(Reading time: 49 - 97 minutes)

 

குராமின் அறையில் ,

"மே ஐ கம் இன் ? "

" எஸ் "

" குட் மோர்னிங் ரகு "

" வெரி குட் மோர்னிங் ஜானகி... அர்ஜுன் வா வா " என்றபடி அர்ஜுனனை தழுவி கொண்டான் ரகுராம் . கண்களில் ரகசிய புன்னகையுடன் அர்ஜுன் நிற்க " எல்லாத்துக்கும் தேங்க்ஸ் டா " என்று ரகசிய குரலில் அவனுக்கு நன்றி சொல்லி அணைத்து கொண்டான் ரகுராம்.

" ஓகே ஜானு ... மீட்டிங் கு லேட்டாச்சு நான் கெளம்பறேன் ...பை ரகு ...ஆல் தி பெஸ்ட் " என்று இருவரிடமும் கூறிவிட்டு இல்லாத மீட்டிங் கு விரைந்து சென்றார் நம்ம அர்ஜுனன் .... ( சின்ன சின்ன விஷயத்துல கூட மாஸ்டர் பிளான் போடுறிங்க அர்ஜுன் நீங்க ).

" ஹா ஹா ஹா "

" எதுக்கு ரகு சிரிக்கிறிங்க ? "

" பின்ன இப்படி எக்ஸாம் கு வந்த குழந்தை மாதிரி திரு திருன்னு முழிச்சா சிரிக்காம என்ன செய்ய ? " ... ரகு எதிர் பார்த்தது போலவே அவன் கேலியில் அவளின் பதட்டம் குறைந்தது.

" ம்ம்ம்ம் நீங்கதானே சொன்னிங்க,  நான் உங்களை பார்த்தா சிங்கம் புலியை பார்குற மாதிரி நடுங்குறேன்னு. அதான் சிங்கத்தின் குகையில் தானாக வந்து மாட்டிகிட்டோமொன்னு  இப்போ பயம்மா இருக்கு "

" உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா ? பட் கவலையே வேணாம் ஜானு .. நான் இங்கதான் இருக்கேன் ... உனக்கு எந்த பயமும் வேணாம் ..வேலைய பொறுத்த வரை சுஜாதா துணையா இருப்பாங்க. மத்தபடி நானும் உன் கூடவே இருப்பேன்" என அவன் இரு பொருளில் முடிக்க அவளோ குறும்புடன்

" அதுதான் எனக்கு பயமே ரகு " என்று கண்களை உருட்டி கூறினாள். ( ப்ப்பா ....என்ன கண்ணுடா என்று மனதிற்குள் நினைத்தவன் ) அவளின் குறும்பான பதிலில் புன்னகைத்தான்.

" குட் இப்படிதான் லைவ்ளியா வேலை செய்யணும் . அடிகடி நிறைய கேள்விகளும் கேக்கணும் "

" சரி அப்போ என் முதல் கேள்வி, என் வேலைக்கு காரணமான நம்ம நாயகி சுஜாதா எங்கே ? "

" ஹா ஹா ஹே வாலு , என்னாச்சு உனக்கு ? போட்டு தாக்குறியே ! கண்டிப்பா சுஜாதாவை பார்க்கலாம் பட் அதுக்கு முன்னாடி நான் சில விஷயங்கள் சொல்லிடுறேன் "

ரகுராம் தங்களது கம்பெனி விவரங்களை அவளுக்கு புரியும்படி மேலோட்டமாய் சொன்னான் .. இடையிடையே அவள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாய் பதிலளித்தவன் அவளை மனதிற்குள் பாராட்டினான். 

" சோ இன்னைக்கு நீ நம்ம சுஜாதா கிட்ட பேசி பேப்பர் வொர்க்ஸ் அண்ட் நம்ம கிளையண்ட்ஸ்  பத்தி தெரிஞ்சிக்கோ பட் அதுக்கு முன்னாடி நான் உன்னை எல்லாருகிட்டேயும் அறிமுகபடுத்தணும்"

" உன்னை என் ரிலேடிவ் நு தான் சொல்வேன் ... ஏன்னா இங்க இருக்குற சிலரின் பேச்சு அப்படி ..... சோ நீ எனக்கு முக்கியம்னு அவங்க புரிஞ்சுக்கணும் "

" வேணாம் ரகு ...."

" ஏன் ? "

