(Reading time: 12 - 23 minutes)

 

மெதுவாக மாடி படிகளில் ஏறிக் கொண்டே ஸ்வேதாவிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தான். அவள் ரூமை அடைந்தவுடன் ஏதோ முடிவிற்கு வந்தவனாய் மெதுவாக கதவை இருமுறை தட்டி விட்டு காத்திருந்தான்.

"ப்ளீஸ் கம் இன்" என்ற அவள் குரல் மட்டும் மலிதாக கேட்க.

கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.சின்ன வயதில் அவள் ரூமிற்கு சென்றது அவள் பெரியவளாகி அதுவும் அமெரிக்கா வந்தபின் இருவருக்கும் இடையில் அந்த பிள்ளை பருவ நேசம் மறைந்திருந்தது. ( என்று ஆதி நினைத்தான்).

மெதுவாக ஆனால் கூர்மையாக அவள் ரூமை அளவெடுத்தன அவன்  கண்கள். நேர்த்தியாக பளிச்சென்று இருந்தது அவள் அறை. "பெண்கள் என்றாலே இப்படி தானே ஆரு கூட இப்படி தான் ஆனால் என் ரூம்" என்று ஒப்பிட்டவன் தன்னையும் அறியாமல் சிரித்தான்.

அடுத்த கணமே " ரூமை கிளீனா வெச்சு என்ன பயன் மனசு கிளீனா இருக்கறது இல்லையே" என்ற யோசனையில் சிரிப்பு மறைந்தது.

அறையை  சுற்றி பார்த்தான். சுவர்களில் கடிகாரம், பேமலி போட்டோ தவிர ஏதும் இல்லை. ஆச்சர்யம் தான் இங்கு வந்து 7 வருடங்கள் ஆனாலும் இந்த நாடு பெண்கள் மாதிரி கண்ட கண்ட நடிகர்கள் படத்தையும் ஒட்டி அசிங்கம் பண்ணாமல் இருக்கிறாளே?! அறையின் ஒரு பகுதியை பூஜை அறையாக ஒதுக்கி இருந்தாள். முருகனும், பாபாவும் அங்கு குடி புகுந்திருந்தனர்.

அந்த அறையை ஒட்டி இன்னொரு அறை இருந்தது அதில் ஒரு மூலையில் அவள் கப்போர்ட், அதனை ஒட்டி  டிரெஸ்ஸிங் டேபிள், அறையின் நடுவில் அழகிய பெரிய மெத்தை என மிக நேர்த்தியாக இருந்தது.

அவளை தேட திரும்பியவன் சட்டென்று மீண்டும் அந்த உள் அறையை பார்த்தான். சுவரில் அழகிய ஓவியங்கள் பிரேம் செய்து மாடப் பட்டிருந்தது.

“ இதை ரசிக்கும் அளவு பொறுமை உள்ள பெண்ணா?! ரசனையும் குணங்களும் ஒன்றாகுமா என்ன? அவள் கூட தான் நடனம், கவிதை என மிகவும் ரசனை உள்ளவள் அவள் ஏமாற்றவில்லை? தன்னை மட்டுமா? தன் நண்பனையும் தானே?” மீண்டும் எழுந்த கோபத்தை உள்ளடக்கி ஸ்வேதாவை தேடினான்.  பால்கனி கதவை திறந்து வைத்து அதன் அருகில் தன் பெய்ண்டிங் ஸ்டேண்டில் போர்டை பொருத்திக் கொண்டிருந்தாள் ஸ்வேதா. அவள்; அருகில் சென்றவன்

"ஹாய் ஸ்வேதா" என்றான்.

குரல் கேட்டு திரும்பியவள் அருகில் அவனைக் கண்டதும் விழிகள் விரிய நம்ப முடியாமல் பார்த்தாள்.விரைவாக சுதாரித்துக் கொண்டு

" ஹாய் அத்தான் வாட் எ ப்லேசன்ட் சர்ப்ரைஸ், எப்படி இருக்கீங்க"

"ம்ம்ம்ம் ஐயம் குட், நீ?"

"இப்போ தான் நீங்க வந்துடீங்களே ஐயம் டூ குட்" என்றாள் கண்கள் பளபளக்க.

உள்ளூர கோபம் வந்த போதும் வெளி காட்ட முடியாமல் பேச்சை திசை மாற்றினான்.

"என்ன பண்ற?"

" பெய்ன்ட் பண்ணலாம்னு தோனுச்சு அதன் இதை பிக்ஸ் பண்ணிட்டு இருந்தேன்"

"ஒஒஒ... அப்போ நீ பெய்ன்ட் பண்ணுவியா? அங்க மாடி இருக்கிற பெயிண்டிங்க்ஸ் எல்லாம் நீ பண்ணது தானா?"

"ம்ம்ம் ஆமாம் அத்தான்"

"ஹேய் ஸ்வேதா ப்ளீஸ் கால் மீ ஆதி, இந்த அத்தான் எல்லாம் வேண்டாம்"

"அதில்ல அத்தான் சாரி ஆதி அம்மாவும் அத்தையும் தான் அப்படி கூப்பிட சொல்லி" என்று இழுத்தாள்.

