(Reading time: 49 - 97 minutes)

 

ர்ஜுனன், எப்பொழுதுமே மாறாத புன்னகையுடன் வலம் வருபவன். அவனுக்கு கோபம் வந்ததே இல்லை ... அப்படியே கோபம் வந்தாலும், அப்போதும் அவன் முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும் .. நம் கதை ஆரம்பத்தில் கூட கர்ணனின் கவசகுண்டலம் போல தான் நம் அர்ஜுனனின் புன்னகைனு சொன்னேன். அப்படி பட்டவனின் சூடான கண்ணீர் தன் மீது படுவதை உணர்ந்து திடுக்கிட்டாள் சுபி...

" அர்ஜுன்...... அர்ஜுன் என்னாச்சு ? "

" ....."

" அர்ஜுன் ப்ளீஸ் அழாதிங்க ... எனக்கு கஷ்டமா இருக்கு "

" சுபீ "

" சொல்லுங்க "

" ஐ லவ் யு சுபி ..... ஐ லவ் யு " அவன் முதல் முறை அந்த மூன்று வார்த்தைகள் சொன்ன சந்தோஷத்திலும், அவன் கண்ணீரிலும் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் நின்றிருந்தாள் சுபத்ரா.

அவளின் முகத்தை கையிலேந்தியவன், அவள் முகமெங்கும் இதழ் பதித்து மீண்டும் தன் காதலை சொன்னான் .

" ஐ லவ் யு டீ "

" ....... "

அவனின் இதழ் ஒற்றுதலும், அணைப்பும் அவளை மாற்றியதோ இல்லையோ , அர்ஜுனனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

" ஹேய் மக்கு இளவரசி ... இப்படி ஞெ ஞெ ன்னு  விழிச்சா  என்ன அர்த்தம் "

"..."

" கடன் அன்பை முறிக்கும் தெரியுமா ? " எனவும் திரு திருவென விழித்தாள் சுபத்ரா . அவளின் மூக்கை பிடித்து செல்லமாய்  ஆட்டியவன்

" கிஸ் பண்ண கிஸ் கொடுக்கணும் தெரியுமா ? கடனை திருப்பி கொடு  " என்றான்.

" கண்ணை மூடுங்க "

கண்ணை மூடிய அர்ஜுனன் திருட்டு தனமாய் கண் திறக்கவும் சுபத்ராவின் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்க்கவும் இருந்த ஒரு நொடியில் சட்டென தப்பித்து  திரும்பியவன்,

" அடிப்பாவி லவ் சொன்ன அறைய வர்றியே ராட்சசி " என்றான்.

" போடா .... எவ்வளோ பயந்துட்டேன்  தெரியுமா ? நீ பாட்டுக்கு போன் பண்ணே .. இங்க வந்தே..என்னை கட்டி புடிச்சு அழுது ... லவ் சொல்ற  ...எனக்கு எப்படி  இருந்துச்சு தெரியுமா ? நீ அழறதை  பார்க்கவுமே எனக்கு பாதி உயிர் போச்சு " என்றவள் கண்களில் நீர் கோர்க்க நின்றாள்.

" ஹேய் சாரி டா..... "

"........"

" ப்ளீஸ் கண்மணி .... சரி நீ கேள்வி கேளு நான் பதில் சொல்றேன் ... பட் இப்படி பட்டாசு மாதிரி வெடிக்காத ... உன் யுவராஜனுக்கு பயம்மா இருக்கு "

" .........."

" சுபி ப்ளீஸ் டா .... "

" என்னாச்சு அர்ஜுன் ஏன் இந்த அழுகை ? "

"........"

" என் கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்லிட்டு இப்படி  இருந்தா என்ன அர்த்தம் ? "

" ஒரு கெட்ட கனவு டா ... நீ என்னை விட்டு பிரியுற மாதிரி ... கனவுன்னு என் மூளைக்கு எட்டினது மனசுக்கு எட்டல .. நீ இல்லாத லைப் ஐ நெனச்சு கூட பார்க்க முடியல கண்மணி ... உயிரே போச்சு "

என்றவனின் கடைசி வாக்கியத்தை முடிக்குமுன்னே அவன் வாயை பொத்தினாள் சுபத்ரா.

" எனக்கு புரியுது அர்ஜுன் " என்றவன் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

" இப்போ நீ எதுக்கு டீ அழறே ? "

" தெரியல அர்ஜுன் ...பட் கஷ்டமா இருக்கு   "

" கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா -நான்

கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் .

பூவெல்லாம் உன் வாசம்..

நீ பேசும் பேச்செல்லாம்

நான் கேக்கும் சங்கீதம்..

உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி...!

நெடுங்காலமாய் உறங்காமலே

எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே

உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..

தரிசான என் நெஞ்சில்

விழுந்தாயே விதையாக..

நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே

என் ஜீவன் வாழுதடி...

நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால்

என் ஆயுள் நீழுமடி...! "

" அர்ஜுன் ....... "

" ஐ லவ் யு டா "

" ம்ம்ம்ம் நானும்தான் "

"....."

" என்ன இப்படி பார்க்குறிங்க ? "

" இதுதான் நீ காதலை  சொல்லுற லட்சணமா ? "

" வெவ்வேவ்வேவ்வேவ்வே ...... என்னை பதற வெச்சதுக்கு இதான் தண்டனை ... எனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லுறேன் "

" சி போடி "

" சி போடா "

" ஆமா யாரோ கோபத்துல என்னை டா போட்டு கூப்பிட்ட மாதிரி இருக்கே ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.