(Reading time: 38 - 76 minutes)

 

" போடி குட்டி குரங்கு சுப்பி " என்றான் ரகு.

" ஐயோ போதும் போதும் போதும் சண்டை வேணாம். நீங்க இன்னும் சாப்பிடலையா ? இங்க என்ன பண்ணுரிங்க?  வீட்டுல தேடுவாங்களே? தனியாவா வந்திங்க ? " என்றவள் கிருஷ்ணனை தேடுகிறாள் என்பதை அவள் கேள்வியிலே அறிந்து கொண்டனர் மூவரும்.

" நித்துவும் நீங்களும் தனியா தானே இருப்பிங்க ..அதான் கம்பனி கொடுக்கலாம்னு வந்தோம். வீட்டுல பெரியவங்கதான் எங்க தொல்லை தாங்காம அனுப்பி வெச்சாங்க. ஏதோ முக்கியமா பேச போறாங்கலாம் . அனேகமா அண்ணாவின் கல்யாண பேச்சாக இருக்கும் " என்றபடி  மீராவின் முகத்தை ஆராய்ந்தாள் சுபத்ரா.

" ஓ " என்றவள் வேறேதும் பேசாமல் முகம் வாட,

" ரொம்ப பசிக்கிது மீரா " என்றாள் நித்யா.

" ஆமா சொல்லவே மறந்துட்டேன் அண்ணி ...உங்க நேம் வசந்தர மீராவாமே .. நித்யா சொன்னா .... நல்ல இருக்கு " என்ற ரகு மீண்டும் தன்னை " அண்ணி " என்று அழைக்கிறானே என்று சங்கோஜப்பட்டாள்.

" வந்த உடனே உன் ஓட்டை வாயை திறந்துட்டியா நித்யா ? " என்றவள் " ரகு நாம எல்லாம் கிட்ட தட்ட ஒரே ஏஜ் தானே? என்னை பேரு சொல்லி கூப்பிடுங்க " என்றாள்.

" ஷபா போதும்டி ..உன் பெயர் புராணம். பசிக்கிது ...சாப்பாடு கிடைக்குமா ? கிடைக்காதா ? " என்றாள் நித்யா.

" ஒரு 15 நிமிஷம் வைட் பண்ணுங்க சமைச்சிட்டு வரேன் " என்றவளை கண்ணில் சிரிப்புடன் பார்த்து சரியென தலை அசைத்தனர் மூவரும் .

உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா ?

என்று பாடிக்கொண்டே சமைத்துகொண்டிருந்தான் கிருஷ்ணன்.

 சமையலறையில் நிழலாட , நித்யா என்று நினைத்தவன்

" நித்து சமையல் ஓவர். வந்து உப்பு  சரியா இருக்கா பாரு " என்றவாறே திரும்பினான்.

இவ்வளவோ நேரம் எதிர்பார்த்து தேடியதாலோ என்னவோ, கிருஷ்ணனை கண்டதுமே வார்த்தைகள் இல்லா நெகிழ்ச்சியில் கண் கலங்கினாள் மீரா. இதென்ன இன்னைக்கு புதுசா ? என்னம்மோ பல வருஷம் கழிச்சு பார்க்குற மாதிரி என்று தன்னை தானே திட்டிகொண்டாள் . அதே நேரம் அவள் புறம் திரும்பினான் கிருஷ்ணன் .

அவனுக்கு பிடித்த கருபச்சை நிற புடவையில் தேவதையாய் மிளிர்ந்தாள் மீரா. கண்களில் இருந்து கண்ணீர் விழவா என காத்திருக்க, பதட்டத்தில் துடித்த கண்களும் அதற்குள் இணையாய் துடித்த  இதழ்களும், காற்றில் அலைபாயும் கூந்தலுடன் நின்றவளை கண்டு தடுமாறினான் கிருஷ்ணன். அவளை பார்த்துக்கொண்டே  வானலி அருகே விரல் நீட்ட , கை சுட்டுவிட வேகமாக  அவனிடம் ஓடிவந்தாள் மீரா.

" என்ன கிருஷ்ணா இது, பார்த்து பன்றதில்ல ? " என அவள் வினவ,

" பார்த்துகிட்டுதான் இருந்தேன் ...உன்னை" என்றான்.

