(Reading time: 7 - 14 minutes)

01. ஷைரந்தரி - சகி

காலைத் தென்றல் சில்லென்ற சூழலை நீலகிரி மலைத்தொடர் முழுதிலும் பரவ விட்டிருந்தான்.அதிகாலையிலிருந்து கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது.இனி என்ன?குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்!!!!!ஆனால்,அடக்கும் தாய்மார்களுக்கு தான் தெரியும்...அவர்களின் சோக கதையை!!!இதான் சாக்கு என்று  அவர்கள் அங்கு ஓடுவதும்,இங்கு ஓடுவதும்.அவர்கள் தாய்மார்கள் அவர்களை அடக்க முயல்வதும்....அடடா!!!சிற்பி இருந்தால்,சிலை வடித்திருப்பான்!!!ஓவியனோ தன் கைவண்ணத்தை நிரூபித்திருப்பான்!!!கவிஞனோ கவிதை புனைந்திருப்பான்!!!!நமக்கு எழுத மட்டுமே முடிந்தது!!

விளையாட்டு தனமான அக்குழந்தைகளை வேடிக்கைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தார் அனுராதா!!!!

"அனு!"-ஆதரவாக தோள் தொட்ட கணவனின் குரல் வந்த திசை நோக்கி திரும்பினார்.

shairanthari

"என்னங்க?"

என்னம்மா யோசிச்சுட்டு இருக்க?"

"நான் என்னங்க யோசிப்பேன்?எல்லாம் நம்ம ஷைரந்தரி பற்றி தான்!"-(என்னடா!!!நம்ம ஷைரந்தரின்னு சொல்றாங்களே!!!ஒருவேளை நம்ம ஹீரோயின் அம்மாவோன்னு நீங்க நினைக்க வேண்டாம்...அவங்க நம்ம ஹீரோயினோட சித்தி!)

"என்னம்மா?அவளுக்கு என்ன?மஹாராணி மாதிரி இருக்கா!"-(இது நம்ம ஹீரோயினோட சித்தப்பா)

"இந்த பசங்களை பார்த்தா!அவளும்,சிவாவும் பண்ண குறும்புங்களாம் நினைவு வருதுங்க!"-(இந்த இடத்துல சிவா யாருய்யான்னு?ஒரு குழப்பம் வந்திருக்கும்!அதான் நம்ம ஹீரோயினோட அண்ணன்!)

"ஆமாம்....இரண்டு பேரையும் மறக்கவே முடியாது.அண்ணா! அண்ணி இறந்த பிறகு!அவங்களை நம்மகிட்ட இருந்து கூட்டிட்டுப் போயிட்டார்.அவளை பத்து வயசில பார்த்தது!!!12 வருஷமாகுது."

"என்னங்க அவங்களை இந்த முறையாவது ஊருக்கு வர சொல்லுங்களேன்."

"சரிம்மா....ஒவ்வொரு முறையும் அவ வரும் போது,ஏதாவது தடங்கல் வருது!!!இந்த முறையாவது பத்திரமா வரணும்."

"ஆமாங்க...நானும் கவனிக்கிறேன்.இந்த முறை அவளை எப்படியாவது இங்கே வர செய்து ஊருக்கு கூட்டிட்டு போயிடணும்!"-அவளை ஊருக்கு அழைத்து சென்றுவிட வேண்டும்,என்று அவர் கூறிய போதே,பாஸ்கரனின் முகம் சற்று கருத்தது.

"என்னாச்சுங்க?"

"ஒண்ணுமில்லைம்மா...அப்பா கூட சிவாவையும்,ஷைரந்தரியையும் பார்க்கணும்னு சொன்னார்."

"நிஜமாகவா?"

"ம்....இந்த வருஷம் திருவிழா வருதுல்ல...அப்போ வர சொல்லலாம்...."

"அதுக்கு இன்னும் 3 மாசம் இருக்கே!!இந்த வாரமே வர சொல்லலாமே!!!"

