(Reading time: 33 - 65 minutes)

 

வளுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை உடனே தமது வக்கீலுக்கு போன் செய்தாள். ஆனால் அவரோ வேலை நிமித்தம் தான் டெல்லியில் இருப்பதாக கூறினார் தனது ஜூனியர் மூலம் முயல்கிறேன் நீயும் ஏதாவது முயற்சித்துப் பார் என்றார்.

அடுத்து யாரிடம் என்று யோசித்தாள். தனது தந்தையின் உயிர் தோழனான கணேசனுக்கு தொடர்பு கொண்டாள்.  அன்று பெற்றோரின் இருதிச் சடங்கின் போது "அம்மாடி உனக்கு யாரும் இல்ல என்று நினைக்காதம்மா நான் இருக்கன்.  நாராயணன் எனக்கு தொழிலில எவளவோ உதவி இருக்கான்  அதுக்கு என்ன கைம்மாறு செய்ய போறனோ தெரியல.   உனக்கு என்ன நேரத்தில என்ன உதவி வேணுமோ தயங்காம கேளம்மா.  உங்கப்பா உயிரோடு இருந்தப்ப நம்ம வினையை உனக்கு கட்டி வைக்கலாமா என்று கேட்டேன் அவ படிப்பு முடிஞ்சதும் இத பத்தி பேசிக்கலாம் 

என்றான் ஆனால் அதுக்குள்ளே... எல்லாம் போச்சு " என்றார் கண்ணீருடன்.

தொடர்பு எடுக்கப்பட்டது  பால முறை முயற்சியின் பின் ஆனால் அவரோ அவள் பேசுவது எதையும் காது கொடுத்து கேட்காது இன்று வினைக்கு நிச்சயதார்த்தம் நீ ஒரு வாரம் கழித்து போன் பண்ணு எதுவானாலும் அப்புறமா பேசிக்கலாம் என்று கூறி தொடர்பை துண்டித்தார்.

"ச்சா..... என்ன மனிதர்கள் இவர்கள் கடைசியில் பணம் தானா எல்லாம். பணம் தான் மனிதர்களை அழ்கின்றதா? அன்று அவரின் வார்த்தைகள் எல்லாம் எங்கள் சொத்தின் மேல் உள்ள பிரியத்தில் தானா? ஹிம் அது தான் சொத்தே இல்லாமல் கட்டிய துணியோடு நாடு வீதியில் நிற்கப் போகிறாளே பிறகெதற்கு இவளின் தொடர்பு என்று நினைத்தார்கள் போலும்.  சில நேரங்களில் சில மனிதர்கள். அது தான் மகனின் அவசர நிச்சயதார்த்தம்.

னது கண்முன்னே நடந்த ஏலத்தை தடுக்கும் சக்தியற்று ஒரு கையாலாகாத தனத்தோடு வீட்டு வராண்டாவிலேயே கால்களை மடக்கி கைகளுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

"ஏம்மா எனக்கு இத்தனை துன்பம். நீங்கள் எனை விட்டு போன பின்பு எல்லாமே என் கை விட்டு போகிறதே அம்மா நீங்கள் ஆசையாக கட்டிய இந்த வீடு கூட நமக்கு இப்போ இலையே அப்பா. ஏன் தொடர்ந்து துன்பமே என்னை சூழ்ந்து இருக்கிறது. இனி என் எதிர் காலம் என்னப்பா? என் எதிர் காலம் என்னம்மா?" என இறந்து போன தாய் தந்தையுடன் மௌனமாக கண்ணீரோடு உரையாடினாள்.

தனது தலையை யாரோ வருடுவதை உணர்ந்து தலையை நிமித்திப் பார்த்தாள் அவள் கண்முன் அஸ்வின் நின்றிருந்தான். அனைத்தையும் மறந்து அஸ்வின் என்ற கேவலுடன் அவனின் மார்பில் அடைக்கலம் புகுந்தாள்.ஒரு சில நிமிடம் திகைத்து நின்றான் பின் அவனது வலிய கரங்களும் அவளை தழுவிக் கொண்டது.

