(Reading time: 49 - 97 minutes)

 

ட்டென சுதாரித்த சுஜாதா,

" தேங்க்ஸ் ஜானு ... ஏன் பாஸ் இந்த பொண்ணுகாகவா இவ்ளோ பதட்டமா இருந்திங்க ? இவங்க இன்னும் 2 மாந்த்ஸ் ல உங்க இடத்துக்கே வந்துருவாங்க போலவே " என்று சிரித்தாள்.  ரகுராம் எதற்காக பதட்டமடைய வேண்டும் என்று மனதிற்குள் கேட்டு கொண்டாள் ஜானகி. ( குட் ஜானகி .. இப்போதான் நீங்க ரைட் ட்ரேக் வர்ரிங்க ... இப்படி அடிகடி யோசிங்க ... அண்ட் அந்த பெட்டியை பார்க்க மறந்திடாதிங்க... நான் தான் காட்டிகொடுத்தேன்னு உங்க  ரகு கிட்டயும் சொல்லிடாதிங்க )

பெண்கள் இருவரும் பேசி முடித்தப்பின் ரகுராம் அன்றைய முக்கியமான வேலைகளை பற்றி இருவருக்கும் பொதுவாக கூறினான். அதன் பிறகு,

" ஓகே வாங்க நான் எல்லாருக்கும் அறிமுகபடுத்துறேன் " எனும்போதே,

" ஒரு நிமிஷம் பாஸ் .. அவங்க எல்லாரும் ஜானுவை பார்க்குறது முன்னாடி ஜானு அவங்களை பார்க்கட்டும் ... ஜானுவை என் ரூமுக்கு கூட்டிட்டு போகவா ? " என்றாள் சுஜாதா.

" தாராளமாக கூட்டிட்டு  போங்க சுஜா... நானும் வரலாம் தானே ? " என போலி பணிவுடன் அவன் கேட்க, மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர் .

சுஜாதாவிற்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றனர் இருவரும். மிக நேர்த்தியாக இருந்த அந்த அறை ஜானுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து அந்த அறையை பார்த்த ரகு சுஜாதாவின் சீட்டின் பக்கத்தில் ஒரு கூடையில் பால், பழம், பழச்சாறு எல்லாம் இருப்பதை கண்டு கேலியாய் புன்னகைத்தான்.

" என்ன பாஸ் ? "

" இல்ல..... சுஜா , ரவி உங்களுக்காக ஆபீஸ் லையே ஒரு டிபார்ட்மண்ட் ஸ்டோர் வெச்சு கொடுத்திருக்கார் போல " என கூடையை காட்டி கிண்டலாய் சொன்னான்  ரகு.

" அட போங்க பாஸ் ... அவராச்சும் அப்படி .. நீங்க உங்க மனைவி  ப்ரெக்னண்ட் ஆ இருந்தா ஆபீஸ் கே வரமாட்டிங்க " என சிரிக்கவும்,

ரகு ஜானகி நிறைமாத கர்ப்பிணியாய் இருப்பது போலவும், ரகுராம் அவளுடன் கை கோர்த்து நடப்பதை போலவும் நினைத்து பார்த்தான். ஜானகியோ, காதல் தோல்வியில் இருப்பவனை இப்படி கேலி பண்றாங்களே... அவனுக்கு கஷ்டமா இருக்குமே என்று வருத்தபட்டாள்.. (ம்ம்ம்கும்ம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை )

" ஆமா சுஜா நாம ஏன் உங்க ரூமுக்கு வந்தோம்"

" நம்ம ஆபீஸ் ல உள்ளவங்களை பத்தி உனக்கு அறிமுகபடுத்ததான்... என் ரூம்ல நம்ம ஆபீஸ் ல இருக்குற அட்மின் எல்லாரையும் பார்க்க முடியும் . பட் அவங்களை நாம பார்க்குறது அவங்களுக்கு தெரியாது. "

" வாவ் கலக்குறிங்க"

" ஹஹ இந்த ஐடியா கொடுத்ததே ரகுராம் சார் தான் . அவர் இல்லாத நேரத்துல எல்லாம் கரெக்ட் ஆ நடக்குதான்னு சூப்பர்வைஸ் பண்ண தான் இந்த  ரூம் ... இங்க வா..இவங்க ரிசப்ஷனிஸ்ட் விஷ்ணுப்ரியா... ரொம்ப நல்ல பொண்ணு ... நம்பிக்கைகுரியவங்க. பக்கத்துல  4 பொண்ணுங்க கூட்டமா நிற்குறாங்க பாரு அதுதான் வாணி, சுதா, மாலா அண்ட் ரீனா... அவங்க கிட்ட ஜாக்கரதைய இருக்கணும்னு சொல்லவே மாட்டேன்.. ஏன்னா நீ எப்படி இருந்தாலும் அவங்க உன்னை வம்பு பேசுவாங்க ."

