(Reading time: 39 - 78 minutes)

 

" ன் "

" சூழ்நிலை "

" அப்போ இப்போ உங்க காதலை நீங்க சொல்ல முயற்சி பண்ணலாமே " என்றவள் மீண்டும் அவன் ஏதும் கோவமாக பெசிவிடுவானோ  என்று மருண்டு விழிக்க, அவனோ ( என் மீது உனக்கென்ன பரிதாபம் பெண்ணே? ) என கேள்வி கேட்டுக்கொண்டு ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான் . அதன் பிறகு அவளும் மீண்டும் அதை கேட்கவில்லை அவனும் பதில் சொல்லவில்லை.

ஹோட்டலில்,

அதுவரை  இருந்த மௌனதிரையை விளக்கினான் ரகுராம். உணவை ஆர்டர்  செய்து விட்டு,

" என்ன செய்யலாம்னு  முடிவு பண்ணிருக்கியா ஜானு ? வீட்டுல சொன்னியா? "

அவன் கேள்விகளுக்கு பதிலாய் அன்று காலையில் அவள் அத்தையிடம் பேசியது அனைத்தையும் கூறினாள்.

" படிக்கலாம் ரகு பட்  நான் அவ்வளோ இண்டரெஸ்ட் ஆ படிப்பேனா தெரியல. இது வரைக்கும் படிச்சதுக்கே எந்த வேலையும் பார்க்கல. சோ வேலை ஏதும் செய்யலாமான்னு தின்க் பண்றேன். நீங்க என்ன சொல்றிங்க ? "

 " நல்ல விஷயம்தான் ஜானகி. அதுவும் காலேஜ் , ஆபீஸ் இந்த ரெண்டு இடத்தையும் ஒப்பிட்டு பார்த்தா ஆபீஸ் தான் ரியல் . அங்க தான்  பலதரபட்ட பிரச்சனைகளையும் ஆளுங்களையும் நீ பார்ப்ப. நீ சந்திக்கிற பிரச்சனைகளே  உன்னை மாற்றும் ...அப்பறம் இன்னொரு விஷயம்" என்றவன் சுருக்கமாக  சுஜாதாவை பற்றி சொல்லி, அவனுடைய பெர்சனல் செக்ரட்டரியாக பணிபுரிய சம்மதமா என்று கேட்டான்.

" என்ன ஜானு அமைதியா இருக்கே ? "

" இல்ல ரகு நீ கோபப்படலேன்னா நான் ஒன்னு சொல்லவா? "

" சொல்லு "

" நீங்களே சொன்னிங்க உங்க வேலை ரொம்ப பிசின்னு அண்ட் முக்கியம்னு . அப்படி இருக்கும்போது நல்ல சீனியரை வேலைக்கு எடுக்காம நான் எதுக்கு ? இது சரி வருமா ? "

" நீ நெனைக்கிற அளவுகுலாம்  ஒண்ணுமில்லை ஜானு . 

ஈசி ..அதான் நான் உன்கூட இருக்கேன்ல . மூணு வருஷம் முன்னாடி நானும் உன்னை மாதிரித்தான் கம்பனியை டெக் ஓவர் பண்ண தயங்கினேன். அப்போ அப்பாதான் என்மேல நம்பிக்கை வெச்சாரு. அன்னைக்கு அவர் என் மேல வெச்ச நம்பிக்கையை இன்னைக்கு நான் உன் மேல வைக்கிறேன் அவ்வளவுதான்"

( அவ்வளவுதானா? ரகுவாலே எப்படி எவ்வளவு சுலபாமாக எல்லாத்தையும் பார்க்க முடியுது ? என்று வியந்தாள் ஜானகி)

" ஓகே ரகு நான் அர்ஜுன் மாமாகிட்டேயும் பேசிட்டு சொல்றேன் " என்று ரகுராமின் முதல் முயற்சிக்கு பச்சை கோடி காட்டினாள் ஜானகி. ( ஆனா எப்போதும் இப்படியே இருப்பாங்களா ? அர்ஜுன் இதுக்கு சம்மதிப்பாரா?  பொறுத்திருந்து பார்ப்போம்.... இவளோ நேரம் காரசாரமா பேசிகிட்டு இருந்தவங்க இன்னும் கொஞ்சம் நேரம் பேசட்டும் ...நாம அப்படியே கடிகாரத்தை ரிவர்ஸ் ல திருப்பி, அதே காலை நேரம் அர்ஜுனன் - சுபி லைப் ல என்ன நடந்துச்சு பார்ப்போமா ? )

" ஹேய் சுப்பு"

" அடி வாங்க போற கீதா நீ ..எத்தனை தடவை சொல்லுறேன் என்னை சுப்புன்னு சொல்லாதேன்னு "

" ஹா ஹா எதுக்குடி கோவம் ? ஏன் உன் ஹீரோ சொன்ன மட்டும்தான் மேடம் கு பிடிக்குமோ ? "

' ஹீரோ " என்றதும் சுபத்ராவின் நினைவில் அர்ஜுனன் வந்து நின்றான். அவர்களின் இரண்டாம் சந்திப்பில் அவள் அவனை தெரியாததுப்போல்  நடிக்கவும், அர்ஜுன் அவளின் கை பிடித்து இழுத்து " சுப்பு " என்று அழைத்தது ஞாபகம் வந்தது. அவனின் அந்த உரிமையும் நெருக்கமும்  எண்ணி முகம் சிவந்தாள் சுபத்ரா.

