(Reading time: 38 - 76 minutes)

 

" வலை படாதிங்க அதான் உங்க பேர் சொல்லும் பிள்ளையாய் கிருஷ்ணன் இருக்கானே ...சரியான அழுத்தம்... அவன் காதலை பத்தி ஏதும் சொல்லிருக்கானா? அப்படியே உங்களை மாதிரி ... "

" ஆமா பின்ன என்ன ? "

" சின்ன வயசுல இருந்து காதலிச்சதை ஒரு தடவையாவது சொன்னிங்களா ? எனக்கு நிச்சயம்னு தெரிஞ்சதும் தானே உங்க காதலே  வெளிய வந்திச்சு ..நல்ல வேலை எனக்கு நிச்சயம் பண்ணாங்க..இல்லனா நமக்கு ஒரேடியா அறுபதாம் கல்யாணம்தான் நடந்திருக்கும் "

" அச்சோ விடுங்க அண்ணி, அண்ணா பாவம் "

" அய்யே நீங்க மட்டும் என்னவாம் ... அக்கா இருந்த நேரம் நல்ல வேலை உங்க காதலை பத்தி அக்கா  கிட்ட சொல்லி நமக்கு கல்யாணம் ஆணிச்சு ..இல்லேன்னா நீங்களும் எபோ சொல்லிருப்பிங்களோ " என்று வாரினார் சிவகாமி.

நால்வரும் இணைந்து சிரித்தனர்.

" என்னங்க ஜானகி அர்ஜுன் பத்தி நீங்க சொல்லவே இல்லையே "

" எனக்கு நம்ம மூணு பசங்களோட கல்யாண விஷயத்துலயும் பரிபூரண சந்தோசம் ...சம்மதம் அபி ... கிருஷ்ணாவும் ரகுவும் என் ரெண்டு மருமகள் களையும்  சம்மதம் சொல்ல வைக்குற வரை வைட் பண்ணுவோம். அப்படி இல்லேன்னா அவங்களோட லவ் மேரேஜை நாம அர்ரெஞ் மேரேஜ் ஆக்கிடுவோம் ... சரிதானே சிவகாமி  ? "

" ரொம்ப சரி மாமா எனக்கும் சம்மதம் ... "

" அண்ணா, அம்மாகிட்ட??? "

" சீக்கிரம் சொல்லலாம் டா சந்துரு"

 " சரிங்கண்ணா "

" சரி நான் சுபாவை கூப்பிடுறேன் ..நீங்க எல்லாரும் போய் படுங்க இல்ல டி வி பாருங்க " என்று எழுந்த அபிராமி சந்திரப்ராகஷின் தெளியாத முகத்தை கண்டார் .  ஒரு வேளை தனியா பேச விருப்ப படுராரோ ? என்று நினைத்தவர்,

" தம்பி இந்த போன் என்னாச்சு பாருங்களேன் " என்று நல்லா இருந்த போனை அவரிடம் நீட்ட, மற்ற இருவரும் மாடியிலிருந்து இறங்கி சென்றனர்.

" நல்லாதானே அண்ணி இருக்கு என்ன பிரச்சனை? "

" அதான் நானும் கேக்றேன் ... நல்ல விஷயம்தானே பேசினோம் ... ஆனா நீங்க இன்னும் தெளிவாகாத மாதிரி இருக்கே தம்பி "

" அண்ணி அது வந்து ..........................." என்று அவர் மீராவை பற்றி சொல்வதற்குள் அனைவரும் வீட்டிற்கு வருவதை மாடியிலிருந்து கவனித்தார் அபிராமி ...

" எல்லாரும் வராங்க தம்பி ... நாம இன்னொரு நாள் பேசலாம் "

" சரிங்க அண்ணி "

கிருஷ்ணாவின் வீட்டில் கல்யாண விஷயம் பேசறாங்கன்னு நித்யா சொன்னதுமே மீராவிற்கு சொல்ல முடியாத ஏமாற்றமாக இருந்தது . அவளின் துயர் கண்ட கிருஷ்ணன் , அவளை சமாதனபடுத்த போக அதை  தடுத்தனர் சுபாவும் நித்யாவும் . இருவரும் தங்களுக்கே உரிய குறும்பு பேச்சில் மீராவை சிரிக்க வைக்க முடியாவிடினும்   தற்பொழுது தனிமையில் அழ வேண்டும் என்றிருந்த மீராவை தடுத்து வைக்க முடிந்தது. ஓரளவிற்கு மேல் தாங்க முடியாமல் மீராவும் அவர்களின் பேச்சினில் கலந்துகொண்டாள்... ஆனால் அவள் கண்கள் மட்டும் அடிகடி கிருஷ்ணனையே தழுவி கொண்டு இருந்தது. இதை கிருஷ்ணனுக்கும் தெரியும் ( அதான் பக்கத்துல நம்ம ரகு இருக்காரே .....அவர் தான் அப்பபோ நியுஸ் கொடுக்குறாரு ..ஹ்ம்ம் நடத்துங்க ரகு ) .

