(Reading time: 39 - 78 minutes)

 

" மா..நீங்க பாட்டுக்கு  உங்க பொண்ணை கண்ணே மணியே முத்தே நு கொஞ்சுவிங்க . நான் அதையெல்லாம் பார்த்து ரசிக்கனுமா ? உங்க அன்பு எனக்கே எனக்குதான் சொல்லிட்டேன் " என்றவளின் மிரட்டலில் வாய்விட்டு சிரித்தான் அர்ஜுன்.

" சரி அப்போ பையன் போதும் "

" இல்ல இல்ல பொண்ணும் இருக்கட்டும் "

" என்னடி நீதானே வேணாம்னு சொன்னே? "

" அதுவா .... அது வந்து .... அப்போதான் நான் அடிக்கடி உங்க கிட்டே  நான் முக்கியமா? இல்ல உங்க பொண்ணு முக்கியமான்னு  உங்களை திரு திருன்னு முழிக்க வைக்க முடியும் "

" ம்ம்ம்கும்ம் நல்ல எண்ணம்டி ...பட் சுபி எனக்கொரு ஆசை இருக்கு சொல்லவா? "

" சொல்லுங்க அர்ஜுன் "

" நமக்கு பெண் குழந்தை பிறந்த ஆண்குழந்தையும், ஆண்குழந்தை பிறந்த பெண் குழந்தையும் தத்தெடுக்கலாம். அவங்களை டிவின்ஸ் மாதிரி வளர்க்கணும் . நீ என்ன சொல்லுறே ? "

"ஹே என்னாச்சு டா சைலெண்டா இருக்கே ...ஏதும் தப்பா சொல்லிட்டேனா ? சுபி ................."

" போங்க அர்ஜுன் உங்க மேல கோபம் "

" என்னடா ? "

" என்னோட செல்ல எதிரியே நீங்கதான் "

" எதிரியா ? ஏன்டா இப்படி சொல்லுற ? "

" ஆமா பின்ன என்னவாம் ... என்னுடைய கற்பனை வாழ்கையை திருடி எதை என் கண்முன்னாடியே நடத்தி வெச்சா , உங்க மேல கேஸ் போடாமல் கொஞ்சுவாங்களா ? "

" ஓஹ்ஹோ உனக்கு கொஞ்ச கூட தெரியுமா ? நான் நெனச்சேன், உனக்கு வெட்கப்பட மட்டும்தான் தெரியும். அப்படி இல்லனா நல்ல சண்டை போட மட்டும் தெரியும்னு நெனச்சேன் "

" ஓஹோ அப்போ நான் சண்டை காரியா? "

" ஆமா" என்றவன் அவள் அமைதியாக இருக்கவும் " பார்த்தியா பார்த்தியா  இந்நேரம் அந்த வட்ட நிலா முகம் கோவத்துல செக்க செவேல் நு சிவந்திருக்குமே ...சரியான சண்டை கோழி டீ நீ " என்றான் அர்ஜுனன்.

" என்னை சீண்டலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே " எனவும் அர்ஜுனன் பலமாக சிரித்தான். அவள் அடுத்து ஏதோ சொல்வதற்குள் வழக்கம் போல சிட்டிவேஷன் சாங் பாடி அவளை வெட்கப்பட வைத்தான்.

ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,

உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்

அவள்தான் அன்புள்ள எதிரி ,

கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,

எனக்கும் பிடிக்கின்ற எதிரி ,

எனக்குள் இருக்கின்ற எதிரி

" ஹே சுபா..சுபா .. ஏண்டி மானத்தை வாங்குற ? உன் பகல் கனவுக்கு அளவே இல்லையா? எவ்வளோ நேரம் இந்த குழந்தைங்க உன்னை கூப்பிடுறாங்க பாரு " என ஸ்வாதி உலுக்கவும் இனிய கனவு கலைந்தது போல் மலங்க விழித்தவள், கையில் ரோஜாவுடன் நின்ற அந்த இரட்டையர்களை பார்த்து சிரித்தாள். அவர்களின் உயரத்திற்கு அவள்  குனிந்து நிற்க, ரோஜாவை அவள் கைகளில் கொடுத்து  விட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டனர் சிறுவர்கள் இருவரும்.

" என்னடி நடக்குது இங்க " என்று கீதாவும் விழிக்க, மற்ற இருவரும்

" படம் ஆரம்பிக்கபோது டி " என்றபடி அவர்களை இழுத்து கொண்டு சென்றனர்.

