"இதையே தான் நாங்களும் சொன்னோம்..."
"நீங்க நினைக்கிறா மாதிரி இல்லை...அவ மேல செம கொலைவெறில இருக்கேன்."
"ஏன்டா?"
"மூச்சுக்கு முந்நூறு தடவை,எல்லாரும் ஷைரந்தரி,ஷைரந்தரின்னு அவ பேரையே சொல்லிட்டு இருக்காங்க...இங்கே அவளால,என் அம்மாக் கூட என்னை கவனிக்கிறத்தில்லை.இந்த ஊரோட இளவரசின்னு கொண்டாடுறாங்க...வரட்டுமே அவ திமிரை நான் அடக்குறேன்."-அவன்,இவ்வளவு கோபமாக பேசுவான் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
"மச்சி..அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இருக்கப் போறாடா..."
"பார்ப்போம்...அத்தை இல்லை.அண்ணன் வளர்ப்பு தானே எப்படி இருப்பான்னு தெரியாதா?இதுல,அமெரிக்காவுல வேற வளர்ந்திருக்கா!"
"அண்ணா!நான் கூட உன் வளர்ப்பு தானேண்ணா!"
"உலகத்தில இருக்கிற எல்லாரும் யுதீஷ்ட்ரன் ஆக மாட்டாங்கம்மா!"
"அண்ணா!"-அவன்,எதையும் காதில் வாங்காதவாறு எழுந்து சென்றுவிட்டான்.
"இவன்,என்னய்யா இவ்வளவு ஈகோ பிடிச்சவனா இருக்கான்."-பார்வதி யுதீஷ்ட்ரன் செல்வதையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"விடும்மா!அவன் சரியாகிவிடுவான்."-அது சந்தேகமே என்பதை போல பார்த்தாள் பார்வதி.
"சென்ட் த ஃபைல் டூ மை ஹோம் பிரான்சிஸ்."
" ............."
"எஸ்...ஷி இஸ் ஃபைன்."
"தேங்க் யூ."-போனை வைத்துவிட்டு ஷுவை(shoe) மாட்டிக் கொண்டிருந்தான் சிவா.
"என்ன சிவா?"
"என்னப்பா?"
"வெளியே கிளம்புறீயா?"
"இல்லப்பா....அம்மூ குளோப் ஜாமுன் வேணும்னு கேட்டா...செய்ய போறேன்.வரீங்களா?"
"ம்...அவளுக்கு நீ செய்ய போறீயா?ரொம்ப செல்லம் கொடுக்கிற நீ!"
"குளோப் ஜாமுன் செய்யறதுல்ல என்ன செல்லம் இருக்கு?அவ குழந்தைப்பா!பேச்சுக்குக் கூட பொய் சொன்னதில்லை.தப்பு பண்ணா தண்டனையை அவளே ஏத்துக்குவா!அவளை பிடிக்காதவங்கன்னு இது வரைக்கும் அவ பழகுனவங்க அத்தனை பேர்ல ஒருத்தரை காட்டுங்க....என்னோட செல்ல தங்கச்சியை பார்த்து ஏதாவது சொன்னா,சும்மா இருக்க மாட்டேன்.பார்த்துக்கோங்க..."
"டேய்! நான் உன் அப்பாடா!"
"இருக்கட்டும்பா!ஆனா,அவ என் தங்கச்சி!"
"சரிதான்...நல்ல அண்ணன்,இப்படியே இருங்க சூப்பரா இருக்கும்."
"நன்றி!"
காலை நேரத்தில் குயில்களின் சப்தத்தோடு கண்விழித்தல் என்பது எவ்வளவு அருமையான நிகழ்வு...ஆனால்,அவளால் அதை அனுபவிக்க முடியவில்லை.
இருப்பினும்,அமெரிக்காவில் கிடைக்கப்பெற்ற சிறிது இயற்கை வளத்தை உள்வாங்கி,மெல்ல காலடி எடுத்து வைத்தாள் அவள்.அவள்?யாரவள்?நமது கதாநாயகி,ஷைரந்தரி.
