(Reading time: 39 - 78 minutes)

 

" ஹ்ம்ம் கோவம் இல்லபா ... வருத்தம் .. கிட்ட தட்ட ரெண்டு வருஷம் பெர்சனல் செக்ரட்டரியா வேலை செஞ்சாங்க. ஷி இஸ் சோ டேலண்டட். இப்படி திடீர்னு  ஒரு மாசம் நோட்டிஸ் கொடுத்துட்டு வேலையை ரிசைன் பண்றாங்க. அதான் என்ன பண்ணலாம் யோசிக்கிறேன். அவங்க பெர்சனல் விஷயத்தை நான் தப்பு சொல்ல முடியாது . பட் அதே நேரம் நான் மீட்டிங் அது இதுன்னு பிசியா இருக்குற நேரம் இவங்க இப்படி போறது எனக்கு ரெஸ்ட்லஸ் பீல் தருது "

" நிஜம்மாவே உன்னை என்ன சொல்றதுன்னு தெரில ரகு . இந்த ரீசன் உனக்கே சில்லியா இல்லையா? சுஜாதா இல்லன்னா அவங்களுக்கு பதிலா இன்னொருத்தரை வேலைக்கு அப்பொயிண்ட் பண்ணு. இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு . நீ சூஸ் பண்ற கேண்டிடட்டை சுஜாதாவுக்கு அசிஸ்டண்டா போட்டு ட்ரைனிங் கொடு. "

( ம்ம்ம்ம்கும்ம்ம் இது எங்களுக்கு தெரியாதா?  இருந்தாலும் உங்க வாயால இதை வர வைக்கணும்ல டாடி..நாளைக்கு என் மேல உங்களுக்கு டவுட்டு வர கூடாதே ...பட் அதுக்காக ' சில்லி ' நு சொல்ற அளவுக்கு நடிக்க வேண்டியதா இருக்கே என்று மனதிற்குள் சிரித்து கொண்டான் ரகு ............. ஹா ஹா ரகு சார், எனக்கும் சிரிப்பு வருது. உங்க மேல உங்க அப்பாவுக்கு டவுட்டே வராது ஏன்னா உங்க அம்மாவே அப்பாகிட்ட உண்மையை  சொல்லத்தானே போறாங்க . சின்னவங்க உங்களையே நான் சுறுசுறுப்பா காட்ட முயற்சிக்கும்போது  உங்க பேரன்ட்ஸ் ஐ மட்டும் சும்மா விட்டுடுவேன்னா ? சரி வாங்க நாம மறுபடி சீன் கு போவோம் )

" சரிதான் அப்பா . பட் நான் இன்டர்வியு லாம் வெச்சு நல்ல ஆளா சூஸ் பண்ண லேட்டாகிடும். சோ தெரிஞ்சவங்களை தான் வேலைக்கு வைப்பேன் "

" அது உன் இஸ்டம் ரகு . இந்த கம்பனி பொறுப்பு எல்லாம் நான்  உன்கிட்டயும் உன் அண்ணன் கிட்டயும்  தந்தாச்சு . பாவம் கர்ப்பிணி பொண்ணு சுஜாதா . நீ அவ கிட்ட எவ்வளோ பிரன்ட்லி யா இருப்பேன்னு எனக்கு தெரியும் . நீ உன் வேலையை நெனச்சு டென்ஷன் ஆனாலும் அந்த பொண்ணு மனசு கஷ்டப்படும்ல .? "

" உண்மைதான் பா ... நான் சுஜாதா கிட்ட பேசறேன் "

( நம்ம ரகுவும் சூர்யா பிரகாஷ் சாரும்  பேசிகொண்டிருந்த அந்த சுஜாதாவை பற்றி நாமளும் கொஞ்சம் தெரிஞ்சுப்போமா ? )

சுஜாதா ரகுராமின் பெர்சனல் செக்ரடரி. பெற்றோர் தேர்ந்தெடுத்த  மாப்பிளை திருமணம் செய்து, அழகிய இல்வாழ்க்கையை தொடங்கியவள். சுஜாதாவையும் அவள் கணவரையும் பார்ப்பவர்கள் " நீங்க லவ் மேரேஜ் தானே பண்ணிகிட்டிங்க ? " என்று கேட்கும் அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்து காதலும் அன்பும் செலுத்தி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் காதல் பரிசாக இப்போது சுஜாதா கருவுற்றிருந்தாள். ( இந்த குட் நியுஸ் காக பூவி அவங்களுக்கு ஒரு பாடல் டெடிகேட் பண்ண விரும்புறேன் )

மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை

 இந்த மங்கல மங்கை

வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை

 உன் மழலையின் தந்தை

 நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே

அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

 நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே

 அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

இப்படியாய் நம்ம சுஜாதா தாயாக போகிற  சந்தோஷத்தில் அவளது அன்பு கணவர் இனி சுஜாதா வேலை செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். கணவரின் பேச்சை மீற விருப்பமில்லாமல் இன்னும் ஒரு மாதத்தில் வேலையை ராஜினாமா செய்வதாக சுஜாதா முடிவெடுத்தாள். ( டிங் டிங் டிங் இதுதான் சுஜாதாவின் வரலாறு ..." வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே ".............)

