(Reading time: 38 - 76 minutes)

 

" ரு விஷயம் கவனிச்சிங்களா ராம் அண்ணா, பசிகிது நு சொன்ன நாம நொந்து நூடல்ஸ் ஆகி இருக்கோம் ஆனா இவ மட்டும் செம்ம ப்ரெஷ் ஆ இருக்கா ? அடியே உள்ள என்னடி நடந்துச்சு ? அங்கேயே சாப்டுடு வந்துட்டியா ? " எனவும் மீரா அங்கு நடந்ததை எண்ணி முகம் சிவந்தாள். அதற்குள்  வந்த கிருஷ்ணன், வேண்டுமென்றே அவளை உரசி கொண்டு அவளருகில் அமர்ந்தான்.

அவருகில் அமர்ந்தது இன்ப அவஸ்தையாக இருந்தாலும், அவளுக்கு எது பிடிக்குமென்று பார்த்து பார்த்து பரிமாரியவனின் அன்பில் நெகிழ்ந்து போனாள் மீரா . பேசாமல் இவனுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் என்ன ? என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டவள், அவன் அன்பிற்கு இணையாக ஒரு மழலையை பெற்று தர தகுதி இல்லாதவள் நான் என்று  மீண்டும் தன் மனதை மாற்றி கொண்டாள். ( திருத்த முடியாது மீரா ...உங்களை திருத்தவே முடியாது )

இவர்களின் காதல் நாடகத்தை கவனித்தாலும் அதை வெளிப்படையாக காட்டிகொள்ளாமல் இருக்க மூவரும் ஒருவர் ஒருவர் காலாய்த்து கொண்டு இருந்தனர். பாவம் நம்ம ரகுதான் ! சுபா ஒருத்தி தொல்லையே தாங்காது இப்போ நித்யா வேற ..சொல்லவா வேணும் ?

ஒரு கட்டத்தில் " இவ ஒரு லேடி கெட் அப் போட்ட அர்ஜுன் " என்று மனதிற்குள் வசைபாடினான் ரகுராம். பெண்கள் இருவரின் கிண்டல் பேச்சுக்கு பதில்  கொடுத்தாலும், அவன் எண்ணம் முழுக்க ஜானகி மீதுதான் இருந்தது. இடையில் இரு முறை அவன் செல்போன் சிணுங்க அதில் ஜானகியின் பெயரை  பார்த்தும்  தனிமையில் பேசிக்கொள்ளலாம் என்று அவன் போனை எடுக்கவில்லை.

" ஒரு வேளை அர்ஜுன் ஜானகியை வேலைக்கு அனுப்ப சம்மதிக்கலையோ ? " என்று நினைத்தவன் " டேய் நம்பியார் அப்படி எதுவும் பண்ணிடாதேடா ப்ளீஸ் ..." என்று மனதிற்குள் அர்ஜுனனிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

" என்ன ரகு பேசாம இருக்கே ? "

" ப்ப்ச்ச் ஒன்னுமில சுபா "

" அவள் வருவாளா ?

அவள் வருவாளா?

என் உடைந்து போன நெஞ்சை

ஒட்ட வைக்க அவள் வருவாளா  ? " என்று பாடினாள் நித்யா.

" என்ன நித்யா பாட்டுலாம்  தூள் பறக்குது ? "

" ஹஹஹ சிட்டிவேஷன் சாங் கிருஷ்ணா அண்ணா ! "

" ஓஹோ யாருக்காக ? " என சுபா கேட்க, நித்யா குறும்புடன் ரகுராமை பார்த்து வைக்க சட்டென புரையேறியது ரகுராமிற்கு.

" பார்த்து சாப்பிடுடா " என கிருஷ்ணன் அவனுக்கு தண்ணீர் தந்து தலையில் தட்ட,

" ஹ்ம்ம் இடம் பொருள் ஏவல் லாம் பார்த்து இருக்கணும் ராம் அண்ணா " என்று விஷமாமாக சிரித்தாள் நித்யா.

" அய்யோ இந்த பிசாசுகுட்டி காபி டே ல எதையோ கண்டுபிடிச்சிட்டா போல " என்று ரகுராம் மனதிற்குள் நினைத்துகொள்ள, அதே நேரம் அனைத்தையும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த மீராவை பார்த்தாள் நித்யா....

(சிரிக்கிரியாடி நீ ? இரு ஆபரேஷன் ஸ்டார்ட் பண்றேன் ) என்று நினைத்த நித்யா " சிட்டிவேஷன் சாங் உங்களுக்கு தான் கிருஷ்ணா அண்ணா " என்றாள் .... என்ன என்பது போல் அனைவரும் அவள் முகத்தையே பார்க்க ,

" அதான் வீட்டுல கல்யாண பேச்சு எடுக்குறாங்களே" என்று மீராவின் தலையில் இடியை இறக்கிவிட்டு பொறுமையாய் உணவில் கவனம் செலுத்தினாள்.

