(Reading time: 49 - 97 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 11 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

" சுஜா, ஜானுவுக்கு இது முதல் வேலை. கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம் ... நீங்கதான் கொஞ்சம் பொறுமையா கைட் பண்ணனும். டெக் யுவர் டைம் ... நீங்க பொறுமைசாலின்னு தெரியும் பட் ஸ்டில் நான் சொல்லிடுறேன். கொஞ்சம் பார்த்துகோங்க " என்ற ரகுராமை புன்னகையுடன் பார்த்தாள் சுஜாதா. முகம் நிறைய மகிழ்ச்சியும் தாய்மை நிறைந்த கலையுமாய் நின்றிருந்தாள் சுஜாதா.

" ஏன் அப்படி பார்க்குறிங்க சுஜா ? "

" இல்ல சார், நீங்க போர்ட் மீட்டிங் கு கூட இவ்வளோ நெர்வஸ் ஆ இருந்து நான் பார்த்ததே இல்லை. அதுவும் இந்த அறிவுரை நீங்க எனக்கு 14 வது முறையா சொல்லுரிங்க "

" ரொம்ப ப்ளேடு போடுறேனோ ? " என்று கேட்ட ரகுராமை பார்த்து புன்னகைத்தாள் சுஜாதா. ( நல்ல வேலை கிடைக்கிறதே இப்போலாம் குதிரை கொம்பு.. அதிலும் ' நான் முதலாளி' என்ற அலட்டல் இல்லாத முதலாளி கிடைப்பது மிக அரிதல்லவா ? அதானேலேயே சுஜாதாவிற்கு இந்த வேலை மிகவும் பிடிக்கும். கிருஷ்ணனும் சரி ரகுராமும் சரி தங்கள் கம்பெனியில் வேலை செய்யும் அனைவரையுமே மதிப்பவர்கள்.. அதுவும் சொல்வதற்கு முன்பே எல்லா வேலைகளையும் நேர்த்தியாக செய்து முடிக்கும் சுஜாதா மீது இருவருக்குமே நல்ல மதிப்பும் அன்பும்  இருந்தது. சரி ஓகே ஓகே சுஜாதாவுக்கு ரொம்ப ஐஸ் வெச்சாச்சு இப்போ கதைக்கு வருவோம் ...ஹா ஹா )

" அப்படி இல்ல சார் ..திறமைசாலிகளை தட்டி கொடுக்குறதுக்கு நீங்களும் கிருஷ்ணா சாரும் தயங்கவே மாட்டிங்கனு தெரியும். ஆனா புது வேலைக்கு வந்து சேர போகிற பெண்ணை விட நீங்க ரொம்ப பதட்டமா இருக்கிங்களே அதான் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. பட் டோன் வொர்ரி...நீங்க சொன்ன மாதிரி ஜானகி என் பொறுப்பு ..."

( நம்ம முகத்தை வெச்சே எல்லாரும் கண்டுபுடிசிருவாங்க போல...நேத்து நித்யா , அர்ஜுன் இப்போ சுஜாதா ...... ஹ்ம்ம் எல்லாம் நாம முகராசி போல.... ஆனா சுபா இன்னும் அமைதியா இருக்கா ... நம்புற மாதிரியே இல்லையே ?? என யோசித்தவன் )

" தேங்க்ஸ் சுஜா .... நீங்க உங்க கேபின்ல உட்காருங்க ... நான் ஜானகி வந்ததும் சொல்லுறேன் "

" ம்ம்ம்ம் ஓகே பாஸ் " என்று சிரித்துவிட்டு தன் இடத்திற்கு சென்றாள் சுஜாதா.

சுஜாதாவை கண்டதும் நம்ம சகாயம் சார்,

" சுஜாதாம்மா சுஜாதாம்மா "

" சொல்லுங்க சகாயம் சார் "

" நீங்கதான்மா எனக்கொரு வழி சொல்லணும் ? "

" வழி தானே ? நேரா போயி  இடது பக்கம் கட் பண்ணுங்க "

" அட நீங்க வேற ஏன்மா காலையிலேயே பாடா படுத்துரிங்க ?

" நான் இன்னும் பாடவே ஆரம்பிக்கலையே "

" ஐயோ அந்த கொடுமை வேறயா ம்மா ? "

" ஓஹோ நான் பாடுறதை கேட்க அவ்வளவு கஷ்டமா ? இருங்க என் வீட்டுகாரருக்கு போன் போடுறேன் "

"அய்யயோ வேணாம்மா " என்று கிட்ட தட்ட அலறினார் சாகயம்.....

