(Reading time: 49 - 97 minutes)

 

" ஹேய் என்னாச்சு மீரா ...... வலிக்குதாடா ? "

" ஸ்ஸ்ஸ்ஸ் "

" நித்து  சிரிக்கதேடா நிஜமாகவே அவளுக்கு ரொம்ப வலிக்கிறது போல ... மீரா என்னடா பண்ணுது ? "

" ரொம்ப வலிக்கிது கிருஷ்ணா... நடக்க முடில " என்று அவள் வலியில் துடிக்க, கண் இமைக்கும் நொடியில் அவளை அலேக்காக தூக்கினான் கிருஷ்ணன். மிக அருகில் இருந்த அவன் முகமும், மூச்சு காற்றும், இடையில் பதித்திருந்த கரங்களும் அவளை இம்சிக்க

" கிருஷ்ணா... நான் நடக்குறேன் ... இறக்கி விடுங்க " என்று திக்கி திணறி பேசினாள்.

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் .....பேசாதே " என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு

" இதெல்லாம் ஒரு விளையாட்டா கண்ணம்மா ? பாரு இப்போ எப்படி விழுந்து வெச்சேன்னு ... சாரியை கட்டிகிட்டு ஏன் இந்த வீரவிளையாட்டெல்லாம் ? இனி கல்யாணத்துக்கு முன்னாடி நீ சாரி கட்ட வேணாம் ..சரியா? " என்று அவளை ஏறிட

" ஹேய் என்ன பதிலே காணோம் ? " என்றான்.

" நீங்கதானே பேசாதேன்னு சொன்னிங்க ? " என்று அப்பாவியாய் கேட்டாள் மீரா.

" ஐயோ என் செல்லம் அப்படியே என் பேச்சை கேட்டு நடக்குதே ..எங்க மாமாவுக்கு ஒரு கிஸ் கொடு பார்ப்போம் " என்று குறும்புடன் சிரித்து  அவன் கன்னத்தை காட்ட, வெட்கத்துடன் வேறுபுறம் திரும்பிகொண்டாள் மீரா.

" இந்த ரணகளத்துளையும் ஒரு கிளுகிளுப்பு கேக்குத்தா உங்க ரெண்டு பேருக்கும்  ? " என்று கேள்விகேட்டு கொண்டே தலையில் அடித்து நொந்துகொண்டாள் நித்யா....

வளை காரில் அமர வைத்தவன், தன் வீட்டிற்கு போன் போட்டு நடந்ததை சொல்லிவிட்டு மீராவை  மருத்துவமனை அழைத்து சென்றான்.

சாதாரண ஸ்ப்ரைன் என்று டாக்டர் சொன்னதையும் கேட்காமல், ஸ்கேன் எடுத்துவிட்டு, அக்கறையில் கிருஷ்ணன் தொடுத்த ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள், டார்க்டரே இன்னொரு டாக்டரை  பார்க்கும் நிலையாகிவிட்டார். கிருஷ்ணனுடன் நித்யாவும் சேர்ந்து கொள்ள, அவர்களின் இம்சை தாங்காமல் மீரா ஓய்வெடுப்பதற்கு தாராளமாக 1 வாரம் விடுமுறை லெட்டரை தர , நித்யா கண்களில் தோன்றிய ரகசிய புன்னகையை கண்டுகொண்டான் கிருஷ்ணன் ...

( அப்போ இதெல்லாம் நித்யாவின் ப்ளான் ஆ ? ஏதோ சரி இல்லையே ? சரி இருங்க என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் )

காரில்,

" ஹீ ஹீ ஹீ "

" என்னடி சிரிக்கிறே ? என்று வலியில் எரிச்சலுடன் கேட்டாள் மீரா. அவள்  கால் நீ அமரட்டும் என்று அவளை பின்னால் அமர வைக்க, நித்யா முன் சீட்டில் கிருஷ்ணனின் அருகில் அமர்ந்திருந்தாள்...