தன்னவனின் அணைப்பில் தன்னை மறந்து தனது சோகத்தை எல்லாம் அவனிடம் கொட்டினாள். 

அஸ்வின் என் அப்பா கஷ்டப்பட்டு சிறுகச்சிறுக முன்னேறிய அவரது தொழிற்சாலை அவரின் கனவு இல்லம் எல்லாம் இன்று ஏலத்தில் போய்விட்டது. அவர்களின் பாசமான மகள் இன்று நடு வீதியில் அநாதையாக என்று கூறும் பொழுது அவளின் உடல் வெகுவாக நடுங்கியது.

அவளை மேலும் இறுக்கிக் கொண்டான் அப்போது தான் தன்னிலை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலகினாள். அதனை கண்டும் காணாதது போல் இருந்து விட்டன்.

"இதோ பார் புவி உன் தந்தையின் உழைப்பு எங்கும் செல்ல வில்லை அது உன்னிடம் தான் மீண்டும் வந்துள்ளது. என்ன அப்பிடி பாக்கிறாய். என்றான் மீண்டும் அதே காந்த பார்வையுடன். அவள் சற்று குழம்பித்தான் போனாள்.

அபியின் நிச்சயத்தின் பின் அவளதும் காயவினதும் வருகை மெல்ல குறைந்து கொண்ட பொது அஸ்வின் அவளை தனிமைப் படுத்தாது அவளை எங்காவது வெளியே அழைத்துச் செல்வான். அல்லது வீட்டிலேயே யது புவி அஸ்வின் மூவரும் ஏதாவது கேம் விளையாடுவார்கள். இதனால் முன்பே அவர்களிடையே ஏற்பட்ட நட்பு இன்னும் அதிகமானது காதலும் கூட ஆனால் தமது காதலை நட்பின் போர்வைக்குள் போர்த்திக் கொண்டனர். இருவரும். 

அஸ்வினோ இந்நிலையில் தனது காதலை வெளிப் படுத்த கூடாது என அமைதிகாத்தான். புவியோ சர்ஜிகா அஸ்வின் காதல் விவரம் முதலே தெரிந்ததால்(அவளின் கற்பனையக் காதல் அஸ்+சர்ஜி) தன காதலை மறைத்து நட்பின் போர்வையை பலமாக போர்த்தி கொண்டாள். இருவரும் தமது காதலை ஒவ்வொரு காரணத்தால் மறைத்து வைத்து நட்பின் போர்வையை போர்த்தி தங்களின் காதலை பாது காத்தனர். 

ஆனால் இன்று அஸ்வினின் காதல் பார்வையால் திகைப்படைந்து போனாள். தனது செய்கையாலும் தான் அவள் வியந்து போனாள்.  இத்தனை நாட்களாய் பொத்தி வைத்த தனது காதல் செடி இன்று  தனக்கொரு துன்பம், ஆறுதல் தேட ஒரு தோள் கிடைத்ததும் தனது வேதனையை எல்லாம் அவனிடம் அவன் அரவணைப்பில் சொல்லிய விதத்தில் வெட்கிப் போனாள். தனது இந்த செய்கையால் தன்னை கேவலமாக நினைப்பானோ என்று எண்ணி அவள் தவிக்கையில்  

"உனக்கு இப்ப எதப் பத்தி குழப்பம்" என்றான் அஸ்வின்.

"ஏலம் விடப்பட்ட எனது தந்தையின் சொத்துக்கள் எப்படி என் சொத்துக்களாக மறிப் போயின?" என்றாள் குழப்பமாக.

"ம்.........ஏலம் விடப்பட்ட உங்கள் சொத்துக்களை வாங்கியிருப்பது நான் தான்" 

"எ..... என்ன எனக்கு இன்னமும் நீங்கள் என்ன சொல்றீங்கள் என்றே விளங்கல அஸ்வின். உங்களது சொத்து எனக்கப்பிடி....." என்றாள் யோசனையாக. 