" புரியலையே ? "

" வாங்குற சம்பளத்துக்கு வேலையை மட்டும் செஞ்சா பத்தாதுன்னு கொஞ்சம் வம்பும் பேசுற கூட்டம்"

" இவங்க மீனு, கீர்த்தனா ...நான் இல்லாத சமயம் உனக்கு பேப்பர் வொர்க்ஸ் ல உதவி வேணும்னா  கேக்கலாம் ... இது மது... மது ஒரு ஆல் ரௌண்டர் .... மனசு சரி இல்லனா நான் மதுகிட்டதான் பேசுவேன் ... 24 மணி நேரம் சந்தோசம், புன்னகை கவிதை இதை எல்லாத்தையும் தன் வசம் வெச்சுகிட்டு எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ற கேரெக்டர்... நம்ம சூர்ய பிரகாஷ் சாருக்கு கூட்ட மதுவை ரொம்ப பிடிக்கும். "

இப்படி ஒவ்வொருத்தரையும் அறிமுகப்படுத்தியபடி அவர்கள் நடக்க, வெறும் பார்வையாளனாய் அங்கு நின்றிருந்தான் ரகுராம். அப்போது ஜானகியின் புடவை முந்தானையில்  இருந்த மணிகள், இரண்டாம் அடுக்கில் இருந்த அந்த பெட்டியில் சிக்கி கொண்டது. அதை  கவனிக்காமல் அவள் நடக்க, அந்த  வேகத்தில்  அந்த பெட்டி கீழே விழுந்தது. சத்தம் கேட்டு திரும்பிய சுஜாதாவும் ரகுராமும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தான் அனுப்பிய பெட்டி சுஜாதாவின் அறையில் இருந்ததே ரகுராமிற்கு முதல் அதிர்ச்சி. அதை ஜானகி பார்த்து விட்டாளே என்பது இரண்டாவது அதிர்ச்சி. சுஜாதாவோ, சகாயம் நம்பி கொடுத்த பெட்டியை கொஞ்சம் ஜாக்கரதையாய் வைத்திருக்க வேண்டுமோ என்ற குற்ற உணர்வும் அதிர்ச்சியும். ஜானகியின் கோபமான குரல் அவர்களை, நடப்புக்குள் நிறுத்தியது.

" இதெல்லாம் ஏன் இப்படி பெட்டியில இருக்கு சுஜாதா ? யாருடையது இது ? உங்களுடையதா ?"

"........."

" பதில் சொல்லுங்க ப்ளீஸ் "

" அது என்னுடையது ஜானகி " என்று ரகுராம் சொன்னதும் அவனின் முகத்தை ஏறிட்டாள் ஜானகி.

" என்ன இது ரகு ? " கோபத்தில் அவள் அவனின் பெயர் சொல்லி அழைத்ததை அவர்கள் கவனித்தார்களோ இல்லையோ சுஜாதா கவனித்தாள்.

(சரி சரி டென்ஷன் ஆகாதிங்க ..அந்த பெட்டியில் என்ன இருந்துச்சுனு நானே சொல்லிடுறேன். நீங்க எதிர்பார்த்த மாதிரி ஜானகி சம்பந்தபட்ட எதுவுமே அதுல இல்ல ... அதல் இருந்தது சில பாரதியார் கவிதைகள் படங்களாக ப்ரேம் போட்டு இருந்தது. கூடவே ஏலத்தில் வந்திருந்த, பாரதியாரே வரைந்தே ஓவியமும் இருந்தது . நிச்சயம் அதன் விலை பன்மடங்கு அதிகம் . அதை விட இனி இதுபோன்ற அறிய பொருட்கள் கிடைப்பதே அரிது . அப்படி இருக்கும்போது இவ்வளவு அரிதான பொருளை யார் பெட்டியில் வச்சாங்க என்றுதான் ஜானுவுக்கு கோபம். ரகுராம் ஏன் அதை மறைச்சு வெச்சார் நு ரெண்டு காரணம் இருக்கு .. ஒரு காரணம் நீங்க யோசிச்ச தெரிஞ்சிடும் . இன்னொரு காரணம் கொஞ்சம் ஆழமா யோசிக்கணும் . இப்போதைக்கு நான் முதல் காரணம் மட்டும் சொல்றேன். சரியா ? )

ஜானகி ரகுவின் பெயரை அழைத்ததிலேயே, சுஜாதாவிற்கு கொஞ்சம் நெருடலாகிவிட இப்போது இருவரும்ம் தனிமை தேவையோ என்று நினைத்தவள், மெல்ல அந்த அறையிலிருந்து வெளியேறினாள். அவள் செல்வதை கூட உணராமல் ரகு அவளையே பார்க்க ஜானகியோ கீழே விழுந்திருந்த அந்த படங்களை எடுத்து கொண்டிருந்தாள்.

" இதெல்லாம் எங்க இருந்துச்சு ரகு ? "

" என் ரூம்ல தான் "

" அப்போ இப்போ ஏன் இங்க வந்துச்சு ? "

" அது ........... அதுவந்து .... சும்மா "

" பொய் .... என்னாலேதானே? "

" அது...."

" என்ன ரகு ? இதெல்லாம் இருந்த நான் டிஸ்டர்ப் ஆவேன் ....எனக்கு ராம் ஞாபகம் வரும் ... என் மனசு கஷ்டப்படும் அதுனாலத்தானே ? மாமா சொல்லிடாங்களா நான் ராம் போனதுக்கு அப்பறம் பாரதியார்  கவிதை எல்லாம் படிக்கறதே இல்லன்னு ? "

" ...."

" ப்ளீஸ் ரகு ...எனக்காக நீங்க இதையெல்லாம் மாத்தணுமா ? பெர்சனல் லைப் ஆ ஆபீஸ் ல கொண்டுவரக்கூடாது நு எனக்கு தெரியும் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.