"சி அம்மா தான் ஏதோ சொன்னங்கன்ன நீயும் அதை கேட்டுட்டு இப்படியா கூப்பிடறது உன்ன அமெரிக்கா ல படிச்ச பொண்ணுன்னு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க"

" ம்ம் சாரி ஆதி ஐ வில் நாட் ரிபீட் திஸ்"

"தட்ஸ் குட்"

" நீ உன் பெய்ண்டிங் கண்டின்யு பண்ணு நான் அத்தை கூட வேனும்ன பேசிட்டு இருக்கேன்" என்று நகர போனவனை அவசரமாக தடுத்தாள். இரவு பகலாக அவனை எண்ணி அவனுடன் ஒரு பொழுதேனும் இருக்க மாட்டோமா என்று எத்தனை முறை ஏங்கி இருப்பாள். இன்று அவனே வந்துள்ளான் அதுவும் இந்த ரம்யமான இரவு வேளையில் அதை விட பெயிண்டிங் முக்கியம் என்ன?!

"நோ ப்ரொப்லெம் ஆதி நீங்க இங்கயே இருங்க நான் நாளைக்கு கூட இதை பண்ணிக்கறேன்"

"ஹேய் பரவாயில்ல, இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கரெக்ட் மூட் அண்ட் டைம் தேவைன்னு எனக்கு தெரியும்"

"அப்படி எல்லாம் இல்லை நீங்க பேசுங்க உங்க கூட பேசிட்டே நான் இதை முடிச்சுடறேன்" என்று அவள் கூறவும் வேறு வழியின்றி அவள் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து அவளுடன் பேசியவாறே அவள் வரைவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ கவனம் எல்லாம் பெயின்டிங்கில் இருப்பது போல் சிறப்பாக நடித்தாலும் தன் கணவனாக போகிறவனின் கண்கள் தன்னை அவ்வபோது அளவிடுவதை உணர்ந்து கன்னம் சிவந்து போனாள்.

சிறு வயது கலாட்டகளில் தொடங்கி அமெரிக்கா வந்தது வரை இருவரும் தங்கள் வாழ்வில் நடந்தவை பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

முழுதாக இரண்டு மணி நேரம் முடிந்திருந்தது. அவளும் பெயிண்டிங்கை முடித்திருந்தாள். இரவையும் பகல் போல காட்டிய பல வண்ண விளக்குகளுக்கு இடையே என் வெளிச்சம் தான் உங்களுடையதை விட பிரகாசமானது என்று பெருமிதம் பொங்க வானையே தொட்டு விட்டதோ என்று உயர்ந்து நின்ற கட்டிடங்களுக்கும்அப்பால் உயரத்தில் நின்ற நிலா! பால்கனி வழியே தெரிந்த அழகிய நியூ யார்க் நகரின் இரவு காட்சியை தத்ரூபமாய் புகைப் படம் எடுத்ததைப் போல் தன் தூரிகை  நுனியினைக் கொண்டு புகைப் படம் எடுத்ததைப் போல் வரைந்து முடித்திருந்தால் ஸ்வேதா.

"வா.....வ் அமேசிங் ஸ்வேதா முதல்ல கைய குடு நீ இவ்ளோ அழகா பெய்ன்ட் பண்ணுவனு நான் எதிர்பார்க்கல, இட்ஸ் மைண்ட் ப்லோயிங்"

என்று அவள் கைகளை பற்றி குலுக்கினான்.

அவன் ஸ்பரிசம் பட்டவுடன் சிலிர்த்து போனால் அவள். தன்னிலை காட்டிக்  கொள்ளாமல் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ள பெரும் பாடு பட்டாள்.

"தேங்க்ஸ் ஆதி, இதெல்லாம் ஒன்னும் இல்ல இன்னும் நெறைய பெயிண்டிங் இருக்கு வாங்க காட்றேன்"

"ஹேய் என்னது ஒன்னும் இல்லையா? யு ஆர் கிப்டட், நம்ம இந்தியா போனவுடனே ஒரு எச்ஹிபிசன் அரேன்ஜ் பண்ணலாம் ஓகே வா?"

" ம்ம்ம் சரி" என்று மெல்லிய புன்னகையுடன் அவன் பாராட்டுதலை ஏற்று கொண்டாள்.

அவனை தன்   உள்ள அறைக்கு அழைத்து சென்று அவள் தீட்டிய ஓவியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக காட்டி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சமூக அநீதிகள், பெண்களுக்கு ஏற்ப்படும் அவலங்கள் போன்றவற்றை அவள் வரைந்திருந்ததை பார்த்து ஆச்சரியம் மேலோங்கியது ஆதிக்கு."இவளுக்குள் இத்தனை திறமையா? நிஜமாகவே இவள் நல்ல பெண் தான் போலும்" என்று மனமார அவளைப் பாராட்டினான்.

ஒவ்வொரு ஒவிஒயமாக பார்த்துக் கொண்டே வந்தவன் ஒரு ஓவியத்தை கையில் எடுத்து அதை சந்தேகத்துடன் பார்த்தான்.

"இது"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.