(Reading time: 49 - 97 minutes)

 

ரு வழியாய் அவள் குரலில் இருந்த கோபம் காணாமல்  போனதை உணர்ந்தவன்,

" இல்ல ஜானகி உனக்காகன்னு இல்ல ... நான் விரும்பின பொண்ணுக்கும் பாரதியார் பாட்டுனா உயிர் ... அவ ஞாபகம் என்னை சுத்தி இருக்கனும்னுதான் இதெல்லாம் என் ரூம்ல வெச்சிருந்தேன் . பட் இப்போ அளவுக்கு அதிகமான அவளின் ஞாபகம் எனக்கு கஷ்டமா இருக்கு .. அதுவும் ........... "

" அதுவும் ? "

" ......."

" மனசு விட்டு பேசுங்க ரகு "

" இல்ல, கிருஷ்ணா அண்ணா- மீரா அண்ணி, அர்ஜுன் - சுபா நு திடீர்னு எல்லாரும் செட்டல் ஆனதும் அவளை ரொம்ப மிஸ் பண்றேன் . அதுவும்  கண்முன்னாடியே இருந்தும் என்னாலே என் காதலை சொல்ல முடிலையே" என்று அவன் இருபோருளில் கூற, ஜானகி வழக்கம் போல அதன் பொருள் உணராமல் அவனின் துயரை மட்டும் நெஞ்சில் தாங்கி கொண்டு வருந்தினாள்....

" நானாவது  இறந்து போனவரை நினைச்சுட்டு இருக்கேன் .,...ஆனா ரகு உயிரோட உள்ளவள் கிட்ட காதலை சொல்ல முடியாம மருகுறாரே " என்று மனதிற்குள் பேசியவள்,

" சரி ரகு அப்போ இதெலாம் நான் என்கிட்ட வெச்சுக்கவா? உங்களுக்கு தேவைப்படும்போது கேட்டுகோங்க " என்றாள்.

"  இருக்கட்டும் ஜானு .. நீயே வெச்சுக்கோ அதுதான் சரி " என்று புன்னகைத்தான் ரகுராம் . வழக்கம் போல அவனின் பார்வையை புரியாமல் அவள் தலை அசைத்தாள்.

( கவலை படாதிங்க ரகுராம் .... கிருஷ்ணா காதலுக்கு எல்லாரும் பிளான் போட்டாங்களே , கடைசியா உங்க காதலுக்கு யாரு பிள்ளையார் சுழி போடுவாங்க தெரியுமா ? உங்க அண்ணிதான் !!! )

ப்படின்னு திருதிருன்னு விழிக்காம, எல்லாரும் உங்க கடிகாரத்தை ரிவர்ஸ் ல திருப்புங்க ... நாம நம்மளோட நீலாம்பரியை கொஞ்சம் பார்த்துட்டு வருவோம் .

" என்னடி சொல்லுற இன்னைக்கும் லீவா  ? யாரை கேட்டு என் ஆபீஸ் ல நீ எனக்காக லீவ்  சொன்ன  ? " என்று மீரா கோபத்துடன் கேட்க, அந்த கோபம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு அலட்சி பார்வையை செலுத்தினாள் நித்யா.

" கேக்குறேன்ல பதில் சொல்லு "

" என்ன டீ சொல்ல சொல்ற ? யம்மா ...கண்ணா டீ இது ? அப்படியே நெருப்பு துண்டுகளாய் விழுது பாரு ... எப்படித்தான் என் அண்ணாவுக்கு உன்னை பார்த்து லவ் வந்திச்சோ  தெரில "

" நீ பேச்சை மாத்தாதே ......"

" சரி மாத்தல...உனக்கென்ன தெரியனும் இப்போ ? உனக்கு லீவை சொல்ல நான் யாரை கேக்கணும் ... அந்த ராமசாமியின் பையனே சும்மாதானே இருந்தான் ? "

" ராமசாமி பையனா ? "

" ஐயோ நீ கஜினி படம் பார்த்தது இல்லையா? "

" அதுகென்ன இப்போ ? "

" அதுல சூர்யா பேரு சஞ்சய் ராமசாமி தானே ... அதான்....உன் பாஸ் பேரும் சஞ்சய் தானே ? "  என்று தெனாவட்டாய் கேள்வி கேட்பவளிடம் எவ்வளவு நேரம்தான் கோபத்தை பிடித்து வைத்து கொண்டு பேசுவது .... ?