" உனக்கு ஏன் இந்த கொலைவெறி ? " என்ற கேள்வியுடன் மற்ற மூவரும் நித்யாவை பார்க்க, மீராவோ

" நல்லா சாப்டேன் ... போதும் ..தேங்க்ஸ் கிருஷ்ணா" என்றபடி எழுந்து  சென்றாள் .

" உனக்கு ஏன் இந்த கொலைவெறி நித்யா ? "

" ராம் அண்ணா , காதல் ஸ்ட்ரோங் ஆகுறதுக்கு ஊடல் அவசியம் ...இதெல்லாம் ராஜதந்திரம் உங்களுக்கு புரியாது ...வேணும்னா உங்களுக்கும் ஏதும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க " எனவும்,

" அம்மா தாயே ஆளை விடு ...நானே பார்த்துக்குறேன் " என்று உளறிகொட்டிய ரகுராம் அங்கு சுபத்ரா அமர்ந்திருப்பதை ஏன் மறந்தான் ?

( ஓஹோ அப்போ நாம சந்தேகப்பட்டது நிஜம்தான் என்று நினைத்த சுபத்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள். )

( ஓகே ஓகே ஜூனியர் பேசினதை கேட்டது போதும் . இப்போ சீனியர்ஸ் பேசுறதை கேட்போம் )

" ன்னங்க, தம்பி  ரெண்டு பெரும் வாங்க சாப்பிடலாம் " என்று சூர்யப்ரகாஷ் சந்திரப்ரகாஷ் இருவரையும் அழைத்தார் அபிராமி. அங்கு சிவகாமி அனைவருக்கும் பரிமாற்ற காத்திருக்க,

" பசங்க எல்லாம் எங்க சிவா ? " என்றார் சந்திர பிரகாஷ்.

" பக்கத்துல மீரா நித்யா கூட சாப்பிட போயிருக்காங்க "

" ஓஹோ ஏன் எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாமே ? "

" இல்ல சந்துரு...நான்தான் அனுப்பி வெச்சேன். இவ்வளவு நாள் நாம அந்த மீரா பொண்ணை வற்புறுத்தி இங்க சாப்பிட அழைச்சது இல்ல...இப்போ நித்யாவுகாக அந்த பொண்ணை முதல் தடவையா கூப்பிட்டா, கடமைக்காக கூப்பிடுற மாதிரி இருக்கும் .. அவ மனசு கஷ்டப்படும்..பாவம் அவளும் சுபா மாதிரி தானே " என்றார் சூர்யப்ரகாஷ்.

( இவர்தான் நம்ம சூர்யப்ரகாஷ் ..எதையும் கண்டுக்காத மாதிரி இருப்பார் ஆனா அவர் எடுக்குற ஒவ்வொரு முடிவு பின்னாடியும் எல்லாருடைய உணர்வுகளையும் சீர்தூக்கி பார்க்கிற குணம் இருக்கும். அபிராமி கூட அப்படித்தானே பட் ஒரே ஒரு வித்தியாசம் அவங்க எல்லா விஷயத்தையும் எல்லாருடனும் ஷேர் பண்ணிக்க மாட்டாங்க...விட்டு புடிக்கிறது தான் அபிராமி ஸ்டைல். நம்ம சிவகாமி அப்படியே ஒப்போசிட் ..அதிகம் பேச மாட்டாங்க ..பின் குறிப்பு : சுபாவை திட்டும்போது தவிர,.....பட் அவங்க எப்பவாச்சும் பேசுற ஒரு சில வார்த்தைகள் கூட ரொம்ப கூர்மையா அதே நேரம் சரியா இருக்கும். சந்திரப்ரகாஷ், அண்ணா அண்ணி க்கு கட்டுபட்டவர். இயல்பாகவே ரொம்ப சாந்தமானவர்... )

" ஹ்ம்ம்ம்ம் அண்ணா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே " என்ற சந்திரப்ரகாஷ் என்ன சொல்ல போகிறார் என்பதை யூகித்த அபிராமி,

" பேசலாம் தம்பி....நானும் உங்க கிட்டலாம் பேசணும் ...முதல்ல சாப்பிடலாம் பிறகு மாடிக்கு போகலாம்" என்றார்.

அதுவே சரியென்று  தோணவும் அனைவரும் ஆமோதித்தனர்.

" நீயும் சிவாவும் சாப்பிடுங்க அபி "

" என்னைக்கு நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிக்காம நாங்க சாப்பிட்டிருக்கோம் ?  ... நீங்க ரெண்டு பேரும் அத்தை வீட்டுக்கு போனபோது கூட, நீங்க சாப்டச்சுனு சொன்னதும் தான் நாங்க இங்க சாப்பிட்டோம் " என்று அபிராமி காதலுடன் பதில் சொல்ல , இருவரும் தங்கள் மனைவியை பார்த்து காதலுடன் புன்னகைத்தனர்.

" அது சரி தான் மா... ஆனா முக்கியமா பேசணும்னு சொன்னியே அதான் " என்று சூர்யப்ரகாஷ் இழுக்க,

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க ...நான் சொல்லுற வரை அவங்க வர மாட்டாங்க? "

" அதெப்படி அக்கா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.