(Reading time: 33 - 65 minutes)

 

மையன் கண்களில் கண்ணீரை கண்டதும் 'ஸ் என்னண்ணா இது அவளை சமாதானம் பண்ணிட்டு நீ அழுகிறாய். அழதடா" 

"தங்கையின் கைகளை பற்றியவாறு "இல்ல அபி அவங்களோட  இரண்டு நாள் இருந்த எனக்கே அவங்க பிரிவை தாங்க முடியல இவ எப்பிடி இனி வாழ்க்கை பூரா இந்த வலியை தாங்குவா?"

"அது தான் நீ இருக்கியே நம்ம குடும்பம் இருக்கு அவ படிப்பு முடிஞ்சதும் சீககிரமா என்னோட அண்ணியாக்கிடு அதுக்கப்புறம் அவளை நான் கூடவே இருந்து பாத்துக்கிறன்." என்றாள் மென்மையாக! 

அஸ்வின் அவளை உற்று பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவளாய் "எனக்கும் தெரியும் நம்ம அம்மாக்கும் தெரியும் " என்றாள் அதே மென் குரலில். 

புவிக்காவின் பெற்றோரின் உடல்கள் கிடைக்காததால் எட்டாம் நாள் காரியத்தின் போது சாம்பலை நீரில் கரைக்க முடியாமல் போய்விட தானே நீரில் வெறுமன முங்கி எழுந்து அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்தித்தாள். எட்டு முடிந்ததும். அவளது பெரியப்பா குடும்பம் கொடைக்கானல் செல்ல தயாரானது. மதன் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தேன் நிலவுக்கு லண்டன் சென்றதால் விபரம் அறிந்தவுடன் அவனால் உடனே கிளம்பி வர முடியவில்லை. அதனால் தனது தங்கையுடன் தொலைபேசியில் தினமும் கதைத்து அவள் மன பாரத்தை சற்று குறைத்து வந்தான்.

யாழினி மட்டும் புவியுடன் தங்கிவிட அனைவரும் கொடைக்கானலுக்கு கிளம்பிச் சென்றனர்.  யாழினி இங்கு தங்கையுடன் தங்கியது கூட அஸ்வினின் ஏற்பாது என்று புவிக்கு சற்றும் தெரியாது. அது மட்டும் அல்ல அன்று அவன் அணைப்பில் தான் சமாதானமாகியதோ அல்லது அவன் தனது காதலை சொல்லாமல் சொன்னதோ அவளுக்கு தெரியாது. அன்று அவள் நினைவில் இருந்ததெல்லாம் இனி அவளது பாசமான பெற்றோர் இனி அவள் வாழ்வில் இல்லை என்பது மட்டும் தான்.

இன்றும் அனைவரும் செல்ல தயாரான போது அவள் கண்களில் தெரிந்த ஏக்கம் அவனை பாதித்தது. அதனால் யாழினியிடம் சென்று இன்னும் கொஞ்ச நாள் புவியுடன் தாங்கும் படி கேட்டுக் கொண்டான். அதற்கு அவள் 

"அஸ்வின் அவளை உனக்கு சித்தி மாப்பிளை பேச முதலே என்னோட தங்கச்சி ஆகிட்டா திவாவும் அப்பாவும் தான் போறாங்க நான் போகல அவங்க டிரெஸ்ஸை தான் பாக் பண்ணிட்டு இருந்தன். நீ நின்மதியா இரு நான் உன்னோட வருங்கால மனைவியை பத்திரமா பாத்துக்குரன் அப்புறம் யது பாத்துப்பா சரியா?" என்றாள் கிண்டலாக.

காதை சொரிந்து கொண்டே அசடு வழிந்தான். "ஆமா யது இங்க வந்து என்ன செய்ய போறா அவளோட காலேஜ்?"

கொடைக்கானலிலும் பார்க்க இங்க இருக்கிற காலேஜ்ல  நல்லா  லெக்ஷர் பண்றாங்களாம் அத விட புவியும் தனியாத்தானே இருக்கா! அப்பாவுக்கும் ஏலாது அதனால அவருக்கு அங்கத்தையான் கிளைமக்ஸ் தான் ஒத்து வரும் . நானும் இங்க அவரை விட்டிட்டு எத்தனை நாள் தங்க முடியும். அது தான் அவ சொன்னதும் சரி என்று திவாவும் நானும் ஒத்துக்கிட்டோம் அத்தையும் சரிஎன்று சொல்லிட்டாங்க? நீ கவலையை விடு"

ப்படியே நாட்கள் சென்றன புவி எப்போ பார்த்தாலும் தனது போனில் அவர்களிருவரையும் அன்று சந்தோசமாக எடுத்த   படத்தையே வெறித்தபடி அமர்ந்திருப்பாள். அதனால் தினமும் காயாவும் அபியும் வந்து அவளோடு கலகலத்துவிட்டு அவளை கொஞ்சம் சிரிக்க வைத்து உண்ண வைத்து விட்டு தான் செல்வார்கள்.  அஸ்வின் அவளையும் அபியையும் யாழினியையும்  எங்காவது  வெளியே அழைத்து சென்று அவளை மீண்டும் பழைய புவிக்காவாக்க முயன்றனர் அதில் முழுவதும் வெற்றி பெறா விட்டாலும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டது.

இதற்கிடையில் ஒரு நாள் அஸ்வின் புவிக்காவிற்கு கால் செய்து இன்று அபிக்கு நிச்சயதார்த்தம் நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வந்திட்டு போக முடியுமா அவளுக்கு ஹெல்ப் பண்ண என்று சொல்லி அவளது பதிலுக்கு காத்திருக்காது லைனை கட் செய்தான். அவளுள் கேள்விகள் பிறந்தன. 

