(Reading time: 8 - 15 minutes)

02. ஷைரந்தரி - சகி

ண்களுக்குள் பழைய நினைவுகள் போரிட அமர்ந்திருந்தான் சிவா.சுற்றி சுற்றி அவன் நினைவுகள் பிரதிபலித்தது தன் தங்கை ஷைரந்தரியை!!!!

கனவுகள் கனவாய் போகாதா?என்ற ஏக்கத்தோடு வெற்றுத்திரையை வெறித்திருந்தார் ரகுநாத்...அவர் மனம் சென்ற திசையில் உதித்தவள் ஷைரந்தரி!!!!

தன் தங்கை ரேணுகாவிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாலும் அர்ஜீனின் மனம் சென்றது ஷைரந்தரியிடமே!!!

shairanthari

தன் மகனை திட்டிக்கொண்டு இருந்த போதிலும் அனுராதாவின் மனம் போனது ஷைரந்தரியிடமே!!!!

      தன் மகன்,மகளை கேலி செய்து கொண்டிருந்தப் போதும்,மஹாலட்சுமியின் மனம் சென்றது ஷைரந்தரியிடமே!!!!

        அமைதியே உருவாய் அமர்ந்திருந்தாலும் பார்வதியின் மனம் சென்றது ஷைரந்தரியிடமே!!!!

        வெவ்வேறு வேலைகளில் மும்முரமாய் இருந்தாலும்,யுதீஷ்ட்ரனின் மனம் சரண் அடைந்ததும் ஷைரந்தரியிடம் தான்!!!!(இதை படிச்சவுடனே எல்லாரும் சரி,யுதீஷ் ஏன் ஷைரந்தரியை பற்றி யோசிக்கிறான் என்று சிலர் கண்ணடித்திருப்பீர்கள்,மற்றும் சிலர்,ஆ....இவன் யோசிக்காம வேற யார் யோசிப்பா?என்று உள்ளூர சிரித்திருப்பீர்கள்.அதெல்லாம் கண்டுக் கொள்ள கூடாது.)

   இவ்வாறு பல மனங்கள் ஷைரந்தரியை பற்றி மட்டுமே சிந்திந்து கொண்டிருந்தன.யார் இந்த ஷைரந்தரி??அனைவருக்கும் செல்லப் பெண்ணாக இருக்கிறாள்?அப்படி என்ன இவள் செய்தாள்?(புரியுது,ஹீரோயின் இன்ட்ரோடக்ஷன் சீக்கிரம் தான்னு நீங்க கடுப்பாகுறது,தெளிவா புரியுது!தந்துடுறேன்.)

ங்கும் மண்டை ஓடு,எலும்புக் கூடு,குருதி வாசனை அசுர யாகங்கள்,அதர்வண காளியின் கற்சிலை.(ஆ....பயப்பட வேண்டாம்,இது ஹீரோயின் இன்ட்ரோ இல்லை...)

"குருதேவா!"

"ஆ..."-கோரமாக கத்தியது அந்த உருவம்.

"என்ன?"

"ஷைரந்தரி பாஞ்சாலபுரத்திற்கு வருவதற்கு செய்தி!"

"ஆ...."

"பாஞ்சாலபுரத்தையே கோலாகலமாய் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்."

"ஷைரந்தரி..."-கோபத்தோடு,அவனிருந்த மலையே அதிரும்படி கத்தினான்.

'த்தா விருத்தம் பிரக்கதவ்யம் சங்கடே பஷ்ட நாஷனம்,சுஜிர்பூத்வாம் படேஸ் ஸ்தோத்ரம்,சர்வ சித்தி பிரதாயக்கம்,மிருத்யுன் ஜெய மஹாதேவ பிராகிவாம் ஷரணாகத்தம்,ஜென்ம விருத்யு ஜெராரோகை வீணித்தம் கர்ம வந்தனை.'-மிருத்யுன் ஜெய மஹா ஸ்தோத்திரத்தின் கடைசி பத்தியினை படித்துவிட்டு,வந்தார் நீலக்கண்டச்சாரியார்.

"ஐயா...!"

"என்னப்பா?"

"உங்களை பார்க்க பெரியவர் விஸ்வநாதனும்,அவர் மனைவியும் வந்திருக்ககாங்க..."

"வர சொல்லுப்பா!"-ஐயா,என்றழைத்தவன் சென்று இருவரை அழைத்து வந்தான்.

