(Reading time: 49 - 97 minutes)

 

" ரி பாட்டு கேக்கலாமா ? " என்று கேட்டவன் வானொலியை உயிர்பிக்க, அந்த பாடலின் இரண்டாம் சரணம் ஒலித்து கொண்டிருந்தது.

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே

வானவில்லை குடையாய் தைப்பேனே

உனக்காக எதும் செய்வேன்

நீ எனக்கென செய்வாயோ??

இந்த ஒரு ஜென்மம் போதாது

ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது

அந்த தெய்வம் உனைக் காக்க

தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா?

இன்னமும் என் மனம் புரியாதா?

அட ராமா இவன் பாடு

இந்த பெண்மை அறியாதா?

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்

இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்

உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்

உன் தேகம் முழுக்க நான் ரெக்கான் பதிப்பேன்

உல்லாஹி உல்லாஹி உல்லாஹி

உல்லாஹி உல்லாஹி உல்லாஹி

ஜானகி அந்த பாடலை ரசிக்க, ரகுவோ அந்த பாடலின் வரிகளில் தொலைந்து போனான் .... அவனின் மௌனத்தின் காரணம் அவளுக்கும் புரியத்தான் செய்தது .... பெயர் தெரியாத அந்த பெண்ணின் மீதும், இப்படி ஒரு விதியை அமைத்த கடவுள் மீதும் கோபம்தான் வந்தது ஜானுவிற்கு.

இப்போதைக்கு அவன் மனநிலையை மாற்ற வேண்டும் என்று அவள் நினைக்கும்போதே ரகு,

" இந்த படம் பார்த்தியா ஜானு " என்றான்.

" ம்ம்ம் பார்த்தேன் ... "

" அந்த ஷாமும் நானும் கிட்ட தட்ட ஒன்னுதான் போல "

" ப்ச்ச் ...இப்போ ஏன் இப்படி சொல்றிங்க ரகு ? "

" பின்ன ? ஷாமுக்கு த்ரிஷா மேல அளவு கடந்த காதல் வரும் பட் என்ன பிரோஜனம் , த்ரிஷா மனசுல தான் மாதவன் இருப்பார் ல "

" அப்படியே நீங்க ஷாம் மாதிரினா , கிளைமாக்ஸ் ல உங்க த்ரிஷா உங்க கிட்ட வந்திடுவாங்க ..சரியா ? " என்று சிரித்தாள்...

" எப்படி இவ்வளோ ஈசியா சொல்லுற ஜானு ? "

" எனக்கு தோணுது ரகு .. நீங்க எவ்வளோ சின்சியரா அந்த பொண்ணை விரும்புரிங்க ? கண்டிப்பா அந்த உணர்வே உங்களை சேர்த்து வைக்கும்... உங்களை போயி யாருக்காச்சும் பிடிக்காம போகுமா ? "

" ஹா ஹா ஹா "

"  என்ன சிரிப்பு? "

" இல்ல நீ கேட்ட விதம் சிரிப்பு வந்துடுச்சு.... பட் இந்த உலகமே என்னை விரும்பனும்னு நான் எதிர்பார்கல ஜானு ... அவளுக்கு பிடிச்சா  போதும் "

" அவள் வருவாளே அவள் வருவாளே

உன் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளே " என்று பாடி சிரித்தாள் ஜானகி ...

 அவளின் புன்னகையை மனதிற்குள் பூட்டி வைத்தவன் "நீ எப்போதுமே சந்தோசம் சிரிச்சுகிட்டே இருக்கணும் ஜானகி " என்று மனதிற்குள் சொல்லிகொண்டான்.

 ஜானகியும் " இப்போ நீங்க சிரிக்கிற சிரிப்பு  மனசார வரலன்னு எனக்கு தெரியும் ரகு ... நானே அந்த பெண்ணை கண்டுபிடிச்சு உங்க பொய்யான சிரிப்பை உண்மையாக்குறேன் " என்றாள்....( ஆனா இனி வரும் நாளில் இருவருமே அவங்க நினைச்சதை நடத்துவாங்களா ? சிரிப்பையே மறந்திடுவாங்களா ? பொறுத்திருந்து பார்ப்போம் )

ஜானகியை இறக்கிவிட்டு  வீடு திரும்பிய ரகுவரன், ஹாலில், பெஞ்ச் மீது வலது காலை வைத்து அமர்ந்திருந்த, மீராவை பார்த்து,

" ஹாய் மீரா ...உங்க காலுக்கு என்னாச்சு ? " என்றான்.

நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள் மீரா .

" பார்த்து இருந்துருக்கலாம் ல  மீரா " என்றவனின் குரலில் தெரிந்த வருத்தத்தில் மனம் கனிந்தாள் மீரா .. ரகுராம் மட்டும் அல்ல .. அபிராமி, சிவகாமி, சூர்யா பிரகாஷ், சந்திர பிரகாஷ், கிருஷ்ணன் , நித்யா என்று  அனைவருமே அவள் மீது காட்டிய அன்பும் அக்கறையும் அவளை நெகிழ வைத்தது. இனிமேலும் கிருஷ்ணனை இப்படி ஏங்க வைப்பதும் தப்புதான் என்று குற்ற உணர்ச்சி கொண்டாள்.. இதுவரை  தன் முடிவே சரி  என்று நினைத்தவள் முதல் முறை அவள் முடிவு  தவறோ என்று சிந்திக்க தோன்றினாள்..இவை அனைத்தும் தான் பாசத்தை நாடி இருந்த அவளின் உள்ளம் கிருஷ்ணனின் குடும்பத்தோடு ஒன்றித்தான் போனது .. சில மணி நேரம் என்றாலும் கூட, அந்நேரமே அவளின் மனமாற்றத்திற்கு அஸ்திவாரம் போட்டது.

( போதும் போதும் பீலிங்க்ஸ் நு யாரோ திட்டறது எனக்கு கேட்குது ..சோ வாங்க கதைக்கு போவோம் )

ரகுராம் " பார்த்து  இருந்துருக்கலாம்ல " என்று சொல்லும்போதே ,

" உன்னை  எல்லாம் பார்த்தா இதை விட டேஞ்சர் ஆகிருக்கும் மேன் " என்று துள்ளி குதித்தபடி ரகுராமின் கேசத்தை கலைத்துவிட்டு ஓடினாள் சுபத்ரா ... ரகு சுபாவை  துரத்தி பிடிக்க முயல, சுபா நித்யாவின் உதவியுடன் அவன் கைகளில் அகப்படாமல் போக்கு காட்டி கொண்டிருந்தாள்.  அந்த கைகலப்பான சூழ்நிலையிலும் , மன்னிக்கவும் கலகலப்பான சூழ்நிலையிலும் நம்ம கிருஷ்ணன் அவரின் மீராவை பார்வையால் தழுவுவதை நிறுத்தவில்லை. ஒரு வழியாய் ரகுவும் சுபாவும் சமாதானம் ஆகி விட,

" ஹாய் அண்ணி " என்றபடி மீராவின் அருகில் அமர்ந்த சுபாவை  ஜூனியர்ஸ் மற்ற மூவரும் ( அதாவது கிருஷ்ணா , ரகு , நித்யா )

" இப்படி பத்த வெச்சிட்டியே பரட்டை " என்ற ரேஞ்சுக்கு லுக் விட,

" ஆமா நானே சொல்லணும் நெனச்சேன். ரகு சும்மா மீரா நு பேரை சொல்லி கூப்பிடாம அவளை அண்ணின்னு கூப்பிடு " என்றார் குடும்பத்தலைவர் சூர்ய பிரகாஷ் .

" என்னப்பா சொல்றிங்க ? " என்று ஆச்சரியமும் சந்தோஷமுமாய் கிருஷ்ணா கேட்க

" ஆமாடா... நம்மளுக்கு தெரிஞ்சவங்க எல்லாருகிட்டேயும்  அப்பா, மீரா நம்மளோட தூரத்து சொந்தம்னு சொல்லிருக்கார் ல... சோ எல்லாரும் அப்படியே கூப்பிடட்டும்.. " என்ற அபிராமி ( அவ்வளோ சீக்கிரம் உங்க காதல் கதை எங்க எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டோம் மகனே என்று மனதிற்குள் சிரித்து கொண்டார் )

அவ்வளோதானா ? என்று தோன்றியது ஐவருக்கும்.

" அப்போ இனி அண்ணி நம்ம கூட தானே பெரியம்மா இருப்பாங்க? "

" ஆமாடா செல்லம்... நித்து , மீரா எல்லாரும் இங்கதான் இருப்பாங்க "

"  ஒரு தேவதை வந்து விட்டாள்  " என்று பாடலை ரகுராம் முணுமுணுக்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.