 ( சுஜாதாவின் கணவர் ரவிராஜ் சுஜாதா மீது அளவு கடந்த அன்பு வெச்சிருக்கார்னு நான் போன எபிசொட் ல சொன்னேன் ஞாபகம் இருக்கா ? இந்த விஷயம் அவங்க ஆபீசில் இருக்குற  எல்லாருக்குமே தெரியும்... எப்படின்னா, ஒருமுறை ஒரு ப்ராஜெக்ட் பைல் விஷயத்துல சுஜாதாவினால்  ஏதோ மிஸ்டேக் வந்துவிட, சுஜாதாவின் டீம் லீடர் அவங்களை கண்ணாபினான்னு திட்டிடார். அதன் விளைவாக சுஜாதா முகம் சோர்ந்து வீட்டுக்கு திரும்ப, காரணம் அறிஞ்ச ரவிராஜ் ராத்திரியோடு ராத்திரியா அந்த டீம் லீடர் வீட்டுக்கு போயி ஒரு களேபரம் பண்ணிட்டாரு..அதுக்கப்பறம் நம்ம ராம லட்சுமணர்கள், அதாங்க நம்ம கிருஷ்ணா , ரகுராம் தான் அந்த பிரச்னையை சீராக்கி நம்ம சுஜாதாவுக்கும் ப்ரமோஷன் கொடுத்து ரகுராமின் பி. ஏ ஆக்கிட்டாங்க ..... ஆனா ஒன்னு இப்படி ஒரு பிளஸ் பேக்கில்   ப்ரமோஷன் வாங்கின முதல் ஆளு நம்ம சுஜாதான். இந்த விஷயம் ஆபீஸ் முழுக்க பரவிட, அன்று முதல் இன்று வரை சுஜாதாவின் கணவர் நா எல்லாருக்கும் அப்படி ஒரு பயம் .. வேணும்னா மரியாதைன்னு மாத்தி சொல்லுவோம் ... ஒரு தாதா ரேஞ் கு பில்ட் அப் கொடுத்துட்டேநேன்னு அவர் என்னை ஆளு வெச்சு தூக்கிட போறாரு ... அண்ணா மன்னிச்சிருங்க அண்ணா ...நான் கதைக்கு வரேனுங்க அண்ணா )

" பார்க்க பாவமாகத்தான் இருக்கு .. பொழைச்சு போங்க சார் .. சரி சொல்லுங்க என்ன விஷயம்? "

" உங்க கிட்ட சொன்னா தப்பு இல்ல .,.. நீங்க அய்யாவின் பி. ஏ ..... இந்த பெட்டியை அய்யா பத்திரமா வைக்க சொன்னாரு "

" எங்க கொடுங்க ............ அழகா இருக்கே ? என்ன இது  ? "

" தெரியலைங்க மா .. யாருகிட்டயும் சொல்லாம மறைச்சு வைக்க சொன்னாரு ? "

" அய்யயோ அப்போ ஏன் என்கிட்ட சொன்னிங்க ? "

" உங்களை எனக்கு தெரியாதாம்மா? "

" ஹா ஹா பில்ட் அப் ஜாஸ்தியா இருக்கே ? சரி இப்போ நான் என்ன பண்ணனும் ? "

" எனக்கு இப்போதைக்கு பாதுகாப்பான இடம் கிடைக்கல மா "

" இவ்வளோ பெரிய ஆபீஸ் ல ஒரு பெட்டி வைக்க இடமில்லையா ? "

" உங்களுக்கு தெரியாதது இல்லம்மா .. நம்ம ஆபீஸ் ல எங்க என்ன நடக்குதுன்னு வேவு பார்க்க ஒரு கும்பலே இருக்கு "

" ம்ம்ம்ம்"

" அவங்க யாரும் பார்த்துட்டா  அப்பறம் பிரச்சனைம்மா.... அய்யா என்னை நம்பி இந்த வேலையை தந்தாரு ...அதுனால "

" அதுனால ? "

" இதை உங்க ரூம்ல வெச்சுக்கிரிங்களா ? "

"ம்ம்ம்ம்ம்ம்ம்....... சரி சகாயம் ..... என்கிட்ட கொடுங்க ..... எதாச்சும்னா நான் பார்த்துக்குறேன் " என்றபடி அந்த பெட்டியை வாங்கிய சுஜாதா தன் அருகில் இருந்த அலமாரியின் இரண்டாம் அடுக்கில் பெட்டியை வைத்து விட்டு சிறிது நேரத்தில் அதை பற்றி மறந்தும் போனாள் .

