீட்டிலேயே ஒருத்தி இருக்காள் என்றாளே தவிர இப்பிடி கலியாணத்துக்கு அஸ்வின் சம்மதிச்சது மட்டுமில்லாமல் அவளை காதலிப்பதாக கூட அன்று அவள் சொல்ல வில்லையே. . அது இப்போது அபட்டமாக உண்மையாகி  போனதே  என்று நினைக்கும் போது  அவள் கண்களில் வைரம் கோர்த்தது அதனை யாரும் அறியாது மறைக்க அரும் பாடு பட்டாள்.

"என்ன அத்தை சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல....."

"அடி அசடே உன்னோட மாமன் உன்னை தான் உயிராய் நேசிக்கிறான்.  நான் உன்கிட்ட சொல்லிட்டன் என்று காட்டிக்காதடி அவன் உன்கிட்டே நேரடியா உன்னோட சம்மதத்தை கேட்டு தெரிஞ்சிக்கணுமாம். எப்பிடியும் இரண்டொரு நாளில   உன்னை மீற் பண்ணி இதப் பத்தி பேசுவான். ஆல் தி பெஸ்ட்  என் மருமகளே. சீக்கிரமே என் வீட்டுக்கு வந்திடடி." என்று ஆசையாக  நெட்டி முறித்தார். 

சர்ஜிகாவின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. அவள் புவியை திரும்பிப் பார்த்தாள்.  அவளின் அவஸ்தை சர்ஜிக்கு நன்கு புரிந்தது. "பாவம் அத்தை அஸ்வின் சொன்னதை தப்பர்த்தம் கொண்டு என்னையும் புவியையும் குழபுகிறார்கள். பாவம் இவள் எத்தனை அவஸ்தைப் படிக்கிறாள். சரி மாமா தான் எப்பிடியும்  தனது  காதலை இவளிடம் சொல்லப் போகிறாரே பிறகென்ன? ஆனால் என்காதல்!  அதை அத்தையிடம் இனியும் மறைக்க கூடாது  பாவம் இவர் வீணாக மனப் பால் குடிக்கின்றார்." என மனதுள் நினைத்துக் கொண்டாள்.

தற்கு மேல் புவியால் அங்கு அமர முடிய வில்லை அங்கிருந்து சென்று விட்டாள். வழி நெடுங்கிலும் தனது  முட்டாள் தனத்தை எண்ணி மருகினாள்.  அதற்குள் கனகா  மூன்றாவது முறையாக அவளுக்கு போன் செய்திருந்தாள்.

"ஹலோ ... சொல்லுங்க  கனகாக்கா  நான் இன்னும் டென் மினிற்ல  வீட்டிலை இருப்பன் ஏதாவது அவசரமா திரும்ப திரும்ப  போன் பண்ணி இருக்கீங்க சைலண்டில விட்டத்தில கேக்கல. 

"என்னது? கோட்ஸ்ல இருந்தா எதுக்கு? சரி சரி நான் வந்திட்டிருக்கன்." என்று சொல்லி போனை துண்டித்தாள்.

"ஹலோ சார் நான் புவிக்கா நாராயணன் என்ன விஷயமா நீங்க வந்திருக்கீங்க என்று நான் தெரிஞ்சுக்கலாமா?"

அவள் அவர்களிடம் விவரத்தை அறிந்த போது மிகவும் நொருங்கிப் போனாள். அவளது தந்தை தொழிலுக்கு வேண்டி தனது அசையும் அசையாச் சொத்தின் மேல் கடன் வாங்கியுள்ளார். குறிப்பிட்ட தேதிக்குள் வட்டியும் முதலும் கட்ட வில்லையாயின் அந்த டோக்யூமேன்ரின் பேரில் இவர்களின் சொத்துக்களை ஏலம் விட்டு பாங் தமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும் என்ற பெயரில் கடன் பட்டுள்ளார். அவர்கள் எத்தனையோ கடிதங்கள் அனுப்பியும் இவர்கள் தரப்பில் பதில் வராததனால் தான் இன்று இந்த ஏலம் என்றார். வக்கீல்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.