சுஜாதா வேலையை ரிசைன் பண்ண போற விஷயம் ரகுராமுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடியே தெரியும் . இப்படியே  வாரத்துக்கு ஒரு தடவை " ஹாய் , சாப்டியா? அத்தை எப்படி இருக்காங்க?? ஆட்டுக்குட்டி எப்படி இருக்குனு ? " கேள்விகள் கேட்டும் இடையில மானே தேனே பொன்மானே மாதிரி ரெண்டு மூணு ஜோக் சொன்னா  மட்டும் ஜானகி மனசு மாறிடா மாட்டங்க என்பதை ரகு நன்றாகவே  தெரிஞ்சு வெச்சிருந்தாரு . ( இதைத்தானே போன எபிசோட்ல நானே  சொன்னேன்னு நம்ம கவிக்குயில் மது சொல்றது எனக்கு கேக்குது ;) ) அதுனால எப்படியாவது ஜானகியை தன்னுடைய பெர்சனல் செக்ரட்டரியா ஆக்கினா ஜானகியுடன் பேசவும் பழகவும் அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது ரகுராமின் கணிப்பு . பெயரில் ராமாக இருந்தாலும் அவர் இலட்சுமணன் இல்லையா? அதனால இதை பத்தி கிருஷ்ணா கிட்டயும் பேசினாரு.

" ஜானகி ஓகே சொன்னா எனக்கெதுவும் இல்லடா .... அம்மாகிட்ட பொறுமையா சொல்லிக்கலாம் " என்றார் நம்ம சகோதரர் கிருஷ்ணன் . ( அது எப்படித்தான்  எவ்வளோ பெரிய முடிவா இருந்தாலும் அசால்ட்டா முடிவெடுத்துடுறிங்க மிஸ்டர் கிருஷ்ணா ? கலக்குறிங்க.... போன  எபிசொட் மூலமா பல பேரு மனசுல வேற நின்னுடிங்க . இது மட்டும் அர்ஜுனுக்கு தெரியட்டும் அப்பறம் இருக்கு உங்களுக்கும் உங்க ரசிகைகளுக்கும் ...ஹா ஹா )

ரு வழியாக தன் பக்கம் அனைத்தையும் சமாளித்த ரகுராமிற்கு தெரியும் ஜானகியை சமாளிக்க வைப்பது கஷ்டம் என்று . அதானாலேயே, காலையிலேயே ஜானகிக்கு போன் பண்ணி கொஞ்சம் குட்டையை குழிப்பி விட்டுடு போனாரு . ஐ மீன் யோசிக்க வெச்சிட்டு போனாரு .

காலையில என்ன பேசுனாங்க?

" ஹெலோ குட் மோர்னிங் ரகு "

" குட் மோர்னிங் ஜானு "

" என்ன காலையிலேயே கால் பண்ணிடிங்க ? என் காதுல ரத்தம் வர வைக்க அவ்வளவு ஆசையா ?" ( ம்ம்ம்ம்கும்ம்ம் ரகுவை கலாய்க்க மட்டும் எப்படி  வாயடிக்கிது  இந்த பொண்ணு )

" அய்யே காலையில உன் குரலை கேட்குற தண்டனை நானே தேடி பெற்றேன் பாரு . எனக்கு தேவைதான் " ( தண்டனையா  அல்லது வரமா ரகு சார் ? )

" ஓஹோ சரி நான் போனை வைக்கிறேன் "

" இந்த ரோஷதுக்கு  ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆமா அர்ஜுன் எங்க? "

"இதை நீங்க மாமாவுக்கே போன் பண்ணி கேக்கலாமே "

" சொல்லு ஜானு "

"  ஆபீஸ் போயிருக்கார் . எதோ மீடிங்க்னு சொன்னார். சுபி எங்க ? "

" காலேஜ் போய்ட்டா ... "

" ஆமா  ஜானு நீ என்ன பண்ணுவே பொதுவா ? "

" அப்டின்னா ? "

 ( என்று கேட்ட ஜானகிக்கு ஒன்றுமே புரியவில்லை . ஸ்ரீராமின் மறைவிற்கு பிறகு, ஜானகி வெளி உலகை வெறுத்தாள். அனைவரின் பார்வையும் அவள் மீது பரிதாபத்துடன் விழுகிறது என்ற எண்ணம் . என்னதான் ஸ்ரீராமிற்காக அவள் திருமணமானவள் போல இருந்தாலும்  சில குத்தல் பேச்சுகளை ஓரளவிற்குமேல் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை . பல்கலைகழகத்தில் படிப்பை முடித்தவள் அதுவே போதும் என்றது போல் ஓய்ந்து விட்டாள். அவள் மனதை மாற்ற என்றாவது பானு அவளை வெளியே அழைத்து செல்வது உண்டு. அந்நேரங்களிலும் ஏதேனும் நினைவுகள் அவளை மீண்டும் அழ தூண்டும் அல்லது குறை சொல்ல  காத்திருக்கும் சமுதாயத்தின் பார்வையில் அவள் சிக்கிவிடுவாள். ஒரு கட்டத்தில் இப்போதைக்கு இவள் வீட்டில் இருப்பதே நல்லது என்று நினைத்த அர்ஜுனும் பானுவும்  அவளை அப்படியே விட்டுவிட , கிணற்று தவளையாய் போனது அவளின் வாழ்க்கை . அப்படியே சோகத்திலும் அமைதியிலும் தனிமையிலும் உழன்று கொண்டிருந்தவளை ரகுவின் கேள்வி அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட வைத்தது . அவன் கேட்டதின் பொருள் புரிந்தும் புரியாமலும் மீண்டும் அவனிடம் கேட்டாள் ஜானகி )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.