(Reading time: 38 - 76 minutes)

 

" ஹ்ம்ம் சொல்றேன் பா "

" ஏன் சந்கோஜபடுரா? நீ ஏதும் சண்டை போட்டியா  ? அவளை பார்த்தா திமிர் பிடிச்ச பெண் மாதிரி தெரியலையே " என்றபடி அவனை ஆராய்ந்தார் ..(அங்கிள் உங்க வலையில் எங்க  கிருஷ்ணா அவ்வளவு சீக்கிரம் விழுவாரா? )

" தெரியலையே பா ... வேணும்னா அவ நம்பர் தரேன் நீங்க பேசி பாருங்களேன்"  என்றவன் " அம்மா ,நீங்க போய் படுங்க நான் எல்லாருக்கும் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன் " என்றபடி சமைலறைக்கு சென்றான்.

" டேய் ரகு சுஜாதா வுக்கு பதிலா ஜானகியை வேலைக்கு வைக்கலாம்னு முடிவே பண்ணிட்டியாடா ?  " என்று அவர் ரகு பக்கம் திரும்ப, சுபாவுக்கு அந்த கேள்வி அதிர்ச்சியாக இருந்தது.. ( ஜானு வேலைக்கு போறாளா ? அதுவும் நம்ம கம்பனி ல .. ? சுஜாதா அக்கா ரகுவின் பி ஏ  தானே ? அப்படினா ஜானகி ரகுவின் பி ஏ வா ? இதை ஜானகி ஒத்துகிட்டாளா? என்கிட்ட கூட சொல்லலியே .............. மனதிற்குள் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தது சுபாவுக்கு )

" ஆமா பா ஏன் ? "

" அந்த பொண்ணுக்கு இது முதல் வேலை தானே? "

" ஆமா பா "

" காலையிலதான் புதுசா யாரையும் வைக்க முடியாது , டிரேன் பண்றது கஷ்டம்னு சொன்னியே ? "

" அப்பா முதல் வேலைன்னாதான் ஆர்வமா செய்வாங்க .. நம்ம அர்ஜுன் முதல்வன் படத்துல முதல் தடவை முதல்வனா இருந்தப்போவே என்னலாம் செஞ்சு அசத்துனாறு ? என்று நகைச்சுவையாய் ஆரம்பித்தவன், " ஜானகி fast learner    பா...சீக்கிரம் கத்துக்குவா .. அதுவும் தெரிஞ்ச பொண்ணு .. சப்போஸ் எனக்கு ஏதும் ஹெல்ப் வேணும்னா நான் வொர்கிங் அவர் இல்லாதபோதும்  டிஸ்கஸ் பண்ண சுலபமா இருக்கும். "

" எல்லாம் சரிதான் ... அவங்க வீட்டுல ஒத்துகிடாங்களா ? அர்ஜுனும் பிசினஸ் தானே பண்றான் .. ஜானகி நெனைச்சா அர்ஜுன் கிட்டே வேலை செய்யலாமே ...எனகென்னமோ அர்ஜுன் ஒத்துக்க மாட்டான்னு தோணுது " என்றவாறே ரகுவின் முகம் பார்க்க, ஏற்கனவே அதே குழப்பத்தில் இருந்த ரகு இன்னும் கலவரமாக

" நான் அர்ஜுன் கிட்ட இப்போவே பேசிட்டு சொல்றேன் பா " என்றபடி சென்றான்.

இப்போது சுபா மட்டும் அங்கே நிற்க,

" ஏண்டா கண்ணா, உன் அண்ணா அர்ஜுனை சம்மதிக்க வைப்பான்னு நெனைக்கிறியா ? "

" ஏன் பெரியப்பா இப்படி கேக்குறிங்க ? "

" இல்ல அர்ஜுனை பார்த்தா பேசியே ஜெயிக்கிற ஆளு மாதிரி இருக்கே .... ஒரு வேளை பேச்சில் மட்டும்தான் அர்ஜுன் திறமைசாலியா? " என்று அவளை பார்க்க, அவன் நினைவில் முகம் கனிந்தவள்,

" இல்ல பெரியப்பா அர்ஜுன் ரொம்ப திறமைசாலி .. நல்லவர் .. நல்ல பேசுவார் அதே நேரம் யாரு மனசும் கஷ்டபடாம பேசுவார் ... ரகு ஒழுங்கா பேசினா கண்டிப்பா அவர் நோ சொல்ல மாட்டாரு" என்று அவள் முகம் மின்ன பேச , ( ஆஹா நம்ம தங்கச்சி அவ ஹீரோவை பத்தி பேசுற சந்தோஷத்துல அவளுடைய லவ்வை அவளே காட்டி கொடுத்திடுவாளோ ) என்றெண்ணிய கிருஷ்ணன், அவசரமாய் அங்கே வந்து

" அப்பா பால் எடுத்துகோங்க ...லேட்டாச்சு போய் தூங்குங்க ....சுபா இந்த நீயும் பால் எடுத்துக்கோ..ரூமுக்கு போ " என்று அவளை அனுப்பி வைத்தான். அனைவருக்கும் குடிக்க  பால் தந்துவிட்டு தன் அறைக்கு சென்ற கிருஷ்ணன் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடி படுத்திருந்தான்.

