(Reading time: 38 - 76 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 10 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

குளித்து முடித்து விட்டு வேகமாய் மாடியிலிருந்து இறங்கி வந்த மீராவை பார்த்து விசில் அடித்தாள் நித்யா.

கிருஷ்ணாவை எதிர்பார்த்த மீரா, அவனை

தேடி கொண்டிருக்கும்போது நித்யா விசிலடித்தது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது.

"ப்ச்ச்ச்ச்ச்ச் என்னடீ இது ரௌடி மாதிரி? "

"ஓஹோ உன் கண்ணுக்கு நான் ரௌடி மாதிரி தெரியுறேனா?  இருக்கட்டும்டீ ... இதுக்கெல்லாம் நீ பீல் பண்ணுவ.  ஆமா அதென்ன  என்

அண்ணா விசிலடிச்சா அம்மணி வெட்கத்திலே முகம் சிவக்குறிங்க. ஆனா நான் விசிலடிச்சா கோபத்தில முகம் சிவக்குறிங்களே?? "

என்றபடி கண்ணடித்தாள் நித்யா.

தன்னை தோழி கண்டுகொண்டு விட்டாளே என நினைத்தவளின் கன்னம்  மீண்டும் செம்மையுற்றது.

இருந்தபோதிலும் அதை வெளிகாட்டாமல் இருக்க முயற்சி செய்தபடி கிருஷ்ணணை தேடினாள்.

எப்படியும் அவன் கண்களில் படப்போவதில்லை என்றறிந்தவள் , நித்யாவையே கேட்டுவிடலாம் என்றெண்ணி "நான் குளிச்சிட்டு வர்ர வரை தனியா இருந்தியாடீ " என்றாள்.

(அப்படி வா வழிக்கு என்று பூரித்துபோனாள் நித்யா..... ஆனா கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்ற அளவுக்கு நம்ம நித்யா சமத்து பொண்ணு இல்லையே! )

"ச்சச ச்சச நான் எங்கடீ தனியா இருந்தேன்?

 இதோ உன் வீட்டு நாற்காலி, மேஜை,டிவி எல்லாம் என்னை விட்டு நகறாமல் இங்கயேதான் இருந்தது " என்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள் (அப்படியாவது காதல் தீ கொளுந்து விட்டு எரியட்டுமே என்ற நல்லெண்ணம் தான் .)

"ம்ம்ம்ம்ம்கும்ம்ம்ம்ம் இது எனக்கு தேவைதான் " என்று மீரா முணுமுணுக்கும்போதே நித்யா பேச்சை மாற்றினாள். ( அப்போ ஆக மொத்தம் கிருஷ்ணா எங்க போனார்னு  நீங்க சொல்றதா இல்ல ... அப்படிதானே? நடத்துங்க நித்து !)

" ஆமா, இந்த நேரத்துல யேன்டி புடவை கட்டி இருக்க?  உன்னை பொண்ணு பார்க்க வராங்களா என்ன?"

(உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு பிடிக்குமே என்று தான் அவள் புடவை அணிந்திருந்தாள். அவனை ஏற்பதா மறுப்பதா என்ற சிந்தனையை ஒத்திவைத்துவிட்டு இருக்கும் வரை அவனுடனான தருணங்களை சேமித்து வைப்போமே என்றெண்ணிணாள் மீரா. இந்த சிட்டிவேஷனை சரியா சொல்லணும்னா,இந்த சினிமாவில் அணைய போற விளக்கு சுடர் விட்டு எரியுற மாதிரி காட்டு வாங்களே அந்த மாதிரி.)

என்ன பதில் சொல்ல என்று மீரா யோசிக்கும்போதே,

 "இது தேராது " என்றுவிட்டு நித்யா டிவியில் அமுதகாணம் நிகழ்ச்சி வைத்தாள்.

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி - ஆஹா

தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

நித்யா புன்னகையுடன் மீராவை ஏறிட அவளோ கோபகணலில் எரிந்தாள். நோ நோ எரிவதுபோல் நடித்தாள்.

"யம்மா திங்கள் எங்க சுட்டது ? உன் பார்வை தான் சுடுது. "

"ப்ச்ச்ச்ச்ச்ச் ... எனக்கு பசிக்குதுடீ .."

" வா சாப்பிடலாம். "

" எங்களுக்கும் தான் " என்று ரகுவும் சுபத்ராவும் கோரசாக சொல்ல, அவர்களின் குரல் கேட்டு டைனிங் ஹாலுக்கு விரைந்தாள்  மீரா . டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த ரகுராமையும் சுபத்ராவையும் பார்த்த மீரா ஸ்தம்பித்து நின்றாள். தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல நித்யா அவர்களுடன் அமர போக, மீரா அவளின் கை பிடித்து தடுத்து ரகசிய குரலில்,

" ஹே என்னடி ? "

" என்ன என்னடி ? "

" இவங்க ரெண்டு பேரும் இங்க எப்போ வந்தாங்க ? நீ ஏன் சொல்லல ? "

" உனக்கே தெரியாதபோது எனகேப்படி தெரியும் ? " என்று தோள் குலுக்கி அலட்சியமாக பதில் சொன்னால் நித்யா.

அதற்குள் சுபா,

" அண்ணி பசிக்கிது " எனவும்

" அண்ணியா ? " என்றனர் மற்றவர் இருவரும்.

" ஆமா அண்ணி தான் ...அப்பாதான் அப்படி கூப்பிட சொன்னாங்க " என்று அவள் கூறவும் என்னம்மோ புதிதாக இதை கேள்விபடுவது போல ரகுவும் நித்யாவும் நடித்தனர் . அன்று காபி டே ல அவங்க பேசின விஷயங்கள்ல இதுவும் ஒன்றுதானே ? ஆனா முதல் தடவை கேட்பது போல கேட்டது மட்டும் இல்லாமல், நம்ம ரகு

" அப்போ நானும் அண்ணினுதான் கூப்பிடுவேன் " என்றான்.

ஏற்கனவே அவர்களை அங்கு எதிர்பார்க்காத மீரா, இப்போ ரகுராம் இப்படி சொல்லவும், இனியும் அமைதியாக இருந்த ரொம்பே டேஞ்சர் என்று நினைத்து அருகில் வந்தாள்.

" அச்சோ அதெல்லாம் வேணாம் ரகுராம். அன்னைக்கு நான் எதோ தனிமையா பீல் பண்றேன்னு சொன்னேன்.. அப்போ தான் அங்கிள் அப்படி சொன்னாங்க " என்று பாதி பொய்யும் பாதி உண்மையுமாய் தன்னிலை விளக்கம் தந்தவள், " ரெண்டு பேரும் எப்போ வந்திங்க என்றாள்.

" இப்போதான் ... பட் நீங்க ரகுராமனு என்னை கூப்பிட்டிங்கன்னா நான் அண்ணின்னு தான் கூப்பிடுவேன். சும்மா ரகுன்னே கூப்பிடுங்க  "

" சும்மா ரகுவா ? பேரே காமெடி யா இருக்கே " - நித்யா

" அதுவா ...வெட்டி ரகு என்ற பட்டபெயரைதான் அவன் சும்மா ரகுன்னு மாத்தி  சொல்றான்" என்றாள் சுபத்ரா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.