கைகளில் இருந்த ரோஜாவை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் சுபத்ரா. நிச்சயம் அர்ஜுனன் இங்குதான் இருக்க வேண்டுமென அவள் உள்மனம் சொன்னது. ( உள்மனம் சொல்லலேன்னா கூட என்ன , நம்ம அர்ஜுனனின் காதலியா இருந்துகிட்டு அர்ஜுன் மாதிரி அதிரடியா யோசிக்கலேன்னா அப்பறம் சுபியை வரலாறு தப்பா பேசாதா? )

ஒரு புன்னகையுடன் பார்வையை சுழற்றியவள், தன் எதிர்வரிசையில்  அமர்ந்திருந்த அர்ஜுனனை கண்டுகொண்டாள். அவனை பார்த்ததும் அவள் மேலும் பெரிதாய் புன்னகைக்க தன்னவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தாள்.  அவள் கண்கள் தானாகவே அவனை படமெடுத்தது போல அவள் இதயமும் தானாகவே பாட ஆரம்பித்தது.

உன்னை கண்டேனே

 முதல் முறை நான்

என்னை தொலைத்தேனே

முற்றிலுமாய் தான் ………………

அப்போதுதான் அவனருகில் அமர்ந்து பேசிகொண்டிருந்த கார்த்திக்கை பார்த்தாள் . கார்த்திக் சுபாவின் கிளாஸ் மேட். நம்ம சுபாவின் தோழி  கீதாவுக்கும் இவருக்கும் என்ன உறவுன்னு யாரும் கேக்காதிங்க ? ஏன்னா அவங்க லவர்ஸ்  என்பதை அவங்களே இன்னும் ஒருதருகொருத்தர் சொல்லிக்கல. அதாவது பார்வை பரிமாற்றம் மூலமாகவே காதலை வளர்த்து வரும் காதல் பறவைகள் இவர்கள். படிப்பு முடியும் வரை காதலை பக்குவபடுத்தி வைக்க வேண்டும்  என்ற வேட்கையை கொண்டவர்கள். ( பூவி பில்ட் அப் போதும் கதைக்கு வான்னு நீங்க சொல்றது புரியுது.)

கார்த்திக்கை பார்த்த சுபத்ரா செய்கையிலே " நீ இங்க என்ன செய்ற " என்று கேட்டாள்.

கீதாவை ஒரு முறை காதலுடன் பார்த்தவன் , சுபாவுக்கு பதில் சொல்லாமல் அசால்ட்டாக முன்னால்  திரும்பி கொண்டு அர்ஜுனனின்  காதில் ஏதோ சொன்னான். அதை கண்ட சுபத்ராவிற்கு இன்னும் கோபம் வந்தது.

" அர்ஜுன் யு டூ ? "

இடைவேளை நேரம் வரை, காதலும் கோபமும் போட்டியிட தன் யுவரஜனை பார்வையாலேயே சிறைப்பிடித்து கொண்டிருந்தாள் சுபத்ரா. அவனின் இதழோர புன்னகை " அனைத்தும் நான் அறிவேன் என்று சொல்லாமல் சொல்ல ",

" திருடா " என்று செல்லமாய் திட்டினாள் சுபத்ரா.

டைவேளை நேரம் ,

கோவமாக திரையரங்கிலிருந்து வெளியே வந்தாள் சுபத்ரா. நிச்சயம் அர்ஜுனும் திரும்பி வருவான். அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம் என்று நினைத்தவள் , அந்த இரண்டடி படிகட்டுகளை பார்க்காமல் கால் தடுக்கி விழ போக, அவளை தாங்கி பிடித்தது சாட்சாத் நம்ம அர்ஜுன் தான்.

" ஏன் பேபி என்னை பார்த்தாலே ஒன்னு கனவு காணுற ? இல்லேன்னா விழுந்து வைக்கிற? " என்று கண் சிமிட்டினான். அவனின் அருகாமையில் கன்னங்கள் சூடேற சட்டென விலகி நின்றாள் சுபத்ரா,

அதற்குள் கார்த்திக், கீதா அவர்கள் அருகில் வந்தனர். கார்த்திக்கை கண்ட சுபத்ரா

" ஹே நீ இங்க என்னடா பண்ணுற ? அர்ஜுனை உனக்கெப்படி தெரியும் ? நான் தேட்டரில் கேள்வி கேட்டா  உன்னால பதில் சொல்ல முடியாதா? இப்போதான் என் அர்ஜுனன் பக்கம்   நெருக்கமா உட்கார்ந்து பேசி சிரிக்கிறே ? " ( யம்மாடியோவ் ...சுபி இருந்தாலும் இது அநியாயம். உங்க அர்ஜுன் என்னடான்னா ஜானகி உங்க கிட்ட பேசினா பொறாமை படுறார் . நீங்க என்னன்னா உங்க நண்பன் அதுவும் ஒரு ஆண் அர்ஜுன் பக்கம் உட்கார்ந்து பேசினா பொறாமை படுரிங்க .. உங்க அலும்பல் தாங்கலை மா ... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சு ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துக்குத்தான் அனுப்பணும் போல )

'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.