" ஷபா... இப்போ என்னம்மா வேணும் உனக்கு ? "

" அப்படி  வா வழிக்கு ..... எனக்கு வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குதுடி.. வெளிய போலாமா ? "

" ஆமாடி ..நீ சின்னத்தம்பி குஷ்பூ நான் பிரபு ..உன்னை நான் ஊரு சுத்தி காட்ட போறேன் "

" குஷ்பூ கேரக்டர் கு நான் ஓகே பட் நீ பிரபு சார் ஆகா முடியாது ... அவர் சிரிச்ச மூஞ்சி எங்கே ? உன் உம்முனாமூஞ்சி எங்கே? "

" ஏய் அடி வாங்க போற நீ "

" சரி கூல் கூல் .... வா ரெடி ஆகலாம் "

" என்னடி ப்ளான் ..எங்க ரெடி ஆகணும் ? "

" நீ எல்லாம் எந்த காலத்துல டீ ப்ளான் போட்டுருக்கே ? எங்க இருந்தாலும் நீ வந்துதான் ஆகணும்... எவ்ளோ கஷ்டபட்டு அந்த கஜினி சூர்யாகிட்ட நான் பேசினேன்  தெரியுமா ? "

" ஆமா ..என்ன ரிசன் டீ சொன்னே ? "

" சொன்ன நீ என்னை அடிப்ப "

" சொல்லலேனாலும் நான் அடிக்கத்தான் செய்வேன் "

" ராட்சசி ... உன்கிட்ட மாட்டிகிட்டு கிருஷ்ணா அண்ணா என்னதான் பண்ண போறாரோ ?....."

" பேச்சை மாத்தம விஷயத்தை சொன்னா , உனக்கு விழுற அடியில நான் டிஸ்கவுன்ட் தர்றேன் " என்றபடி மீரா கைகளை தேய்த்து கொள்ள

" அது அது ... நீ குளிக்கும்போது வழுக்கி விழுந்துட்டதா சொன்னேன் டீ நீலாம்பரி " என்றபடி மீராவிடம் தப்பித்து ஓடிவிட்டாள் நித்யா. சிறிது நேரம் அவளை துரத்தி ஓடியவள் தன் மனமார நித்துவை சாத்து சாத்து என்று சாத்திவிட்டு  அவளுடன் வெளியே செல்ல தயார் ஆனாள்.

ந்த  அரபிக்கடலோரம்

 ஓர்   அழகைக்  கண்டேனே

என்று பாடியவனின் குரலை கேட்டதுமே, பின்னால் நிற்பது கிருஷ்ணன் தான் என்று புரிந்து  கொண்டாள் மீரா ...

" நீ உச்சி வெயில்ல பீச் கு போகலாம்னு சொன்னபோதே நெனச்செண்டி " என்று அவள் நித்யாவை பார்க்க

" ஹீ ஹீ " என்று அசடு வழிந்தாள் நித்யா....

" ஓ வாட் எ சர்ப்ரைஸ் ... தங்கச்சி நீ எங்கம்மா இங்க ? " என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கிருஷ்ணன் கேட்க, நித்யா பதில் சொல்வதற்குள்

" ஓஹோ நாங்க இங்a  இருக்குறதே உங்களுக்கு தெரியாது இல்லையா கிருஷ்ணா ? " என்று விஷமமாய் சிரித்தாள் மீரா ... கடற்கரை காற்று அவள் கூந்தலை கலைக்க, அதை அலட்சியமாய்  ஒதுக்கிவிட்டு மீரா ஏறிட, கிருஷ்ணன் மனம் காற்றோடு காற்றாய் மிதந்தது...

" கடற்கரை காற்றே

வழியை விடு ..

தேவதை வந்தாள்

என்னோடு " என்று அவன் உணர்ந்து பாட ,

" மணல்வெளி யாவும்

இருவரின் பாதம்

நடந்ததை காற்றே

மறைக்காதே " என்று மீரா இணைந்து பாடினாள்....

" அண்ணா நான் இதோ வந்திடுறேன் "

" எங்க போற டா ? "

" இல்ல உங்க ஆளு அதிசயமா உங்க கூட டுயட் பாடுறாளே, அதான் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுரதுகுள்ள நான் குடை வாங்கிட்டு வந்திடுறேன் "

" அதுக்கு மழை ஏண்டி கொட்டனும் ? அதான் நான் இருக்கேனே " என்ற மீரா நித்யாவை துரத்தி பிடிக்க எத்தனிக்க, அவளின் புடவை தடுக்கி விழ போக கிருஷ்ணன் அவளை பிடித்து நிறுத்த முயற்சிக்கும்போது மீரா எதிர்திசையில் நிற்க முயற்சித்து அவள் பாதை சுளுக்கி கொண்டது ...

" அம்மா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.