"குட்டிம்மா..."-அழைத்த தன் அண்ணனை பார்த்து முறைத்தாள்.
"என்னாச்சு?"
"எத்தனை முறை சொல்லி இருக்கேன்...குட்டிம்மான்னு கூப்பிடாதேன்னு நான் என்ன அவ்வளவு சின்ன குழந்தையா?"-குழந்தையின் சிணுங்களோடு ஒலித்தது அவள் குரல்.
"ஆமா நீ குழந்தை தான்! விவரம் தெரிந்த,வளர்ந்த குழந்தை அவ்வளவு தான்."
"போ!எப்போ பார்த்தாலும் இதையே சொல்ற!"
"வேற என்ன சொல்ல சொல்றீங்க?என் செல்லத்துக்கு பொய் சொன்னா பிடிக்காது...அதான் உண்மையை சொல்றேன்!"-அவள் அழகாய் சிரித்தாள்.
"சிவா!"
"ம்...."
"நாம ஊருக்கு போறோமாமே!"-அவன் முகம் மாறியது.
"சிவா!"
"ம்...ஆமாம்டா!"
"ஊட்டிக்கா?"
"இல்லை..."
"பின்ன?"
"பாஞ்சாலபுரம்!"
"நிஜமாகவா?"
"உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்டா அம்மூ!"
"அது கிராமம் தானே!"
"ஆமாம்!"
"அப்போ போகலாம்!"
"ம்..."
"எப்போ போறோம்?"
"நீ எப்போ சொல்றீயோ அப்போ!"
"எல்லாத்தையும் நான் தான் சொல்லணுமா?அப்போ அந்த எதிர் வீட்டு பொண்ணு,ரொம்ப நாளா உன்னை 'சைட்' அடிக்கிறா அவளை கல்யாணம் பண்ண சொன்னா பண்ணிக்குவியா?"
"ஊர்,பேர் என்னன்னு கேட்டு வை!உனக்கு பிடிச்சிருந்தா,அடுத்த முகூர்த்தத்திலே பண்ணிக்கிறேன்."
"ஐயோ!இப்படியும் ஒரு அண்ணன் இருக்கானே! மகேஷ்வரா!உன் பேர்ல இப்படியும் ஒருத்தனா?"
"விடுடா!அம்மூ!"
"நாளைக்கே கிளம்பலாமா சிவா?"
"எங்கே?"
"பாஞ்சாலபுரம்!"
"உன் இஷ்டம்!"
"நாளைக்கே போகலாம்!"
"சரிடா!டிக்கெட் போட சொல்றேன்!"
"நல்ல பிள்ளை!"-என்று அவன் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினாள் ஷைரந்தரி.மனதை மகிழ வைக்கும் சில விஷயங்கள் ஏதோ ஒரு வகையில் அடுத்தவரை புண்படுத்திவிடுகின்றன.மனதை கஷ்டப்படுத்தும் சில விஷயங்களோ அடுத்தவரை ஏதோ ஒரு வகையில் ஆனந்திக்க செய்கின்றன.இங்கே,ஷைரந்தரி-யுதீஷ்ட்ரன் போல!!!நேர் மாறான விதி!!நியூட்டனின் மூன்றாம் விதியானது,அறிவியலுக்கு மட்டுமில்லை...அன்றாட வாழ்விற்கும் பொருந்தியுள்ளது.
உண்மையில் எதிர்திசையில் பயணிக்கும் துருவங்களே ஒன்றோடு ஒன்று சமமாக இணைகின்றன.
சத்தியம்,அசத்தியம் இரண்டிற்கும் சிறு வித்தியாசம் தான்!ஆனால்,அவற்றின் விளைவானது சமமான பலம் பொருந்தியதாக இருக்கின்றது அல்லவா?
தொடரும்
{kunena_discuss:751}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.