(Reading time: 38 - 76 minutes)

 

" ஹ உனக்கு பிடிச்ச கலர் ப்ளு அதான் கேஸ் பண்ணேன் ... எப்படியும் தப்பா  சொல்லி இருந்த நீ கண்டிப்பா வேற பதில் சொல்லி இருப்பே ... நீ அமைதியா இருக்கவும் நீ என்னை தேடுறேன்னு தெரிஞ்சு போச்சு "

" திருடா " என்று வாய் விட்டு சிரித்தாள் சுபி...

" நான் திருடனா ? என் நேரம் டி "

" ஹா ஹா ஹா "

" ஆனா சுபி நீ இப்படி அழகா சிரிச்சா நான் திருடன் ஆகாம வேறென்ன ஆவேன் சொல்லு "

" அர்ஜுன் "

" ம்ம்ம்ம்ம்ம்? "

" போதும் வழியுது தொடைசிட்டு போய் தூங்குங்க "

" எல்லாம் என் நேரம் டி  இளவரசி ...இரு உன்னை கவனிசுகுறேன் "

" வெவ்வேவ்வேவ்வே  உலகத்துலேயே இளவரசியை டி போட்டு கூப்பிட்ட யுவராஜர் நீங்கதான் "

" அதெல்லாம் அப்படிதான்...என் தாத்தா என் பாட்டியை டீ போட்டுதான் கூப்பிட்டாரு. என் அப்பா என் அம்மாவை டீ போட்டுதான் கூப்பிட்டாரு.. சோ நானும் டீ போடுவேன்.. இல்லேனா என் குடும்ப  வழக்கத்தை நான் மீறிட்டேன்னு உலகம் என்னை தப்பா பேசிடும் "

" உங்க மொக்கைக்கு ஏன் செல்லம் உலகத்தையெல்லாம் இழுக்குறிங்க ?"

" வாலு வாலு வாய் ஜாஸ்தி டீ உனக்கு ....சரி போதும் போயி தூங்கு மா  ... குட் நைட் இளவரசி "

" அர்ஜுன் ..............."

" என்னடா ? "

" ஒரு சாங் பாடிட்டு போங்க "

"நாளைக்கு பாடுறேண்டா ... மணி ஆச்சு பாரு "

" ம்ம்ஹ்ம்ம்ம் ஒன்னே ஒன்னு பா ... ப்ளீஸ் " என்று அடம்பிடித்தாள் சுபி

" மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்லவே கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே "

" ஹ்ம்ம்ம்ம் எங்க இருந்து அர்ஜுன் இப்படி பாட்டுலாம் புடிக்கிரிங்க? "

" ஹ்ம்ம் உன்னை எங்க கண்டுபுடிச்செனோ அங்கதான் "

" ஓஹோ சூப்பர் மார்கெட்டுல யா ? "

" அடியே... இப்போ அந்த வாயை நீயா மூடுறியா ? இல்ல நான் மூட வைக்கவா ? "

அவன் இருபொருள் கேள்வியில் முகம் சிவந்தவள் " எனக்கு தூக்கம் வருது " என்று போனை அணைத்தாள்.

இவங்க இங்க போன் ல பேசிட்டு இருக்கும்போது நம்ம மீரா கிருஷ்ணா என்ன பண்ணாங்க பார்ப்போம்.

" ஹே மீரா "

" ம்ம்ம்ம் "

" ஏன் தூங்காம இங்கயும் அங்கயும் திரும்பிகிட்டே இருக்க என்னால தூங்க முடில பாரு " என்று அலுத்துகொண்டாள் நித்யா அவளருகில் படுத்திருந்த படி.... கலைந்த ஓவியமாய் எங்கேயோ வெறித்து கொண்டிருந்த மீராவை பார்க்க கோபமும் பரிதாபமும் ஒன்றாகவே எழுந்தது.... சட்டென கிருஷ்ணாவுக்கு போன் போட்டு ஸ்பிகர் ஆன் செய்தாள்.

" நித்து , மீரா தூங்கிட்டாளா ? " 

( அவன்  முதல் கேள்வியிலே கரைந்துவிட்டாள் மீரா... அவனின் அக்கறை மனதிற்கு இதம் தர நித்யாவிற்கு முகம் காட்டி திரும்பி படுத்தவள் அவனின் பேச்சை கவனித்தாள் )

" அவ எங்க தூங்குறா ?

" காட்டுக்குள்ள பாட்டு சொல்லும் கன்னி பூவும் நான்தானோ ன்னு " பேய் மாதிரி பாட்டு பாடாத குறையா முழிச்சிருக்கா ..."

" வீட்டுல கல்யாண விஷயம் என்ன ஆச்சு ? " ( கல்யாணமா ? அப்படி எதுவும் நான் இவகிட்ட சொல்லலியே ? சும்மா மீராவுக்காக சொன்ன பொய் தானே அது .. ஓஹோ அப்போ என் நீலாம்பரி பேசுறதை கேட்டுடு இருக்காளோ ) என்று நினைத்த கிருஷ்ணன்

" அத பத்திலாம் ஒன்னும் பேசலடா .... ஆபீஸ் மேட்டர் மட்டும்தான் பேசினோம் " என்றான் .

மானசீகமாய் தலையில் அடித்துகொண்டாள் நித்யா. மீராவிற்கோ சொல்ல முடியா இன்பம் மனமெங்கும் வியாபித்தது. அவளும் முகம் பார்த்து கனிந்த நித்யா ,

" அண்ணா தூக்கம் வரல பாட்டு பாடுங்களேன் "

" ம்ம்ம்ம் ஓகே "

" வைட் வைட் ...நீங்க பாட்டுக்கு மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் நு  செண்டிமெண்ட் பாட்டு பாடிடாதிங்க ... நல்ல லவ் சாங் பாடுங்க " என்றபடி மீராவை பார்த்து கண்ணடித்தாள்.

" லவ் சாங்கா? "

" ஆமா நீங்கலாம் மட்டும் ஜோடி ஜோடியா சுத்துரிங்க ...எவ்வளோ நாள் தான் நானும் சிங்களா இருக்குறது ? லவ் சாங் கேட்டாச்சும் எதாச்சும் அமையுதா பாப்போம் " என்று பெருமூச்சு விட்டவளை பற்றி இருவருக்குமே நன்கு தெரியும் . கிருஷ்ணன் மீராவுக்காக பாடத்தான் இந்த ஏற்பாடு என்று.

 " மாலை வானில் கதிரும் சாயும்

மடியில் சாய்ந்து தூங்கடா

பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா

மலரின் காதல் பனிக்கு தெரியும்

என் மனதின் காதல் தெரியமா

சொல்ல வார்த்தை கோடி தான்

உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்

தூங்க வைக்க பாடினேன்

நான் தூக்கமின்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

நதியின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூங்கும்

இனிய கனவில் தூங்கு "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.