(Reading time: 39 - 78 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

நேற்றைய நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தாள் மீரா. சுபத்ரா தன்னை அண்ணி என்று அழைத்ததை மீண்டும் எண்ணி சிலிர்த்து கொண்டாள். சில மணி நேரங்களுக்கு முன்பு  ஜானகியை பார்த்து சுபத்ரா அண்ணி என்றழைக்கவும் தானாகவே அவளுக்குள் எழுந்த ஏமாற்றத்தை எண்ணினாள். எவ்வளவு விலகி போனாலும் அவளால் கிருஷ்ணன் மீது கொண்டிருக்கும் காதலை கடுகளவும் மாற்ற முடியாது என்பதை நினைத்தவளின் உள்ளம் இப்பொழுது கிருஷ்ணனை சுற்றி வந்தது.

" எவ்வளவு இனிமையானவன் ? என் லைப் ல நான் தொலைச்ச எல்லா உறவுகளின் ஒரே உருவம் தான் கிருஷ்ணா. இன்னும் எத்தனை நாட்கள்தான் என்னையே நினைச்சு கிட்டு இருக்க போறானோ ? கடவுளே " என்றவளுக்கு இந்த முறை அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும் என்ற வேண்டுதல் கொஞ்சம் மறந்து விட்டது போலும். நேற்று இரவு, அவனின் இதழ் ஒற்றுதலும், ஸ்பரிசமும் பாடலும் அலைபாய்ந்த அவள் மனதை அமைதியாக்கியது. அவனுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இன்னும் வரவில்லை என்றாலும் அவனை விலகி செல்வதாய் இல்லை என்று முடிவெடுத்தவள், ஆட்டோ ஆபீஸ் முன் நிற்க, பணம் தந்துவிட்டு அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

" குட் மோர்னிங் மீரா "

" மோர்னிங் ஸ்வப்னா. சாரி ஐ எம் லேட் . எம்.டி வந்துட்டாரா?"

" வந்துட்டாரு. ஆமா இன்னைக்கு உனக்கு பிறந்தநாளா ? "

" இல்லையே ஏன் ?  "

" இல்ல முகமே ரொம்பே ப்ரெஷ் ஆ இருக்கு. அதுவும் இந்த பேபி பிங்க் கலர் சாரில தேவதை மாதிரி இருக்கே. "

" தேங்க்ஸ் பார் யுவர் வோர்ட்ஸ் "

" பாரு சொல்ல மறந்துட்டேன் . உன்னை எம் டி கூப்பிட்டாரு "

" கோபமா இருக்காரோ ?"

" நோ சான்ஸ் அதுவும் இவ்வளோ அழகான பொண்ணு மேல கோபப்படுவாரா? ஜொள்ளு வேணும்னா விடலாம். "

" என்ன பேச்சு இதெல்லாம் ஸ்வப்னா? எனக்கு இப்படிலாம் பேசறது பிடிக்கல . நான் எம் டீ யை பார்க்க போறேன்." என்று வேகமாக நடந்த மீராவின் கோபம் ஸ்வப்னாவிற்கு புதிதல்ல. மீராவின் இந்த குணம் தனக்கு பழக்கமான ஒன்று என்பதால் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள் ஸ்வப்னா.

" மே ஐ காம் இன் சார் "

" எஸ் "

" சார் குட் மோர்னிங் "

" மோர்னிங் மீரா . உங்க ஹெல்த் இப்போ எப்படி இருக்கு ?  "

( கிருஷ்ணன் அவளுக்கு தலைவலி என்று சொல்லி வைத்தது ஞாபகம் வந்தது )

" இப்போ பரவால சார். " என்று சமாளிக்கும்படி புன்னகைத்தாள்.

" ம்ம்ம் யு லுக் ப்ரெஷ் டுடே மீரா. எனிவே , நான் ஒரு முக்கியமான விஷயமா பேசத்தான் கூப்டேன் "

" சொல்லுங்க சார் "

" நீங்க வேலையை ரிசைன்  பண்ற ஐடியா ல இருக்கிங்களாமே"

( ஐயோ சார் , அது போன மாசம் இது இந்த மாசம் )

" அது வந்து "

"  இல்லேன்னா இல்லன்னு சொல்லிருப்பிங்க . அது வந்துன்னு நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா நான் கேள்வி பட்டது நிஜம் அப்படிதானே ? "

" ம்ம்ம்ம் " என்றவள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாள்.

