(Reading time: 38 - 76 minutes)

 

" டடே என் இளவரசி வெட்கபடுறதை நிலவு பார்த்தா அதுவும் சிவந்து இப்போவே பொழுது  விடிஞ்சிருமே "

அவன் வார்த்தையில் மேலும் சிவந்தவள்,

"போதுமே ... இப்படி கவிதையாய் சொல்லியே என்னை மயக்கிடுவிங்களே" என்றாள்.

" சரி அப்போ நீ கவிதை சொல்லு "

"நானா? "

" ஆமா "

" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..................

எண்ணம் புதிதல்ல ..,

எண்ணும் நானும் புதிதல்ல ..,

நினைவில் நின்றவன் மட்டும்..,

நிதமும் புதியாய் இனிக்கின்றாய் !

சன்ன குரலில் நீ அழைக்கிறாய் ...

என் பின்னல் பின்னால் நின்றிழுக்கின்றாய் ...

திண்ணமாய் வந்தவனே...

என் கன்னம் உன் சீதனமோ ..!

எட்டி தொட்டுவிட .

எகிறி துடிப்பது

உன் விரல்களா ?

அல்ல கண்களா ?

திட்டி தீர்த்து உன்னை

இமை கொட்டி ரசிக்கும் நான்

உன் அன்பிற்கினியவளா ?

அல்ல அடிமை புகுந்தவளா ?

சித்தம் கலங்கியும்

உன் மீது கொண்ட பித்தம் போகவில்லை

மொத்த ஆசையெல்லாம் வித்தகனே ,

ரத்தம் உறையும்வரை நித்தம் உன் அணைப்பில் நெகிழ்ந்திடவே...!

" சுபீ"

" நீயே எழுதுனியா ? "

" ம்ம்ம்ம் உங்களை மிஸ் பண்ணும்போதெல்லாம் எழுதுவேன் அர்ஜுன் ... "

" ஹேய் ஏன்டா என்னை மிஸ் பண்ணுறேன்னு சொல்லுற நீ ? ... நான் உன்கூடவே தானே  இருக்கேன் "

" அது என்னம்மோ தெரில அர்ஜுன் .. நீங்க இருக்கும்போது ஏதும் தெரியல .. பட் நீங்க பேசி முடிச்சு போன அடுத்து நிமிஷமே மறுபடி உங்களை மிஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன் "

" ஹ்ம்ம்ம்ம்ம் "

" அர்ஜுன் கவிதை எப்படி இருக்கு சொல்லலியே ? "

" சொல்ல வார்த்தை இல்லம்தான் மௌனம் ஆகிட்டேன் இளவரசி ... யாருடைய பேச்சுகுமே கட்டுபட்டாத அர்ஜுனன் உன் காதல் முன்னாடி மண்டியிட்டு நிற்கிறேன்.. வேணும்னா பாட்ட பாடுறேன் நீயே  கேளேன் "

" ம்ம்ம் "

" அய்யய்யயோ ஆனந்தமே

நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்

மாறி  மாறி  சேருதே

காதல் போடும் தூரலில்

தேகம் மூழ்கி போகுதே

யேதோ ஒரு ஆசை

வா வா கதை பேச

அய்யய்யோ

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட

என்று சொல்ல பிறந்தேன்

கைகள் இருப்பது தொட்டு அணைத்திட

அள்ளிக்  கொள்ள துணிந்தேன்

எதற்காக  கால்கள் கேள்வி கேட்கிறேன்

துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட

இள நெஞ்சினில் இன்பமும் கூட

மெதுவா... வரவா... தரவா... "

" வரவா வரவா நு கேட்டா மட்டும் போதுமா யுவராஜரே? வரவேண்டியதுதானே யாரு தடுத்தா? "

" வரலைன்னு யாரு சொன்னா இளவரசி .. நான் அங்கேதான் இருக்கேன்... நீல கலர் டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு " என அவன் சன்ன குரலில் சொல்லவும் மெத்தைலிருந்து அவசரமாய் எழுந்த சுபத்ரா, தன் அறையின் எல்லா திசையிலும் பார்வையை சுழற்றிவிட்டு, ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.

" ஹேய் இளவரசி ஜன்னல் வழியா எங்க பார்க்குற ? "

" அர்ஜுன் நீங்க எங்க இருக்கீங்க ? யாராச்சும் பார்த்த என்ன ஆகுறது ? "

" ஹா ஹா ஹா யாரும் பார்க்க  முடியாது ..முதல்ல ஜன்னல்  பக்கம் நிற்காம உள்ள வா "

" ம்ம்ம்ஹ்ம்ம் மாட்டேன் "

" ஹே மக்கு இளவரசி உன் ஜன்னல் வழியா பார்த்தா என் வீடு உனக்கு தெரியாது . "

" வீட்டுலயா இருக்கீங்க ? "

" ஆமா இளவரசியே"

" அப்போ எப்படி நீல கலர் டிரஸ் நு சொன்னிங்க ? நான் ஜன்னல் ல எட்டி பார்த்ததை கூட சொன்னிங்களே "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.