அவன் பதிலில் அவள் லஜ்ஜையுற்றாலும் காயம் ஆகிவிட்டதோ என்ற பதட்டத்தில் அவன் விரல் பிடித்து அவள் ஊத, மறு கரத்தால் அவளை தன்னோடு அணைத்து கொண்டான் கிருஷ்ணன்.

" ப்ச்ச் என்ன கிருஷ்ணா இது விடுங்க "

" முடியாது "

" இதுலாம் தப்பு ... வெளிய எல்லாரும் இருக்காங்க "

" ஓ அதான் பிரச்சனையா ...அவங்களை வேணும்னா போக சொல்லவா ?"

" ஐயோ என்ன ஆச்சு உங்களுக்கு ?"

" மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ? " காதல், தாபம் , தவிப்பு என்று மூன்று உணர்வுகளும் கலந்து அவன் பாடினான்.

" ஏன் மயங்குநிங்க? அது உங்க தப்பு " என்றாள் மீரா.

சட்டென அவளை விடுவித்தவன், அவளை கடந்து நடப்பது போல நடந்து திரும்பி பார்த்தான். மீரா மெளனமாக அழுவதை உணர்ந்தவன் அவளை பின்னாலிருந்து மீண்டும் அணைத்தான். அவள் கூந்தலில் முகம் புதைத்து அவன் வாசம் பிடிக்க மீரா மயங்கி போனாள்... முதலில் முரண்பட்டவள், இப்பொழுது அவன் அணைப்பில் நெகிழ்ந்து நிற்க,

" ஹேய்  நீலாம்பரி.... ஏன் மயங்குனிங்க நு கேட்டியே , அதுக்கு இதுதான் பதில். மனசுக்கு பிடிச்சவ எப்படி இருந்தாலும் அவ மனசுக்கு புடிச்சு போய்ட்டா கடைசி  மூச்சு  வரை உயிர் அவளுக்கு மட்டும் மயங்கி அடிமையாய் இருக்கும் " மெல்லிய குரலில் உரைத்தவன், அவள் இதழ் பதித்தான் கிருஷ்ணன்.

" மீரா "

" ம்ம்ம்ம் ? "

" எல்லாரும்  வைட் பண்றாங்க ...போலாமா ? "

மெல்ல விழி திறந்தவள், அவன் நிறைந்த பார்வையை கண்டு நெகிழ்ந்தாள். என்றோ அவள் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.

பொன் தந்தேன்

மாங்கல்யமாக்கி மணந்து  கொண்டான்

வைரங்கள் தந்தேன்

நகையாக்கி எனக்கே அணிவித்தான்

பொருள் தந்தேன்

அரண்மனையில் வைத்து என்னையே அரசியாக்கினான்

என் புன்னகை தந்தேன்

விலைமதிப்பில்லாதது என்றபடி தன் இதயத்தில் பொத்தி வைத்தான்.

" சரி சரி வா டா.... நான் சமைச்சதை சாப்பிட நிறைய டெஸ்டிங் எலிகள் வைட்டிங் ல  இருக்கு..சோ அதுங்க உஷார் ஆகுரதுகுள்ள ஒரேடியா தூக்கிடலாம் " என்று விழி மின்ன சிரித்தவன், தான் சமைத்த உணவை அவள் கைகளில் திணித்து டைனிங் ஹாலுக்கு அனுப்பினான்.

" எப்படி இவன்னால எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது ? " என்று நினைத்து கொண்டவள் ஒரு புன்னகையுடன் அவர்களோடு அமர்ந்துகொண்டாள்.

" ஹப்பாடி வந்துட்டியா டீ ? நான் கூட டின்னெர் எடுத்துட்டு வா நு சொன்னதும் நாளைக்கு ராத்திரிக்காக இப்போ சமைக்கிறியோன்னு நெனச்சேன்" 

" ஓஹோ நீ அப்படி நெனைச்சியா ? நான் டின்னெர் நு சொன்னதை மறந்து பிரேக் பாஸ்ட்  கொண்டுவர போறாங்கன்னு நெனச்சேன் "

" ஆண்டவா , போதும் போதும் ... சுபா நீயும் இந்த பிசாசு கூட சேர்ந்து என்னை ஓட்டுறியே ..இது நியாயமா ? நீங்க ஏன் ரகு அமைதியா இருக்கீங்க ? "

" அமைதியா இது பசி மயக்கம் மீரா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.