"ம்ஹிம்.... என் கண்மணிக்கு இன்னமுமா புரியல. அவளின் கணல் பார்வையை கவனியாதவன் போல் தொடர்ந்து பேசினான் நீ என் மனைவியான பின் என்தும் உன்னதும் வெவ்வேறில்லையே?" என்றான் மையல் பார்வையுடன். 

"சீ மூடு வாயை! என்ன? தனியா  இருந்தா யாரும் எது வேணாலும் கதைப்பீங்களோ? இது நாள்வரை உங்களை ஒரு நல்ல தோழனா நினைத்து தான் பழகி இருக்கேன் ஆனால் நீங்க இப்பிடி நடந்துப்பீங்க என்று நான் நினைக்கல அஸ்வின்" என்றாள் கோபமாகவும் ஆற்றாமையோடும். அவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. அவளுக்கு அவன் மேல் தீராத கோபம் அங்கே தாயிடம் சர்ஜி மேல்  காதல் என்று சொல்லி விட்டு இங்கே தன்னிடம் வந்து நீ என் மனைவி ஆகிவிடு என்றெல்லாம் பேசுகிறானே என்ற வலி தந்த கோபம் அது. 

அதற்குள் அவள் கையை தரதரவென இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

"சீ.... விடு என்னை என்ன நினைத்துக் கொண்டுள்ளாய். உன்னை போல் ஈன புத்தி எனக்கில்லை."

அவளவு தான் அவன் கோவம் தலைக் கேறியது." யாரைப் பார்த்து ஈன புத்தி உள்ளவன் என்கிறாய் என்றவன் அவளைப் பிடித்து தள்ளிய தள்ளலில் சோபாவில் சென்று விழுந்தாள். அவள் எழ முயன்ற பொழுது தன் இரு கைகளையும் சோவா விழிம்பில் பிடித்து அவளை சிறைப் படுத்தினான். 

அவள் கண்களை பார்வையால் துளைத்தான். "என்ன சொன்னாய்! ம்..... நீ என்னை லவ் பண்ணல? உண்மையாவே ப்ரண்டா நினைத்து தான் என்கூட பழகினியா? சொல்லு புவி வாய் திறந்து பேசு."

"ஆமா நான் உங்களை விரும்பல ஒரு நல்ல ப்ரண்டா தான் நினைத்து பழகினேன்." அவள் கண்களில் கண்ணீர் உர்றேடுத்தது. அவனை விரும்பியது நிஜம் தானே அதனால் தான் என்னை கேவலப் படுத்த நினைக்கிறான். என்றது அவளின் உள்  மனம்.

"பொய் நீ சொல்றது பொய். அதனால் தான் உன்னால என் கண்ணை நேரா பார்த்து பதில் சொல்ல முடியல. என்னைப் பாரு புவி ஈய இங்க பாருடி! என்று அவள் முக வாயை அழுந்திப் பிடித்து நிமித்தினான். என்னை பிடிக்காமலா உன்னோட வீட்டுக்குள்ள என்னை அனுமதிச்சே என்னை பிடிக்காமலா என்கூட வெளியே வந்தாய்?

"அது நீங்க என் மதன் அண்ணனோட பிரண்ட் அது மட்டுமல்ல அபியோட அண்ணா அதனால தான்."

"அந்த இரண்டு தகுதி மட்டும் போதுமா நீ என்கூட வெளுயே தனிய வரவும் உன் வீட்டுக்குள் என்னை அனுமதிக்கவும். உனக்கு நம்பிக்கை இல்ல என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல புவி நான் உன் கூட இருந்தா நீ பாதுகாப்பாய் இருப்பாய் என்று உணரல"

"உணர்ந்தேனே நீ தான் என் அரண் என்று உணர்ந்தேனே ஆனால் நீ சர்ஜிக்கும் இல்ல பாது காப்பாய் இருக்க நினைக்கிறாய்." என்றது அவள் மனம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.