"அபி இதப் பத்தி எங்கிட்ட சொல்லவே இல்லையே! என்ன திடீரென்று? அப்போ சங்கர் வந்திட்டாரா? சரி அவளுக்கு போன் செய்து விஸ் பண்ணுவம்" என்று போனை எடுத்தவள்.   ஏதோ யோசித்தவளாய் எழுந்து சென்று சல்வார் அணிந்து கொண்டு வந்தாள்.

"கனகாக்கா..... கன..." என கையில் மணிக்கூடை அணிந்து கொண்டு கூப்பிட்டாள்.

"ஆங்..... என்னம்மா? என்ன பாப்பா எங்காவது விசேசத்துக்கு போறியளா?"

"ஆமா அக்கா இன்னிக்கு அபியோட நிச்சயதாத்தம் அதுக்கு தான் கிளம்பிட்டிருக்கன்.  யது வெளியில யாரையோ மீற் பண்ண போயிருக்கா அவ வந்ததும் சொல்லிடுங்க நான் ஒரு ரூ அவர்ல  வந்திடுவன்." என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

"ஹிம் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா பழைய மாதிரி மாறிட்டிருக்கா கடவுளே!  அந்த பையனோட சீக்கிரமா இந்த பொண்ணுக்கு ஒரு கலியாணம் நடந்திடனும்  தெய்வமே!" என மனசார புவிக்காக பிரார்த்தித்தாள்.

"ஹேய்.... புவி வாவ்..... நைஸ் கலர். உனக்கு ரொம்ப அழகா இருக்கு. ஆமா எங்க கிளம்பிட்டாய்."

"அபிக்கு நிச்சயதார்த்தம் அங்க தான் போறன். நீயும் வாறியா?"

"இல்ல எனக்கு அவங்கள பெரிசா பழக்கம் இல்ல நீ போய்ட்டு வா?"

"ம்..... சரி."

புவி அபி வீட்டை அடைந்த போது அவள் யாருடனோ கத்தி கொண்டிருந்தாள்.

"நான் தான் உனக்கு முதலே சொல்லி இருந்தனே? எனக்கு சங்கரை பிடிச்சிருக்கு எங்களுக்கு கலியாணம் செய்து வை என்று. அப்ப எதோ நல்ல அண்ணன் மாதிரி எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு இப்ப வந்து உனக்கு வேற ஒருத்தனோட நிச்சயதார்த்தம் என்று சொல்லிட்டு நிக்கிறாய். என்னால நீ பாக்கிற மாப்பிள்ளைக் கெல்லாம்  கழுத்தை நீட்ட முடியாது. இதுக்கு மேல இங்க நிண்டே இந்த இந்த... பூ வாசாலையே உன் மண்டையை உடைச்சிடுவன்.

அவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து அகன்று விட்டான். மாடியில் இருந்து கீழே வந்தவன். வாசலில் புவியைக் கண்டான்.

"வா வா வா பரவாயில்லையே உடனே வந்திட்டாய்..... உன் தோழி மேல அவளவு பிரியம்..."

"அவ மேல நான் கோபத்தில தான் வந்தனான். பட் அவ கத்துறதைப் பார்த்தால்.... நீங்க வேற யாரோ மாப்பிள்ளையையா பேசி இருக்கீங்க?" என சற்றே கவலையாகவும் கோவமாகவும் கேட்டாள்.

"ஹா...ஹா.... ஹா..... நான் உன்னோட தோழியின்  அண்ணன். அவளுக்கு எப்பவும் நல்லது தான் செய்வேன். போ போய் அவளை சீக்கிரம் ரெடி பண்ணு அவங்க இன்னும் பத்து நிமிடத்தில வந்திடுவாங்க."

"ஆனாலும் நீங்க செய்றது சரியில்லை அஸ்வின். சங்கர் பணக்காரர் இல்ல என்றதாலயா அவரை விட்டிட்டு அவசர அவசரமா வேற ஒருத்தருக்கு  நிச்சயம் பண்ண பாக்கிறீங்க?"

"பேச வேண்டியதெல்லாம் பேசிட்டியா இப்ப மேல போ எனக்கு வேலை இருக்கு."

அவனை முறைத்து பார்த்து விட்டு அபியிடம் சென்றாள். அவனோ குறும்பு ததும்பும் புன்னகையை அவளை நோக்கி வீசிக் கொண்டிருந்தான். 

புவியைக் கண்டதும் அவளிடம் தஞ்சம் புகுந்து அவளிடம் நடந்தவற்றை எல்லாம் கொட்டித்தீர்த்தாள். சர்ஜிகாவோ புவியோ அவளை தேற்றும் வழி தெரியாது அவளது தலையை வருடிக் கொடுத்தனர். புவிக்கோ அஸ்வின் மீது பயங்கரக் கோபம்.  சிறிது நேரத்தில் அபியைத்தேடி சங்கர் அவள் அறைக்கே வந்து விட்டான்.

"அபி....." 

சங்கரின் குரல் கேட்டு விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள். சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல் அவள் முகமும் மலர்ந்தது.

"சங்கர்..... சங்கர் இத்தனை நாளா ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணல...  சரி நீ வா! "

"ஹே.... எங்க வரச்  சொல்லுறாய்.  எங்க வேணாலும் உன்கூட வர நான் ரெடி தாம்மா. ஆனால் உங்க வீட்டிலயும்  எங்க வீட்டிலயும் நம்ம நிச்சயதார்த்தம் முடியாமல் இங்க இருந்து போக விட மாட்டாங்களே என்ன செய்யலாம் அபி?" என குறும்பாக கேட்டான். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.