அதே நேரம் டி வி யில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்த கிருஷ்ணன், மீராவிற்கு தகுந்தது போல  அப்பாடல் வரிகள் ஒலிக்க அந்த பாடலை வைத்து விட்டு அவளை பார்த்தான்.

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!

மனசைத் திறந்து சொல்லடி வெளியே!

கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!

மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

அதே நேரம் நித்யா சுபாவிடம் ரகசிய குரலில்,

" நாம எவ்வளோ படிச்சு படிச்சு இந்த அண்ணா கிட்ட விலகி இருக்க சொன்னா , பார்வையாலே டூயட் பாடுறதை பார்த்தியா ?"

" ஆமாடீ இது தேறாது ...பேசாம இந்த " என் இனியவளே " கதையில நம்ம பாலா, சந்துரு பவித்ராவை விட்டு தூரமா அனுப்பின மாதிரி , அண்ணாவுக்கும் பெட்டி படுக்கை எல்லாம் கட்டி அனுப்பி வெச்சிடலாமா? "

" ஹ்ம்ம்ம்ம் பார்க்க பாவமா இருக்கே சுபா ......... இப்போ நீ என்ன பண்ணனும்னா ......" என்றபடி நித்ய ரகசியமாய் சுபாவின் காதில் ஏதோ சொல்ல ..அதை உடனே செயல் படுத்தினாள் சுபத்ரா...

" அண்ணா கெளம்புங்க கெளம்புங்க ...டேய் ரகு வா போலாம் "

" எங்கடா ? "

" அம்மா இப்போதான் மெசேஜ் பண்ணிருக்காங்க ...தூங்காம எவ்வளோ நேரம் ஆட்டம் போடுறிங்கன்னு அப்பா தேடுறாங்களாம் "

" அம்மாவுக்கு மெசேஜ் பண்ண தெரியாதே ? " என்று  ரகுராம் ஆராய்ச்சியுடன் அவளை பார்க்க ,

" அது போன மாசம் இது இந்த மாசம் ராம் அண்ணா.. அன்னைக்கு வீட்டுக்கு ஏதோ பொண்ணு வந்தாங்கலாமே ...யாரது ? ஹான் ... யா யா .... ஜா ன கி .......... அந்த  பொண்ணுதான் சொல்லிகொடுத்ததா சுபா என்கிட்ட சொன்னாளே " என்று குறும்புடன்  நித்யா சிரிக்க " ஜானகி" யின் பெயர் கேட்டதும் , எப்பா ஐ எம் எஸ்கேப் என்று கிளம்பிவிட்டான் ரகுராம். கிருஷ்ணன் தலை அசைப்புடன் மீராவிடமிருந்து விடை பெற , சுபத்ரா அன்று போல்  இன்றும் மீராவை கட்டி அணைத்து " பை அண்ணி " என்று கண் சிமிட்டி விட்டு சென்றாள் ....

ன் வீட்டை நோக்கி நடைப்போட்ட மூவருமே வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

சுபத்ராவிற்கோ , ரகுராம் ஜானகியை நேசிக்கின்றானோ என்ற சந்தேகம் வலுவானது . இதை அர்ஜுனிடம் எப்படி பேசுவது என்று சிந்தித்தவள் தனதறைக்கு செல்ல வேகமாக நடந்தாள் அவளின் அர்ஜுனனை அழைப்பதற்காக.

ரகுராமோ " நித்யாவிற்கு ஜானகி பத்தி  தெரியுமா? காபி டே ல அவளை மாதிரியே அர்ஜுன் சுபாத்ராவுக்கும் தெரிஞ்சிருக்குமோ ", " அர்ஜுனனிடம் பேச வேண்டுமா ? ", " ஜானகி ஏன் ரெண்டு தடவை போன் பண்ணா? " என்று ஆயிரம் கேள்விகள்..அனைத்தையும் ஒத்தி வைத்தவன் ஜானகியை அழைக்க வேண்டும் என்று வேகமாய் நடந்தான்.

கிருஷ்ணன் மட்டும் மீராவை பிரிய மனமில்லாமல் மாடியிலிருந்து அவள் பார்க்கிறாளா ? என்று திரும்பி திரும்பி  பார்த்து கொண்டே நடந்தான் . ( பாவம் கிருஷ்ணா நீங்க .,.. உங்களை மீரா பார்க்கல.. அங்க இருந்து நித்யாவும் இங்க இருந்து சிவகாமியும்தான் உங்களை மாடியிலிருந்து பார்த்து மெளனமாக சிரிச்சு கிட்டு இருந்தாங்க )

மூவரின் மனநிலை அறியாத சூர்ய பிரகாஷோ அவர்களை போகவிடாமல், ஹாலில் அமர்த்தி பேசி கொண்டிருந்தார்.

" என்னடா கிருஷ்ணா அந்த பொண்ணு மீராவை நம்ம வீட்டுக்கு வர சொல்லாம்ல "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.