(Reading time: 7 - 14 minutes)

 

"ன்னங்க?"

"சிவாவும்,ஷைரந்தரியும் ஊருக்கு வராங்கலாம்."

"எப்போ?"

"இந்த வாரத்துக்குள்ள!"

"நிஜமாகவா?"

"ஆமா..."

"அப்போ ஆக வேண்டிய காரியத்தை பண்ணுங்க!"

"சும்மாவா?இந்த ஊரோட இளவரசி ஆச்சே! கலக்கிடுறேன் பார்!"

"அப்பா...ஷைரந்தரி வராங்களா?"

"ஆமாம்மா!"

"சரிங்கப்பா!"-யுதீஷ்ட்ரன் புரியாதவாறு விழித்துக் கொண்டிருந்தான்.

"என்னண்ணா?"

"யாரு அந்த ஷைரந்தரி?"

"நம்ம அத்தைப் பொண்ணு!"

"யாரு?"

"கங்கா அத்தையோட பொண்ணு!"

"சரிதான்!'

"ஏன்ணா?"

"ஒண்ணுமில்லை....சும்மா தான்!"

"சின்ன வயசில நீயும்,அவங்களும் எப்போதும் சண்டை போட்டுட்டே இருப்பீங்க."

"எனக்கு ஞாபகம் இல்லை."

"நீ ஞாபகம் இருந்தாலும் இல்லைன்னு தானே சொல்லுவ."-தன் தமையனை பார்த்து குறும்பாய் புன்னகைத்தாள் பார்வதி.

"ம்மா....எனக்கு பசிக்குது டிபன் எடுத்து வை."

"இருடா!ஷைரந்தரி வர போறால்ல,எல்லார்க்கிட்டையும் சொல்லிட்டு வந்துடுறேன்."

"உன் பையன் பசிக்குதுன்னு சொல்றான்.நீ ஷைரந்தரி வருகிறதை சொல்றேன்னு சொல்ற?"

"போடா!கண்ணா!"

"எனக்கும் காலம் வரும்.அப்போ பேசிக்கிறேன்."

"வரும்....வரும்..."

ழகிய கதிரவன் அமெரிக்கா முழுதிலும் தன் அரசாட்சியை பரப்ப ஆணையிட்டான்.அவனது ஆணைக்கிணங்கி அவனது கதிர்கள் அவ்வேலையை பரி பூரணமாய் செய்தன.அழகிய அக்காலை பொழுதை சோம்பல் முறித்துக் கொண்டே அனுபவித்தான் சிவா.

"சிவா!"

"சொல்லுங்கப்பா!"

"என்னப்பா சீக்கிரம் எழுந்துட்ட?"

"தூக்கம் வரலைப்பா!"

"சரி...பாஸ்கர் போன் பண்ணி இருந்தான்....."

"எதுக்குப்பா?"

"திருவிழாவிற்கு உன்னையும்,ஷைரந்தரியும் வர சொல்லி இருக்காங்க."-அவன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான்.

"என்னாச்சுப்பா?"

"ஒண்ணுமில்லைப்பா!!அம்மூக்கு  விருப்பம்னா போகலாம்பா!"

"நிஜமாகவா?"

"ம்....ஆனா,அவளை அங்கே யாரும் தொல்லை பண்ண கூடாது! அவ மனசு கஷ்ட படுறா மாதிரி எதாவது நடந்தா,மனுஷனா இருக்க மாட்டேன்.அடுத்த நிமிஷமே அவளை கூட்டிட்டு வந்துடுவேன்."-அவன்,சுற்றி வளைத்து எதை குறிப்பிடுகிறான் என்று ரகுநாதனிற்கு விளங்கியது.

"சரி சிவா!"

"நான் போய் அம்மூ என்ன பண்றான்னு பார்க்கிறேன்ப்பா!"

"சரி...சிவா!"-ரகுநாத்தின் மனைவி ஷைரந்தரி பிறக்கும் போதே இறந்துவிட்டார்.மிக,பெரிய போராட்டத்திற்கு பின்,பிறந்ததால்,ஷைரந்தரி வீட்டின் செல்ல பெண்ணாவாள்.அவர்கள் வீட்டில்,சிவா வைப்பதே சட்டம்.ஆனால்,அவனுக்கோ,தன் தங்கை சொல்லே வேதவாக்கு.

அவளிடம் எப்போதும் தன் அன்னையின் சாயலை காண்பான் சிவா!ஷைரந்தரியை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்றால்,அனைவர் உள்ளும் திகில் பரவியது.அதற்கு,காரணம் பல உண்டு.அதில்,முதல் காரணம்,ரகுநாத்தின் தமையன் அருள்மொழி!!!

காலம்,பல பின்னோக்கி செல்ல நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்தார் ரகுநாத்.

கண் முன் தன் மகள் பிறப்பின் நோக்கம்?உண்மையில் அவள் பிறப்பின் இரகசியத்தை நம்பலாமா?அவள் பிறப்பதற்கு முன்பே அவளுக்கு வழங்கப்பட்ட சாபங்கள் எத்தனை எத்தனை?நினைத்துப் பார்த்தாலே நடுங்குகிறது!!!!இறைவா....என் ஷைரந்தரிக்கு எதுவும் நிகழ கூடாது!!!!பல குழப்பங்களிலும்,பல்வேறு சிந்தனைகளிலும் தத்தளித்து கொண்டிருந்தார் ரகுநாதன்.அப்போது,அவர் கைப்பேசியானது,சுயநினைவிற்கு வா என்பதுப் போல அவரை அழைத்தது.

எடுத்துப் பார்த்தார்.மஹாலட்சுமி என்றது.

"ஹலோ..."

"அண்ணா!"

"சொல்லும்மா."

"பாஸ்கர் அண்ணா!நீங்க ஊருக்கு வர போறீங்கன்னு சொன்னாங்க.எப்போண்ணா வருவீங்க?"

"ஷைரந்தரி சொன்னா,சிவா இன்னிக்கே கிளம்புறேன்னு சொல்லிட்டான்."

"நிஜமாவாண்ணா?"

"ஆமாம்மா!ஆனா,ஒரு கண்டிஷன் போட்டு இருக்கான்."

"என்ன?"

"அவ மனசு கஷ்டப்படுறா மாதிரி எதாவது நடந்தா,உடனே அவளை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொல்லிட்டான்."

"சரிண்ணா,நாங்க பார்த்துக்கிறோம்.நீங்களும் வருகிறீர்கள் தானே!"

"இல்லம்மா...எனக்கு வேலை இருக்கு,முடிச்சுட்டு அடுத்த மாசம் வந்துடுறேன்!"

"என்னண்ணா?"

"நான் கண்டிப்பா வரேன்ம்மா!"

"சரிங்கண்ணா!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.

என்ன நடக்கிறது இங்கே?ஷைரந்தரியின் பிறப்பின் இரகசியமா?அது என்ன?எந்த சாபத்தை அவள் வாங்கினாள்?யார் அவள்?இவ்வாறு பல கேள்விகள் எழுந்திருக்கும்!!!!

உங்கள் கேள்விகளுக்கான பதில்...சற்று விரைவில் வந்து சேரும்....என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்!!!!

தொடரும்

Go to Preface

Go to Episode # 02

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.