" அச்சோ போச்சுடி இவ கனவு காண ஆரம்பிச்சுட்டா " என்று சலித்து  கொண்டால் ஸ்வாதி.

" சரி விடுங்கடி காதல்ல இதெல்லாம் சகஜம்தானே ! ஹே சுபா, லாஸ்ட் அவர் ப்ரீ தானேடி , படம் பார்க்க போலாமா " என்றாள்  கீதா.

அவள் ," ம்ம்ம்ஹ்ம்ம் நோ. நான் சின்சியரா படிக்க போறேன்னு எல்லாருக்கும் வாக்கு கொடுத்திருக்கேன் அதை மீறமுடியாது " எனவும்

" ஆமாடி நீ மட்டும்தான் படிக்க வந்திருக்க.. நாங்கலாம்  காலேஜ் ல  மொத்தம் எத்தனை செங்கல் இருக்குனு எண்ண வந்துருக்கோம் " என்றாள் நிவிதா.

" ஹே சுபா த்ரி அவர்ஸ் தானேடி ..ப்ளீஸ் வாயேன் " என்று தோழியர் மூவரும்  கெஞ்ச, மனமிரங்கி அவர்களுடன் தேட்டருக்கு புறப்பட்டாள் சுபத்ரா.

தோழியரை டிக்கெட் வாங்க அனுப்பிய சுபத்ரா அந்த இரு சிறுவர்களை பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள். அவர்கள் இரட்டையர்கள். இரட்டையர்களை பார்த்தவுடன் அவளுக்கு அன்றொரு நான் அர்ஜுனிடம் பேசியது ஞாபகம்  வந்தது. ( டிங் டிங் டிங் பிளாஷ் பேக் டைம் என்ன பேசுனாங்க கேப்போம் )

" ஹே சுபி என்ன பண்ணுற? "

" படம் பார்த்துட்டு இருந்தேன் அர்ஜுன் "

" என்ன படம் இளவரசி ? "

"  தங்கமீன்கள் "

" வாவ் ..நல்ல படம் .. அழகான தந்தை மகள் உறவு, நேர்த்தியான கருத்து, இயல்பான நடிப்பு ..நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் டா "

"  நானும்தான் அர்ஜுன் . எனக்கு டைரக்டர் ராம் ரொம்ப பிடிக்கும். முக்கியமா கற்றது தமிழ் படம் . இன்றைய தமிழ் கற்ற இளைஞர்களின்  வாழ்கையை எதார்த்தமா சொல்லி இருப்பார் . ஆனா கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு ."

" இல்லடா என்னை கேட்டா அதுதான் சரின்னு படுது. ஒரு வேளை அந்த கதாநாயகன் பிடிபட்டா நிச்சயமா அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்க . காதல்ல பிரிவை விட மரணம் பெட்டர் டா " என்றவன் குரலில் லேசாய் மாற,

" அர்ஜுன் ... சரி அந்த பேச்சை விடுங்க . உங்களுக்கு ஆண் குழந்தை பிடிக்குமா ? பெண் குழந்தை பிடிக்குமா ? " என்றாள்.

அவள் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவன் குறும்புடன் " அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு இளவரசி " என்று சன்ன குரலில் பதில் அளித்தான்.

அவன் பதிலில் சிலிர்த்தவள் அதை காட்டிகொள்ளாமல் " வெவ்வெவ்வெவ்வெ ..... நெனப்புதான் ... சொல்லுங்க அர்ஜுன் பொண்ணு பிடிக்குமா பையன் பிடிக்குமா ? " என்றாள்.

" எனக்கு அப்படிலாம் எதுவும் பேதம் இல்லடா.. ரெண்டு பேருமே ஒண்ணுதான் "

" சுத்த போர் அர்ஜுன் நீங்க . எனக்கும் தெரியும் ரெண்டு பெரும் ஒண்ணுதான்னு. பட் உங்களுக்குனு தனிபட்ட விருப்பம் இருக்கும் ல "

" நானாடி போர்? உன்னை கவனிச்சுக்குறேன் " என்று மிரட்டியவன்

" பொதுவா  அப்பாக்களுக்கு மகள் தானே பிடிக்கும் எனக்கும்  அப்படிதான்" என்றான்.

" ஓஹோ அப்போ எனக்கு பொண்ணு வேணாம் போங்க "

" ஏண்டா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.