"  அன்னைக்கு நீங்கதானே சொன்னிங்க, ஆபீஸ் தான் ரியல் அட்மோஸ்பியர்... பலதரபட்ட குணம் உள்ளவங்களையும் பல பிரச்சனைகளையும் இங்கதான் பார்க்க முடியும்னு ? இப்போ நான் உங்க ஆளுன்னு சொன்னா ஒரு டிஸ்டன்ட் வந்திடும் ... என்னால எதையும் கத்துக்க முடியாது ..அதே நேரம் நான் எல்லாரோடையும் சேர்ந்து வேலை பார்க்க விரும்புறேன் .. நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா எனக்கு அட்மின் பக்கம் வேலை செய்றவங்க விட, அவங்களுக்கும் கீழே வேலை செய்ற தொழிலாளிகளுடன் பேச வேண்டிய அவசியம் நிறைய இருக்கு .. சோ நான் எல்லாரும் மாதிரி பொதுவான  ஆளாக இருக்குறதுதான் பெட்டர் " என்று தெளிவாக  பேசி முடித்தாள்  ரகுராம் .. என்னதான் அவளின் தெளிவான பேச்சில் ரகு அசந்திருந்தாலும் பேச்சு வாக்கில் அவள் " உங்க ஆளு " என்ற வார்த்தை அவனுக்கு உல்லாசத்தை தந்தது... ( மிஸ்டர் ரகு சார் உங்க ஜானு அந்த மீனிங் ல சொல்லல... அப்படி சொல்லனும்னா நீங்க இன்னும் கொஞ்சம் தீய வேலை செய்யணும்னு, நம்ம அர்ஜுனனின் செல்ல தங்கச்சிகளாகிய மது, மீனு, அலமேலு மற்றும் பலர் சொல்றாங்க .... )

" என்ன ரகு ஏதும் தப்ப பேசிட்டேனா ? "

" இல்லம்மா நான்தான் நீ இவ்வளோ பேசுவேன்னு எதிர்பார்க்கல ...பட் சந்தோஷமா இருக்கு உன் திறமைய வெளிபடுத்த ஒரு நல்ல பிள்ளையார் சுழி போட்டு வெச்சுட்டேன்னு "

அவன் குரலில் வித்தியாசம் கண்டவள்,

" அய்யே .... ஓவர் பீல் உடம்புக்கு ஆகாது ரகு... நான் வந்து ஒரு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள இவ்வளோ பாராட்டா ? விட்டா உங்க சொத்தை என் பேருல எழுதிடுவிங்க போல" என்று சிரித்தாள். ( ஆமா ஜானு ...இந்த உலகத்துல எது எல்லாம் ரகுவுக்கு சொந்தமோ அது எல்லாம் உங்களுக்கும் சொந்தம் .... வைட் வைட் இதை நான் சொல்லல ... உங்க ஆளு ரகு அவர் மனசுல நினைச்சதை நான் சொன்னேன் )

" ஆமா நான் உங்களை எப்படி கூப்பிடனும் ? " என்றவளை புரியாமல் பார்த்தான் ரகு .

" எப்படின்னா ? வாயாலதான் "

" சரிதான் என்னை புத்திசாலின்னு பாராட்டிட்டு நீங்க மக்கா  ஆகிட்டிங்களே .... இங்க நீங்க என் ப்ரண்டு இல்லையே எம் டீ யாச்சே.... எல்லாரு முன்னாடியும் ரகுன்னா கூப்பிட முடியும் ?"

"....."

" சுஜா எப்படி கூப்பிடுவாங்க ? "

" பாஸ் நு "

" அப்போ நானும் அப்படி கூப்பிடுறேன் " ரகு ஏதோ சொல்ல எத்தணிக்கவும்

" கூல் கூல் ..நம்ம ஆபீஸ் வாசல்படில காலை வெச்ச மட்டும்தான் பாஸ் சரியா ? " என்று அழகாய் சிரித்தாள்.... " சுஜாவை பார்க்க போவோமா ? "

" அம்மாடியோவ் .... விட்டா நீயே போய்டுவே போலயே.... இரு நானே கூப்பிடுறேன் .... " என்றபடி இண்டர்காமில் சுஜாதாவை அழைத்தான் ரகு. .

" மே ஐ  காம் இன் ? "

" வாங்க சுஜா "

" சுஜா மீட் மிஸ் ஜானகி "

" ஹாய் சுஜாதா .. உங்களை பத்தி நம்ம பாஸ் சொன்னாரு " என்றவள் " பாஸ் " என்ற வார்த்தையை  வேண்டுமென்றே அழுத்தமாய் கூறி குறும்புடன் ரகுராமை நோக்கினாள்... ( நான் அப்போவே சொன்னேனே ரகு சார் , இந்த சைலெண்டா இருக்குற பாப்பாவை எல்லாம் நம்பகூடாது ... அதுவும் நம்ம  சுபி கூட கூட்டணியான பெண்ணை நம்பவே கூடாதுன்னு ...கேட்டிங்களா ? இனிதான் கேம் ஸ்டார்ட் )

" நீங்க கன்சீவ் ஆ இருக்கிங்கன்னு சொன்னாங்க.. உங்களுக்கும் அண்ணாவுக்கும் ( சுஜாதாவின் கணவர் ஜானுவின் அண்ணன் மாதிரியாம் ) வாழ்த்துக்கள். 'பாஸ்' சொன்னமாதிரி நான்தான் ஜானகி .. உங்களுடைய சிஷ்யை... முடிஞ்சா அளவு நீங்க சொல்லி தர்றதை சீக்கிரமா கேட்ச் பண்ணி உங்களுக்கு தலை வலி வராமல் பார்த்துக்குறேன் " என்று நாடக பாணியில் பேசியவளை விழி விரிய பார்த்தனர் இருவரும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.