" ரெண்டு ரீசன் டீ .. பட் நான் சொன்னா நீ திட்டுவ "

" ம்ம்ம்ம்கும்ம்ம் எனக்கு பயப்படுற ஆளா டி நீ ? "

" ஹஹஹா "

" சிரிக்காம விஷயத்தை சொல்லு "

" ரீசன் நம்பர் 1 ... நம்ம ராமசாமியின் பையன் , அதான் உன் பாஸ் ஒரு நாள் லீவ் கேட்டதுக்கு என்ன பில்ட் அப் கொடுத்தான்.. இப்போ பார்த்தியா  ஒரு வாரம் நீ ஆபீஸ் பக்கமே போகமுடியாது  "

" கொடுத்தானா ? அடியே அவர் என் பாஸ் ..கொஞ்சம் கூட மரியாதையை இல்லையா? "

" அவன் உனக்குத்தானே பாஸ் ? எனக்கா பாஸ் ? சரியான சிடுமூஞ்சி " என்றவளை கேள்வியுடன் பார்த்தான் கிருஷ்ணன் .. ( அது ஏன்னு நான் அப்பறம் சொல்லுறேன் )

"சரி ரெண்டாவது ரீசன் ? "

" அது ..........அது...... மோர்னிங் நீ வழுக்கி விழுந்துட்டேன்னு சொல்லிதானே நான் லீவ் சொன்னேன் ..இப்போ பார்த்தியா அதுவே நிஜமா ஆயிடுச்சு ? இனி இந்த வரலாறு

நான் பொய் சொல்லிட்டேன்னு என்னை தப்பா பேசாது . பட் என் பெயரை காப்பாத்தணும் என்பதுகாக இப்படி மெரினா பீச்சில் விழுந்த என் தோழியே உன் கருணையே கருணை "

நித்யாவின் முதுகிலே இரண்டடி கொடுத்தவள்,

" பாருங்க கிருஷ்ணா " என்று தன்னவனை துணைக்கு அழைக்க, அவனோ நித்யாவை பார்க்காமல் கண்ணைத் வழியாக மீராவை பார்த்து ரசித்தான்.

" நல்ல பார்த்தாரு போ " என்று நித்யா சிரிக்க, அந்த மூவரின் மனதை  தன் குரலால் வசியப்படுத்தினார் யுவன் ஷங்கர் ராஜா...

காதல் ஆசை யாரை விட்டதோ

உன் ஒற்றை பார்வை  ஓடி வந்து உயிரை தொட்டதோ

காதல் தொல்லை தாங்கவில்லையே

அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

யோசனை மாறுமோ ? பேசினால் தீருமோ ?

உன்னில் என்னை போல் காதல் நேருமோ ?

" உன்னில் என்னை போல் காதல் நேருமோ " என்ற பாடல் வரிகளில் கிருஷ்ணன் மீராவுடன் விழியால் கலந்தான்....அவன் காதலுடன் அவளை பார்த்த நேரம், அவளின் விழிகளும் காதல் ஏந்தி நிற்க, உல்லாசமாய் புன்னகைத்தான் கிருஷ்ணன் .

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே

உன்னை விடுமுறை தினம் என பார்க்கிறேன்

என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இன்னேரமே

அன்பே

நான் பிறந்தது மறந்திட தோணுதே

உன் ஒரு முகம் உலகமாய் காணுதே

உன் ஒரு துளி மழையினில் தீராதோ என்  தாகமே

கிருஷ்ணனின் வீட்டில் அபிராமி சிவகாமி இருவரும் அவர்களின் வருகைக்காக வாசிலிலே நின்றிருந்தனர். மீரா கேள்வியுடன் கிருஷ்ணனை பார்க்க,

" முதலில் இறங்கு மீரா ... நித்யா ஹெல்ப் பண்ணுடா " எனவும்

"  ஏன் அண்ணா இந்த எஜமான் படத்துல நம்ம தலைவர் மீனாவை தூக்கின மாதிரி தூக்குவிங்களே என்னாச்சு ? " என்று கிண்டலாய் கேட்டாள்.

" ஹேய் சும்மா இருடி " என்ற மீரா நித்யாவின் துணையுடன் கீழே இறங்க,

" கிருஷ்ணா, அவதான் சிரமப்படுறாளே நீதான் தூக்கிட்டு வாயேன் " என்றார் அபிராமி.

" தூக்குறதா ? எங்க வர சொல்றாங்க ? " என்று மீரா கேள்விகேட்கும் முன்பே, அவளை தூக்கி கொண்டு அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தான் கிருஷ்ணன். அந்த நேரம் பார்த்து தொலைகாட்சியில்

" கையில் மிதக்கும் கனவா நீ ? " என்ற பாடல் ஒலிக்க, ஏதோ கனவுலகத்தில் மிதந்த இருவரையும் நித்யாவின்  சிரிப்பொலி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.