(Reading time: 38 - 76 minutes)

 

" சுபா கிட்ட சொல்லி இருக்கேன் சிவா..பேசி முடிச்சதும் மிஸ் கால் தரேன். அதற்கப்பறம் வாங்கன்னு "

" ஓஹோ அப்போ எல்லாம் பிளான் போட்டதுதானா அண்ணி ? "

" ஆமா தம்பி " என்று சிரித்தார் அபிராமி. சுபத்ராவிற்கு என்ன தெரியும் ? அண்ணி எதை பேச போகிறார் என்று யோசித்த சந்திர பிரகாஷ் , எதுவாக இருந்தாலும் முதலில் அண்ணியே பேசி முடிக்கட்டுமென்று காத்திருந்தார். 

மாடியில்,

" சொல்லு அபி ...என்ன பேசணும் ? "

" ம்ம்ம்ம் தம்பி நீங்க எதோ சொல்லணும் சொன்னிங்களே? "

" இல்ல நீங்க முதல்ல பேசுங்க அண்ணி "

" ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................ நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போயிருந்திங்களே அப்போ இங்க நிறைய விஷயம் நடந்துருச்சு..."

" என்ன அபி பீடிகை பலம்மா இருக்கே ? "

" பீடிகைலாம்  இல்லங்க ... அன்னைக்கு கோகுலஷ்டமிக்கு வந்தாங்களே பானு, ஜானகி, அர்ஜுன் ........... "

" ஆமா சிவகாமியின் தோழின்னு சொன்னியே .... "

" ம்ம்ம்ம் ஆமா அன்னைக்கு இருந்த பிசியில  வெறும் நண்பர்கள்னு  மட்டும்தானே சொன்னோம்..பட் நாங்க எப்போ  மீட் பண்ணோம்னு நான் சொல்லலியே ? நீங்க கூட நான் ஜானிகிகிட்ட பேசுறதை கவனிச்சுட்டு என்னம்மா பாச மழை ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னிங்களே "

" அது....ஆமா ..அன்னைக்கு பார்க்க அப்படிதான்  இருந்தது ... ஜானகி மட்டும் இல்ல ..அர்ஜுன் கூடத்தான் என்னமோ நம்ம பார்த்து வளர்ந்த பையன் மாதிரி எவ்வளோ ப்ரண்ட்லியா இருந்தான். ரொம்ப நல்ல பையன் "

 சூர்யா பிரகாஷின் பாராட்டுதலில் மூவருமே முகம் கனிந்து புன்னகைத்தனர்.  ( ஆமா ஆமா அங்கிள் அவர் ரொம்ப நல்லவர்தான் )

" ஆமா அண்ணா, முதல்ல நான் கூட ரொம்ப விளையாட்டுத்தனமான பையன்னு நெனச்சேன், ஆனா பேச்சு பேச்சாக இருந்தாலும், பொறுப்பா எல்லாருக்கும் உதவினது, அவங்க அம்மாவை கவனிச்சுகிட்டது எல்லாத்தையும் நானும் கவனிச்சேன். "

" நிஜம்தான் ..........." என்று ஆரம்பித்த அபிராமி, அவர்களை சரவண பவனில் பார்த்தது, அர்ஜுனை தங்களுக்கு பிடித்து போனது , இரு  குடும்பத்தாரும்  நட்பு பாராட்டியதில் தொடங்கி ஜானகியை பற்றியும் ரகுராமை பற்றியும் பேசி முடித்தார்.

அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர் மூவரும். சூர்ய பிரகாஷ் மட்டும் ஏதோ சிந்தனையிலே இருக்க,

" என்னங்க .................? "

" ..."

" நான் ரகுராமுக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு நினைக்க வேண்டாம் "

" ......."

" ஆனா அவன் பக்கம் நியாயம்  இருக்குதுன்னு எனக்கு தோணுது. நம்ம பசங்களுக்கு சின்ன வயசுல அவங்களுக்கு பிடிச்சதை தந்து நாம தானே பழக்கபடுத்தினோம் . இப்போ வாழ்க்கை துணைன்னு வரும்போது மட்டும் எதிர்கிறது எனக்கு சரின்னு படலை. ஒரு வேளை அவன் தப்பான பொண்ணை விரும்பினா , நாம அதை தடுக்கலாம் ..ஜானு நல்ல பொண்ணு "

" அக்கா சொல்றது எனக்கும் சரின்னு படுது மாமா.. நானே ஜானகியை பார்த்தப்போ நம்ம கிருஷ்ணாவுக்கு பேசலாம்னு நெனச்சேன் " என்று மனதில் மறைக்காமல் சொன்னார் சிவகாமி.

கிருஷ்ணனை பற்றி பேச்சு வந்ததும் இதுதான் சமயம் என்று சுபத்ரா மூலமாக தெரிந்து கொண்ட கிருஷ்ணனின் காதலையும் அனைவரிடமும் சொன்னார் அபிராமி.

( அர்ஜுன்தான் ஓட்டை வாய்ன்னா ...நம்ம சுபா அதுக்கு மேல இருப்பாங்க போல ! ஜாடிக்கு ஏற்ற மூடி ....)