"வணக்கம்...சுவாமிஜி!"

"வாங்க..உட்காருங்க.என்ன விஷயம்?"

"அது ஒண்ணுமில்லைங்க...ஷைரந்தரி ஊர்ல இருந்து வரா!அதான்...அவ இப்போ வருகிறது உசிதமான்னு கேட்கலாம்ன்னு வந்தோம்!"

"ஷைரந்தரி ஜாதகம் இருக்கா?"

"கொண்டு வந்திருக்கோம்..."

"தாங்க!"-அவர்,ஏதோ புத்தகத்தை நீட்டினார்.

திக நேரம் அந்தப் புத்தகத்தில் மூழ்கியிருந்தார் நீலக்கண்டச்சாரியார்.ஏதேதோ செய்து பார்த்தார்.இறுதியில் அவர் முகம் அதிர்ந்த பாவனை ஒன்றை தந்தது.

"என்னாச்சுங்க?"

"உங்க பேத்தி..."

".........."

"அவ இங்கே வந்தா....சில பிரச்சனைகள் வரும்."

"என்ன?"

"கவலைப்படாதீங்க...ஆனா,ஷைரந்தரி இந்த மண்ணை மிதிக்கணும்.அதான்,விதி.அவ வந்தப்பிறகு,ஒரு நாள் நான் அவளை வந்து சந்திக்கிறேன்."

"நீங்களா?"

"ஆமாம்...சில உண்மைகள் அவளைப் பற்றி தெரிய வேண்டியது இருக்கு!"

"சரிங்க..."

"பயப்படாம போயிட்டு வாங்க..."

"சரிங்க..."-அவர்கள் விடைப்பெற்று சென்றனர்.

வெளியே......

"என்னங்க..."

"என்ன சிவகாமி?"

"நம்ம ஷைரந்தரிக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?"

"ஷைரந்தரி பிறப்பே வித்தியாசமானதுன்னு உனக்கு தெரியாதா?"

"தெரியுங்க...ஆனா?அந்த குழந்தைக்கு மட்டும்..."

"இதோ பாரும்மா....எது நடந்தாலும் அதை சமாளிக்கிற தைரியம் ஷைரந்தரிக்கிட்ட இருக்கு.அதான்,அவளுக்கு மஹாபாரதியான திரௌபதி பேர் வைச்சிருக்கேன்.பயப்படாதே!"

"சரிங்க...."

"டேய் மச்சி!வெளியே போயிட்டு வரலாம் வரீயா?"

"இல்ல...மச்சான் வரலை."-தன் நண்பன் ராகவன் தொடுத்த கேள்விகளுக்கு வெறுப்பாகவே பதிலளித்தான் யுதீஷ்ட்ரன்.

"ஏன் மச்சி...கடுப்பா இருக்க?"

"அது ஒண்ணுமில்லைண்ணா!அண்ணா!ஒரு பொண்ணை நினைச்சிட்டு இருக்கு!"-குறும்பாக பதில் கூறியப்படியே அவர்களுக்கு காப்பி எடுத்து வந்து தந்தாள் பார்வதி.

"ஆங்...நிஜமாகவாக தங்கச்சி!!யார் மச்சி அந்தப் பொண்ணு?"

"ஏன்டா...அவ தான் வெறுப்பேற்றுகிறாள்.நீயும் யாருடா அவன்னு வாயை பிளக்கிற?"-ராகவன் பார்வதியை பார்த்து,

"என்னம்மா?"

"பொய் சொல்றான் நம்பாதீங்க...ஏன்ணா!!!!நீ ஷைரந்தரி பற்றி தானே நினைச்சிட்டு இருக்க?"

"ஷைரந்தரியா?ஆ...ஐயயோ...இந்த பேரை எங்கேயோ கேட்டிருக்கிறேனே!!!ஞாபகம் வர மாட்டிங்குதே!"

"திரௌபதி பேர்ணா!"

"ஆ...ஏன் மச்சி...என்ன உன் பேருக்கும்,அந்த பொண்ணு பேருக்கும் மேட்சிங் பார்க்கிறீயா?"

"டேய்...வேண்டாம்டா!"

"அப்போ அதான்...சீக்கிரம் இவன் பேச்சுலர் பார்ட்டி தந்துவிடுவான் போலிருக்கே?"

"டேய்...இப்போ என்ன உனக்கு நான் கடுப்பாக காரணம் தானே?"

"ம்..."

"ஷைரந்தரி தான்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.