" பேசாம நீங்க டிரான்ஸ்வர்  வாங்கிகோங்க மீரா "

" சார் ?? "

" நமக்கு ஊட்டிலயும் கம்பெனி இருக்கு மீரா ."

" சார் அது வந்து  "

" நீங்களும் ஊட்டில இருந்து தான் இங்க வந்ததா கிருஷ்ணன் சொன்னான் . சோ நான் ஏற்பாடு பண்றேன் . நீங்க அடுத்த வாரமே " என்று அவன் முடிப்பதற்குள்,

" சார் எனக்கு இங்கதான் வேலை செய்ய புடிச்சிருக்கு. டிரான்ஸ்வர் லாம் வேணாம். நான் ரிசைன் பண்றதா நெனச்சேன் பட் முடிவெடுக்கல . இனி எப்பவும் இங்கதான் இருப்பேன் " என்றவள் சொல்ல முடியாத பதற்றத்தில்

" நான் என் கேபினுக்கு போறேன் சார் . எஸ்கியுஸ் மீ " என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறினாள் . ஒரு புன்னகையுடன் அவள் சென்ற திசை பார்த்தவன் மேஜை மீது இருந்த கைதொலைபேசியை எடுத்து

" ஹேய் மச்சான் கேட்டியா ?" எனவும்

எதிர்முனையில் துள்ளி குதித்தான் கிருஷ்ணன்.

" சூப்பர் டா ..  இனி என்  நீலாம்பரியை நான் பார்த்துக்குறேன். தேங்க்ஸ் டா" என்று போனை வைத்தான் . ( ஏன்னா ஒரு விள்ளத்தனம் கிருஷ்ணன் உங்களுக்கு ? )

மீராவின் மாற்றத்தை அறிந்து கொண்ட கிருஷ்ணனுக்கு இன்னும் உறுத்தலாகத்தான் இருந்தது. இவ அவ்வளோ சீக்கிரம் இறங்கி வர மாட்டாளே என்று எங்கோ ஒரு எச்சரிக்கை மணி ஒலித்து கொண்டுதான்  இருந்தது. அதிகம் யோசிக்காமல்  அவனது பார்ட்னர் இன் க்ரைம் ஐ அழைத்தான் . ( அந்த பார்ட்னர் சொன்ன பதில் இங்க சொல்ல முடியாது ..பட் கிருஷ்ணா பேசுறதை வெச்சு கேஸ் பண்ணுங்க பார்ப்போம்.)

" ஹேய் பார்ட்னர் எங்கடா இருக்க ?"

".........................................."

" அதுக்குள்ள சென்னை வந்துட்டியா? நேத்துதானே நான் கால் பண்ணேன் "

".........................."

" உன் கருணையே கருணை .... சரி எங்க இருக்க ? "

"....................................."

" ஹோட்டலேயா? ஏன் வீட்டுக்கு வரல? "

".,..................................."

" என் கூடலாம் ஷாப்பிங் பண்ண முடியாதாக்கும் ? சரி ஓகே ஓகே . உன் ப்ரைவசியை கெடுக்கல.  இவினிங் நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன் "

"......................."

" ம்ம்ம் நீ சொன்ன மாதிரியே சஞ்சய்யை  பேச சொன்னேன்.  திடீர்னு மீரா மனசு மாறின மாதிரி பேசுனாளாம்.... எஸ் எனக்கும் அதே டவுட்டு தான் "

"................................"

" நீ வந்துட்டியே... இனி எனக்கு மீராவை பத்தி கவலை இல்ல. பட் நான் சுபா கிட்ட இதெலாம் சொல்லி அவ கிட்ட ஹெல்ப் கேக்குறத தான் பிளான் . திடீர்னு உன்கிட்ட மீராவை பத்தி உளறி மாட்டிகிட்டதுனால இப்போ உன்னுடைய என்டிரி.... சுபா  எப்படி எடுத்துக்கப்போராளோ ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.