(Reading time: 49 - 97 minutes)

 

" ஹெலோ சார் நீங்க பண்ற அழிசாட்டியத்துக்கு எப்பவும் நான் டா போட்டுதான் கூப்பிடனுமாக்கும் ....ஏதோ  பாவம் நு விடுறேன் ...பகலானா சிரிச்சே மயக்குறது .. இரவானா அழறது"

" ஹ்ம்ம்ம்ம் .... மன்னிச்சிரு டா.. உன்னை அழ விடாம பார்த்துக்கணும்னு நெனைச்சேன் பட் என்னையும் மீறி  எல்லாம் நடந்துடுச்சு ..... "

" அதுக்கு ரிவார்டா இன்னொரு பாட்டு பாடுங்க "

" சரி நேயர் சாய்ஸ் "

" அப்டினா ? "

" நீ கேளு நான் பாடுறேன் "

" ஓஹோ...எனக்கு தமிழ் படத்துல இருந்து ஓ மஹா சீயா பாடுங்க " என்று குறும்புடன் பதிலளித்தாள்  சுபத்ரா.

நிச்சயம் அவன் பாட மாட்டான் என்று நினைத்து அவள் துள்ளி குதித்து  சிரிக்க,

சல சால

இஸ்கு போரரா

ஒசாகா முறையா

பூம் பூம் ஜாகாக்கா

முக்காலா

மையா மையா

லாலாக்கு லாலாக்கு

டோல் டப்பி மா

நாக்கு முக்க நாக்க

ஷக்க லாக்கா

ரண்டக்கா

" ஐயோ போதும் போதும் ...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது ... ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா ?

" வாலு நான் பாட மாட்டேன்னு நீ நினைச்சதுனாலேதான் பாடினேன் "

" ம்ம்ம்ம்ம்ம் என் செல்லம் ....."

" பாருடா ... கொஞ்சல்ஸ்  லாம் கூட வருமாடி உனக்கு ? " என்று அவன் அவளை நெருங்க

" ஆஹா இதுதான் படிக்கிற பொண்ணை நீங்க சீண்டாம இருக்குற லட்சணமா ? ஆல்ரெடி இன்னைக்கு நீங்க ரொம்பவே போர்டர் தாண்டியாச்சு கெளம்புங்க ..... கெளம்புங்க "

" ஹே இன்னும் கொஞ்ச நேரம் "

" நோ "

"  அஞ்சு நிமிஷம் "

" ம்ம்ஹ்ம்ம்ம்ம்"

" சரி ஒரே ஒரு பாட்டு பாடிட்டு போறேன் "

" சரி ஓகே ..."

" போக்கிரி உனக்கு காரியம் ஆகணும்னா  மட்டும் பெர்மிஷன் தரியாடி ? இரு உன்னை கவனிச்சுகிறேன் "

"  ஹி ஹீ ...பாடுங்க மாமா பாடுங்க "

" தென்றல் வரும் வழியை

பூக்கள் அறியாதா ?

தென்றலுக்கு மலரின்

நெஞ்சம் புரியாதா ?

அள்ளி கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டி பிடித்தேன் தலையணையை

குண்டுமல்லி கோடியே கொள்ளையடிக்காதே நீ " என்றபடி அவளின் கன்னத்தை  கிள்ளினான்.

" யோவ் ... போயா... போ  போ .. நீ சரி இல்ல "

" டேய் கிருஷ்ணா நீ எப்போடா வந்தே ? " என்று இல்லாத கிருஷ்ணனை நோக்கி அர்ஜுன் பார்க்க, அவன் பார்வையை தொடர்ந்து சுபத்ராவும் திரும்பிய நேரம் அவளின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து விட்டு ஓடிவிடான் அர்ஜுனன் .. அவனின் குரும்பை ரசித்தபடியே அவன் கண்களை விட்டு அகலும் வரை கை காட்டி வழி அனுப்பினாள் அர்ஜுனனின் சுபத்ரா.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அனைவருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாகவே போனது .

வெள்ளிகிழமை,

ஒரு முக்கியமான மீட்டிங்க இருப்பதினால் மதியம் தான் ஆபீசிற்கு வர முடியும் என்று ஜானகியிடம் சொல்லி இருந்தான் ரகுராம் ... அதே நாள் சுஜாதாவும் மருத்துவமனைக்கு  செல்ல வேண்டிய நிர்பந்தமாக, ஜானகி ஆபீசில் , ரகுவின் அறையில், தனகென்று ஒதுக்கபட்ட இடத்தில் அமர்ந்து, சில முக்கிய கோப்புகளை சரி பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் வாணியை இண்டெர்காமில் அழைத்தாள்.

" கூப்டியா ஜானகி ? " அவள் ஒருமையில் அழைத்தது பிடிக்காவிடினும் அதை பெரிதுபடுத்தாமல்

" ம்ம்ம்ம் ...ஆமா வாணி... இந்த பைல் ல கொஞ்சம் மிஸ்டேக் இருக்கு ... அதை மாத்தி கொண்டு வர்ரிங்களா ? " என்றாள்.

" என் வேலையில மிஸ்டேக் இருக்காது ஜானகி ..அதுவும் நீ புதுசா வந்துருக்கே ... உனக்கென்ன தெரியும் ?  "

" நான் புதுசுதான் மிஸ் வாணி ..பட் ஒரு பைல் செக் பண்ற அளவுக்கு எனக்கும் திறமை இருக்கு ...  அண்ட் நான் உங்களை குறை சொல்ல கூப்பிடலையே ... ஏதோ  பிசில கவனிசுருகாம இருந்துருக்கலாம் ... அதான் கூப்பிட்டு சொன்னேன் " 

ஆரம்பத்தில் இருந்தே வாணிக்கு ஜானுவை பிடிக்கவில்லை ... ஏதோ ஒரு வகையில் அவளிடம் சண்டையிடலாம் என்று பார்த்தால் அதற்கும்  ஜானகி இடம் கொடுக்காதது இன்னும் கோபத்தை தூண்டியது ... எதுவும் பேசாமல் பைலை எடுத்துகொண்டு சென்றாள்.

ன்று மதியம்,

" சார் "

" சொல்லுங்க விஷ்ணுப்ரியா "

" ஜானகி மேடம் .."

" ஜானகிக்கு என்ன ?"

" இன்னைக்கு மோர்னிங் மேடம் வாணியோட பைல் ல ஏதோ மிஸ்டேக் நு சொன்னாங்க. அதுக்கு வாணி எதிர்த்து பேசியும் மேடம் எதுவுமே சொல்லல... இன்னைக்கு மேடம் எங்க கூட லஞ்ச் சாப்பிட வந்தாங்க ... அப்போ வாணி, ரீனாவை  கேள்வி கேக்குற மாதிரி ஜானகி மேடமை தப்பா பேசிட்டாங்க "

" தப்பான்னா ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.