(Reading time: 38 - 76 minutes)

 

வனின் குரல் கேட்டு நிம்மதியாய் உறங்கினாள் மீரா.

எவ்வளவு நாளுதான் இந்த மூணு ஜோடிகள் கொஞ்சிகிரதையே பார்க்குறது? நாளைய ட்விஸ்ட் உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி இன்னொரு ஜோடியை பார்ப்போமா ?

" என்னங்க அப்படி பார்குரிங்க என் முகத்தை ? "

" எப்படி ? "

" முதல் தடவை பார்க்குற மாதிரி ? "

" நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆனது மாதிரியே இல்ல சிவா "

" அப்போ எப்படி இருக்கு ? "

" இப்போ தான் சூர்யா அண்ணா கல்யாணத்துல உன்னை பார்த்த மாதிரி இருக்கு ..எப்படிடி அப்படியே இருக்கே ? " என்றார் சந்திரப்ரகாஷ் . ( இளமை, அழகு, ஈர்ப்பு இதெல்லாம் கண்களை பொறுத்தது இல்லை ... காதலை சுமக்கும் இதயத்தை பொறுத்தது என்பதை உணர்த்தினார் சந்திரப்ரகாஷ்)

" ச்சு போங்க .. இன்னும் ஒரு வருஷத்துல நீங்க தாத்தா ஆகிடுவிங்க ...மறந்துடாதிங்க "

" அப்பவும் நீ என் பொண்டாட்டிதான் ... சிவா நான் ஒரு விஷயம் கேக்கவா ? "

" சொல்லுங்க? "

" இல்ல மொத நம்ம எல்லாரும் பேசும்போது , உன் கிட்ட ஜாஸ்தி எதுவும் கேக்கல .. அதே மாதிரி நம்ம பசங்க விஷயத்தையும் அண்ணிதான் உரிமையோடு பேசுனாங்க .. சுபா லைப் உட்பட ... உனக்கு வருத்தமா இல்லையாடா? "

" ............."

" என்ன இப்படி பார்க்குற? "

" இப்போ எனக்கும் சந்தேகமா இருக்குங்க "

" என்ன ? "

" நமக்கு என்ன புதுசாவா கல்யாணம் ஆகிருக்கு ? "

" சிவா? "

" பின்ன என்னங்க ? இது நம்ம வீடு .. நாம பேசுனது நம்ம குடும்ப விஷயம் ..யாரு அதிகம் பேசுறோம் யாரு குறைவா பேசுறோம் அதுவா முக்கியம் ? நம்ம பசங்க வாழ்கைதான் முக்கியம். எனக்கு எப்பவும் எந்த வருத்தமும் இல்ல.... அக்காவும் மாமாவும் எதையும் யோசிச்சுதான் செய்வாங்க . அதுவும் இல்லாம அபி அக்கா என்கிட்ட ஏற்கனவே இதையெல்லாம் பேசிட்டாங்க ? "

" ........"

" இப்போ நீங்க ஏன் இப்படி பார்குரிங்க ? "

" இந்த பொறுமையும் சாந்தமும் தாண்டி எனக்கு  உன்கிட்ட புடிச்சது "

" ஓஹோ அப்போ நான் பொறுமையா இல்லேன்னா புடிக்காதா ? " என்று கேட்ட சிவகாமி கோபபடுவது போல் நடிக்க ,

" நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் " என்றார்.

" சரி போதும் தூங்குங்க ...."

" எனக்கு தூக்கம் வரல... "

" ஏன் ? "

" தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா ?

காதல் கண்கள் உறங்கிடுமா ?

காதல் கண்கள் உறங்கிடுமா?

 ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்

காதல் கண்கள் உறங்கிடுமா ?

காதல் கண்கள் உறங்கிடுமா? "

(அதுக்குமேல அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம் ... வாங்க நாமளும் தூங்கி எழுந்திரிப்போம் )

மறுநாள்,

" குட் மோர்னிங் ரகு "

" மோர்னிங் அர்ஜுன்... என்ன  காலையிலேயே போன் ? "

" இல்லடா நான் ஜானுவை இன்னைக்கு கம்பனில ட்ரோப் பண்ணிக்கிறேன் .... இவினிங் நீ பிக் அப் பண்ணிக்க முடியுமா ? "

" கரும்பு தின்ன எறும்புக்கு கூலியா ? ஜானு பக்கத்துல இருக்களோ ? "

" அதே அதே! ..... சரி டா..... என்னது நாளை  இருந்து  நீயே பிக் அப் பண்ணிக்கிறியா? "

" நான் சொல்லவே இல்லையே ...அர்ஜுன் இது உன் திட்டமா ? சூப்பர் உன் கருணையே கருணை ..சரி டா ...."

" ஓகே வெச்சிடுறேன்"

அருகில் இருந்த ஜானகியிடம் புன்னகைத்த அர்ஜுன் . வேலைக்கு தேவையான அடிப்படை அறிவுரைகளை சொல்லி அவளை தெளிவு படுத்தினாள்.

அதே நேரம் ஆபீசில்,

" சகாயம் சார் என் ரூமுக்கு வாங்க "

"சொல்லுங்க தம்பி"

" இந்த பெட்டியில் சில திங்க்ஸ் இருக்கு "

" நான் சொல்ற வரை இதை என்கிட்ட தர வேணாம் ...எங்கயாச்சும் வெச்சிடுங்க ... பட் யாருக்கும் தெரிய கூடாது " என்றான் ரகுராம்.

சரியென தலையசைத்த சகாயம் அந்த பெட்டியை, எங்கு வைப்பதென்று யோசித்துக்கொண்டே வெளியேறினாள். ஜானகி பதற்றத்துடன் இருப்பதினால் அர்ஜுனும் துணை வர இருவரும் அந்த ஆபீசில்   நுழைந்தனர். ஜானகியின் பார்வை  தானாகவே அந்த பெட்டி மீது திரும்பியது. ரகுராம் மறைக்க நினைத்த பெட்டி அன்றே அவள் கையில் சிக்கும் என்பது தெரியாமல், ரகுராம் அவளுக்காக காத்திருக்க, ஜானகியும் அவனின் அரை நோக்கி நடைபோட்டாள் அர்ஜுனனுடன்.

( அந்த பெட்டியில் என்ன இருக்கு ? ஜானகி என்ன செய்ய போறாங்க ? வந்த முதல் நாளே ஜானகி கிளம்பிடுவாங்களா ? நம்ம சந்திரப்ரகாஷ் சார் எப்போ மீராவை பத்தி சொல்ல போறார் ? அதை அடுத்த எபிசொட் சொல்றேன்...பை பை )

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.