குராம் ரூமில் இருந்து, பெட்டியை எடுத்து கொண்டு வெளியில் சகாயம் வந்தபோதுதான் ஜானகி அதை பார்த்தாள்.  அதற்குள் ரிசப்ஷனில் இருந்த பெண் அவர்களை அழைக்கும்போதுதான், சுஜாதா ரகுராம் அறைக்கு சென்று பேசிவிட்டு வந்தாள். அதன் பிறகு சகாயம் சுஜாதாவிடம் பெட்டியை கொடுக்கவும், ஜானகி ரகுராமின் அறைக்கு செல்லவும் சரியாக இருந்தது. ரகுராம் ரூமில் அர்ஜுன், ஜானகி, ரகு என்ன பேசுனாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி , ஜானகி உள்ளே சென்றதும் ரிசப்ஷன் ல என்ன நடந்துச்சு பார்ப்போம்.

" குட் மோர்னிங் ப்ரீ "

" ப்ரியான்னு கூப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்றது வாணி ? " என்று கிட்ட தட்ட எரிந்து விழுந்தாள் , ப்ரியா என்கின்ற விஷ்ணு ப்ரியா....

( ஏதாவது வம்பு கதைகளை தேடி பேசுவது என்றால் வாணிக்கும் அவளின் தோழிகளுக்கும் கை வந்த கலை ... அதுவும்  தங்களது முதலாளிகளான கிருஷ்ணன் ரகுராம் இருவரையும் பார்த்து வழிவதும் கமெண்ட் அடிப்பதும் இவர்களின் குணமும் கூட ... இவர்களின் குணத்திற்கும் தனக்கும் ஒத்து வரததாலோ என்னவோ எப்பதுமே ஒரு எல்லையுடன் பழகுவாள் விஷ்ணுப்ரியா )

" ஆமா உன் பேருதான் இப்போ ரொம்ப அவசியம் ..... சரி ப்ரீ  இப்போ வந்திச்சே அந்த பாப்பா யாரு ? கூட ஒரு ஹேண்ட்சம் வேற வந்தாரே ? "

" ப்ச்ச் ..அவங்க பேரு ஜானகி ... சுஜாதாவுக்கு பதிலா நம்ம கம்பனில ஜாயின் பண்ண போறாங்க ... அவங்க கூட வந்தங்களை எனக்கு தெரியாது "

" உன்னை கேட்டேன் பாரு ...சரியான பழம் டி நீ .....  ஒரு வேளை அவளின் புருஷனா இருக்குமோ ? இருக்கும் இருக்கும் ...அவளை பார்த்தா கல்யாணம் ஆணவ மாதிரிதானே குங்குமம் லாம் வெச்சிருந்தா.... ஆனா தாலி இல்லையே .. " என்று கேட்ட வாணியை வெட்டவா குத்தவா என்று கொலை வெறியில் பார்த்தாள் விஷ்ணுப்ரியா... ஜானகி அங்கு இருந்ததே 5 நிமிடம் கூட இருக்காது. அதற்குள்ளேயே  அங்குல அங்குலமாய் அனைத்தையும் பார்வையால் படமெடுத்த வாணியை பார்க்கவே எரிச்சலாக வந்தது.

அதற்குள் வாணியே " அது சரி இந்த காலத்துல எங்க இந்த பொண்ணுங்க தாலி எல்லாம் போடுதுங்க.... இருந்தாலும் ரகு சார் பாவம் தான் ..அவருக்கு வர்ற பி. ஏ எல்லாம் புருஷணோடுதான் வராங்க " எனவும் எரிச்சலில்

" உங்க வேலைய பாருங்க " என்று சத்தமாகவே உரைத்தாள் விஷ்ணுப்ரியா... இதெல்லாம் எனக்கொரு விஷயமே இல்லை என்பதுபோல் அலட்சிய பார்வையை செலுத்திய வாணி அவள் தோழிகளிடம் ஜானிகியை பற்றி பேச ஆரம்பித்தாள்.... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.