(Reading time: 2 - 3 minutes)

ஷைரந்தரி - முன்னுரை - சகி

shairanthari

ன்னுயிரே உனக்காக என்ற தொடர்கதை மூலம் அனைவரும் என்னை அறிந்திருப்பீர்கள்.தொடக்கத்தில் ஒரு காதல் கதையை உங்களுக்கு அளித்த நான்.இப்போது ஒரு கற்பனையான வரலாற்று கதையை அளிக்க இருக்கின்றேன்.

இது உண்மையில் நடந்த வரலாரோ!உண்மையை தழுவி எழுதப்பட்டதோ!அல்ல...!இப்படி ஒரு கன்னிகை இருந்திருந்தால்,அல்லது,இப்போது இருக்கிறாள் என்றால் எப்படி இருக்கும் என்று என் கற்பனை குதிரையை தட்டிவிட,அதிலிருந்து உதித்தவள் தான் ஷைரந்தரி.இதில் சில சம்பவங்கள் நமது இதிகாசமான ராமாயணம்,மஹாபாரதத்தை தழுவி எழுதப்பட்டதாகும்.ஷைரந்தரி என்னும் இக்கன்னிகை பெண்கள் அனைவரின் சிறந்த மறுபக்கத்தை பிரதிபலிப்பாள் என்று நம்புகிறேன்.இவள் சுமார் 1800 வருடங்கள் நம்மை பின் நோக்கி அழைத்து செல்வாள்.

பல்வேறு சோதனைகளை வென்று சாதனை படைத்து,நமக்கு நல் போதனையை அவள் வழங்குவாள் என்று உறுதி அளிக்கின்றேன்.மேலும், ஷைரந்தரி என்னும் பெயர் மஹாபாரதியான திரௌபதியின் பெயர் என்பதால்,அவரிடம் இருந்த அசாத்தியமான தைரியமானது,இக்கன்னிகையிடம் நிச்சயம் பிரதிபலிக்கும்.மேலும்,அனைவரும் எதிர்ப்பார்க்கும்படி,காதல்,அன்பு,துக்கம்,கோபம்,மகிழ்ச்சி,சினம்,கருணை ஆகிய அனைத்தின் தாக்கமும் இதில் உண்டு.ஆனால்,நட்பின் தாக்கம் இதில் குறைவாகவோ அல்லது இல்லாமலோ போக வாய்ப்புண்டு!!!

சில நித்திய தர்ம கருத்துக்கள் ஆங்காங்கே இப்பெண்ணிற்கு அணி சேர்க்கும்.ஷைரந்தரி ஆகிய இக்கன்னிகை தீயின் பவித்திரத்தை ஏற்று,கதையின் ஆணைக்கிணங்கி இங்கே உதிக்க இருக்கிறாள்.பல்லவ நாட்டில் உள்ள பாஞ்சலபுரத்தில் அவளை சந்திக்க தயாராகுங்கள்.

Shairanthari - 01

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.