"சரிம்மா...வர சொல்றேன்!"-அவர் அப்படி சொன்னது தான் தாமதம்,அதுவரை அவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டு கொண்டிருந்த,அவர்கள் மகன் அர்ஜீனும்,மகள் ரேணுகாவும் ஒரு சேர,"ஹே!"என்றனர்.

"ஏ...நீங்க எப்போ வந்தீங்க?"-அனுராதா.

"அதைவிடும்மா!என் தங்கச்சி வருகிறாளா?எப்போ வரா?எப்படி வரா?என்னிக்கு வரா?"-அர்ஜீன்

"நாளைக்கு அமெரிக்காவுல இருந்து கிளம்பினாலும்,இரண்டு நாள்ல வந்துடுவா!"-பாஸ்கரன்.

"ஐ....ஜாலி பார்த்தியாடி?வாயாடி...என் தங்கச்சி வரப்போறா!"-என்று தன் தங்கையை வெறுப்பேற்றினான் அர்ஜீன்.

"போடா!உனக்கு உன் தங்கச்சினா,எனக்கு என் அண்ணன் வரான்."

"என் தங்கச்சி."

"என் அண்ணன்."-இருவரும் மாற்றி,மாற்றி சண்டையிட்டு கொண்டனர்.

"ஹே....சண்டை போடாதீங்க."-இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினர்.

"பசங்க வருகிறது இவங்களுக்கே சந்தோஷமா இருக்கே!!!மாமாவுக்கு,அத்தைக்கு எல்லாம் எப்படி இருக்கும்?"

"ம்...."

"என்னங்க ஒரு மாதிரி பண்ணுறீங்க???"

"இல்லம்மா....விதியோட வலிமை ரொம்ப பெரிசு தான்!"-அவர் கூறியது புரியாவிட்டாலும்,அதற்கு தலை அசைத்தார் அனுராதா.

"ங்கேடி உன் அண்ணன்?"-தன் தாயின் கேள்விக்கு குழப்பமான பார்வையை மட்டுமே பரிசாக தந்தாள் பார்வதி.

"ஏன்ம்மா?"

"அவன் சட்டை பாக்கெட்ல என்ன இருக்குன்னு பாரு!"-என்று ஒரு சிகரெட் பாக்கெட்டை நீட்டினார் அவள் அன்னை மஹாலட்சுமி.

"அதும்மா...."

"உனக்கு தெரியாம அவன் எந்த வேலையும் பண்ண மாட்டான்.இதுக்கு என்ன பதில்?"

"அது...."

"வீட்டில யாராவது பார்த்திருந்தா என்ன பண்றது?"

".............."

"அதுக்கு ஏன்ம்மா அவளை திட்டுறீங்க?"-என்றப்படி மாடியிலிருந்து இறங்கி வந்தான் யுதீஷ்ட்ரன்.(நம்ம கதையோட ஹீரோ.)

"என்னடா காரியம் இது?"

"ம்மா....அதுலாம் கண்டுக்க கூடாதும்மா!"

"உன் அப்பாகிட்டயே சொல்றேன் இரு!"

"ஐயோ பாவம்! இன்னும் விவரம் தெரியாத பச்சை மண்ணாகவே இருக்கியே!எனக்கு இதை கற்றுக் கொடுத்ததே மிஸ்டர்.விஜயராகவன் தான்!"

"என்ன?அவருக்கு எப்போ இது எல்லாம்?"

"அதான் உன்னை பச்சை மண்ணுன்னு சொன்னேன்.இதுக்கு போய் என் தங்கச்சியை திட்டுற நீ?"

"ஆமாம் பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி!"

"அண்ணன் தங்கச்சினா,நாங்க தான்! வேற யாரு எங்களை விட பாசமா இருக்காங்க?"

"இருக்காங்க..."

"அப்படி இருந்தா வர சொல்லு பார்க்கலாம்!"

"வராங்களா?"-என்று தன் கைப்பேசியில் யாருடனோ பேசிப்படி அங்கே வந்தார் விஜயராகவன்.

"சரிம்மா...நான் பார்த்துக்கிறேன்!"-இணைப்பை துண்டித்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.