சுபத்ராவிற்கு தெரிஞ்ச   கிருஷ்ணனின் காதல் கதையை நான் எல்லாருக்கும் மறுபடியும் ஞாபக படுத்துறேன். சுபத்ராவை பொருத்தவரை கிருஷ்ணா மீரா ஏதோ மனமுரண்பாட்டுல பிரிஞ்சு இருக்காங்க அவ்வளவுதான். சோ நம்ம கதைப்படி மீராவை பற்றி அஞ்சு பேருக்கு மட்டும்தான் தெரியும் .... அது யாருன்னா கிருஷ்ணா, நித்யா, சந்திர பிரகாஷ் சார், நானு, நீங்க ! ( ஒரு படத்துல விசு சார் சொல்லுவாரு " ரெண்டு பேருக்கு மேல ஒரு விஷயம் மூணாவதா ஒருத்தர் காதில் விழுந்தா அதுக்கு மேல அது ரகசியம் இல்லன்னு .... அப்போ இந்த ரகசியம் ஒரு நாள் வெளிவருமா ? ................... பொறுத்திருந்து பாருங்க )

ரகுராமின் காதல் கதை கேட்டபோது இருந்த அதிர்ச்சி இப்போ கிருஷ்ணனின் கதை கேட்கும்போது சூர்ய பிரகாஷ் முகத்தில் இல்லை.

" இப்படி அமைதியாவே இருந்தா எப்படிங்க ? " என்று கொஞ்சம் குரல் உயர்த்தி கேட்டு சூர்யா சாரின் சிந்தனையை கலைத்தார் அபிராமி .

" கிருஷ்ணா - மீரா பத்தி சகலமும் தெரியலைன்னாலும் கூட எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்  அபி. மீரா இங்க வந்தபோதே நானும் சந்துருவும் அவ பாமிலி  பத்தி விசாரிச்சோம். என்னோட லேட் பிசினஸ் பார்ட்னர் சதாசிவம் பொண்ணுதான் மீரா .. அப்போ மீரா  ரொம்ப சின்ன பொண்ணு . என்னதான் எனக்கு சதா மேல கோவம் இருந்தாலும் மீரா மேலே பாசம்தான்  இருந்தது.  இங்க  வந்த  மீராவை நம்மோடு ஒண்ணா வெச்சிக்கணும்னு நானும் நெனச்சேன் பட் நம்ம பையன்தான் குட்டையை குழப்பிட்டான்... பட் நான் அவங்களை கவனிச்சுட்டுதான் இருந்தேன் . ரெண்டு பேருக்கும் சப்ப்ரைசா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு கூட நெனச்சேன்...ஆனா இப்போ ரெண்டு பேருக்கும் விரிசல் வந்துடுச்சே..."

" அதெல்லாம் கிருஷ்ணன் பார்த்துக்குவான் கவலைபடாதிங்க "

" ஆமா அதான் உன் பையன் கொஞ்ச மாசமா தோட்டத்துல பாட்டு கச்சேரி நடத்துறானே ...அப்படியாச்சும் சேருராங்களா பார்ப்போம் "

அவர் சொன்னதில் அதிர்ந்த சந்திரப்ரகாஷ்  " அண்ணா அதை நீங்களும் கேட்டிங்களா ? "

" தம்பி நம்ம கிருஷ்ணா பாடுறது நம்ம எல்லாருக்குமே கேட்டுடுதான் இருக்கு ...ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுறதுன்னு வைட்டிங்...இது தெரியாம பூனை கச்சேரி நடத்துது " ( ஹா ஹா ஹா கிருஷ்ணா நீங்க பூனையாம் ...ஹீ ஹீ )

" அப்போ ரகு பத்தி உங்க முடிவு அண்ணா ? "

" அவனை என்ன சொல்றதுன்னே  எனக்கு புரிலடா ... இவ்வளோ காதல் வெச்சுருக்கான் அந்த பொண்ணு மேல ...அப்பறம் இப்படி இவ்வளவு நாள் அவளை பார்க்காத முன்னாடி எந்த கவலையும்  இல்லாத மாதிரி இருக்கான் .. ரகு மனசுல இவ்வளோ ஆழமான காதல் இருந்திருக்கே .... அதான் ஆச்சர்யமா இருக்கு ... உங்க எல்லாருக்கும் இன்னொரு விஷயம் சொல்லவா ? "

" சொல்லுங்க மாமா "

" நம்ம ஆபீஸ் ல ரகுவின் பி. ஏ சுஜாதா ரிசைன் பண்றா. அந்த பொண்ணுக்கு பதிலா ஜானகிதான் வர போறா "

" உங்களுக்கு எப்படி தெரியும் இது " என்று அபிராமி அவசரமாய் குறுக்கிட

" அப்போ உனக்கு  முன்னாடியே தெரியுமா அபி ? "

" ம்ம்ம் தெரியும் ... ரகு வீட்டுக்கு வந்ததுமே என் கிட்ட வந்து சொல்லிட்டான் ... உங்க கிட்ட அப்பறமா சொல்லலாம்னு நெனச்சேன் மா ... பட் எதுவும் மறைக்க முடில ன்னு சொன்னான்"

" ஹ்ம்ம்ம்ம் அப்படி என்னதான் பாசமோ தெரில சந்துரு இந்த பையனுக்கு.. பாரேன் ஜானகியை பார்த்தபோதும் அபி கிட்டதான் சொல்லி இருக்கான்..இப்போ ஆபீஸ் ல வேலை செய்ய போறதையும் அவனே வந்து சொல்லிட்டான்.. ஹ்ம்ம் உன் பையன் உன் பையன்தான் அபி " என்று அவர் சொல்லவும் பெருமையாய் சிரித்தார் அபிராமி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.