தே நேரம் அர்ஜுனுக்கு ரகுவும், ஜானுவுக்கு சுபாவும் போன் பண்ணாங்க ...அவங்க என்ன பேசுனாங்கனு கேப்போம் வாங்க.

( அர்ஜுன்- ரகு )

" ஹலோ அர்ஜுன் ? "

" சொல்லுங்க மாப்பிளை "

" மாப்பிளையா ? "

" ஆமா ஜானுவுக்கு  நீங்கதானே மாப்பிளை ? "

" அர்ஜுன் ................. ? நீ ......."

" கூல் டவுன் ரகு ....எனக்கு எல்லாம் தெரியும் "

" எல்லாம்னா? அர்ஜுன் ப்ளீஸ் ..தெளிவா சொல்லு .... " பதற்றத்தில் வெளிப்பட்ட ரகுவின் குரலை உணர்ந்த அர்ஜுன் தெளிவாக சொன்னான்.

" எனக்கு எல்லாம் தெரியும் ரகு .. முதல் தடவை எங்க வீட்டுல ஜானகியை பத்தி பேசும்போதே கிருஷ்ணாவின் முகபாவனையும் உன் முகபாவனையும் ஒரே மாதிரி இல்ல..அப்போவே ஏதோ வித்தியாசமா இருக்கேனு எனக்கு தோணிச்சு. சரவணபவன் ல, நான் நீ அபிராமி அத்தை கிட்ட ஏதோ சொன்னதையும், அவங்க ஜானகியை பார்த்ததையும் நான் கவனிச்சேன். அதுக்கப்பறம் கோகுலஷ்டமி ல ஜானுவை பார்க்கும்போது உன் கண்ணுல நான் காதலை பார்த்தேன் கனிவை பார்த்தேன். இன்னைக்கு ஜானகி வேலைய பத்தி பேசுறான்னு அம்மா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க ... நான்தான் அம்மாகிட்ட தலைவலின்னு பொய் சொல்ல சொல்லி ஜானுவை உன்னோடு அனுப்பி வெச்சேன். காபி டே ல நாம கெளம்பும்போது கிருஷ்ணா கிட்ட தனியா பேசிட்டு  இருந்தேனே , அது மீராவை பத்தி இல்ல உன்னை பத்தி தான் ...... எல்லாத்தையும் கிருஷ்ணா என்கிட்ட சொன்னான் "

" ஐ எம் சாரி அர்ஜுன் .. நீயே தெரிஞ்சுகிட்டது முன்னாடி நான் உன்கிட்ட பேசிருக்கணும் . பட் எனக்கு எல்லாரையும் விட ஜானகி மனசுதான் முக்கியம்னு தோணிச்சு ., அதுனாலத்தான் இந்த வேலை விஷயத்தை கூட முதலில் ஜானகி கிட்ட பேசுனேன்"

" ஹேய் ரிலாக்ஸ் டா .. நான் தப்ப எடுத்துக்கல. உனக்கு நான் நன்றிதான் சொல்லணும் ரகு . கனவுல கூட நினைகள ஜானகிக்கு இப்படி ஒரு லைப் அமையும்னு. ஜானு என் வீட்டு பொண்ணு , அவளுக்கு நல்லது நடக்கணும் அதுக்காக அப்படி சொல்றேன்னு நினைக்காத . ஒரு வேலை எனக்கு ஜானகியை தெரியாம  இருந்து நான் உனக்கு நண்பனா இருந்தா கூட இப்படி தான் சப்போர்ட் பண்ணி இருப்பேன் டா...  "

" அப்போ உனக்கும் இதுல சம்மதம்மா அர்ஜுன் ? பானு  அத்தை ? "

" அம்மா கிட்ட நான் சொல்லிக்குவேன் டா... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். பட் "

" பட் ? "

" ஜானு மனசை சம்மதிக்க வைக்கிறது பெரிய விஷயம்"

" அதை நான் பார்த்துக்குறேன்... அப்படியே முடிலன்னாலும் ஒரு பக்கம் அண்ணா  ஒரு பக்கம் நீ இருக்கிங்களே ...அது போதும் "

" ஹான் ....இப்படிலாம் ஐஸ் வெச்சு தப்பிக்கலாம் பார்த்தியா? எல்லாம் நல்லபடியா நடந்தா எனக்கு நீ டிரிட் தரனும் "

" என்ன டிரிட் டா ? "

" அதை அப்போ சொல்றேன் "

" அப்போவா? எப்போ? அப்ப இப்போ? "

" இப்போ போனை வை குட்  நைட் "

" டேய் அர்ஜுன் "

" டேய்  அண்ணன் கிட்டேயே தங்கச்சி கிட்ட பேசணும்னு என்னை சொல்ல வைக்காத "

" அதான் சொல்லிட்டியே மச்சான் "

" ஓ ........ சொல்லிட்டேனா? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.